நேற்று மதியம் பார்த்த படம். தமிழ் கூறும் நல்லுலகில் எல்லாருமே பார்த்த படம்தான். குறைந்த பட்சம் “கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா” பாட்டையாவது கேட்டிருப்பார்கள். சன் டிவியிலே நாலைந்து முறை போட்டுவிட்டார்கள்.
2003இல் வந்த படம். ஹரியை பெரிய இயக்குனர்கள் லிஸ்டில் சேர்த்த படம். த்ரிஷாவை டாப் ஹீரோயினாக்கிய படமும் இதுதான். விக்ரமுக்கு பெரிய வெற்றி. இவர்களைத் தவிர விவேக், ரமேஷ் கண்ணா, கோட்டா ஸ்ரீனிவாச ராவ், வெண்ணிற ஆடை மூர்த்தி, டெல்லி கணேஷ், சுமித்ரா, மனோரமா, பாலா சிங், தியாகு, கிரேன் மனோகர், விஜயகுமார் நடித்திருக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசை. பாலசந்தரின் கவிதாலயா தயாரிப்பு.
படம் வந்த புதிதில் “கல்யாணம்தான் கட்டிக்கிட்டு” எழுப்பிய சர்ச்சைகள் என்னை கடுப்படித்தன. ஏதோ பாட்டு, அவ்வளவுதான். உங்களுக்கு பாட்டு பிடிக்கவில்லை என்றால் கேட்காதீர்கள். ஆனால் இந்த பாட்டை மூன்று நாலு வயது குழதைகள் பாடும்போது கொஞ்சம் distasteful ஆக இருந்தது. பாட்டுகளுக்கும் A, PG13, U சர்டிஃபிகேட்கள் அவசியமோ?
விறுவிறுப்பான திரைக்கதை. ஊறுகாய் போல கொஞ்சூண்டு செண்டிமெண்ட். அழகான ஹீரோயின். ஓரளவு நம்பக்கூடிய கதை அமைப்பு. அழகான, இளமையான விக்ரம். தெலுங்கு பட வில்லன்களை நினைவுபடுத்தினாலும், பார்க்க முடிகிற வில்லன். அங்கங்கே கேபூ, முகூ என்று கெட்ட வார்த்தை பிரயோகத்தினாலும், “பிள்ளை குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா” போன்ற “புரட்சிகரமான” வார்த்தைகளாலும் ஏற்பட்ட சர்ச்சைகள். படம் வெற்றி பெற இவை போதாதா?
பொது மக்களுக்கு இடைஞ்சல் உண்டாகாத வரை வில்லன்களுடன் சமரசமாக போகலாம் என்று நினைக்கும் போலிஸ் அதிகாரி விக்ரம். திருநெல்வேலிக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகி வரும் அவர் முதலில் இட்லியை பியரில் பிசைந்து சாப்பிட்டும், “திருநெல்வேலி அல்வாடா” என்று பாட்டு பாடியும் கிரேன் மனோகர் உள்ளிட்ட பல அடிமட்ட மக்களின் நண்பராகிவிடுகிறார். கோட்டாவிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு முடிந்தவரை அட்ஜஸ்ட் செய்துகொள்கிறார். நடுவில் த்ரிஷா மாமியுடன் காதல். ஒரு முறை மக்களுக்காக அவர் கோட்டாவிடம் முறைத்துக் கொள்ள, கோட்டா அவரை திருநெல்வேலியிலிருந்து தூக்கிவிட, இருக்கும் ஒரே வாரத்தில் சபதம் போட்டு அவர் கோட்டாவையே தூக்கிவிடுகிறார்.
படத்தின் சுவாரசியமே விக்ரம் செய்து கொள்ளும் காம்ப்ரமைஸ்கள்தான். வன்முறை ஊர்வலத்தை கத்தி கபடா காட்டியே அடக்குகிறார். போலிஸ் ஸ்டேஷனை போட்டு தள்ளும் திட்டத்துடன் நடக்கும் ஊர்வலத்தில் வரும் ரௌடிகளை வேறு ரௌடிகளை வைத்து போட்டு தள்ளுகிறார். கலப்படம் என்று வந்தால் விட்டுவிடுகிறார், ஆனால் பொது ஜனத்துக்கு அடி விழுந்தது என்றால் பொங்கி எழுகிறார். அவரது பன்ச் டயலாக் “நான் போலிஸ் இல்லை, பொறுக்கி” நன்றாகவே இருக்கிறது.
திருநெல்வேலியில் எண்பதுகளில் கொடி கட்டிப் பறந்த கராத்தே செல்வினின் வாழ்க்கையை ஓரளவு தழுவி எடுக்கப்பட்டதாம். அதனால்தானோ என்னவோ, படம் குருவி போலவோ, பாபா போலவோ நம்ப முடியாத காமிக்ஸ் போல இல்லை.
ஹரிக்கு ஒரு நல்ல பழக்கம். சென்னை தவிர்த்த ஏதாவது ஒரு ஊரில் படம் எடுக்கிறார். இதில் திருநெல்வேலி. திருநெல்வேலி ரோடுகள், தாமிரபரணி போல ஏதோ ஒரு ஆறு, கோவில் எல்லாம் பார்க்க முடிகிறது.
அறுவையான நகைச்சுவை. விவேக் இந்த மாதிரி காட்டு கத்தலோடு உபதேசம் செய்தால் எல்லாரும் வெளியே தம்மடிக்க போய்விடுவார்கள்.
எல்லா பாட்டுகளையும் இங்கே கேட்கலாம்.
“கல்யாணம்தான் கட்டிக்கிட்டு” பாட்டுதான் பெரிய ஹிட். கேகேயும் ஸ்ரீலேகாவும் பாடியது.
“இதுதானா இதுதானா” நல்ல மெலடி. சித்ரா பாடியது.
“அய்யய்யோ அய்யய்யோ பிடிச்சிருக்கு” நல்ல பாட்டுதான். ஹரிஹரனும் மதாங்கியும் மஹதியும்(நன்றி, ப்ளம்!) பாடியது.
ஸ்ரீராம் பார்த்தசாரதி பாடிய “திருநெல்வேலி அல்வாடா” பாட்டும், திப்பு பாடிய “வேப்ப மரம் ஆல மரம்” பாட்டும் கேட்கலாம்.
மொத்தத்தில் இந்த படத்தின் ஆடியோவை தைரியமாக வாங்கலாம்.
நான் சிபாரிசு செய்வதால் இந்த படத்தை யாரும் இனி மேல் புதிதாக பார்க்கப் போவதில்லை. இருந்தாலும் சொல்கிறேன், இது நல்ல பொழுதுபோக்கு படம். பார்க்கலாம். 10க்கு 7 மார்க். B grade.
செப்டம்பர் 9, 2008 at 7:49 மு.பகல்
Adhu mathangi illai. Mahathi.
செப்டம்பர் 9, 2008 at 3:05 பிற்பகல்
Thanks, plum! I fixed the post.
அக்டோபர் 13, 2008 at 12:22 பிற்பகல்
அட்டகாசங்னா! உங்கள் வயது 43 என்றதும் சாமி போன்ற படங்களை கிழித்திருப்பிர்கள் என்று எதிர்பார்த்தேன்! அதில் உள்ள குறைகளை பக்குவமாக சொன்னதிற்காக ஒரு சபாஷ்!
இனி மெதுவாக உங்கள் மத்த விமர்சனங்களை படித்து விமர்சிக்கிறேன்(!)
நன்றி!!
அக்டோபர் 13, 2008 at 3:15 பிற்பகல்
நன்றி புவனேஷ்!
படம் வந்த போது, நான் பார்த்த போது, எனக்கு 38 வயதுதானே! ஒரு வேளை அதனால் உங்களுக்கும் பிடிக்கும்படி என் விமர்சனம் இருக்கலாம்.
)
அக்டோபர் 14, 2008 at 6:22 மு.பகல்
Counter super na!
அக்டோபர் 14, 2008 at 6:25 மு.பகல்
“இதுதானா இதுதானா” நல்ல மெலடி
சீனும் நல்லாவே இருந்திச்சி
அக்டோபர் 14, 2008 at 4:21 பிற்பகல்
புவனேஷ்,
நன்றி!
)