புத்தாண்டு வாழ்த்துக்கள்!
பாஸ்டன் பாலா தன் டாப் தமிழ் ப்ளாகர்ஸ் என்ற பதிவில் இந்த ப்ளாகையும் குறிப்பிட்டிருக்கிறார். அவருக்கு நன்றி! ஒரு ஆறுதல் பரிசு மாதிரி “இவர்களும் இருக்கிறார் 13″ என்ற சப்-ஹெட்டிங்கில் எங்களையும் சொல்லி இருக்கிறார். இதற்காக இல்லாவிட்டாலும், அவர் பல சுவாரசியமான பதிவுகள் – எனக்கு தெரியாதவை அதில் பல இருந்தன – பற்றி சொல்லி இருக்கிறார், கட்டாயம் பாருங்கள்!
நடுவில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. பக்ஸ் மீண்டும் தொடர்வதாக சொல்லி இருக்கிறான். அதனால் உங்களுக்கெல்லாம் விமோசனம் இல்லை.
ஜனவரி 3, 2009 at 8:40 பிற்பகல்
டாப் தமிழ் ப்ளாகர்ஸில் தங்கள் பெயரை கண்டதும் நேற்று எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள்… நிறைய எழுதுங்கள்.
ஜனவரி 4, 2009 at 2:58 மு.பகல்
சூர்யா, வாழ்த்துகளுக்கு நன்றி! மறுமொழி எழுதுவதற்கு அதை விட நன்றி! Your replies are validation for us…