ராஜி என் கண்மணி

சினிமா தகவல் களஞ்சியமான ராண்டார்கை ஹிந்துவில் வெள்ளிக்கிழமைதோறும் Blast from the Past என்று ஒரு பத்தி எழுதுவது தெரிந்திருக்கலாம். இந்த பத்தியில் அவர் ஏதாவது ஒரு பழைய தமிழ் படத்தை பற்றி எழுதுகிறார். நானும் வெள்ளி அன்று அவர் குறிப்பிடும் படத்துக்கு விமர்சனமோ, இல்லை என் நினைவுகளையோ எழுதலாம் என்றிருக்கிறேன்.

இந்த வாரம் அவர் ராஜி என் கண்மணி படத்தை பற்றி எழுதி இருக்கிறார். நான் இந்த படம் பார்த்ததில்லை. ஆனால் மல்லிகைப்பூ ஜாதி ரோஜா என்ற பாட்டு எனக்கு மிக பிடித்தவற்றில் ஒன்று. இசை அமைத்தவர் எஸ். ஹனுமந்த ராவ், எழுதியவர் சங்கு சுப்ரமணியம். பாடிய ராவு பாலசரஸ்வதி தேவி யார் என்று எனக்கு தெரியாது, ஆனால் நல்ல குரல். நீல வண்ண கண்ணா வாடா என்ற இன்னொரு அற்புதமான பாட்டும் ஞாபகம் வருகிறது. அவரை பற்றி நிறைய விவரங்கள், பாடிய பாட்டுகள் விவரங்கள் இங்கே இருக்கின்றன.

City Lights பார்க்கக் கூடிய படம்தான். கொஞ்சம் மெலோட்ராமா அதிகம். பணக்காரனாக ரங்காராவ் நடித்தார் என்று படித்ததும் படத்தை பார்க்க ஆவல் ஏற்படுகிறது.

மல்லிகைப்பூ ஜாதி ரோஜா பாட்டை கட்டாயமாக கேளுங்கள்!

பற்றி RV
43 year old. Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Engineer by profession. Going through a mid-life crisis (got laid of two months ago and looking for a job). Considering a change of line in computers. Live in Silicon valley (Newark)

8 Responses to ராஜி என் கண்மணி

  1. அன்பு ஆர்.வி., பக்ஸ்…

    ஒரு ரசகுல்லா விஷயம். உங்களுக்கு ‘சுவாரஸ்ய பதிவர்’ விருது கொடுக்கப்பட்டுள்ளது. காண்க :: http://kaalapayani.blogspot.com/2009/07/blog-post_24.html

    நீங்களும் உங்களுக்கு சுவாரஸ்யமாக எழுதும் ஆறு பதிவர்களை அறிமுகப்படுத்தினால் மகிழ்வேன். நன்றி.

  2. சாரதா says:

    விருது பெற்றதற்கு முதலில் வாழ்த்துக்கள்.

    ‘சினிமா தகவல் களஞ்சியமான ராண்டார்கை’ என்ற துவக்கமே சற்று பிசிறடிக்கிறது. காரணம், தமிழ் சினிமா பற்றி இந்த களஞ்சியத்திலிருந்து வரும் தகவல்கள் சில சமயம் தப்பும் தவறுமாகவும், சில நேரம் முன்னுக்குப்பின் முரணாகவும் இருந்திருக்கின்றன (ஒரிஜினல் களஞ்சியமான ‘பிலிம்நியூஸ்’ ஆனந்தனாருடன் ஒப்பிடும்போது). ஆனால் ஆனந்தன் தவறு செய்யாதவர், அவர் சொல்லும் பல சம்பவங்களை பலருடன் சோதித்தறியும்போது கொஞ்சமும் பிசகாது, பிசிறடிக்காது. ராண்டார், தான் தருவது தப்பான தகவல்களாக இருந்தாலும் பூசி மெழுகப்பார்ப்பார். இந்தப்பழக்கம் அறந்தை நாராயணனிடமும் உண்டு. அறந்தையார், தனக்குப்பிடித்தவற்றை ஆகாசத்துக்கு உயர்த்துவார். பிடிக்காதவற்றை ‘டமால்’ என்று போட்டு உடைப்பார்.

    ‘ராஜி என் கண்மணி’ படம் என் தாயார் பார்த்திருக்கிறாராம். அந்தக்காலத்திலேயே ரொம்ப பொறுமை வேண்டும் என்று சொல்வார்களாம்.

  3. Bags says:

    இரா. வசந்த குமார்,

    நாமும் தான் ப்ளாக் எழுதுவோமே. என்ன அவார்டா கொடுக்கிறாங்க? என்று நினைத்து எழுத தொடங்கியது. இப்பொழுது அவார்டே கொடுத்துவிட்டீர்கள். நன்றி.

    சாரதா,

    ரண்டார் கை, தியோடர் பாஸ்கரன் போன்றோர்கள் முழு நேர ஆராய்ச்சியாளர்கள். ரண்டார் கையிடமே குறைகள் இருக்கும் பொழுது பகுதி நேர “ஆராய்ச்சியாளர்கள்” Bags. RV தவறுகளை மன்னிக்கவேண்டும்.

  4. பிஸ்வா says:

    இந்த படத்தில் ரொம்பவும் இனிமையான புகழ் அடைந்த பாட்டு பி பி ஸ்ரீநிவாஸ் பாடிய
    ” நான் பாட நீ ஆடு கண்ணே “.

  5. மிஸ்ஸியம்மா வந்த காலக் கட்டத்தில் வந்த ராஜி என் கண்மணி அவ்வளவாக பாக்ஸ் ஆஃபீசில் வெற்றியடையவில்லை என்றுதான் என் ஞாபகம்.

    சிடி லைட்ஸை தழுவி பல படங்கள் வந்து விட்டன, ஹிந்தியில் நசுருத்தீன் ஷாவின் முதல் பெரிய படமே சுனைனா, இதே தீமில். ராஜ் கபூரின் ஒரு படம் கூட உண்டு பெயர் மறந்து விட்டது.

    தமிழில் விஜய் படம் கூட ஒன்று இந்த கதை முடிச்சுடன் வந்தது. சிம்ரன் அதில் அவர் ஜோடி.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  6. சாரதா says:

    //‘சினிமா தகவல் களஞ்சியமான ராண்டார்கை’ என்ற துவக்கமே சற்று பிசிறடிக்கிறது. காரணம், தமிழ் சினிமா பற்றி இந்த களஞ்சியத்திலிருந்து வரும் தகவல்கள் சில சமயம் தப்பும் தவறுமாகவும், சில நேரம் முன்னுக்குப்பின் முரணாகவும் இருந்திருக்கின்றன (ஒரிஜினல் களஞ்சியமான ‘பிலிம்நியூஸ்’ ஆனந்தனாருடன் ஒப்பிடும்போது).//

    Dear Bags,

    What I mentioned ‘இந்த களஞ்சியத்திலிருந்து’ is NOT mentioned your Blog. That word indicates Mr. Randar.

    It is my mistake not mentioned it properly and clearly.

  7. surya says:

    Bags / RV இரண்டு பேருமே பிஸியா..??

    ஊரில் இல்லையா..??

  8. RV says:

    ராஜி என் கண்மணி பற்றி பதில் எழுதிய சூர்யா, சாரதா, டோண்டு, பிஸ்வா அனைவருக்கும் நன்றி!

    சூர்யா, ஊரில்தான் இருக்கிறோம். நான் (ஆர்வி) வேலை தேடும் வேலையில் மும்முரமாக இருக்கிறேன், அதுதான் காரணம். :-) அதனால் பதிவு எழுதுவதை குறைத்து கொள்ள வேண்டி இருக்கிறது.

    சாரதா, ராண்டார்கையை ஒரு முறைதான் சந்தித்திருக்கிறேன். அவரது குண நலன்களை பற்றி அதிகம் தெரியாது. ராண்டார்கைதான் நெட்டில் கிடைக்கிறார், என்னை விட நிச்சயமாக அதிகம் தெரிந்தவர்தான். :-)

    ஃபில்ம் நியூஸ் ஆனந்தன் எழுதி அதிகமாக படித்ததில்லை. ஏதாவது நெட்டில் கிடைக்குமா? அறந்தையாரின் எதோ ஒரு புத்தகம் படித்திருக்கிறேன்.

    டோண்டு, தம்ழில் நீங்கள் சொல்லும் விஜய் படம் துள்ளாத மனமும் துள்ளும். ராஜ் கபூர் படம் எது என்று தெரியவில்லை. நசீருதின் ஷா படமும் கேள்விப்பட்டதில்லை.

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 45 other followers