ஜெயகாந்தனும் சினிமாவும்
அக்டோபர் 28, 2010 6 மறுமொழிகள்
அம்ஷன்குமார் எழுதிய நல்ல கட்டுரை ஒன்று கண்ணில் பட்டது. ஜெயகாந்தன் ஒரு டஜன் சினிமாவில் பங்கு பெற்றிருந்தால் அதிகம். ஆனால் அந்த படங்களின் தரம் உயர்வாக இருக்கிறது!
கட்டுரையிலிருந்து தெரிய வரும் அவர் பங்களிப்பு உள்ள படங்கள்:
- உன்னைப் போல் ஒருவன்: திரைக்கதை, இயக்கம். தயாரிப்பும் அவர்தானோ?
- யாருக்காக அழுதான்: திரைக்கதை, இயக்கம். தயாரிப்பும் அவர்தானோ?
- சில நேரங்களில் சில மனிதர்கள்: மூலக்கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள். இயக்கம் பீம்சிங்.
- ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்: மூலக்கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள். இயக்கம் பீம்சிங்.
- கருணை உள்ளம்: மூலக்கதை, திரைக்கதை, வசனம். இயக்கம் பீம்சிங்.
- எத்தனை கோணம் எத்தனை பார்வை: வசனம்
- புதுச்செருப்பு: இயக்கம்
- காவல் தெய்வம்: மூலக்கதை, திரைக்கதை, வசனம்
- ஊருக்கு நூறு பேர்: மூலக்கதை
- பாதை தெரியுது பார்: தென்னங்கீற்று ஊஞ்சலிலே பாட்டு
- காத்திருந்த கண்கள்: ட்ரீட்மென்ட்?
- நேற்று இன்று நாளை: (எம்ஜிஆர் படம் இல்லை) குறும்படம், 67-இல் வந்ததாம். இயக்கம்+தயாரிப்பு?
- நல்லதோர் வீணை: தொலைகாட்சி படம், மூலக்கதை
அவர் யாருக்காக அழுதான் படத்தை விமர்சித்திருக்கிறார்.
தியேட்டர்களுக்குச் சென்று ஜனக் கும்பலோடு உட்கார்ந்து படத்தைப் பார்த்தேன். ரசிகர்கள் வாரிக்கொண்டார்களே வாரி! படத்தின் ஆரம்பத்தில் 3 நிமிட நேரம் வெள்ளைத் திரையில் ஒன்றுமே தோன்றாது படம் ஓடும். தேய்ந்த பிரிண்ட்டின் கீறல்களை ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அசரீரியாக நான் இந்தப் படத்தைப் பற்றி 3 நிமிட நேரம் பிரசங்கம் செய்வேன். பேச்சைத் தொடர்ந்து கண்ணதாசன் எழுதிய ஒரு நல்ல பாட்டு. ஒரு நல்ல பாட்டைக் கூடக் கேட்க விடாமல் ரசிகர்களை அடித்து விரட்ட முடியும். அதற்கு மேல் படத்தில் நாகேஷை நடக்க வைத்தும் படுக்க வைத்தும் சாப்பிடச் செய்தும் இசைத்தட்டில் இரண்டு பக்கம் வருகிற மாதிரி ஒரு பாட்டுக் காட்சி ரீல்.
தான் இயக்கிய படத்தையே இப்படி கிழிகிழி என்று கிழிக்கும் மனிதரின் integrity பிரமிக்க வைக்கிறது.
அம்ஷன்குமார் சொல்லும் பல படங்களை பார்த்ததில்லை. பார்த்தவர்கள் சொல்லுங்களேன்! சாரதா, காவல் தெய்வம் பற்றி ஏதாவது எழுதி இருக்கிறீர்களா?
இன்னும் பெரிய பங்களிப்பாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும். நமக்குதான் அதிர்ஷ்டம் இல்லை.
தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்
தொடர்புடைய பக்கம்:
அம்ஷன்குமார் எழுதிய கட்டுரை
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் – சாரதா விமர்சனம்
சில நேரங்களில் சில மனிதர்கள் பக்சின் விமர்சனம், ஆர்வியின் விமர்சனம், சாரதாவின் விமர்சனம்
ஜெயகாந்தனின் ‘எத்தனை கோணம் எத்தனை பார்வை’
அண்மைய மறுமொழிகள்