1949இல் வந்த படம். வைஜயந்திமாலாவுக்கு பதினாறு பதினேழு வயதுதான் இருக்கும் போலிருக்கிறது. ரொம்ப சின்ன பெண்ணாக இருக்கிறார். அவரது முதல் படம். டி.ஆர். ராமச்சந்திரன் ஹீரோ. அவரைத் தவிர எனக்கு தெரிந்தவர்கள் சாரங்கபாணி, எஸ்.வி. சஹஸ்ரநாமம், அவ்வளவுதான் வேலைக்காரர்களாக வருபவர்களை பார்த்து இருக்கிறேன் ஆனால் யாரென்று தெரியவில்லை. ஏவிஎம்மின் ஆஸ்தான இசை அமைப்பாளரான சுதர்சனம் இசை. எல்லா பாட்டுகளையும் கே.பி. காமாட்சி எழுதி இருக்கிறார். தயாரித்து இயக்கியவர் ஏவிஎம் செட்டியார்.
அப்போதைய யூத் படம். வெற்றிப் படம். தெலுங்கில் ஜீவிதம் என்றும், ஹிந்தியில் பஹார் என்றும் வந்தது. ஹிந்தியில் இரண்டாவது ஹீரோயின் பத்மினி. சஹஸ்ரனாமத்துக்கு பதில் பிரான். ஹீரோ யார் என்று நினைவில்லை.
படம் அந்த காலத்து டிராமா போல இருக்கிறது. படத்தை காப்பாற்றுவது வைஜயந்திமாலாவின் joie de vivre. பூவே பூச்சூடவாவில் நதியா போல அவரை பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது. பாட்டுக்களும் நாடகப் பாட்டுக்கள் போலத்தான் இருக்கின்றன. ஹார்மோனியம் அதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் சில பாட்டுக்கள் மாணிக்கங்கள். எனக்கு தெரிந்து எம்.எஸ். ராஜேஸ்வரி கதாநாயகிக்கு குரல் கொடுத்தது இந்த படத்திலும் மகாதேவியிலும்தான்.
டி.ஆர். ராமச்சந்திரனுக்கும் வை. மாலாவுக்கும் வழக்கம் போல முதல் காட்சியில் மோதலும் பிறகு காதலும் ஏற்படுகிறது. அதுவும் மோதல் நேரடியாக அவர்கள் கார்களில். இருவருக்கும் எதிர் எதிர் வீடு, சரியாக எதிர்நோக்கும் பால்கனிகள். அவரவர் வீட்டுக்குள்ளிருந்தே இருவரும் பேசிக் கொள்ளலாம். இவ்வளவு சவுகரியம் நமக்கு எதுவும் கிடைக்க மாட்டேன் என்கிறது.
இரவு பத்து மணிக்கு மிருதங்கம் ப்ராக்டிஸ் செய்யும் டி.ஆரைப் பார்த்து வைஜயந்தி கத்துகிறார். டி.ஆருக்கும் கத்த ஒரு சான்ஸ் கொடுப்பதற்காக அடுத்த நாளே இரவு 12 மணிக்கு டான்ஸ் ப்ராக்டிஸ் செய்கிறார். வை. மாலாவுக்கு பிடித்த ஆசிரியர் அசோகன் தான்தான் என்று சொல்லாமல் டி.ஆர். ஏமாற்றிவிட்டு “உன் கண் உன்னை ஏமாற்றினால்” என்று பாடுகிறார். அடுத்த சீனில் ஆண் வேஷம் போட்டுக்கொண்டு வந்து வைஜயந்தி டி.ஆரிடம் வளைந்து நெளிந்து பாட்டை “ரிபீட்டு!” என்கிறார். எஸ்.வி. சஹஸ்ரனாமம் ஏமாற்றிய பெண்ணின் குழந்தையை டி.ஆரின் குழந்தை என்று சந்தேகப்பட்டு கல்யாணம் தடைப்படுகிறது. சஹஸ்ரனாமம் வைஜயந்தியை கல்யாணம் நிச்சயம் ஆகிறது. இப்படியே 3 மணி நேரம் ஓடி விடுகிறது. இதற்கு மேல் ஓட்டினால் மக்கள் தாங்கமாட்டார்கள் என்று செட்டியாருக்கு தெரிந்து, சஹஸ்ரனாமம் மனம் திருந்தி எல்லா உண்மைகளையும் ஒத்துக்கொண்டு, காதலர்கள் ஒன்று சேர்ந்து சுபம்!
நான் ரசித்த ஜோக்: குழத்தைக்கு டி.ஆர். தாலாட்டு பாட, வேலைக்காரன் கொட்டாவி விடுகிறான்!
படத்தின் ஸ்டார் வை. மாலாதான். அவர் ஆடுவதும் பாடுவதும் டி.ஆரை சாடுவதும் நான் தண்ணி போடுவதும் செம ஜாலியான விஷயங்கள்! டி.ஆர். ராமசந்திரனும் அவருக்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார்.
சாரங்கபாணி “அந்தக் காலத்திலே நான் காலேஜ்ல படிக்கும்போது” என்று போரடிப்பது அந்தக் காலத்தில் ரசிக்கப்பட்டிருக்கும்.
“நந்தகோபாலனோடு நான் ஆடுவேனே”, “உன் கண் உன்னை ஏமாற்றினால்” (2 versions), “எண்ணி எண்ணி பார்த்து மனம் இன்பம் கொண்டாடுதே” (ஹிந்தியில் “சுப் சுப் கடி ஹோ ஜரூர் கோயி பாத் ஹை”) எல்லாம் பெரிய ஹிட் பாட்டுக்கள். “பாரத சமுதாயம் வாழ்கவே” என்ற ஒரு பாரதியார் பாட்டும் இருக்கிறது. நான் முன்னாள் கேட்டிராத “செந்தமிழும் சுவையும் போல நாம்” பாட்டு நன்றாக இருக்கிறது. டி.ஆர். ராமச்சந்திரனே “உன் கண் உன்னை” பாட்டின் ஆண் versionஐ பாடி இருக்கிறார். மிச்ச பாட்டுகள் எதுவும் நிற்கவில்லை.
பழைய நினைப்புடா பேராண்டி டைப் தீவிர வைஜயந்திமாலா ரசிகர்கள் பார்க்கலாம். 10க்கு 5 மார்க். C- grade.
செப்டம்பர் 11, 2008 at 2:17 பிற்பகல்
With grand hopes to listen to some peppy songs I switched on the tv yesterday. I thought shivaji movie ‘vazhkai’!
Nevertheless good enough to entertain. I had other schedules like sleeping, so missed it
செப்டம்பர் 11, 2008 at 2:18 பிற்பகல்
//////////இப்படியே 3 மணி நேரம் ஓடி விடுகிறது. இதற்கு மேல் ஓட்டினால் மக்கள் தாங்கமாட்டார்கள் என்று செட்டியாருக்கு தெரிந்து, சஹஸ்ரனாமம் மனம் திருந்தி எல்லா உண்மைகளையும் ஒத்துக்கொண்டு, காதலர்கள் ஒன்று சேர்ந்து சுபம்!////////
செப்டம்பர் 11, 2008 at 2:30 பிற்பகல்
Shaktiprabha,
I saw the Sivaji movie 25 years back, so my memory could be wrong. I think the AVM movie has more peppy songs!