திங்கள் – பணம் படைத்தவன். எம்ஜிஆரின் சுமாரான படங்களில் ஒன்று. ஒல்லியான கே.ஆர். விஜயா, சௌகார் நடித்தது. “கண் போன போக்கிலே”, “பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்”, “அந்த மாப்பிளே கையை புடிச்சான்”, “எனக்கொரு மகன் பிறப்பான்”, “மாணிக்கத் தொட்டில் அங்கிருக்க” போன்ற பல நல்ல பாட்டுக்கள். படம் ஒன்றும் சுகமில்லை என்று நினைவு.
செவ்வாய் – நாலும் தெரிந்தவன். கேள்விப்பட்டதே இல்லை. சன் டிவிக்கு படங்கள் எங்கிருந்துதான் கிடைக்குமோ தெரியவில்லை. ரவிச்சந்திரன், காஞ்சனா நடித்ததாம். எஸ்.எம். சுப்பையா நாயுடு இசையாம்.
புதன் – பிள்ளையார் சதுர்த்தியினால் இந்த ப்ரோகிராம் கட். விஷால், பிரபு, நதியா நடித்த புத்தம் புதிய திரைப்படமான தாமிரபரணி திரையிடப்படுகிறது.
புதன் வியாழன் – அன்பே ஆருயிரே. எஸ்.ஜே. சூர்யா படம் இல்லை! சிவாஜி, பெரிய சோடா புட்டி கண்ணாடி போட்ட மஞ்சுளா நடித்தது. தோல்வி படம். “மல்லிகை முல்லை பூப்பந்தல்” பாட்டுதான் தெரியும்.
வியாழன் வெள்ளி- மகாதேவி. “மணந்தால் மகாதேவி இல்லையேல் மரண தேவி” பி.எஸ். வீரப்பாவின் பிரபலமான வசனம் கேட்டிருக்கலாம். “கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே”, “குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா” என்ற நல்ல பாட்டுக்கள். கண்ணதாசன் கதை வசனம்!
இந்த முறை 4 படங்கள்தான் அறிவிக்கப்பட்டன. (பிள்ளையார் சதுர்த்தியினால் என்று தெரிந்துகொண்டேன்.) திரையிடப்படும் படங்கள் வேறு மோசமாகிகொண்டே போகின்றன. இத்தோடு ப்ரோகிராமை முடிக்கப் போகிறார்களோ என்னவோ தெரியவில்லை. I hope not.
செப்டம்பர் 2, 2008 at 11:23 மு.பகல்
நண்பரே..
நாலும் தெரிந்தவன் என்ற படம் ரவிச்சந்திரன், அசோகன் மற்றும் காஞ்சனா நடித்தது..
இந்தப் படம்தான் சத்யராஜ் நடித்த “நடிகன்” பட்த்துக்கு முன்னோடி என்று சொல்வார்கள்.
“ந்ரி ஒன்று சிரிக்கின்றது”, “பூவா பூவா உதிருதடி” போன்ற சில பாடல்கள் இருக்கின்றன..
செப்டம்பர் 2, 2008 at 8:50 பிற்பகல்
மது,
படத்தைப் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை. பாட்டுகளையும் கேட்டதில்லை. நடிகன் ஒரு டைம் பாஸ் படம், அதே போல இருந்தால் பார்க்கலாம்…
விவரங்களுக்கு நன்றி!