சொல்லத்தான் நினைக்கிறேன் – விகடன் விமர்சனம் குறித்த மறுமொழிகள்

Ramachandran Usha(உஷா) இவரால்
மணியன் எழுதிய தொடர் நாவல் பெயர் இலவு காத்த கிளி யேதான். வாசித்து இருக்கிறேன்,

லேசான மாறுதல்களுடன் படமாக்கியதாய் நினைவு. ஆனால்  டோண்டு சார் சொன்னாமாதிரி முடிவு இல்லை என்றும் நினைக்கிறேன். உறுதியாய் சொல்ல முடியவில்லை.

எம்.எஸ்.வி பாடி சகிக்கிறாமாதிரி இருக்கும் ஓரே உருப்படியான பாடல் “சொல்லத்தான் நினைக்கிறேன்” சினிமாவில் நினைவு வருவது ஸ்ரீவித்யாவின் அழகான கண்கள் மட்டுமே !

RV இவரால்
டோண்டு, ரவிசங்கர், சூர்யா,

சொல்லத்தான் நினைக்கிறேன் பதிவுக்கு மறுமொழி அளித்ததற்கு நன்றி!

டோண்டு சார், சிவகுமார் பாத்திரம் சுபா பாத்திரத்தை மணப்பது என்றால் இலவு காத்த கிளி என்ற தலைப்புக்கு பொருந்தவில்லையே? இலவு காத்த கிளி என்றால் எந்த பெண்ணையும் மணக்காமல் அல்லவா இருக்க வேண்டும்?

ரவிசங்கர், // கற்பு என்ன கமர்கெட்டா கடிச்சுக் கொடுப்பதற்கு? // நல்ல ஞாபக சக்தி சார் உங்களுக்கு!

மணிவண்ணன் இவரால்
தயாரிப்பாளர், நடிகர் பாலாஜி மரணம் அடைந்த்டுவிட்டார். அவருக்கு அஞ்சலி செலுத்துவோம்.  ஒரு பதிவு ஆரம்பியுங்கள், எமக்குத் தெரிந்த தகவல்களை பதிக்கலாம். அண்மையில் ஜெயா ரிவி யில் திரும்பிப்பார்க்கின்றேன் என்னும் நிகழ்ச்சியில் பங்கு பற்றியிருந்தார்.

- மணிவண்ணன்

surya இவரால்
அருமையான படம். எஸ்.வி. சுப்பையாவின் நடிப்பு பற்றி ஒன்றும் சொல்லவில்லையே..

எனக்கு நினைவுக்கு வருவது மூன்றே எழுத்து அவர் சொல்லும்… மூன்றே எழுத்து…

எழுந்து போங்கடா முண்டங்களா..

அனைவரின் நடிப்பும் அருமை…

கே.ரவிஷங்கர் இவரால்
சொல்லத்தான் நினைக்கிறேன் சில நினைவுகள்:-

//படத்தில் சர்ச்சைக்குரிய கட்டமான மூன்றாவது பெண் புஷ்பா கற்பைப் பணயம் வைக்கும்//

இது பற்றி குமுதத்தில் ஒரு விவாதம் வந்தது. அதில் ஒருவர் “கற்பு என்ன கமர்கெட்டா கடிச்சுக்

கொடுப்பதற்கு”என்று எழுதியிருந்தார்.

சுப்பையாவின் நடிப்பில் ஒரு அசட்டுத்தனம் தட்டும்.இதிலும் உண்டு.பாலசந்தர் படங்களில்

ஏதாவது ஒரு கேரக்டர் ஒரு வினோதமான வார்த்தைகளை அடிக்கடி சொல்லுவார்கள்.

சவுண்ட் விடுவார்கள்.”படா பட்” மாதிரி இதில் ஜெய சித்ரா “டொட்டொடய்ய்ங்” என்பார். அற்புதமான நடிப்பு.

MSVவின் அற்புதமான பாட்டு “சொல்லத்தான் நினைக்கிறேன்”.மறக்க முடியாது.

டோண்டு ராகவன் இவரால்
இதன் மூலக்கதை (இலவு காத்த கிளி?) விகடனில் சமீபத்தில் 1961-ல் வந்தபோது படித்திருக்கிறேன். கதைப்படி சிவகுமார் சுபாவைத்தான் மணக்கிறார். சினிமாவில் அதை மாற்றினார்கள்.

சினிமாவில் மிகவும் ரசித்த காட்சி என்னவென்றால், சிவகுமார் வீட்டுக்கு இவர்கள் குடிவந்ததும், சமையற்கார வீரப்பன் எல்லோருக்கும் பால் அருந்த கொடுத்து விட்டு, சுபாவைப் பார்த்து, “நீங்கதானே மூத்த பெண்” என கேட்க, அவரும் எப்படி அதை வீரப்பன் தெரிந்து கொண்டார் என ஆவலாக கேட்க, வீரப்பனோ சாவகாசமாக, “இல்லே, மூத்தது மோழைன்னு சொல்லுவாங்க” எனச் சொல்வார். ஜெயசித்திரா வாயில் விட்ட பாலை அப்படியே ஒருவித சத்ததுடன் ஸ்ப்ரேயுடன் வெளியிட்டு, புரையேறி சிரிப்பார்.

கதை ஒரு தமிழ் புத்தாண்டில் (ஏப்ரல் 14-தான்) ஆரம்பித்து அடுத்த புத்தாண்டில் நிறைவு பெருகிறது.

கதை விகடனில் வெளியான அடுத்த நாள் திருவல்லிக்கேணியில் உள்ள அயனாவரம் கூட்டுறவு பால்பண்ணை பூத்தில் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. விவாதத்தை மட்டுறுத்தியவர் பால் பூத்தின் பொறுப்பை ஏற்றிருந்த ஒரு பெண்மணி. யார், யாரை, யார் யாரால் முறையே காதலிக்கிறார்கள் அல்லது காதலிக்கப்படுகிறார்கள் என்ற வாதங்கள் நடந்து, கடைசியில் அப்பெண்மணி பட்டிமன்ற மட்டுறுத்துனர் என்னும் ஹோதாவில்  அளித்த தீர்ப்பு என்னவென்றால், “இதுக்குத்தான் பொட்டச்சிங்களை படிக்க வைக்கக் கூடாது” என்பதாகும்.

அன்புடன்,

டோண்டு ராகவன்