தமிழின் தலை சிறந்த நகைச்சுவை நடிகரும் அருமையான குணச்சித்திர நடிகருமான நாகேஷ் நேற்று மறைந்தார். மிகவும் வருத்தம் தரும் விஷயம். எங்கள் அஞ்சலி.
ஜனவரி 2009
ஜனவரி 31, 2009
ஜனவரி 31, 2009
உரிமைக் குரல் (Urimaik Kural)
Posted by RV under Tamil movies | குறிச்சொற்கள்: Kalyana valaiyosai, Latha, M.n. nambiar, MGR, Nagesh, S.v. sahasranamam, Sacchu, Thengai srinivasan, Urimaik kural, Vizhiye kathai ezhuthu |Leave a Comment
விகடனுக்கு நன்றி.
இந்தப் படத்துக்கு நல்லபடியாக விமர்சனம் வந்திருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. ஒரு வேளை எம்ஜிஆரிடம் வம்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று நினைத்தார்களோ என்னவோ? இரட்டை அர்த்தப் பாட்டை – காயா இது பழமா என்று தொட்டுப் பார்க்கட்டுமா? – பற்றி கூட ஒரு வார்த்தையும் எழுதவில்லையே? ஓவர் டு விகடன்.
———————————–
நாட்டுப்புறக் கதைக்குத் தேவையான ஒரு பணக்கார மிராசுதார் குடும்பம். மிராசுதாரின் ‘வில்லன்’ மகன், நாணயமான ஒரு சின்ன மிராசுதார், அவருடைய கதாநாயகத் தம்பி, அழகான கதாநாயகி, எடுபிடி அடியாட்கள் – இவர்களுடன் காதல், போராட்டம், அண்ணன் தம்பி பாசம், சண்டைக் காட்சிகள் ஆகியவற்றையும் சேர்த்துவிட்டால் விறுவிறுப்பு இல்லாமல் போகுமா?
ஆரம்பமாக, வெள்ளைக் குதிரை பூட்டிய ரேக்ளாவில் வெகு கம்பீரமாக வரும் கதா நாயகன் கோபி (எம்.ஜி.ஆர்), கடத்திச் செல்லப் படும் ஒரு பெண்ணைக் காப்பாற்றுகிறார். அதிலிருந்து சோதனை மேல் சோதனை! பொதுப் பணத்தை கோபியின் அண்ணன் பறி கொடுக்கிறார். அண்ணனும் தம்பியும் நிலத்தை அடமானம் வைக்கிறார்கள். கோபியின் காதலியை (லதா) மிராசுதாரின் மகன் (நம்பியார்) மணந்து கொள்ள ஏற்பாடாகிறது. கல்யாண நாளன்று மணப் பெண்ணை மீட்டுச் சென்று பதிவுத் திருமணம் செய்து கொள்கிறான் கோபி. அண்ணன் தம்பி உறவு முறிகிறது. கதா நாயகன் தாக்கப்படுகிறான். நிலம் ஏலத்திற்கு வருகிறது. கடைசியில், உரிமைக் குரல் எழுப்பி நியாயம் கிடைக்கச் செய்கிறான் கோபி.
கதையின் உயிரோட்டம் எம்.ஜி.ஆர்! காதல் காட்சிகளும், சண்டைக் காட்சிகளும் இயற்கையாக அமைந்திருக்கின்றன. குறும்பும், கொஞ்சலும், கொந்தளிப்புமாக லதா சளைக்காமல் நடித்திருக்கிறார்.
பிரிவினை செய்யப்பட்ட வீட்டில் கீற்றுத் தடுப்புக்கு அப்பால் எம்.ஜி.ஆரும் லதாவும் நடத்தும் காதல் விளையாட்டும், அந்த சரஸங் களைக் காது கொடுத்துக் கேட்கக் கூசி மெல்ல வும் முடியாமல், விழுங்கவும் முடியாதபடி அண்ணன் சகஸ்ரநாமம் தவிப்பதும் இனிமை! சகஸ்ரநாமம் பக்குவமான நடிப்பின் உருவமாக வருகிறார்.
வயலில் நடக்கும் சண்டையையும், வழியில் நெருப்பு மூட்டப்படும் கிளைமாக்ஸ் காட்சியையும் டைரக்டர் படுவேகத்தில் படமாக்கியிருக்கிறார். பாராட்டலாம்.
தையற்காரர் தேங்காய் சீனிவாசன், நாகேஷ், சச்சு கோஷ்டி யின் முற்பகுதி நகைச்சுவை முழுச் சிரிப்பு. சச்சுவிடம் ஒரு மெருகு தெரிகிறது.
பாடல்கள் அதிகம். ‘கல்யாண வளையோசை’, ‘உனக்காகவே நான் வாழ்கிறேன்’ பாடல்கள் இனிமையாக ஒலிக்கின்றன.
மூலக் கதையில் டைரக்டர் கொஞ்சம்கூட கை வைக்க விரும்பவில்லை போலிருக்கிறது. கதாநாயகன் கோபியின் உடை யைப் பார்க்கும்போது ஆந்திர விவசாயி அல்லவா நினைவுக்கு வருகிறார்! கிராமியப் பின்னணிகளும் அநேகமாக ஆந்திரத்தை தான் நினைவுபடுத்துகின்றன.
குரலில் உற்சாகம் இருக்கிறது.
ஜனவரி 30, 2009
காயத்ரி (Gayatri)
Posted by RV under Tamil movies | குறிச்சொற்கள்: Gayatri, Kumudam, Panju arunachalam, Sujatha |[3] Comments
காயத்ரி பற்றி சுஜாதாவும் பஞ்சு அருணாசலமும் சொன்னது – இது ஒரு மீள்பதிவு – கோமாவில் இருக்கும் கணேஷ் வசந்த் கதைகள் ப்ளாகிலிருந்து இங்கே மீண்டும் பதிப்பித்திருக்கிறேன்.
குமுதத்தில் “சுஜாதாவின் கதை” என்ற தொடரிலிருந்து:
“சுஜாதாவின் நாவல்களில் முதலில் படமாகியது காயத்ரி. பஞ்சு அருணாசலம்தான் அந்தப் படத்தைத் தயாரித்தார்.
“தினமணி கதிரில் `காயத்ரி’ தொடராய் வரும்போதே அதை திரைப்படமா எடுக்கணும்னு நினைச்சேன். தொடர் முடிஞ்சதும் சுஜாதாவைபாம்குரோவ் ஓட்டல் ரூம்ல சந்திச்சேன். ரொம்ப எளிமையா பழகுனார். பெரிய எழுத்தாளர்களுக்கு இருக்கும் பந்தா எதுவும் இல்ல. எல்லாத்தையும் ரொம்ப ஆர்வமா கேட்டுட்டார். அப்போ அவருக்கு சினிமா ரொம்பப் புதுசு. அவரோட ஆர்வம் என்னை ரொம்ப கவர்ந்தது” என்று, தான் முதலில் சுஜாதாவைச் சந்தித்தது பற்றிச் சொல்கிறார் பஞ்சு அருணாசலம்.
“படம் வெளில வந்தபிறகு அந்தப் படத்தில் அவருக்கு அத்தனை திருப்தியில்லை. சினிமா திரைக்கதைக்காக சிலவற்றை மாற்றியிருந்தோம். அதைச் சொன்னதும் புரிஞ்சுக்கிட்டார். கதையாய் எழுதுவது வேறு. அதை சினிமாவுக்காக மாற்றுவது வேறு என்பதை உணர்ந்துகொண்டார்” என்கிறார் பஞ்சு அருணாசலம்.
சுஜாதாவும் `காயத்ரி’ கதைக்கு சினிமாவில் நடந்த சேதாரங்களைப் பற்றி பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அந்த முதல் பட அனுபவத்திலேயே சினிமாவின் சூட்சுமங்கள் அவருக்கு பிடிபட்டுவிட்டது.
“எழுதப்பட்ட கதை சினிமாவாக மாறும்போது எப்படியெல்லாம் வேஷம் மாறும் என்பதை எனக்கு முதலில் உணர்த்திய அனுபவம் அது. ஒரு வகையில் `ப்ரியா’ போன்ற பெரிய அதிர்ச்சிகளுக்கு என்னை தயார்படுத்தியது” என்று சமீபத்தில் குமுதத்தில் எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார் சுஜாதா.
ஜனவரி 29, 2009
திரை உலக வரலாறு போஸ்ட்கள் இப்போது ஒரு தனி பக்கமாக இங்கே ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன.
ஜனவரி 28, 2009
ஆயிரத்தில் ஒருவன்
Posted by RV under Tamil movies | குறிச்சொற்கள்: Aadamal aadugiren, Aayiratthil oruvan, Adho andhap paravai, B.r. panthulu, Captain blood, Douglas fairbanks, Errol flynn, Jayalalitha, Kannadasan, L. vijayalakshmi, M.n. nambiyar, MGR, Nagesh, Nanamo innum nanamo, Odum megangale, Paruvam enathu padal, R.s. manohar, Rafael sabatini, S.v. ramdas, Sea hawk, Sir henry morgan, Unnai naan sandhitthen, Vaali, Viswanathan-Ramamoorthy, Yen endra kelvi |[9] Comments
எனக்கு மிகவும் பிடித்த எம்ஜிஆர் படம் இதுதான்.
1965இல் வந்த படம். எம்ஜிஆர், ஜெயலலிதா, நாகேஷ், நம்பியார், மனோகர், ராமதாஸ், எல். விஜயலக்ஷ்மி நடிப்பு. விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணைந்து இசை அமைத்த கடைசி படம். பி.ஆர். பந்துலு சிவாஜியுடன் முறைத்துக்கொண்டு எம்ஜிஆர் பக்கம் வந்து எடுத்த முதல் படம். அவரேதான் இயக்கம் என்று நினைக்கிறேன், சரியாக நினைவில்லை. பிற்காலத்தில் கலைஞர் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது சினிமா ஷூட்டிங்கில் இருந்தவர்தான் எம்ஜிஆர் என்று தாக்குவார் – அந்த சினிமா ஷூட்டிங் இதுதான்.
கலர் படங்கள் அபூர்வமாகவே வந்த காலத்தில் வந்த கலர் படம். கலர் மேக்கப் ரொம்ப கோரமாக இருக்காது (சரோஜாதேவி, எங்க வீட்டுப் பிள்ளை, enough said) எட்டு மணி மணியான பாட்டுகள். ராஜா ராணி சாகசக் கதைகளில் எம்ஜிஆரை அடிக்க ஆளில்லை என்று நிரூபித்த படம்.
ரஃபேல் சபாடினி என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவர் எழுதிய ஒரு புகழ் பெற்ற நாவலின் பெயர் காகாப்டன் ப்ளட் (Captain Blood). அந்தக் காலத்தில் மேற்கிந்திய தீவுகளில் இருந்த ஒரு பிரபலமான கொள்ளைக்காரனான சர் ஹென்றி மார்கனின் வாழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. பிற்காலத்தில் மார்கன் மேற்கிந்திய தீவுகளின் கவர்னர் ஆனார். இந்த நாவல் எர்ரால் ஃப்ளின் நடித்து திரைப்படமாக முப்பதுகளில் வந்தது. எம்ஜிஆரின் ஆதர்ச நடிகர்கள் டக்ளஸ் ஃபேர்பாங்க்சும் எஎர்ரால் ஃப்ளின்னும்தான். சபாடினியின் இன்னொரு புத்தகமான சீ ஹாக் (Sea Hawk)புத்தகத்திலிருந்து சில சீன்களை எடுத்து – - குறிப்பாக ஜெயலலிதாவை ஏலம் விடும் சீன், அவர் ஆடாமல் ஆடுகிறேன் என்று பாடுவார் அந்த சீன் – இந்த புத்தகத்துடன் சேர்த்து உருவாக்கப்பட்ட திரைக்கதைதான் ஆயிரத்தில் ஒருவன்.
எம்ஜிஆர் ஒரு டாக்டர். சர்வாதிகாரி மனோகரை எதிர்க்கும் புரட்சியாளர்களுக்கு தன் தொழில் தர்மப்படி சிகிச்சை அளிப்பார். அதற்காக அடிமையாக ராமதாசின் தீவில் விற்கப்படுவார். அங்கே சென்று நாம் அடிமையாகவே இருக்க வேண்டியதுதானா என்று கேட்கும் தோழர்களுக்கு ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே, நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே என்று ஆறுதல் சொல்வார். நடுவில் தன்னை சைட் அடிக்கும் ஜெவை பற்றி மாளிகையில் அவள் வீடு, மரக்கிளையில் ஏன் கூடு, இதில் நான் அந்த மான் நெஞ்சில் வாழுவதேங்கே கூறு என்று பாடுவார். கொள்ளை அடிக்கவரும் நம்பியாருடன் போராடினால் சுதந்திரம் தருகிறேன் என்று சொல்லும் ராமதாசை நம்பி நம்பியாரை விரட்டுவார். ஏமாற்ற நினைக்கும் ராமதாசிடமிருந்து தப்பி நம்பியாரின் கப்பலில் போவார். நம்பியாரின் ப்ளாக்மெயிலால் கொள்ளைக்காரனாக மாறுவார். ஆனால் கொள்ளைக்காரர்களிடமிருந்துதான் கொள்ளை அடிப்பார். ஜெவின் கப்பலை கைப்பற்றுவார். ஜெவை விரும்பும் நம்பியாரிடமிருந்து அவரை காப்பாற்ற தன் அடிமையாக்கிக்கொள்வார். பிறகு அவரை மணப்பார். நம்பியாரிடமிருந்து தப்ப முயற்சி செய்யும்போது நம்பியாருடன் ஒரு சூப்பர் கத்தி சண்டை போட்டு பிறகு அதோ அந்த பறவை என்று பாட்டு பாடி, மனோதரின் கப்பலுடன் சண்டை போட்டு, மனோகரை சாவிலிருந்து காப்பற்றி, மனோகர் தரும் ராஜ பதவியை நிராகரித்து டாக்டராகவே வாழ்வார்.
அவரல்லவோ சூப்பர்மான்? ரஜினியும், விஜயும் எந்த காலத்திலும் அவருக்கு ஈடாக முடியாது.
அருமையான ஆர்ட் டைரக்ஷன். காட்சிகள் மிகவும் ரிச்சாக எடுக்கப்பட்டிருக்கின்றன. கப்பல் காட்சிகள் நம்மை இன்னும் அசத்துகின்றன. பந்துலு பணத்தை தண்ணீ ராகத்தான் செலவழித்திருக்கிறார்.
எம்ஜிஆர், நம்பியார், ஜெ, ராமதாஸ் ஆகியோருக்கு நல்ல வேஷப் பொருத்தம். சரோஜா தேவியின் கொஞ்சல் பாணியிலிருந்து விடுதலை! நாகேஷ் ராமதாஸ் காட்சிகளில் சிரிக்கலாம்.
நம்பியாரிடமிருந்து ஜெவை ஒரு பெட்டியில் வைத்து கடத்தி செல்ல, நம்பியார் அந்த பெட்டியில் தன் வாளை செருகும் காட்சி அருமையானது. அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் என்று பாடும் போது தியேட்டரில் உற்சாகம் பிய்த்துக்கொண்டு கிளம்பும்.
ராமதாஸ் பேசும் “நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள். ஆனால் வாய்தான் காது வரை இருக்கிறது” என்ற வசனம் எங்கள் வட்டத்தில் ரொம்ப ஃபேமஸ்!
கண்ணதாசனும் வாலியும் போட்டி போட்டுக்கொண்டு அருமையான பாட்டுகளை எழுதி இருக்கிறார்கள். கண்ணதாசன் “அதோ அந்தப் பறவை”, “நாணமோ” பாட்டுகளை எழுதினால், வாலி “பருவம் எனது பாடல்”, “ஆடாமல் ஆடுகிறேன்”, “ஏன் என்ற கேள்வி”, “ஓடும் மேகங்களே”, “உன்னை நான் சந்தித்தேன்” போன்ற பாட்டுகளில் அசத்தி இருக்கிறார்.
எனது ஃபேவரிட் அதோ அந்த பறவைதான். எல்லாருக்குமே அதுதான் ஃபேவரிட். பாட்டும், கப்பலில் எம்ஜிஆரும் ஜெவும் ஓடி ஆடி பாடுவதும் பிரமாதம்.
எனக்கு பிடித்த அடுத்த பாட்டு ஏன் என்ற கேள்விதான். அருமையாக படம் பிடிக்கப்பட்டிருக்கும். எம்ஜிஆரும் அவர் தோழர்களும் வட்டமாக படுத்துக்கொண்டு தண்ணீர் குடிக்கும் காட்சி பார்க்க பிரமாதமாக இருக்கும்.
ஓடும் மேகங்களேவுக்கு மூன்றாவது இடம். நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன் என்ற வரிகள் மிக அருமை. படத்தின் டைட்டிலை வேறு அர்த்தத்தில் வாலி உபயோகித்திருப்பார். வார்த்தைகள் வருவதற்கு முன் அருமையான இசை.
ஒரே ஒரு டூயட் – நாணமோ. நல்ல பாட்டு.
ஜெவுக்கு மூன்று சோலோ பாட்டுகள். பருவம் எனது பாடல், உன்னை நான் சந்தித்தேன், ஆடாமல் ஆடுகிறேன் என்று. நன்றாக, அந்த காலத்துக்கு கவர்ச்சியாக ஆடியிருப்பார்.
இன்னும் ஒரு பாட்டு இருக்கிறதோ? சரியாக நினைவு வரவில்லை.
சிறந்த பொழுதுபோக்கு படம். கட்டாயம் பாருங்கள். 10க்கு 8 மார்க். A- grade.
ஜனவரி 27, 2009
விவேக்குக்கு பத்மஸ்ரீ
Posted by RV under Tamil movies | குறிச்சொற்கள்: Padmasree, Vivek |[9] Comments
விருதுகள் சரியானவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பது முக்கியம். அதை விட முக்கியமான விஷயம் தவறானவர்களுக்கு கொடுக்காமல் இருப்பது. சிவாஜி ஒரு முறை கூட சிறந்த நடிகர் விருது பெறவில்லை என்பது மோசமான விஷயம். அதை விட மோசமான விஷயம் எம்ஜிஆருக்கு ரிக் ஷாக்காரனுக்காக கொடுக்கப்பட்டது.
விவேக்கை விட பல மடங்கு தகுதி வாய்ந்த நாகேஷுக்கு பத்மஸ்ரீ விருது இன்னும் கொடுக்கப்படவில்லை. எம்எஸ்வி, டிஎம்எஸ், பாலச்சந்தர், ஸ்ரீதர், பாரதிராஜா, எஸ்பிபி, பத்மினி, சுஹாசினி, எஸ். ஜானகி போன்றவர்களுக்கு கொடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை. சிவாஜியும் பத்மஸ்ரீ, கமலும் பத்மஸ்ரீ, விவேக்கும் பத்மஸ்ரீயா? என்னய்யா ஒரு விவஸ்தையே இல்லாமல் இருக்கிறதே? இனி மேல் கமல் பத்மஸ்ரீ கமலஹாசன் என்று போட்டுக்கொள்வதை நிறுத்திவிடலாம்.
இதற்காக நான் விவேக்கை குறை சொல்ல மாட்டேன். அவரை பரிந்துரைத்த கலைஞர் அரசைத்தான் குறை சொல்வேன். இந்த விருது இவருக்கு ஏன் கொடுக்கப்பட்டது? கருத்து கந்தசாமி பல படங்களில் நம்மை கருத்து சொல்லி கழுத்தை அறுத்ததற்காகவா? இல்லை இவரும் கலைஞருக்கு நன்றாக ஜால்ரா அடித்தாரா?
ஏற்கனவே கலைமாமணி விருது சந்தையில் கூறு கட்டி விற்பதைப் போல ஆகிவிட்டது. இந்த விருதுகளையும் அப்படி ஆக்கிவிடாதீர்கள்.
ஜனவரி 24, 2009
பெரியார்
Posted by RV under Tamil movies | குறிச்சொற்கள்: Chandrasekar, Gnana rajasekaran, Jyotirmayi, Kamaraj, Kovai ayyamuthu gownder, Kushboo, Maniyammai, Nagammal, Nehru, Nizhalgal ravi, Periyar, Rajaji, Ramanathan, Satyaraj |1 Comment
பல நாட்களுக்கு முன் பார்த்த படம். பெரியாரை பற்றி எழுதும்போதே இந்த படத்தை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன், இப்போதுதான் கை வந்தது.
நினைவிலிருந்து எழுதுகிறேன். சத்யராஜ் பெரியாராக, குஷ்பு மணியம்மையாக, ஜோதிர்மயி நாகம்மாளாக, சந்திரசேகர் ராமனாதனாக, நிழல்கள் ரவி கோவை அய்யாமுத்துவாக நடித்திருக்கிறார்கள். மற்ற நடிகர்கள் தெரியவில்லை. இயக்குனர் ஞான ராஜசேகரன் என்று நினைக்கிறேன்.
படத்தின் வெற்றி பெரியாரை (ஓரளவு) உண்மையாக சித்தரித்தது. படத்தின் தோல்வி பெரியாரை எந்த குறைகளும் இல்லாத மனிதராக சித்தரித்தது; மற்ற பாத்திரங்களை மிகவும் தட்டையாக காண்பித்தது.
பெரியார் நாத்திகர், ஜாதிகள் இல்லை, ஆணுக்கு பெண் சமம், பார்ப்பனர்கள் நம்மை அமுக்குகிறார்கள் என்ற அளவுக்காவது அவர் சிந்தனைகளை பற்றி தெரியும். ஆனால் அவரது வாழ்க்கையை பற்றி எனக்கு இந்த படம் பார்க்கும் முன் அவ்வளவாக தெரியாது. அவரது தனிப்பட்ட அனுபவங்கள்தான் அவரை கடுமையான பிராமண எதிர்ப்பாளராக மாற்றிவிட்டன என்று நினைக்கிறேன். காசியில் அவர் பட்ட அவமானங்கள், அவரது பெற்றோரின் தீவிர ஆத்திகம் இரண்டுமே அவரை ஒரு வெறுப்பு பாதையில் செல்ல வைத்தன.
சத்யராஜ் மிக நன்றாக நடித்திருந்தார். குஷ்பு, ஜோதிர்மயி போன்றவர்களும் நன்றாக நடித்திருந்தார்கள். சில சம்பவங்கள் – பெரியார் மேல் செருப்பு வீசப்படுவது, பெரியார் சின்ன வயதில் தாசி வீட்டுக்கு போவது போன்றவை நன்றாக இருந்தன.
இந்த படத்தில் அவருடன் ரஷ்யா செல்வதாக காண்பிக்கப்படும் ராமநாதன்தான் (சந்திரசேகர்) பெரியார் காங்கிரசை விட்டு விலக மூல காரணம் என்று திரு.வி.க. சொல்கிறார். மேலும் ராமநாதன் பிற்காலத்தில் காங்கிரஸில் மீண்டும் சேர்ந்து மந்திரியாக கூட ஆனாராம்.
இந்த படத்தை வைத்து பார்த்தால் மணியம்மை பெரியாருக்கு ஒரு நர்ஸ் போல இருந்திருக்கிறார்கள். அவ்வளவுதானா அவருடைய பங்களிப்பு?
காமராஜ் பெரியார் கொடுத்த தைரியத்தில்தான் முதலமைச்சர் ஆனார் என்பது போல் காண்பிக்கிறார்கள். இது உண்மையாக இருக்கும் என்று தோன்றவில்லை. காமராஜ் நாற்பதுகளிலேயே தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர். ராஜாஜியை நேரு அனுப்பாவிட்டால் அவருக்கு காங்கிரஸில் யாரும் போட்டி இல்லை. அவருக்கு பெரியாரிடமிருந்து எதுவும் தேவைப்பட்டிருக்காது என்று நினைக்கிறேன்.
பெரியார் குறை இல்லாத மாமனிதராக சித்தரிக்கப்பட்டிருந்தாலும், பார்க்கலாம். 10க்கு 7 மார்க். B grade.
ஜனவரி 23, 2009
இந்த விருதுகளுக்கான போட்டியில் ஸ்லம்டாக் மில்லியனர் இருக்கிறது.
சிறந்த படம் (போட்டி போடும் பிற படங்கள் – Curious Case of Benjamin Button, Frost/Nixon, Milk, Reader)
இயக்குனர் (போட்டி – Curious Case of Benjamin Button, Frost/Nixon, Milk, Reader)
திரைக்கதை (மூலக் கதையிலிருந்து உருவாகியது) – (போட்டி – Curious Case of Benjamin Button, Doubt, Frost/Nixon, Reader)
இசை (போட்டி – Curious Case of Benjamin Button, Defiance, Milk, Wall-E)
பாட்டு – ஜெய் ஹோ, ஓ சாயா இரண்டு பாட்டுகளும் போட்டியில் உண்டு. போட்டியில் உள்ள இன்னும் ஒரு பாட்டு Wall-E படத்தில் வரும் “Down to Earth)
ஒளிப்பதிவு (போட்டி – Changeling, Curious Case of Benjamin Button, Dark Knight, Reader)
எடிட்டிங் (போட்டி – Curious Case of Benjamin Button, Dark Knight, Frost/Nixon, Milk)
சவுண்ட் எடிட்டிங் (போட்டி – Dark Knight, Iron Man, Wall-E, Wanted)
சவுண்ட் மிக்சிங் (போட்டி- Curious Case of Benjamin Button, Dark Knight, Wall-E, Wanted)
ஜனவரி 17, 2009
காளிதாஸ் (1931) – திரையுலக வரலாறு 6
Posted by Bags under Films, History of Tamil Films, Indian films, Tamil movies, Tamil reading | குறிச்சொற்கள்: Alam Ara, Ardheshir irani, Bhakta prahaladha, British raj, Carnatic music, Goddess saraswati, H.m. reddy, Imperial movie tone, J. shusheela, Kinema central, L.v. prasad, M.S. sapthanalaksmi, Nataraja Mudaliyaar, P.g. venkatesan, R. prakash, R. Venkiah, Raja sandow, Randor guy, Silent movies, Susheela devi, T.p. rajalakshmi, Talkies, Tejavati, Theodre bhaskaran, Vidyakumari, Vijayavarman, Vitaphone, Warner brothers |[5] Comments
1920களில் ஆரம்பங்களில் நடராஜ் முதலியாரும், 20 மற்றும் 30களில் ரகுபதி பிரகாஷும் தமிழ் திரயுலகத்தில் நட்சத்திரங்களாக ஜொலித்தனர். ராஜா சாண்டோவும் இந்த கால்கட்டத்தில் தான் வளர்ந்து வந்தார் (அவரைப் பற்றி இன்னொரு அத்தியாயத்தில் பார்க்கலாம்). ஆனால் 30தின் ஆரம்பம் வரை படங்கள் தான் பேசியதே தவிர பேசும் படம் (டாக்கீஸ்) முதன் முதலில் தோன்றியது 30களின் ஆரம்பங்களில் தான். பேசாத படங்கள் – சைலண்ட் மூவிஸ், அதாவது மொழியற்ற படங்கள் வந்தபொழுது அதை எப்படி தமிழ் திரைப்படம் என வகைப்படுத்தினார்கள்? எனது ஊகம், இயக்குனர், தயாரிப்பாளர் வாழ்ந்த பிரதேசம், திரைப்படம் திரையிடப்படும் பிரதேசம் தான் அது எந்த மொழிப்படம் என்பதை நிர்ணயித்தது. (இதுவரை செய்த எனது ஆராய்ச்சிக்கு அது புலப்படவில்லை. ரண்டார் கை, தியோடர் பாஸ்கரன் முதலியோரிடம் கண்டிப்பாக இதற்கு விடையிருக்கவேண்டும்.) அல்லது சைலண்ட் மூவிஸ் காலத்தில் “டாக்கீஸ்” எனப்படும் நேரட்டர்கள் திரை அருகில் நின்றவாறு ”காலட்சேபம்” செய்வார்கள். அவர்கள் எந்த மொழியில் நேரேட் செய்வார்களோ அதை பொறுத்ததா?
1931 தமிழ் திரையுலகில் ஒரு மைல்கல். நடராஜ் முதலியார் ஒரு மைல்கல், வெங்கையா-பிரகாஷ் இரண்டாவது மைல்கல் என்று வைத்துக்கொண்டால் ஹச். எம். ரெட்டி இயக்கி, ”இம்பீரியல் மூவி டோன்’ உரிமையாளர் அர்தேஷர் இரானி தயாரித்து அக்டோபர் 31, 1931ல் வெளிவந்த “காளிதாஸ்” மூன்றாவது மைல்கல். கினிமா செண்ட்ரல் திரையரங்கில் திரையிடப்பட்டது. எதனால் இது ஒரு மைல்கல்? பல காரணங்கள்.
முக்கிய காரணம், இது தமிழில் வந்த முதல் பேசும் படம். சாமான்யன் காளிதாஸ் சரஸ்வதியின் அருளால் புலவர் காளித்தாஸாகிய கதை இதில் சித்தரிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்படம் என்ற பேரேயொழிய தெலுங்கும், மற்றும் உருதுவும் (ஹிந்தியும்) கலப்படம் செய்யப்பட்டது. வியாபார ரீதியாக தன்னை கவர் செய்துகொள்வதில் ஹச்.எம்.ரெட்டி கவனமாக இருந்ததாகவே தெரிகிறது. இது ஒரு பாக்ஸ் ஆபிஸ் ஹிட். குறைந்தபட்சம் ஒரு ஐம்பது பாட்டுக்கள் இருந்திருக்கவேண்டும். ஒரு பாட்டு மூன்று நிமிடங்கள் என்று வைத்துக்கொண்டால் கிட்டத்தட்ட இரண்டரை மணிநேரம் ஒரு இன்னிசை மழை இல்லை, கர்நாடக இசை மழைதான். இதில் இடை இடையே ராட்டையை பற்றி தேசபக்தி பாடல்கள் பாடி பிரிட்டிஷ் அரசாங்கத்திற்க்கு புளி கரைத்தார்கள். காளிதாசை பற்றி அன்றைய மக்கள் நன்கு அறிந்து வைத்திருந்தாலும் இதை சினிமாவில் பார்க்க சற்றும் சலைக்கவில்லை. இந்தத் திரைப்படம் பின்னால் வந்த படங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தது.
தேஜவதி அரசன் விஜயவர்மன் மகள் வித்யகுமாரி. அவரை மணம் செய்யதுகொள்ள விரும்பிகிறார் மந்திரி. ராஜகுமாரி மறுக்கவே சினம் கொண்டு அவரை ஏமாற்றி மாடுமேய்க்கும் காளிதாஸ்ஸிர்க்கு மணம் செய்துவைத்துவிடுகிறார் மந்திரி. வஞ்சிக்கப்பட்ட ராஜகுமாரி சரஸ்வதியிடம் வேண்டுகிறார். சரஸ்வதியும் மணம் இரங்கி காளிதாசை புலவராக மாற்றிவிடுகிறார் என்பது கதை.
பி.ஜி. வெங்கடேசன் காளிதாஸாகவும், டி.பி.ராஜலக்ஷ்மி இளவரசியாகவும் தோன்றினார். டி.பி.ராஜலக்ஷ்மி பாடல்களும் பாடினார். வில்லன் உட்பட எல்லா கதாபாத்திரங்களும் படத்தில் பாடினார்கள். மற்ற நடிகர்கள் தேவாரம் ராஜாம்பாள், சுஷீலா தேவி, ஜெ. சுஷீலா, எம்.எஸ்.சப்தானலக்ஷ்மி மற்றும் எல்.வி. பிரசாத். எல். வி. பிரசாத் கோவில் பூசாரியாக நடித்தார். பி.ஜி. வெங்கடேசன் தெலுங்கிலும், ராஜலக்ஷ்மி தமிழிலும், எல்.வி. பிரசாத் ஹிந்தியிலும் பேசி நடித்தார்கள். நோ சப்-டைடில்ஸ்.
1926ல் வார்னர் ப்ரதர்ஸ் ஹாலிவுட்டில் ”விடாபோன்” முறையில் ஒலிப்பதிவு செய்தது. காளிதாஸ் திரைப்படத்தில் இம்முறை கையாளப்பட்டது. ”விடாபோன்” முறையில் முதலில் இசை மற்றும் மற்ற ஒலிகள் ஒரு பெரிய தட்டில் ஒலிப்பதிவு செய்யப்படும். பின்னர் காட்சிகள் படமாக்கப்படும்போது உரையாடல்களுடன் இந்த தட்டில் பதியப்பட்டவையும் ப்ளே செய்யப்பட்டு இவை ஒரு மைக்ரோபோன் உதவியுடன் மறுபதிவு செய்யப்படும். என்ன ஒரு கடுமையான காலகட்டம். இன்றைய திரைப்படத் தொழிலில் உள்ளவர்கள் மனம் வெறுத்து சாமியாராகிவிடக்கூடிய அளவுக்கு கடுமையான வேலை. காளிதாஸ் படத்தின் நீளம் சுமார் 6000அடி. பம்பாயில் தயாரிக்கப்பட்டது. இதே வருடத்தில் தான் ஆனால் சில நாட்களுக்கு முன்னதாக ஆலம் அரா (ஹிந்தி) மற்றும் பக்த பிரகலாதா (தெலுங்கு) என்ற முதல் ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்கள் வெளிவந்தன. எல்.வி. பிரசாத் இவை மூன்றிலும் நடித்திருந்தார். காளிதாஸ் திரைப்படத்திற்கு விளம்பரம் அக்டோபர் 30 1931ல், ஒரு 5 செ.மீ. இரண்டு பத்தியும் அடைத்தது. இன்று மாதிரி மார்கெட்டிங்கிற்காக ஒரு படத்திற்கு பல லட்சங்கள் செலவழித்து படம் ட்ப்பாவிற்குள் முடங்குவதுடன் ஒப்பிட்டு பாருங்கள்!
ஜனவரி 15, 2009
2008இல் வெளி வந்த படம். அஜய் தேவ்கன், கரீனா கபூர், துஷார் கபூர், அர்ஷத் வார்சி, ஸ்ரேயாஸ் தல்படே மற்றும் பலர் நடித்தது. யாரி இயக்கியது என்று பார்க்கவில்லை.
சாதாரணமாக இங்கே உள்ள இந்திய மளிகை கடையில் நாற்பது ரூபாய்க்கு மளிகை வாங்கினால் ஓர் டிவிடி இலவசம். அப்படி எடுத்து வந்த டிவிடிதான். பார்க்க வேண்டும் என்று எடுக்கவில்லை. ஆனால் சிரித்துக் கொண்டே இருந்தோம்.
மூளையை கழற்றி வைத்துவிட்டு பார்க்க வேண்டிய படம். ஆனால் ஜாலியான படம். காலேஜில் நண்பர்களோடு பார்த்தால் குஷி கிளம்பும்! கிரேசி மோகன் நாடகம் போல.
டிவி சீரியல் பைத்தியமான கரீனாவுக்கு கணவன் அஜய் மீது எப்போதும் சந்தேகம். இன்ஸ்பெக்டர் அர்ஷத் வார்சிக்கு அஜய் மீது விரோதம். பிறகுதான் அவர் அஜயின் தங்கையை காதலிப்பது தெரியவருகிறது. ஒரு நாள் இரவு அஜய் வேறு ஒரு பெண்ணுடன் தங்கி விட, கரீனாவின் சந்தேகத்தை தீர்க்க ஒரு போலி அந்தோனி கண்சால்வசை உருவாக்குகிறார். அஜயின் கூட வேலை செய்பவர் ஒருவர் கொலை செய்யப்பட, அர்ஷத் வார்சி அஜயை துரத்த, நடுவில் உண்மையாகவே ஒரு அந்தோனி முளைத்து வர, போலி அந்தோனி…. அட போங்கய்யா! கதை எல்லாம் முக்கியமில்லை.
நடுவில் ஒரு முறை அஜய் இறந்துவிட்டதாக எண்ணி கரீனா துஷார், அர்ச்திடம் அடிக்கும் லூட்டி சீன், ஊமையான துஷார் ஒரு முறை அஜயிடம் ஃபோநில் பேசுவது, கடைசியில் க்ளைமாக்ஸ் தூக்கு சீன் எல்லாம் அபாரமானவை.
பாட்டெல்லாம் எனக்கு ஞாபகமில்லை.
லாஜிக் எல்லாம் பார்க்காமல் சும்மா சிரிக்க நல்ல படம். பாருங்கள். 10க்கு 7 மார்க். B grade.