வெங்கட்ரமணன் என்னும் இளைஞர் (என்னை மாதிரி அரைக் கிழங்களுக்கு வயது ரொம்ப முக்கியம்) எழுதி இருக்கும் ஒரு போஸ்ட். அவர் எழுதிய நீண்ட பதில் இந்த ப்ளாகின் மறு மொழிகளில் இருக்கிறது, ஆனால் தேடுவது கொஞ்சம் கஷ்டம். இன்றைய படிப்பு சூழலை பற்றி அவர் எழுதிய விவரமான பதில் என்னை பூரிக்க வைத்தது. அந்த மெய்ல் வந்ததும் ஒரு மணி நேரம் ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்துக்கு தேன் குடித்த குரங்கு போலத் தாவிக்கொண்டிருந்தேன். (ஆஹா! குரங்கு தாவுகிறது. நீ எங்கேயோ போய்ட்டடா!)
மிக சுவாரசியமான போஸ்ட். தவறாமல் படியுங்கள். இது வரையில் ரமணி சந்திரனை படித்ததில்லை. நந்தா எழுதியதை படித்த பிறகு இவ்வளவு மோசமாக எழுதுவதை படித்தே ஆக வேண்டும் என்று சபதம் எடுத்துக்கொண்டிருக்கிறேன். ( Plan 9 from Outer Space என்ற ஒரு பாடாவதி படத்துக்கு ஒரு cult following இருப்பது போல) கிழக்கு பதிப்பகம் உருவான கதையை பற்றி பா. ராகவன் எழுதி இருப்பதும் ரொம்பவே நன்றாக இருந்தது.
உங்களுக்கு புத்தகங்களில் அவ்வளவு இன்டரஸ்ட் இல்லாவிட்டாலும் என்னை பற்றி நல்லபடியாக எழுதி இருக்கிறார், அதற்காகவாவது படியுங்கள்!
செப்டம்பர் 5, 2008 at 12:16 பிற்பகல்
நன்றி RV!
அன்புடன்
வெங்கட்ரமணன்
செப்டம்பர் 5, 2008 at 10:02 பிற்பகல்
π (pi) என்ற பாடவதி படத்திற்க்கும் ஒரு cult இருக்கிறது.
Honestly, எனக்கு ப்ளாக் என்பது புதிது. ஏதோ நண்பன் RV எழுதுவதால் இந்தப்பக்கம் எட்டிப்பார்த்தேன். எட்டிப்பார்த்தபின்னர் தான் தெரிகிறது, நான் ஒரு மிட்டாய் கடை முன்னால் நிற்க்கும் சிறுவனென்று. பதில் எழுதும் தகுதியில் தான் இருக்கிறேன். ஆனால் தடவித், தடவி தப்பு தப்பாய் டைப் செய்து முடிப்பதர்க்குள் ஏதோ bathroom போய்விட்டு வந்த நிம்மதி. வெங்கட், RV போல் நீங்களும் மிக well informed ஆக இருக்கிறிர்கள். ரசித்துகொண்டிருக்கிகிறேன். இப்போதைக்கு அவ்வளவு தான் முடிகிறது. உங்கள் RV பற்றின பதிப்பிற்க்கு நன்றி.