வஞ்சிக் கோட்டை வாலிபன்

படம் வந்தபோது (மே 1958) விகடனில் வந்த விமர்சனம். கூடிய விரைவில் என் விமர்சனமும் வரும். நன்றி, விகடன்!

முனுசாமி – மாணிக்கம்

முனுசாமி: என்ன தம்பி, ரொம்ப வேகமாப் போய்க்கிட்டு இருக்கியே, எந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறே?

மாணிக்கம்: கோட்டை யைப் பிடிக்கத்தான் புறப்பட்டேன்; நீ குறுக்கே வந்துட்டே. வஞ்சிக்கோட்டை வாலிபனிலே இடம் பிடிக்கப் போறேன்.

முனு: அதென்ன இந்நேரம் பொறுத்து? இப்ப இன்டர்வெல் முடிஞ்சிருக்குமே!

மாணி: படத்தை நாலுவாட்டி பார்த்துட்டேன் அண்ணே! இன்டர்வெல்லுக்கப்புறம் ஒரு டான்ஸ் போட்டி வருது. அதைப் பார்க்கத்தான் தினம் போய்க்கிட்டு இருக்கேன்.

முனு: அதென்னப்பா அவ்வளவு ஒசத்தியான போட்டி?

மாணி: வைஜயந்திமாலாவும் பத்மினியும் டான்ஸிலே போட்டி போட்டுக்கிட்டு ஆடியிருக்காங்க!

முனு: சரி, போட்டியிலே யாரு ஜெயிக்கறாங்க?

மாணி: படம் பிடிச்சவங்கதான்! இது உண்மையிலே கலைப் போட்டி இல்லே, அண்ணே! காதல் போட்டி. கடைசியில் காதல்தான் ஜெயிக்குது. ஒருத்தி தன் உயிரைக் கொடுத்து காதலனைக் காப்பாத்தறா; யாருகிட்டே போட்டிக்குப் போனாளோ, அவ கையையே பிடிச்சுக் காதலனிடம் ஒப்படைக்கிறா.

முனு: என்ன தம்பி இது, அதுக்குள்ளே முடிவுக்குப் போயிட்டியே, ஆரம்பத்தைச் சொல்லு!

மாணி: அது ஒரு பெரிய புயல் அண்ணே..!

முனு: காதல் புயலா? பொறாமைப் புயலா?

மாணி: இரண்டும் இல்லே! ஒரு கப்பல் புயலிலே மாட்டிக்குது. ஒரு வாலிபன் துணிச்சலா கம்பத்திலே ஏறி பாய்மரத்தை வெட்டிக் கப்பலைக் காப்பாத்திடறான். அந்தக் காட்சியே ரொம்ப ஜோர் அண்ணே! சும்மா இங்கிலீஷ் படம் பார்க்கறாப்போல இருக்குது.

முனு: ஜெமினி கணேசன்தானே அந்த வாலிபன்! அவரு எப்படி?

மாணி: பிரமாதப்படுத்தியிருக்காரு. கப்பல் பாய்மரத்துலே ஏறி, பாயை வெட்டறாரு பாரு… அடேங்கப்பா படா திரில்லு! கடைசி சீன்லே கோட்டை உச்சியிலே வீரப்பாவோடு கோடாலிச் சண்டை போட்டுக் குப்புறத் தள்ளறாரு. ஸ்டன்ட் செய்யறபோது எம்.ஜி.ஆர் கணக்கா இருக்குது; உணர்ச்சியா நடிக்கிறபோது சிவாஜி மாதிரி தோணுது. ரத்ன வியாபாரியா வரபோது சக்கைப் போடு போடறாரு; அடிமையா வந்து வைஜயந்தி எதிரில் நின்னு டாண்டாண்ணு பதில் சொல்றபோது, ‘சபாஷ்… சபாஷ்’னு சொல்லத் தோணுது.

முனு: வைஜயந்தி என்னமா வருது?

மாணி: தளதளன்னு வருது; ஜிலுஜிலுன்னு பாடுது. இந்தப் படத்திலே அதைப் பார்க்கிறபோது, மங்கம்மா சபதத்திலே அவங்க அம்மா வசுந்தரா ஆடினதும் பாடினதும் ஞாபகம் வருது. ‘ராஜா மகள்… ரோஜா மலர்’னு ஒரு டான்ஸ் ஆடுது பாரு..!

முனு: அது நாட்டியம் ஆடறது ஒரு அதிசயமா தம்பி!

மாணி: இல்லேண்ணே, நடிப்பும் ரொம்ப அபாரம். துண்டு துண்டா ஒரு வார்த்தைதான் பேசுது. எத்தனை அர்த்தம்… எத்தனை பாவம்..! எத்தனை உணர்ச்சியை அதிலே கொட்டுது தெரியுமா? கண்ணைச் சிமிட்டினா ஒரு குறும்புத்தனம்; உதட்டைக் கடிச்சா ஒரு உணர்ச்சி; நடந்தா ஒரு அர்த்தம்; உட்கார்ந்தா ஒரு பாவம்; நின்னா ஓவியம்; திரும்பினால் காவியம்..!

முனு: போதும்டா தம்பி, பத்மினி எப்படி?

மாணி: இது என்ன கேள்வி அண்ணே? பௌர்ணமியிலே நிலவுண்டான்னு கேக்கிற மாதிரி இருக்குது. பத்மினி ஆக்டைப் பத்திக் கேட்கறியே? அதுக்குக் குடுத்திருக்கிற வேஷமே நெஞ்சை உருக்குது.

முனு: கதையைச் சொல்லேன், கேட்போம்.

மாணி: நாட்டுக்காக தந்தை தன் வீட்டையே தியாகம் செய்யறார். கடமைக்காக மகன் காதலையும் உதறித் தள்ளிட்டு, தன் தகப்பனுக்கும் தாய்க்கும் தங்கைக்கும் தாய் நாட்டுக்கும் துரோகம் செய்தவனைப் பழி வாங்குகிறான். இதை வச்சுக்கிட்டு, கோட்டையும் கொத்தளமும் கப்பல் சண்டையும் பிரமாண்டமா எடுத்திருக்காங்க. படத்தைப் பார்த்தாலே பிரமிப்புத் தட்டுது! அழகு சொட்டுது!

இந்தப் படத்திலே இன்னொரு விசேஷம் அண்ணே! நம்ப வீரப்பா சிரிக்காமலே சிறப்பா நடிச்சிருக்காரு!

முனு: மொத்தத்திலே படம் எப்படி?

மாணி: நல்ல விறுவிறுப்பண்ணே! பார்க்கப் பார்க்கத் திகட்டல்லே! சந்திரலேகா மாதிரி ஜமாய்க்குது!

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

பற்றி RV
43 year old. Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Engineer by profession. Going through a mid-life crisis (got laid of two months ago and looking for a job). Considering a change of line in computers. Live in Silicon valley (Newark)

2 Responses to வஞ்சிக் கோட்டை வாலிபன்

  1. raju says:

    வஞ்சி கோட்டை வாலிபன் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் “வெண்ணிலவே தண்மதியே என்னுடனே வாவா ” என்ற p லீலா பாடிய பாடல் தான் .

    இரவு நேரம்… படகில் தனியாக ஜ்வலிக்கும் padimni …காலடியில் மயங்கிய நிலையில் ஜெமினி ,லீலாவின் கம்பீரமான குரலில் பாடல் (இசை அமைப்பாளர் ராமச்சந்திரா தமிழுக்கு அன்னியர் )….,oh, the ambience is absolutely divine.

    thanks for reminding me about this song.

    ராஜு-துபாய்

    • RV says:

      ராஜு, “வெண்ணிலவே தண்மதியே” மிக நல்ல பாட்டுதான். ஆனால் “கண்ணும் கண்ணும் கலந்து” மிகவும் dominate செய்துவிட்டது.

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 45 other followers