பூஜைக்கு வந்த மலர் (Poojaikku Vantha Malar)
ஆகஸ்ட் 22, 2008 2 மறுமொழிகள்
இன்று தாமதமானதற்கு மன்னிக்கவும். சில அவசர வேலைகள் வந்துவிட்டன…
1965இல் வந்த படம். ஜெமினி கணேசன், முத்துராமன், சாவித்ரி, எஸ்.வி. சகஸ்ரநாமம், நாகேஷ், மனோரமா, எஸ். ராமாராவ், பண்டரிபாய், சந்தியா (ஜெயலலிதாவின் அம்மா) ஆகியோர் நடித்து, விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கிய படம். சாவித்ரி அநியாய குண்டாக இருக்கிறார். டைட்டில்களை பார்க்கும்போது கே. பாலசந்தர் கதை வசனம் என்று பார்த்ததும் நான் சற்று நிமிர்ந்து உட்கார்தேன். பொதுவாக பாலசந்தர் 60களில் எழுதிய திரைக்கதைகளின் தரம் பிறகு எழுதியவற்றை விட அதிகம். காலம் செல்ல செல்ல அவரது பலம் திரைக்கதையிலிருந்து இயக்கத்துக்கு மாறிவிட்டது. முக்தா ஸ்ரீனிவாசனும் ஓரளவு வலிமையான கதைகளை படமாக்குவார். இந்த படத்தில் என்னை இருவரும் ஏமாற்றிவிட்டார்கள்.
இரண்டு பாடல்கள் எனக்கு பிடித்திருந்தன. ஒன்று “மையேந்தும் விழியாட” என்ற அழகான பாடல். பி.பி. ஸ்ரீனிவாஸ்தான் எனக்கு மிகவும் பிடித்த பின்னணி பாடகர். (ஏ.எம். ராஜா, எஸ்.பி.பி. இரண்டாவது, மூன்றாவது இடத்தில் இருக்கிறர்கள். டி.எம்.எஸ்., சீர்காழி அடுத்த இடங்கள்). அவரது பாட்டுக்களில் எனக்கு ஒரு பெரிய மயக்கமே உண்டு. அவரும் எல்.ஆர். ஈஸ்வரியும் சேர்ந்து பாடிய பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. இந்தப் பாடலை நான் பி.பி.எஸ்ஸின் தலை சிறந்த 10 பாடல்களில் சேர்க்கமாட்டேன், ஆனாலும் நல்ல பாட்டு. “உன்னை ஊர் கொண்டு அழைக்க தேர் கொண்டு வருமா தென்றல்” பாட்டும் நன்றக இருந்தது. உண்மையில் இந்த பாட்டு எனக்கு மறந்தே போய்விட்டது. சுசீலா “தென்றல்ல்ல்ல்ல் தென்றல்” என்று இழுத்துப் பாடும் போது எப்போதோ கேட்ட நினைவுகள் திரும்பி வந்தன. மற்ற இரண்டு பாட்டுக்களையும் நான் அவ்வளவாக ரசிக்கவில்லை. முன்னால் கேட்ட ஞாபகமும் வரவில்லை. ஒரு வேளை மீண்டும் மிண்டும் கேட்டால் பிடிக்க ஆரம்பிக்குமோ என்னவோ, ஏ.ஆர். ரகுமான் பாட்டுக்களைப் போல?
படத்தின் டைட்டில்களில் வாலியும் ஆலங்குடி சோமுவும் இந்தப் படத்தின் பாடல்களை எழுதினார்கள் என்று போட்டிருந்தது. ஆனால், மணிசேகரன் ( tfmpage பயனர்களுக்கு மணிசேகரனின் அறிமுகம் தேவையில்லை) இந்தப் பாட்டை கண்ணதாசன் எழுதியதாக சொல்கிறர்.
பாட்டுக்களை இங்கே கேட்கலாம்.
கதை வெறும் fluff. நண்பன் முத்துராமனுக்காக ஜெமினி தன் எஞ்சினிரிங் படிப்பையே தியாகம் செய்கிறார். பிறகு படிப்பை முடித்த முத்துராமன் ஜெமினியின் மேலதிகாரியாகிறார். சில குழப்பங்களால் ஜெமினி முத்துராமனை தவறாக புரிந்துகொண்டு, அவரை வெறுக்க ஆரம்பிக்கிறார். முத்துராமனின் தங்கைதான் சாவித்ரி என்று தெரியாமல், சாவித்ரியிடம் காதல் வசப்படுகிறார். கல்யாணத்திற்கு முன்னால் முத்துராமன் சாவித்ரி உறவை தெரிந்துகொள்ளும் ஜெமினி சாவித்ரியை ஒதுக்கிவிடுகிறார். கடைசியில் சாவித்ரி அவரது பிறந்த வீட்டை முழுமையாக மறந்தால் அவரை திருமணம் செய்வதாக ஒத்துக்கொள்கிறார். சாவித்ரி தான் இருக்கும் பருமனுக்கு ஜெமினியை விட்டால் வேறு இளிச்சவாயன் யாரும் கிடைக்கமாட்டார்கள் என்று நினைத்தோ என்னவோ ஒத்துக்கொள்கிறார். திருமண ஊர்வலம் சாவித்ரியின் வீட்டைக் கடக்கும்போது சரியான நேரம் பார்த்து அவரது அப்பா சகஸ்ரநாமம் தடுக்கி விழுந்து மண்டையை உடைத்துக்கொள்ள, சாவித்ரி அவரைப் பார்க்க காரில் இருந்து ஓடி வர (ஓடுவது என்பது இங்கே உயர்வு நவிர்ச்சி அணி. அவர் இருக்கும் குண்டுக்கு நடப்பதே பெரிய விஷயம்), முத்துராமனும், சகஸ்ரநாமமும், ஜெமினியும் இஷ்டத்துக்கு கொஞ்ச நேரம் வசனம் பேசிவிட்டு, பிறகு முத்துராமன் ஜெமினியை அடித்துவிடுகிறார். உடனே ஜெமினி நீ அடிக்கவேண்டும், அடிக்காமலே என்னை மன்னித்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இப்படி எல்லாம் நாடகம் ஆடினேன் என்று சொல்லி சுபம்!
பாலசந்தர் O. Henryஇன் பரம ரசிகராக இருக்கலாம். ஆனால் திடீர் திருப்பம் வேண்டும் என்று இப்படி பல்டி அடிக்கக்கூடாது.
படத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் நாகேஷின் நகைச்சுவை. நீண்ட நாட்களுக்குப் பின் நகைச்சுவை பகுதி ரசிக்கும்படியாக இருந்தது. ஞாபக மறதிக்காரரான நாகேஷ், டெலிபோன் பூத்தை பஸ் ஸ்டாண்ட் என்று நினைத்து அங்கே நிற்பதும், மனோரமாவின் சைக்கிளை தன் ஸ்கூட்டர் என்று நினைத்து வேக வேகமாக உதைத்து ஸ்டார்ட் செய்வதும் நன்றாகவே இருந்தன.
அந்தக் காலத்தில் உண்மையிலேயே முக அழகையும் நடிப்பையும் மட்டும்தான் பார்த்திருக்கிறர்கள். இவ்வளவு குண்டாக இருப்பவர்கள் இனிமேல் கதாநாயகியாக முடியுமா? சாவித்ரி, கே.ஆர். விஜயா போன்றவர்கள் எப்படித்தான் சமாளித்தார்களோ? இந்தப் படத்தில் வரும் சாவித்ரி 3 சிம்ரனுக்கு சமமாக இருப்பார்.
இரண்டு பாட்டு, நகைச்சுவைப் பகுதிக்காக பார்க்கலாம்.
செம சொத்தை படம். இந்த படம் தான் KB கதை திரைக்கதை எழுதிய முதல் திரைப்படம் என்பது கசப்பான உண்மை. The thing I admire most about KB usually are his unusual plot and unique characterizations, but there was absolutely nothing novel abt the storyline of Poojaiku Vantha Malar. It was plain ordinary. ஜெமினி, சாவித்திரி ரெண்டு பேருமே நல்ல நடிகர்கள். ஆனால் அவர்கள் நடிப்புக்கு
தீனி போடற மாதிரி அவர்களோட கதாபாத்திரம் அமையவில்லை. எப்படி தான் ரெண்டு பேரும் இப்படி ஒரு டப்பா கதையில் நடிக்க சம்மதித்தார்களோ என்று இந்த படம் பார்க்கும் போதெல்லாம் நினைப்பேன். I reckon Muktha Srinivasan was quite a successful director. His movies might have been hits commercially, but none of them can be called a classic. வாழ்க்கை படகு சமீபத்தில் பார்த்தேன். சின்ன வயசில் இருந்தே இந்த படம் பார்க்க வேண்டும் என்று ரொம்ப ஆசை. ‘சின்ன சின்ன கண்ணனுக்கு’ பாடல் மீது எனக்கு அப்படி ஒரு பைத்தியம். எப்ப அந்த பாட்டு டி.வி.யில் ஒளிபரப்பு செய்தாலும் எங்கு இருந்தாலும் ஓடி வந்து பார்ப்பேன். ஆனால் முக்தா இயக்கிய திரைப்படம் என்று எனக்கு தெரியாது.
The movie was seriously such a letdown. I could hardly sit through it. I do not know what was so special about the movie that it got remade in three languages. The songs were very good though. ‘நேற்று வரை நீ யாரோ நான் யாரோ’, ‘உன்னை தான் நான் அறிவேன்’ மற்றும் ‘சின்ன சின்ன கண்ணனுக்கு’ மூன்றுமே அருமை.
This movie was a letdown, I agree.