என் விமர்சனம் – சொல்லத்தான் நினைக்கிறேன்
மே 6, 2009 5 மறுமொழிகள்
எப்போதோ பார்த்த படம். துல்லியமாக எல்லாம் நினைவில்லை.
விகடனில் வந்த விமர்சனம் இங்கே.
1973-இல் வந்த படம். சிவகுமார், ஸ்ரீவித்யா, சுபா, ஜெயசித்ரா, கமல், பூர்ணம் விஸ்வநாதன், ஜெயசுதா, எஸ்.வி. சுப்பையா நடித்தது. எம்எஸ்வி இசை. மணியன் விகடனில் தொடர்கதையாக எழுதியது. டோண்டுவும் உஷா ராமச்சந்திரனும் தொடர்கதையின் பெயர் இலவு காத்த கிளி என்று தகவல் தருகிறார்கள். பாலச்சந்தர் இயக்கம்.
சுப்பையாவுக்கு மூன்று பெண்கள் – சுபா, ஸ்ரீவித்யா, ஜெயசித்ரா. அவர்கள் வீட்டுக்கு கல்யாணம் ஆகாத சிவகுமார் குடி வருகிறார். மூன்று பேரும் அவர் மேல் ஆசைப்படுகிறார்கள். சிவகுமார் ஜெயசித்ராவை விரும்புகிறார். எல்லாரும் தங்கள் ஆசையை சொல்லத்தான் விரும்புகிறார்கள், ஆனால் வாயிருந்தும் சொல்வதற்கு வார்த்தை இன்றி தவிக்கிறார்கள். சிவகுமாரின் விருப்பம் தெரிய வரும் மற்ற இருவரும் நாசுக்காக விலகிக் கொள்கிறார்கள். சற்று பொருத்தம் இல்லாத கல்யாணம் செய்து கொள்கிறார்கள். கமல் ஒரு ப்ளேபாய். பெண்களை வளைப்பதிலேயே குறியாக இருப்பவர். ஜெயசித்ரா தன் லிஸ்டில் இருப்பதாக தைரியமாக அவரிடமே சொல்வார். ஜெயசித்ரா நான் உன் வலையில் விழ மாட்டேன் என்று சவால் விடுவார். கமல் கொஞ்சம் வயதான பூரணத்தின் மனைவி ஜெயசுதாவை தன்னுடன் வர சம்மதிக்க வைக்கிறார். ஜெயசித்ரா கமலை போகவிடாமல் தடுப்பதற்காக தன் கற்பை பணையம் வைக்கிறார். ஜெயசுதாவை காப்பாற்ற தன் கற்பை இழந்தது புரிந்ததும் கமல் திருந்தி ஜெயசித்ராவை மணக்க, சிவகுமார் இலவு காத்த கிளி ஆகிறார்.
ஜெயசித்ரா மிக சிறப்பாக நடித்த படம் இதுதான். அப்போதெல்லாம் பாலச்சந்தர் படத்தில் எல்லாரும் நன்றாக நடிப்பார்கள், மற்ற படங்களில் சொதப்புவார்கள் என்று ஒரு கருத்து பரவலாக இருந்தது. சுஜாதாதான் மற்ற படங்களிலும் நன்றாக நடித்தார் என்று பேர் வாங்கினார். ஜெயசித்ரா வேறு எந்த படத்திலும் நன்றாக நடித்ததாக எனக்கு நினைவில்லை.
கமலின் நடிப்பு பெரிதும் ரசிக்கப்பட்டது. அவர் முதலில் கண்டுகொள்ளப்பட்ட படம் இதுதான் என்று நினைக்கிறேன்.
சிவகுமார், சுப்பையா, ஸ்ரீவித்யா, சுபா எல்லாருமே நன்றாக நடித்திருந்தார்கள்.
இரண்டு பாட்டுகள்தான் நினைவிருக்கிறது. சொல்லத்தான் நினைக்கிறேன் என்று எம்எஸ்வி கலக்கிய பாட்டு ஒன்று (உஷா ராமச்சந்திரன் எம் எஸ்வி நன்றாக பாடிய ஒரே பாட்டு இதுதான் என்று சொல்லி இருந்தார்). கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே வேடிக்கை நமக்கு என்ற பாட்டு இன்னொன்று. அதுவும் நன்றாக இருக்கும்.
பார்க்கலாம். சுவாரசியமான படம்தான். பத்துக்கு ஏழு மார்க். B- grade.
பார்க்கலாம். சுவாரசியமான படம்தான்.. வழி மொழிகிறேன்.
கமல் நடிப்பு சூப்பர். இதற்கு பிறகு தான் திரையுலகம் இவரை உற்று பார்க்க ஆரம்பித்தது…
இது இலவு காத்த கிளி என்ற மணியனின் ஆனந்த விகடன் தொடர்கதையின் திரை வடிவம். எஸ் வி சுப்பையா சொல்லும் “எழுந்து போங்கடா முண்டங்களா” வசனம் இதில் மிகவும் ஃபேமஸ். எம் எஸ் வி யின் சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன் வாய் இருந்தும் சொல்வதற்கு வார்த்தை இன்றி தவிக்கிறேன் நல்ல பாடல்
ச.திருமலை
ராஜன்,
எழுந்து போடா முண்டங்கலாவுக்கு சுப்பையா சொல்லிட்டமா, சொல்லிட்டமா என்று பில்டப் கொடுக்கும்போதே தெரிந்துவிடும், இவர் இப்படி விவகாரமாக ஏதோ சொல்லப் போகிறார் என்று. நினைவுபடுத்தியதற்கு நன்றி!
காணா இன்பம் சபாஷ் மீனாவில்தான். நிச்சயமாகத் தெரியும். மழையில் நனைந்துகொண்டே உருண்டு புரண்டு கொண்டே சிவாஜியும் ஹீரோயினும் பாடுவார்கள்.
சபாபதி விமர்சனத்துக்காக காத்திருக்கிறோம். நிச்சயமாக இன்னொரு முறை பார்க்கலாம்.
one more song “paduvenadi endrum paduvenadi pallavi endru mannan peyiri paduveni anu pallavi endru avanai ennai sera solladi ” by S.janaki/P.susila suba/srividya/jayachitra all join to gether sing this song
Pingback: சினிமாவாக வந்த தமிழ் நாவல்கள், சிறுகதைகள் « சிலிகான் ஷெல்ஃப்