அர்விந்த் சாமி – அன்றும் இன்றும்
ஜூன் 25, 2010 2 மறுமொழிகள்
ஃபோட்டோக்கள் அனுப்பிய உப்பிலி ஸ்ரீனிவாசுக்கு நன்றி!
அன்றும் இன்றும் ஃபோட்டோ பதிவுகள் எல்லாம் ஆளுமைகள் பக்கத்தின் துணைப்பக்கமாக இங்கே தொகுத்திருக்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்–>அன்றும் இன்றும்
தொடர்புடைய பதிவுகள்:
தேவ் ஆனந்த் – அன்றும் இன்றும்
காஞ்சனா – அன்றும் இன்றும்
ரவிச்சந்திரன் – அன்றும் இன்றும்
எஸ்.எஸ். ராஜேந்திரன் – அன்றும் இன்றும்
ஸ்ரீப்ரியா – அன்றும் இன்றும்
த்ரிஷா – அன்றும் இன்றும்
வாணி ஜெயராம் – அன்றும் இன்றும்




அவரு தாத்தா ஆனா எப்படி இருப்பார் என்பதைக் காட்ட மெட்டி ஒலிப் புகழ் சிதம்பரம் படத்தையும் போடுங்க. அவரோட மகன் தான் இவர்
தமிழ் மகன் அர்விந்த் சாமி பற்றிக் கூறுகிறார்…
==================================================
கார்கில் நிதி திரட்டப்பட்ட நேரத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்துவதற்குப் பின் புலமாக இருந்து உதவியவர்களில் அரவிந்த்சாமி முக்கியமானவர். மிக அமைதியாக அலுங்காமல் குலுங்காமல் பேசுகிறவராக அவரைப் பார்த்திருக்கிறேன். கலெக்டர், சாஃப்ட்வேர் என்ஜினீயர், கோடீஸ்வரர், அதிகாரி போன்ற வேடங்களுக்குப் பொருத்தமானவர் என்று முடிவு செய்திருந்தார்கள். பெண்களைப் பார்த்து “நீ என்ன ஐஸ்வர்யா ராயா’ என்பது மாதிரி ஆண்களில் “நீ என்ன அர்விந்த்சாமியா’ என்று கேட்கிற வழக்கமிருந்தது. அந்த நேரத்தில் அர்விந்த்சாமியை பட்டிக்காட்டு வேடத்தில் நடிக்க வைக்க ஏற்பாடானது.
இளையராஜா கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த நேரம். என் ஆசை ராசாவே, ராசா கைய வெச்சா, ராசய்யா என்ற படத்தின் டைட்டிலும் பாடலும் ராசா மயமாக இருந்தது. அவர் இசையமைப்பதாக ஒத்துக் கொண்டால் அவர் படத்தை போஸ்டரில் போட்டு படத்தை விற்றுவிடுவார்கள் அப்படியொரு நிலைமை.
இந்த நேரத்தில் அரவிந்த்சாமியின் இந்தக் கிராமிய படத்துக்கு ராஜா இசையமைப்பதாக முடிவானது.அது தாலாட்டு. அதில் கிராமத்தான் வேடத்தில் அரவிந்த்சாமி நடித்தார். அந்தப் படத்தின் பூஜைக்கு ராஜா வந்தார்.
ராஜா அந்தப் பக்கம் வருகிறார் என்றாலே எதிரில் வருகிறவர்கள் சுவர் ஓரமாக ஒட்டிக் கொண்டு நிற்பார்கள். இளையராஜா வந்து கொண்டிருந்தார். அரவிந்த்சாமியிடம் அப்படி எந்தப் பதட்டமும் இல்லை. அவர் பாட்டுக்குச் சிகரெட் பிடித்துக் கொண்டு நின்றிருந்தார்.
ராஜா நெருங்க நெருங்க சுற்றியிருந்தவர்களுக்கெல்லாம் பதட்டம் தொற்றிக் கொண்டிருந்தது. சம்பந்தபட்ட இருவரும் புன்னகைத்துக் கொண்டார்கள். பூஜையை முடித்துக் கொண்டு ராஜா போனார். அரவிந்த்சாமி இன்னொரு சிகரெட்டைக் கொளுத்திக் கொண்டு காரில் புறப்பட்டார். கூல்.
இன்னொரு சம்பவம்.
“மெட்டி ஒலி’ தொடரில் ஐந்து பெண்களுக்கு அப்பாவாக நடித்தவர்தான் அர்விந்த்சாமியின் அப்பா என்ற தகவல் எனக்குப் புதிதாக இருந்தது. குங்குமத்தில் பணியாற்றிய அய்யனார் ராஜனிடம் அவரிடம் ஒரு பேட்டி எடுக்கச் சொன்னேன். அவரும் தம் மகனைப் பற்றி அப் பேட்டியில் சொல்லியிருந்தார். 73}ல் அவரை வேறொருவருக்குத் தத்து கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அய்யனார் ராஜன் தொடர்ந்து அர்விந்த்சாமியிடம் பேசினார். உங்கள் தந்தையார் உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்.. நீங்கள்
அவரைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்..?
அரவிந்த்சாமி அமைதியாகச் சொன்னார்: “என்னுடைய அப்பா 73-லேயே இறந்து போயிட்டாரே….”
உச்சரிப்பு கூலாகத்தான் இருந்தது. மனதின் வலி அப்படி தெரியவில்லை.