ராஜாவுக்கும் ரஹ்மானுக்கும் பத்ம பூஷன்
ஜனவரி 26, 2010 3 மறுமொழிகள்
- இளையராஜா
- ஏ.ஆர். ரஹ்மான்
- எம்.எஸ். விஸ்வநாதன்
- ஆமிர் கான்
- செய்ஃப் அலி கான்
இரண்டு பேருக்கும் எல்லா தகுதியும் இருக்கிறது. வாழ்த்துக்கள்!
ரஹ்மானுக்கு இருக்கும் அளவுக்கு புகழ் இளையராஜாவுக்கு இல்லைதான். ஆனால் ரஹ்மானுக்கு விருது கொடுக்கும்போது ராஜாவை மறந்துவிடவில்லை என்பது சந்தோஷமான விஷயம்.
எம்எஸ்வியை மட்டும் யாரும் கண்டுகொள்வதே இல்லை. ராஜாவுக்கு இருக்கும் புகழ் கூட அவருக்கு இல்லைதான். ஆனால் அவர் எந்த விதத்திலும் இவர்கள் இருவருக்கும் சளைத்தவர் இல்லை. குறைந்த பட்சம் ஒரு பத்ம ஸ்ரீயாவது கொடுக்கக் கூடாதா என்று ஆதங்கமாக இருக்கிறது.
அப்புறம் ஆமிர் கானுக்கு பத்ம பூஷன், செய்ஃப் அலி கானுக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்திருக்கிறார்கள்.
விருது பெற்றவர்களின் முழு லிஸ்டையும் இங்கே காணலாம்.
தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்
தொடர்புடைய பதிவுகள்:
ஜெயகாந்தனுக்கு பத்மஸ்ரீ
விவேக்குக்கெல்லாம் பத்மஸ்ரீயா?
2009 பத்ம விபூஷன்/பூஷன்/ஸ்ரீ விருதுகள்
விருது பெற்றவர்களின் முழு லிஸ்ட்





MSV, நாகேஷ் இவர்கள் எல்லாம் எந்த விதத்திலும் திறமையில் குறைந்தவர்கள் அல்லர். “ஆச்சி நீ சாதிச்சாச்சி” என்று மனோரமாவை வாழ்த்தும் பக்குவம் நாகேஷுக்கு இருந்தது. இங்குள்ள அரசுக்கு இவர்கள் எல்லாம் தேவை இல்லை, அதனால் விருதுக்கு சிபாரிசும் செய்யவில்லை!!
பத்மஸ்ரீ, பத்மபூஷன் எல்லாம் நாட்டுக்குப் பெருமை செர்த்தவர்களுக்குத் தரப்படுவது. ஆனால் அதிலும் பல்வேறு காரணங்களை மனதில் வைத்துக் கொண்டு ‘பகிர்ந்தளிக்கும்’ முயற்சிகள் நடப்பது மாதிரி தெரிகிறது. இன்னும் கொஞ்ச நாளில் கலைமாமணி விருதுக்கு இருக்கும் மரியாதைதான் இதற்கெல்லாமும் இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
http://kgjawarlal.wordpress.com
பத்மஸ்ரீ எனும் பெயருடையவருக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்தால் எப்படி இருக்கும்?