விமல் அனுப்பிய மறுமொழிகளை பதிவாகத் தொகுத்திருக்கிறேன். ஓவர் டு விமல்!
தூக்கி ஓரங்கட்டிய கதைக்கு தேசிய விருது
இயக்குனர் பாண்டிராஜ் பேசியது :
சினிமாவில் 14 வருட போராட்டத்துக்கு பிறகுதான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன். எனது சொந்த ஊர் புதுக்கோட்டையில் உள்ள விராச்சிலை. சிறு வயதிலேயே சினிமா ஆர்வம் இருந்தது. எனது பெற்றோர் விவசாயம் செய்து வந்தனர். அவர்களுக்கு நான் சினிமாவுக்கு போவதில் இஷ்டம் இல்லை. ஏதாவது ஒரு வேலையில் நான் சேர வேண்டும் என்று பிரியப்பட்டனர். அவர்களுக்காக சேலத்தில் ஒரு மெடிக்கல் ஷாப்பில் சேர்ந்து வேலை பார்த்தேன். அந்த வேலையில் என்னால் இருக்க பிடிக்கவில்லை. பெற்றோரிடம் இது பற்றி சொன்னேன். என் விருப்பப்படி என்னை விட்டுவிடுங்கள் என்று அவர்களிடம் கூறிவிட்டு சென்னை வந்தேன்.
ஏ.வி.எம். நிறுவனத்தில் வாட்ச்மேன் ஆக 1 1/2 வருடம் வேலை பார்த்தேன். பிறகு பாக்யராஜ் நடத்திய பத்திரிகையில் சில காலம் பணியாற்றினேன். அதன் பிறகு இயக்குனர்கள் சேரன், தங்கர்பச்சான் போன்றோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினேன்.
பசங்க கதையை ஏற்கனவே உருவாக்கி வைத்திருந்தேன். அதை படமாக்க நிறைய தயாரிப்பாளர்களை அணுகி கேட்டேன். அவர்கள் இதெல்லாம் ஒரு கதையா என ஏளனம் செய்து விரட்டினர். சோர்ந்து போகவில்லை. நண்பர்கள் சிலர் இயக்குனர் சசிகுமாரை போய் பார் என்றனர். அவரிடம் போய் பசங்க கதையை சொன்னேன். சசிகுமாருக்கு பிடித்து போனது. உடனே தயாரிக்க முன் வந்தார். எனக்கு களம் தந்த சசிகுமாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னை ஊக்குவித்த அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்கிறேன்.
பசங்க படத்தின் கதையினை முதலில் யாருமே படமாக எடுக்க முன்வரவில்லை. அதனால், ஒரு பெரிய இயக்குனராக சாதித்து அதன் பிறகு இதை எடுக்கலாம் என்று இந்தக் கதையை தூக்கி ஓரங்கட்டி வைத்துவிட்டேன்.
அப்போதுதான் நண்பர்களின் மூலமாக சசிக்குமார் சாரின் நட்பு கிடைத்தது. அவரிடம் இந்தக் கதையை சொன்னேன். உடனே படத்தை தயாரிக்க சம்மதித்தார்.
‘இந்தப் படம் வெற்றிப் பெறாவிட்டாலும் பரவாயில்லை. தமிழ் சினிமாவிற்கு ஒரு வித்தியாசமான படமாக இது இருக்கும். அதற்காகவே இதை எடுக்கலாம்’ என்றார். அவர் தந்த ஊக்கத்துக்கு பின்புதான் இந்தப் படத்தை எடுத்தோம்.அவர்தான் இந்த விருதுகளுக்கெல்லாம் மூலகாரணம். அவருக்கு எனது முதல் நன்றி.
படம் வெளிவந்தபின் இந்தப் படம் அருமையான படம் என்று அனைவரும் பாராட்டினார்கள். அனைத்து பத்திரிகைகளும் இந்த படத்தின் சிறப்பினை மக்களிடம் கொண்டு சென்றன. பத்திரிகை மற்றும் பொது மக்களின் ஆதரவுடன் படமும் பெரிய வெற்றி பெற்றது. இப்போது பசங்க படத்திற்கு 3 தேசிய விருதுகளும் கிடைத்துள்ளன. எனது முதல் படத்திலேயே, சிறப்பாக வசனம் எழுதியதற்காக எனக்கு விருது கிடைத்தது, உண்மையிலேயே மகிழ்ச்சியை அளிக்கிறது.
பசங்க படத்துக்கு வசனம் எழுதுவதற்கு ரொம்ப நேரம் செலவிட்டேன். பசங்களுக்கான வசனம் எழுதும் போது நானே பசங்களாக மாறிவிட்டேன். பசங்களின் மனசு ஒரு விஷயத்தை எப்படி பார்க்குமோ அதே மனநிலையில் இருந்து அந்த விஷயங்களை பார்த்தேன்.
பசங்க படத்துக்கு நிச்சயமாக தேசிய விருது கிடைக்கும் என்று முன்பே எதிர்பார்த்தேன். என் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. அந்த படத்துக்கு சிறப்பாக வசனம் எழுதியதற்காக விருது கிடைத்து இருப்பது, உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது.
பசங்க படத்துக்கு வசனம் எழுதுவதற்கு ரொம்ப நேரம் செலவிட்டேன். குறிப்பாக, ஜெயப்பிரகாஷ் குளத்தங்கரையில் உட்கார்ந்து வசனம் பேசுகிற காட்சிக்கு வசனம் எழுத அதிக நேரமானது. யோசித்து யோசித்து எழுதினேன். அந்த உழைப்புக்கு பலன் கிடைத்திருப்பது, சந்தோஷமாக இருக்கிறது
அன்புக்கரசுக்கும், ஜீவாவுக்கும் சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான தேசியவிருது கிடைத்துள்ளது. இதில் அவர்களை விட எனக்குதான் அதிக சந்தோஷம்.‘பசங்க’ படத்தில் இவர்கள் இருவரும்தான் ஹீரோக்கள். இந்தப் படத்தில் இருவரும் கடுமையாக உழைத்தார்கள். அவர்களின் ஆர்வத்திற்கும், திறமைக்கும் கிடைத்ததுதான் இந்த விருது.
இவர்கள் மட்டுமில்லாமல் அனைத்து குழந்தைகளுமே சிறப்பாக நடித்திருந்தார்கள். அனைவருக்குமே இந்த விருதில் பங்குண்டு. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பசங்க திரைப்படத்தில், கைத்தட்டி பாராட்டுவதற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார் பாண்டிராஜ்.
தேசிய விருது பெற்ற அனைவரையும் கைத்தட்டி பாராட்டுவோம்.
2009-ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தமிழிலிருந்து பசங்க திரைப்படம் பல விருதுகளை வென்றிருக்கிறது. இந்த ஒரு தமிழ் படத்துக்குத்தான் விருதுகள் கிடைத்திருக்கின்றன.
படத்தில் “ஹீரோவாக” நடித்த கிஷோரும், “வில்லனாக” நடித்த ஸ்ரீராமும் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதுகளை பெற்றிருக்கிறார்கள். சிறந்த திரைக்கதைக்கான விருதை (இயக்குனர்) பாண்டியராஜ் பெற்றிருக்கிறார். சிறந்த தமிழ் படமாகவும் (தயாரிப்பாளர் சசிகுமார்) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
பக்ஸுக்கு பிடித்த படம். பக்ஸ், விமர்சனம் எழுதுகிறாயா?
பழசி ராஜா திரைப்படத்துக்காக இளையராஜா சிறந்த இசையமைப்பாளர் விருது பெறுகிறார் (shared with Amit Trivedi for Dev D). ஆஸ்கார் புகழ் ரசூல் பூக்குட்டியும் இந்த படத்திற்காக சிறந்த ஒலி அமைப்பு விருது பெறுகிறார் (Shared with Subhash Sahoo for Kaminey and Anup Dev for 3 Idiots). படத்துக்கு ஸ்பெஷல் ஜூரி அவார்டும் (shared with Kaminey and Kutty Srank) கிடைத்திருக்கிறது. படத்திலிருந்து ஒரு பாட்டு கீழே.
2009-இன் சிறந்த படமாக மம்முட்டி நடித்து ஷாஜி கருண் இயக்கிய குட்டி ஸ்ரான்க் என்ற திரைப்படம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. குட்டி ஸ்ரான்க் திரைப்படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் (அஞ்சலி சுக்லா), சிறந்த திரைக்கதை (பி. எஃப். மாத்யூஸ்+ஹரிகிருஷ்ணா, award shared with Pasanga and a Kannada movie), சிறந்த ஆடை அலங்காரம் (ஜெயகுமார்), மற்றும் ஸ்பெஷல் ஜூரி அவார்டும் கிடைத்திருக்கிறது.
3 இடியட்ஸ் திரைப்படம் சிறந்த பாப்புலர் திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. லாகூர் என்ற படம் இயக்குனருக்கு (சஞ்சய் பூரண் சிங் சவுஹான்) சிறந்த முதல் படமாகவும், டெல்லி-6 தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கிஸ் விருதும், வெல் டன் அப்பா (ஷ்யாம் பெனகல்) சமுதாய பிரச்சினைகளை சிறப்பாக காட்டியதற்கும் விருதுகளை வென்றிருக்கின்றன. லாகூரில் நடித்ததற்காக ஃபரூக் ஷேக் சிறந்த குணச்சித்திர நடிகர் விருது வென்றிருக்கிறார்.
அபோஹோமன் என்ற வங்காள மொழி திரைப்படத்தை இயக்கிய ரிதுபர்னோ கோஷ் சிறந்த இயக்குனர் விருதை வென்றிருக்கிறார். இதே படத்தில் நடித்த அனன்யா சட்டர்ஜிக்கு சிறந்த நடிகை விருதும் கிடைத்திருக்கிறது.
அமிதாபுக்குபா படத்துக்காக சிறந்த நடிகர் விருது. இதே படத்தில் நடித்த அருந்ததி நாகுக்கு சிறந்த குணசித்திர நடிகை விருதும் கிடைத்திருக்கிறது. சிறந்த மேக்கப்புக்கான அவார்டும் (கிறிஸ்டியன் டின்ஸ்லி+டொமினி டில்) இந்த படத்துக்கு கிடைத்திருக்கிறது. இந்த திரைப்படம் சிறந்த ஹிந்தி மொழி படமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
இனிமையான குரலால் 23 வருடங்கள் ரசிகர்களை மயங்க வைத்த பாடகி சொர்ணலதா(37) இன்று (12/09/2010) சென்னையில் காலமானார்.
நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வந்த அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார்.
கேரளா பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்ட சொர்ணலதா தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது உட்பட பல மொழிகளில் 23 ஆண்டுகளாக பின்னணி பாடியுள்ளார். கருத்தம்மா படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இவர் ‘போறாளே பொன்னுத்தாயி…’பாடலை பாடியதற்காக தேசிய விருது பெற்றார்.
இவரின் தந்தை கே.சி.செருகுட்டி பிரபல ஹார்மோனியக் கலைஞர். தாய் கல்யாணி இசைப் பிரியர். கீபோர்டு மற்றும் ஹார்மோனியத்தில் சிறந்த பயிற்சி பெற்றவர் சொர்ணலதா.
மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் தமிழ் உச்சரிப்பில் எந்தக் குறையும் சொல்ல முடியாது. சொர்ணலதாவின் திடீர் மரணத்தால் அவரது இசை ரசிகர்கள் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
1982ம் ஆண்டு வெளியான நீதிக்கு தண்டனை படத்தின் மூலம் சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா என்ற பாரதியாரின் பாடலைப் பாடி இசைஞானி இளையராஜாவால் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகபடுத்தப்பட்டார்.
தளபதி படத்தில் ’ராக்கம்மா கையத் தட்டு’, சத்திரியன் படத்தில் ‘மாலையில் யாரோ மனதோடு பேச…’, கேப்டன் பிரபாகரன் படத்தில் ‘ஆட்டமா தேரோட்டமா’, சின்னத் தம்பி படத்தில் ‘போவோமா ஊர்கோலம், நீ எங்கே’, என் ராசாவின் மனசிலே படத்தில் ‘குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே’ போன்ற பாடல்கள் மிகப்பிரபலம்.
எவனோ ஒருவன் வாசிக்கிறான் (அலை பாயுதே)
சொல்லாயோ சோலைக்கிளி(அல்லி அர்ஜூனா)
குச்சி குச்சி ராக்கம்மா (பம்பாய்)
உசிலம்பட்டி பெண்குட்டி (ஜெண்டில்மேன்)
அக்கடான்னு நாங்க (இந்தியன்)
மாயா மச்சீந்திரா (இந்தியன்)
அஞ்சாதே ஜீவா (ஜோடி)
முக்காலா முக்காபலா (காதலன்)
காதலெனும் தேர்வெழுதி (காதலர் தினம்)
போறாளே பொன்னுத்தாயி (கருத்தம்மா)
உளுந்து வெதைக்கையிலே (முதல்வன்)
பூங்காற்றிலே.. (உயிரே)
ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு (உழவன்)
காதல் யோகி (தாளம்)
என்பன உட்பட ஏ.ஆர்.ரகுமான் இசையில் 35க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார்.
மலைக்கோயில் வாசலில்(வீரா)
மாடத்திலே கன்னி மாடத்திலே(வீரா)
என்னுள்ளே என்னுள்ளே(வள்ளி)
ராக்கம்மா கையத் தட்டு(தளபதி)
உத்தம புத்திரி நானே(குரு சிஷ்யன்)
நான் ஏரிக்கரை மேலிருந்து (சின்னத்தாயி)
மாசி மாசம் ஆளான பொண்ணு (தர்மதுரை)
மணமகளே (தேவர் மகன்)
ஆட்டமா தேரோட்டமா (கேப்டன்பிரபாகரன்)
நீ எங்கே என் அன்பே (சின்னதம்பி)
போவோமா ஊர்கோலம் (சின்னதம்பி)
மாலையில் யாரோ மனதோடு பேச (சத்ரியன்)
என்பன உட்பட இளையராஜா இசையில் பல ஹிட் பாடல்களைத் தந்துள்ளார்.
தனது இனியைமான குரலால் ரசிகர்களை மதிமயங்க வைத்த ஸ்வர்ணலதா திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார். சமீப காலமாக நுரையீரல் பாதிப்பால் கஷ்டப்பட்டு வந்த ஸ்வர்ணலதா இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இன்று (12/09/2010) காலை வீட்டில் இருந்தபோது திடீரென வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக சென்னை அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகி்ச்சை அளித்தும் பலனின்றி காலமானார்.
அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த திரையுலக பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அவரது இறுதிச் சடங்குகள் நாளை (13/10/2010) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீராசாமி என்பதை விட “எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்” வீராசாமி என்றால்தான் எல்லாருக்கும் தெரிகிறது. பல மிமிக்ரி ஷோக்களில் இடம் பெறும் குரல். சமீபத்தில் வல்லமை தாராயோ என்ற பார்த்திபன் படத்தில் தன்னைத் தானே கிண்டல் செய்து கொள்வது போன்ற ஒரு பாத்திரத்தில் நடித்திருந்தார்.
அவரை எனக்கு நினைவிருப்பது வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் மட்டும்தான். அதில் அவருக்கு துப்புரவு தொழிலாளர் வேஷம். சிறு வேஷம்தான். ஆங்கிலத்தில் cameo என்று சொல்வார்களே அந்த மாதிரி.
அவருக்கு அஞ்சலி எழுதும் அளவுக்கு எனக்கு தெரியாது. அதனால் விமல், சாரதா, விஜயன், ராஜரிஷி, ராஜன் ஆகியோரின் மறுமொழிகளிலிருந்து தொகுத்திருக்கிறேன்.
பழம்பெரும் நடிகர் ஏ.கே.வீராசாமி (84) சென்னையில் 22/08/2010 அன்று காலமானார். பணம் படைத்தவன், திருமலை தென்குமரி, முதல் மரியாதை, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் உள்பட 500க்கும் அதிகமான படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்தவர் ஏ.கே.வீராசாமி. இவர் இருதய நோயினால் அவதிப்பட்டு வந்தார். அவருடைய மூளையில் ரத்தம் உறைந்து போனதால் கடந்த சில மாதங்களாக கை கால்கள் செயல்படாமல் படுத்த படுக்கையாக இருந்தார். இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் வீராசாமி மரணமடைந்தார். வீராசாமியின் மனைவி ராஜலட்சுமி கடந்த ஓராண்டுக்கு முன்பு காலமானார். வீராசாமிக்கு 4 மகன்களும், 1 மகளும் உள்ளனர்.
வீராசாமி எஸ்.வி. சஹஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் குழுவின் நடிகர். மிக நல்ல நடிகர்.. நாடகங்களில் இவரது பங்கு அபாரமானது. தமிழில் ஏராளமான படங்களில் ஏழையாகவும், வேலைக்காரத் தந்தையாகவும் நடித்திருக்கிறார். வசந்த் தயாரித்த தக்கையின் மீது நான்கு கண்கள் குறும்படத்தில் தாத்தாவாக நடித்து கவனைத்தை பெற்றவர். (தக்கையின் மீது நான்கு கண்கள் சா. கந்தசாமி எழுதிய பிரபல சிறுகதை. இங்கே படிக்கலாம்.) குறும்படத்துக்கு ஒரு விமர்சனம் இங்கே.
வீராசாமி ஏ.பி.நாகராஜனின் ‘வா ராஜா வா’ படத்தில் மாஸ்டர் பிரபாகர், பேபி சுமதி ஆகியோரை வளர்க்கும் மாமாவாக வருவார். தொடர்ந்து திருமலை தென்குமரி, கண்காட்சி உள்பட ஏராளமான படங்களில் நடித்திருந்தார். மறைந்த கே.கே.சௌந்தர் போல கிராமப் பஞ்சாயத்துக் காட்சிகளில் நிறைய வருவார். பொதிகை தொலைக்காட்சியில் ‘அலோ உங்களுடன்’ நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, தொலைபேசியில் சாரதா அவருடன் பேசி இருக்கிறார். “எல்லோரும் முதல் மரியாதை பற்றியே கேள்வி கேட்கும்போது, நீங்க மட்டும்தான் பழைய படங்களப் பற்றி கேக்கறீங்க” என்று சொல்லி மகிழ்ச்சியடைந்தார். நல்ல பண்பாளர். சில நேரங்களில் சைக்கிளில் கூட படப்பிடிப்புக்கு வருவார் என்று சாரதா கேள்விப்பட்டிருக்கிறாராம். அவருக்கு வயது 84-ஆம்.
முதல் மரியாதை படத்தில் நடித்த வீராசாமியை அந்த படம் பார்த்தவர்கள் யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது. சிறிய ஒரு பாத்திரம் ஆனாலும் நன்றாக நடித்து இருப்பார். அந்த படத்தில் அவரது வேடம் மிக முக்கியமானது. ஏன் என்றால், முன்பு வடிவுக்கரசி சத்யராஜிடம் ஏமாந்து போன பிறகு, வடிவுக்கரசியுன் அப்பா சிவாஜியுன் காலில் விழுந்து கேட்டதற்கு பின் சிவாஜி வடிவுக்கரசியை திருமணம் செய்த விஷயம் வீராசாமிக்கு மட்டும் தான் தெரியும். படத்தில் வீராசாமி வரும் இடங்களில் எல்லாம் பின்னணி இசை (உடுக்கை சத்தத்துடன்) கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கும். அதுவும் “சாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி” என்று சிவாஜியுடம் பேசும் இடத்தில் ரொம்ப திகில் ஆக இருக்கும்.
வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் கூட ஒரு சிறிய வேடத்தில், floor சுத்தம் செய்யும் ஆளாக நடித்து இருப்பார். கமலை பார்த்து ஒரு இடத்தில “பார்த்து நடப்பா. தரையை அசுத்தம் செய்யாதே” என்று சொல்லுவர். பின்பு கமலின் கட்டிபிடி வைத்தியத்தில் மனம் நெகிழ்ந்து “தரையை சுத்தம் செய்யும் என்னை பார்த்து எல்லாரும் முகம் சுளிப்பார்கள். என்னை யாரும் இது வரை இந்த மாதிரி கட்டிபிடித்து பாராட்டியது இல்லை” என்று சொல்லுவார். பின்பு ஒரு காட்சியுள் பிரகாஷ்ராஜ் கமலை கல்லூரியை விட்டு வெளியுள் போக சொல்லும் போது பிரகாஷ் ராஜ் வீராசாமியை பார்த்து “யார் நீ ?” என்று கேட்பார். அப்போது வீராசாமி “நான் வருசமா இங்கே வேலை செய்கிறேன். என்னை உனக்கு தெரியாது. ஆனால் வந்து ஒரு வருஷம் கூட ஆகாத இந்த தம்பிக்கு என்னை நல்ல தெரியும்” என்று கமலை கை காமிப்பார். சூப்பர் சீன்.
அண்மைய மறுமொழிகள்