திங்கள்: ராணி சம்யுக்தா எம்ஜிஆர், பத்மினி நடித்த படம். நான் பார்த்ததில்லை.
செவ்வாய்: கப்பலோட்டிய தமிழன் என் கருத்தில் இதுதான் சிவாஜி நடித்த தலை சிறந்த படம். சிவாஜிக்கும் இந்த ரோல்தான் மிகவும் பிடித்ததாம். எஸ்.வி. சுப்பையாவின் நடிப்பும் அபாரம். ஜி. ராமநாதன் இசையிலே தலை சிறந்ததும் இதுதான். பாரதி பாட்டுக்கள். அரிய வாய்ப்பு, தவற விடாதீர்கள்!
நம்ப முடியாத விஷயம் என்னவென்றால் இந்த படம் ஓடவில்லையாம். தமிழர்களின் ரசனை இவ்வளவு மோசமா?
புதன்: வைஜயந்திமாலா நடித்த முதல் படமான வாழ்க்கை. “உன் கண் உன்னை ஏமாற்றினால்” பாட்டு கேட்டிருப்பீர்கள்.
வியாழன்: திருடாதே எம்ஜிஆர் நடித்து வெற்றி பெற்ற முதல் சமூகப் படம். சரோஜா தேவி-எம்ஜிஆர் ஜோடி ஹிட் ஆனதும் இந்த படத்திலிருந்துதான்.
வெள்ளி: கீழ்வானம் சிவக்கும் சிவாஜியும் சரிதாவும் போட்டி போட்டு நடித்த படம். முதலில் நாடகமாக வந்து வெற்றி அடைந்தது.
அடுத்த வாரப் படங்களின் தரம் much better. வேறு எதைப் பார்க்க முடியவில்லை என்றாலும் கப்பலோட்டிய தமிழனை மட்டுமாவது பாருங்கள்!
செப்டம்பர் 9, 2008 at 7:51 மு.பகல்
idhulla nambama poga enna irukku?
indha maadhiri padam tholvi adayve dhaan, Sivaji had to do the ‘over-acting’ stuff.
செப்டம்பர் 9, 2008 at 3:04 பிற்பகல்
I agree with you there. It wasn’t that Sivaji is not capable of underplaying, he just couldn’t escape the image and expectations.
செப்டம்பர் 27, 2008 at 7:06 மு.பகல்
Thirudathey padam irukkum bothu entha madaiyanaavathu kti paarpaana.
Ungalukku MGR avargalin padangalai vimarsanam seiya arivum kidaiyaathu arukathaiyum kidaiyaathu