பாரதிராஜா தனக்கு பிடித்த பத்து படங்களை இங்கே பட்டியல் இடுகிறார். வசதிக்காக லிஸ்டை இங்கே கீழே கொடுத்திருக்கிறேன். இவற்றுக்கு ட்விட்டர் ஸ்டைலில் ஒரு வரி விமர்சனம்.

Ryan’s Daughter – பார்த்ததில்லை. டேவிட் லீன் பொதுவாக நன்றாக படம் எடுப்பார்.
ஜனக் ஜனக் பாயல் பாஜே (ஹிந்தி) – சின்ன வயதில் பார்த்தது. மறந்துவிட்டது. சாந்தாராம் படம்.
காகஸ் கே பூல் (ஹிந்தி)- பொதுவாக எனக்கு குரு தத் படங்கள் மிக பிடிக்கும். காகஸ் கே ஃபூல் அவரது மிக சிறந்த படம் அல்ல, ஆனால் நல்ல படங்களில் ஒன்று. ஒளிப்பதிவுக்காவே பார்க்கலாம்.
மதர் இந்தியா(ஹிந்தி) – மிக அருமையான படம். பல cliche-கள் இந்த படத்திலிருந்துதான் ஆரம்பித்தன. (மகனை கொல்லும் அம்மா)
செம்மீன் (மலையாளம்) – அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சீன்களைத்தான் பார்த்திருக்கிறேன். அருமையான பாட்டுகள்.
Bicycle Thief(இத்தாலியன்) சின்ன வயதில் பார்த்தது. அந்த வயதில் போர் அடித்தது என்று ஞாபகம். இது ஆர்ட் ஃபில்ம்டா என்று ஓடிவிட்டோம். திரும்ப பார்க்க வேண்டும்.
Gone with the Wind -”My Dear, I don’t give a damn!” என்ற கடைசி வரி அற்புதமானது. ஆனால் படம் ஒன்றும் பிரமாதம் என்று சொல்ல மாட்டேன். க்ளார்க் கேபிள் நன்றாக நடித்திருப்பார்.
உதிரிப் பூக்கள் – பார்த்ததில்லை
Lawrence of Arabia – T.E. Lawrence is a fascinating character. மிக நல்ல படம்.
சங்கராபரணம் – கர்நாடக சங்கீதம் போர் இல்லை என்று எனக்கு தெரியப்படுத்திய படம். அந்த வயதில் மிக அருமையாக தெரிந்தது.