என் கல்லூரி நாட்கள் மிக சந்தோஷமானவை. சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் படித்தேன். பெரிய நட்பு கும்பல். ஹாஸ்டல் வாழ்க்கையின் சுதந்திரம். வார்டனை எல்லாம் நான் பார்த்ததே கிடையாது.

எங்கள் கும்பலுக்கு ஒரு ஆதர்ச படம் உண்டு என்றால் அது ஜம்புதான். இரண்டு மூன்று முறை ஜங்க்ஷன் உமா தியேட்டரில் வந்தது. நான் அதை பார்க்காமல் மிஸ் செய்துவிட்டேன். என் கல்லூரி வாழ்க்கையின் நம்பர் ஒன் regret இதுதான். படிக்கவில்லை என்பதெல்லாம் அப்புறம்தான். மெல்லிய வெள்ளைத் துணி, ஆறு, மழை என்று சில இலக்கண விதிகளுக்கு உட்பட்டு எடுக்கப்பட்ட படம் என்று எல்லாரும் சொல்வார்கள்.

கர்ணனை பற்றி ஒரு பதிவு பார்த்தேன். எனக்கு இருக்கும் மன பிம்பத்தை விட அவர் எவ்வளவோ பெரிய ஆளுமை உள்ளவர் என்று தெரிந்தது. சிறு வயதில் எங்க பாட்டன் சொத்து என்ற ஆக்ஷன் படம் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். அது எங்கள் ஊர் டெண்ட்டு கொட்டாயில் வரவே இல்லை. அதுவும் இவர் இயக்கியதுதானாம்.

அருமையான பதிவை எழுதிய முரளி கண்ணனுக்கு நன்றி!