நான் வளர்ந்த காலங்களில் ஹிந்தி ஒரு தீண்டத்தகாத மொழி. எனக்கு ஒரு இருபது வயது இருக்கும் போதுதான் டிவியில் ஹிந்தி பாட்டுக்களையே பார்க்க ஆரம்பித்தேன். எனக்கு தெரிந்த ஹிந்தி சினிமா பார்த்தும் சினிமா பாட்டுக் கேட்டும் தட்டு தடுமாறி கற்றுக்கொண்டதுதான். ஒரு கட்டத்தில் தப்பு தப்பாக, ஆனால் சரளமாக, எந்த தயக்கமும் இல்லாமல் பேச ஆரம்பித்தேன். என் நண்பர்கள் சொல்லியபடி நான் பேசிய தவறு இல்லாத முதல் ஹிந்தி வாக்கியம் எது என்று தெரிந்து கொள்ள கீழே ஸ்க்ரோல் செய்யுங்கள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

“வோ மா பன்னேவாலி ஹை”

ஹிந்தி இன்னும் கொஞ்சமும் தெரியாதவர்களுக்காக: எல்லா படங்களிலும் வெள்ளை கோட்டும் ஸ்டேதாஸ்கோப்பும் உள்ள டாக்டரோ, இல்லை வயதான ஒரு பாட்டியோ தவறாமல் ”தடடடன்ன்ங்க்” பின்னணி இசையுடன் சொல்லும் ஒரு வசனம் – “அவள் தாயாகப் போகிறாள்”

இன்றைய ஹிந்தி, தமிழ் படங்கள் எல்லாவற்றிலும் இடம் பெறும் ஸ்டாண்டர்ட் வசனங்கள் என்ன? தமிழே தெரியாத ஒருவர் அடிக்கடி தமிழ் படங்கள் பார்த்து பிக்கப் செய்யக்கூடும் வாக்கியங்கள் என்னென்ன? நீங்கள் நினைப்பதை எழுதுங்களேன்!