நாகேஷ்

தமிழின் தலை சிறந்த நகைச்சுவை நடிகரும் அருமையான குணச்சித்திர நடிகருமான நாகேஷ் நேற்று மறைந்தார். மிகவும் வருத்தம் தரும் விஷயம். எங்கள் அஞ்சலி.

பற்றி RV
43 year old. Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Engineer by profession. Going through a mid-life crisis (got laid of two months ago and looking for a job). Considering a change of line in computers. Live in Silicon valley (Newark)

4 Responses to நாகேஷ்

  1. Das says:

    Dear RV,

    I request you to write about nAgEsh as you did a fine job about shridar.

    Thanks,

    Das

  2. Surya says:

    அனைத்து பதிவுகளும் அருமை. மீண்டும் ஒரு முறை படித்துவிட்டு கருத்துகளை கூறுகிறேன். நாகேஷ் பற்றி பேச நாட்கள் போறாது..

    அந்த மாபெரும் நடிகருக்கு அஞ்சலி..

  3. BaalHanuman says:

    ‘நகைச்சுவைத் திலகம்’ நாகேஷின் வாழ்க்கை வரலாற்றில் இயக்குநர் ஸ்ரீதருக்கு பெரும் பங்குண்டு. ஸ்ரீதரின் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’தான் முதன்முதலில் நாகேஷுக்கு பெயர் வாங்கிக் கொடுத்தத் திரைப்படம். இதற்குப் பின் ஸ்ரீதரின் அத்தனை திரைப்படங்களிலும் நாகேஷ் நடித்திருக்கிறார். தமிழ்ச் சினிமாவின் மறக்க முடியாத ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தில் நாகேஷின் அந்த ‘செல்லப்பா’ கேரக்டர்தான் தமிழக மக்களால் இன்னமும் மறக்க முடியாத கேரக்டர்.

    ஸ்ரீதருக்கும், நாகேஷுக்குமான நட்பு திரையுலகத்தையும் தாண்டியது. ஸ்ரீதர் உடல் நலமில்லாமல் பாரிசவாயு வியாதியால் பீடிக்கப்பட்டபோது நாகேஷ்தான் தினந்தோறும் மருத்துவமனைக்கு சென்று ஸ்ரீதரின் அருகில் அமர்ந்து அவருடனான தனது தொடர்புகளை, சந்திப்புகளை மீண்டும், மீண்டும் ஞாபகப்படுத்தி அவருக்கு மெமரி பவரை திரும்பக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டவர். இதுபோல் நிறைய கலைஞர்கள் செய்தார்கள். ஆனாலும் நாகேஷின் இந்த முயற்சியை அவருடைய குடும்பத்தினர் அதன் பின் கண்கலங்கிப் போய் பல பேட்டிகளில் சொல்லியிருந்தார்கள்.

    இப்போது இது எதற்கு என்கிறீர்களா..? இதனை இப்போது சொல்ல வந்ததன் காரணம், இயக்குநர் ஸ்ரீதர் இறந்து போனது அப்போது உயிரோடு இருந்த நாகேஷுக்கு அவர் சாகின்றவரையிலும் தெரியாது என்கிற உண்மையைச் சொல்லத்தான். இது எவ்ளோ பெரிய கொடுமை..?

    நாகேஷின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அந்தச் செய்தியை அவரிடம் சொல்ல நாகேஷின் குடும்பத்தினர் மறுத்து விட்டார்களாம்.. இத்தனைக்கும் ஸ்ரீதரின் மனைவியே நாகேஷை வரச் சொல்லி கேட்டுக் கொண்டும் முடியவில்லையாம். அதேபோல் நாகேஷின் கடைசி நேரம் வரையிலும் ஸ்ரீதர் பற்றி ஒரு விஷயம்கூட நாகேஷுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அவருடைய குடும்பத்தினர்.

    இன்னுமொரு விஷயமும் உண்டு. ஸ்ரீதருக்கு அடுத்து இறந்து போன நடிகர் நம்பியாரின் மரணமும் நாகேஷிடம் சொல்லப்படவே இல்லையாம்.. இரண்டு நண்பர்கள் தனக்கு முன்பாக விடைபெற்றது தெரியாமல்தான் இந்த நண்பனும் விடைபெற்றிருக்கிறான்.

    ம்ஹும்.. நினைத்தால் மனம் ரொம்பவே கனக்கிறது..

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 45 other followers