மதனா எழில் ராஜா
நவம்பர் 15, 2009 2 மறுமொழிகள்
சிறு வயதில் மிகவும் விரும்பிக் கேட்ட பாட்டு. பாட்டிலேயே ஏதோ கதை தொக்கி நிற்கிறதே! அதுவும் மின்னல் இடை அழகும் அன்ன நடை அழகும் கண்கள் கண்டதுண்டோ என்று ஜிக்கி பாடுவார்; உடனே ஆ, நீங்களா என்று அதிர்ச்சியுடன் பெண் குரல்; ஆண் ஆமாம் நான்தான் என்று சாட்டையை சொடுக்குவார். உண்மையில் இந்த இடம்தான் அப்படியே மறக்க முடியாமல் இருக்கிறது. பாட்டின் ஆரம்பத்தை விட இந்த இடம்தான் அப்படியே நினைவில் இருக்கிறது.
நினைவு வரும் வேறு சில வரிகள் -
என்னைப் போல ஒரு பெண்ணை உன்னுடைய கண்கள் கண்டதுண்டோ?
படம் பார்க்க வேண்டும் என்று சிறு வயதில் மிக ஆசை. ஆனால் படம் என்ன என்று அப்போது சரியாகத் தெரியாது. இப்போது செல்லப் பிள்ளை என்று தெரிகிறது. இசைப் பைத்தியமான என் மாமியார் கண்டுபிடித்து சொன்னார். கே.ஆர். ராமசாமி, சாவித்ரி நடித்திருக்கிறார்கள். ராண்டார்கை ஒரு பதிவு எழுதி இருக்கிறார். என் சிறு வயதில் எந்த டென்டுக் கோட்டையிலும் வந்த ஞாபகமும் இல்லை. உடுமலை நாராயண கவி எழுதியதாம்; சுதர்சனம் இசை. பாட்டு, வீடியோ இணையத்தில் கிடைக்க மாட்டேன் என்கிறது. யாராவது லிங்க் கொடுத்து புண்ணியம் தேடிக் கொள்ளுங்கள்!
தொடர்புடைய பதிவு:
ராண்டார்கையின் குறிப்புகள்
செல்லப்பிள்ளை நடிப்பிசைப் புலவர் சாவித்திரியுடன் நடித்த ஹிட் படம் என்று கேள்விப்பட்டதுண்டு
இலங்கை வானொலியில் மதனா எழில் ராஜா அடிக்கடி ஒலித்த பாடல் இடை இடையே KRR ரின் கனல் கக்கும் வசனங்கள்
நானறிந்து , 30களில் வந்த திரைப்படங்களிருந்து இன்று வரும் கச்சடா திரைபடங்கள் வரை சேகரித்து வைத்திருக்கும் ஒரே அன்பர் TFMLOVER
எங்கும் தேடியும் கிடைக்காத அரிதாய்ப் போன சினிமா /பாட்டு தகவல்களின் களஞ்சியம்
TFM HUB இல் முன்பு பாடல் வரிகளோடு செல்லப்பிள்ளை க்ளிப் போட்டு இருந்தார்
அந்த திரி இன்னும் அங்கு இருக்கிறதா என்பது சந்தேகம்
சாவித்திரியும் பாலையாவும் கும்மாளம் போடுவதாக க்ளிப் பார்த்த ஞாபகம்
தறவிறக்கம் செய்யாமல் விட்டு வைத்தது வீண்
முடிந்தால் கேட்டுப் பார்க்கிறேன்
அன்புடன்
சிவா
இது போன்ற பல தேனாய் இனிக்கும் பழம் பெரும் பாடல்கள் இங்கே ஏற்றுமதி செய்யுங்கள். நானும் என்னிடம் உள்ள பாடல்களை ஏற்றுமதி செய்கிறேன்.
நன்றியும் வாழ்த்துகளும்.