
பி.பி. ஸ்ரீநிவாஸ்
எனக்கு எல்லாரையும் விட பிடித்த பாடகர் – எஸ்பிபியை விட, டிஎம்எஸ்சை விட, ஏ.எம். ராஜாவை விட, ஜேசுதாசை விட – பிபிஎஸ்தான். அந்த மாதிரி ஒரு இனிமையான குரல் கிடைப்பது கஷ்டம். ஒரு பத்து வருஷம்தான் பிசியாக இருந்திருப்பார் – பிறகு எஸ்பிபி அவரை பின்னே தள்ளிவிட்டார். ஆனால் அந்த பத்து வருஷத்தில் மறக்க முடியாத நிறைய பாட்டுகளை பாடி இருக்கிறார்.
பி.பி.எஸ். பாடிய பாட்டுகள் இரண்டு சிடிக்களாக வந்திருக்கிறது போலிருக்கிறது. அதை பற்றி ரவி ஸ்ரீநிவாஸ் என்ற பதிவர் இங்கே மற்றும் இங்கே இரண்டு சுவாரசியமான பதிவுகள் எழுதி இருக்கிறார், பாருங்கள்!
ஜூலை 15, 2009 at 9:10 பிற்பகல்
பகிர்விற்கு நன்றி.
எங்கிருந்தாலும் தேடி தேடி பதிவிடும் உங்களது சிறப்பு.
வாழ்த்துகள் RV.
I dig it.
ஜூலை 15, 2009 at 9:12 பிற்பகல்
நேற்று கூட ஒரு விழாவில் PBS அவர்களை பார்த்தேன்.
எபோதும் போல் பல வண்ண பேனாக்களுடன் நிறைய புத்தகங்களுடனும் அதே எளிமை.
He is a great Legend.
ஜூலை 16, 2009 at 2:26 பிற்பகல்
//ஒரு பத்து வருஷம்தான் பிசியாக இருந்திருப்பார் – பிறகு எஸ்பிபி அவரை பின்னே தள்ளிவிட்டார். ஆனால் அந்த பத்து வருஷத்தில் மறக்க முடியாத நிறைய பாட்டுகளை பாடி இருக்கிறார்.//
Obsolutely correct…
Eventhough SPB is surviving for the past 40 years in Tamil Cinema (1969 Santhi Nilaiyam, Adimai Penn), His songs cannot come near those of PBS, who was busy for just 10 years in sixties.
ஜூலை 16, 2009 at 11:16 பிற்பகல்
சாரதா, சூர்யா, பிபிஎஸ் பதிவுக்கு மறுமொழி இட்டதற்கு நன்றி!
சாரதா, நீங்களும் தீவிர பிபிஎஸ் விசிறி போல இருக்கிறது.
ஜூலை 19, 2009 at 2:25 பிற்பகல்
டியர்
அப்படீன்னு இல்லை. யார் நன்றாக பாடினாலும் பிடிக்கும் (என் தாய்த்தமிழை செக்கிலிட்டு ஆட்டாதவரையில்). அந்த வகையில் PBS-ஐ ரொம்ப பிடிக்கும், TMS-க்கு அடுத்தபடியாக. அதே சமயம் SPB-யின் நல்ல பல பாடல்களும் பிடிக்கும்.
சீர்காழியின(இருக்குமிடத்தைவிட்டு) ‘தொண்டுக்கென்றே அலைவான், கே(gE)லிக்கு ஆளாவான்’
டி.எம்.எஸ்ஸின் (குமரிப்பெண்ணின் உள்ளத்திலே) ‘நான் அள்ளிக்கொள்ள அவள் பள்ளி கொள்ள சுகம் மெள்ள மெள்ளவே புரியும்’ (வள்ளுவன் முதல் தமிழாசிரியர் வேலுச்சாமி வரையில் ‘மெல்ல மெல்ல’ என்று சொல்லித்தந்ததாக நினைவு)
எஸ்.பி.பியின் (கடவுள் அமைத்து வைத்த மேடை) ‘ஒரு கிலி கையோடு ஒரு கிலி கை சேர்த்து’
ஜேசுதாஸின் (நினைவாலே சிலை செய்து) ‘தெருக்கோயிலே ஓடி வா’
சுசீலாவின் ‘செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் ஷிரித்தது எனைப்பார்த்து’
போன்றவற்றை மன்னிப்போம். (அப்படிப்பார்த்தால் உதித் நாராயணன் போன்றவர்கள் தமிழைக் கடித்து துப்புவதை எதில் சேர்ப்பது?)
இதை தட்டச்சு செய்துகொண்டிருக்கும்போது கூட பின்னணியில் PBS-ஸின் பாடல் ஒலித்துக்கொண்டிருக்கிறது…
‘தள்ளாடி தள்ளாடி நடமிட்டு அவள் வந்தாள்
சொல்லாமல் கொள்ளாமல் அவளிடம் நான் சென்றேன்
அவள் இங்கே என்றாள் நான் அங்கே என்றேன்
அவள் அங்கே வந்தாள் நாங்கள் எங்கோ சென்றோம்
எங்கோ சென்றோம்…
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்…’
உண்மையில் PBS நம்மை மயக்கவில்லையா..?
ஜூலை 20, 2009 at 5:35 மு.பகல்
சாரதா,
நான் பிபிஎஸ்ஸின் தீவிர ரசிகன். எனக்கு பிடித்த தமிழ் பாடகர் அவர்தான்.