இரண்டு மூன்று நாட்களாக இந்த ப்ளாகில் ஒரு தொய்வு ஏற்பட்டிருக்கிறது. கீழ்வானம் சிவக்கும் பார்க்க முடியவில்லை. என்னை ஆச்சரியப்படுத்தும் விதமாக சிவாஜி ரசிகர்கள் கூட அதற்கு விமர்சனம் எழுத யாரும் முன்வரவில்லை. திருடாதேவுக்கு ஒரு முழு விமர்சனம் எழுதமுடியவில்லை. இந்த வாரப் படங்கள் என்னவென்று நேற்று இரவுதான் தெரிந்தது (புனர்ஜன்மம், மங்கையர் உள்ளம் மங்காத செல்வம், நவக்ரகம், மறக்க முடியுமா, பாக்தாத் திருடன்)

இதனால் யாரும் மகிழ்ச்சி அடைந்துவிடவேண்டாம். நமக்கு தொழில் மொக்கை. ஆனால் இன்னும் இரண்டு மூன்று நாட்கள் மொக்கையின் அளவு குறையலாம். இந்த சாக்கில் மங்கையர் உள்ளம் மங்காத செல்வம் போன்ற அதி கடிப்படங்களை தவிர்த்துவிடலாம் என்று எனக்குள் சாத்தான் வேதம் ஓதுகிறது. :-) ) வேறு யாராவது மொக்கை போட வாங்களேன்!