இரண்டாம் பகுதிதான் பார்க்க முடிந்தது. இன்று என் சின்னப் பெண்ணுக்கு ஐந்தாவது பிறந்த நாள். அவள் பாஸ்டாவும் , கலர் செய்ய பேப்பரும் க்ரேயான்களும் கிடைக்கும் ஒரு ரெஸ்டாரண்டுக்கு போக வேண்டும் என்று திடீரென்று சொல்லிவிட்டதால் என்னால் முழுதாக பார்க்க முடியவில்லை. பார்த்த வரையில் நன்றாக இருந்தது. முழுதாக பார்த்த யாராவது வாங்களேன்! அப்படி நாளைக்குள் யாரும் வரவில்லை என்றால் பார்த்ததை வைத்து ஓட்டுகிறேன்.

ஒரு மேடை நாடகம் பார்ப்பது போல இருந்தது. முக்கால்வாசி நேரம் ஒரே செட் – வீட்டின் பிரமாண்டமான ஹால். நான் வருவதற்குள் “உன்னை தொட்ட காற்று” வேறு முடிந்துவிட்டது. சிவகுமார் லக்ஷ்மிக்கு ஒரு கெமிஸ்ட்ரி இருந்திருக்கிறது.