
சூர்யா
லிஸ்டை இங்கே காணலாம். பாஸ்டன் பாலாவுக்கு நன்றி! வசதிக்காக கீழேயும் கொடுத்திருக்கிறேன், ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகளுடன்.
Crash – நல்ல படம். 2004-இன் சிறந்த படம் என ஆஸ்கார் விருது. நம் அனைவருக்குள்ளும் – வெள்ளையர்கள், கறுப்பர்கள், பழுப்பர்கள் – இருக்கும் நிற prejudices-ஐ நன்றாக கொண்டு வரும் படம்.
Godfather – என்ன ஒரு படம்! அல் பசினோ, மார்லன் பிராண்டோ, ஜேம்ஸ் கான், டாலியா ஷைர், டயேன் கீட்டன், ராபர்ட் டுவால், ஃப்ரான்சிஸ் ஃபோர்ட் கொப்போலா எல்லாருக்கும் ஒரே மைல் கல். மரியோ பூசோவின் சிறந்த நாவலை இன்னும் சிறப்பாக திரையில் கொண்டு வந்திருப்பார்கள்.
I am Sam – நான் பார்த்ததில்லை.
Terminal – பிரமாதமான படம். விமான நிலையத்தை விட்டு வெளியே வராமல் அங்கேயே வாழும் டாம் ஹாந்க்ஸ், ஒரு இந்தியன் வேஷத்தில் வரும் குமார் பல்லானா இருவரும் கலக்குவார்கள்.
நாயகன் – காட்ஃபாதரின் பாதிப்பு நிறைய உள்ள படம். இருந்தால் என்ன? நல்ல படம்.
முள்ளும் மலரும் – அந்த காலத்தில் பார்த்தபோது மிக பிடித்திருந்தது. பாட்டுகளும் அபாரம். ரஜினி எங்களுக்கெல்லாம் ஒரு ஆதர்சம்தான்.
ரோசாப்பூ ரவிக்கைக்காரி – இது அப்பாவுக்காக சூர்யா தேர்ந்தெடுத்த படம் என்று நினைக்கிறேன். படு சுமாரான படம். படம் எந்த கால கட்டத்தில் எடுக்கப்பட்டது என்று டைரக்டர் குழப்புவார். நல்ல பாட்டுகள்.
சேது – எல்லாரும் கொண்டாடுகிறார்கள். எனக்கு ஒன்றும் பிரமாதமாக தெரியவில்லை. விக்ரம், ஸ்ரீமன் நன்றாக நடித்திருந்தார்கள், சரி. பாட்டுகள் நன்றாக இருக்கின்றன, சரி. அது மட்டும் போதுமா?
முதல் மரியாதை – ராதா கலக்குவார். சிவாஜி எவ்வளவோ அடக்கி வாசித்தாலும் அதுவே மிகையாகத்தான் தெரிகிறது. ஆனால் நல்ல பாட்டுகள்.
ஆண் பாவம் – எங்கள் காலேஜ் காலத்தில் இது எங்களுக்கு ஒரு cult படம். பாண்டியராஜன் இந்த மாதிரி படங்கள் எடுக்காமல் வீணாக போய்விட்டார்.
ஜூன் 22, 2009 at 2:34 மு.பகல்
// சிவாஜி எவ்வளவோ அடக்கி வாசித்தாலும் அதுவே மிகையாகத்தான் தெரிகிறது.//
உம்மோட விமர்சனம் தான் ரொம்ப மிகையாக தெரிகிறது.
ஜூன் 22, 2009 at 3:49 மு.பகல்
ஜோ,
சூர்யாவுக்கு பிடித்த படங்கள் பற்றிய பதிவுக்கு மறுமொழி எழுதியதற்கு நன்றி! முடிந்தால் 1950-இலிருந்து சீரிசையும படித்து பாருங்கள்!