ஜெயகாந்தனின் ‘எத்தனை கோணம் எத்தனை பார்வை’


சாரதாவின் மறுமொழியிலிருந்து:

ஜெயகாந்தனின் ‘எத்தனை கோணம் எத்தனை பார்வை’ வண்ணத் திரைப்படம், அழகான ஒரு படைப்பு. மிக மிக யதார்த்தமான ஒரு படம். எந்த ஒரு கட்டத்திலும் செயற்கைக் கோணம் தட்டாது. நான் பல ஆண்டுகளுக்கு முன் பார்த்ததாலும், ஒரே ஒரு முறை மட்டுமே பார்த்திருந்ததாலும் கதையமைப்பு கோர்வையாக நினைவில் இல்லை. ஆனால் மிக நல்ல படம் என்பது மட்டும் மனதில் மிக அழுத்தமாகப் பதிந்துள்ளது.

சாருஹாசன், வடிவுக்கரசி, ஸ்ரீபிரியா, சுரேஷ், நளினி, தியாகராஜன், வி.கோபாலகிருஷ்ணன், தேங்காய் சீனிவாசன், ஒரு விரல் கிருஷ்ணாராவ் என நிறைய பழைய முகங்களே நடித்திருந்தபோதிலும், உருவாக்கத்தில் புதுமையிருந்தது. தி.க.தலைவர் வீரமணி போல கருப்புச்சட்டையில் வரும் பத்திரிகை ஆசிரியர் வி.கோபாலகிருஷ்ணன் மட்டும் படம் முழுக்க செந்தமிழில் பேசுவது மிக நன்றாக இருக்கும். மனைவியை விட்டுப் பிரிந்து, இசைக்காக தன்னை அர்ப்பணித்து தன் தோழர்களுடன் தனியாக வாழும் சாருஹாசன்தான் படத்தின் முதுகெலும்பு. மது அருந்துவதை ஒரு தவ்றாக எண்ணாமல் அன்றாட சடங்காக கருதும் கூட்டம் அது.

தியாகராஜனுக்கும், ஸ்ரீபிரியாவுக்கம் நடக்கும் சுயமரியாதை திருமணம் எல்லாம் ரொம்ப இயற்கையாக, தெரு முனையில் பந்தல் போட்டு நடத்தப்படுவது போன்ற பல காட்சிகள் மனதுக்கு இதமாக அமைந்தவை. பாடல்களும் ஜெயகாந்தன் எழுதியதாக நினைவு. எத்தனை கோணம் எத்தனை பார்வை என்ற பாடல் படமாக்கப்பட்ட விதமும் அருமை. ஆனால் அப்பாடலின் நடுவே, துறைமுகத்தில் பெரிய பெரிய இரும்பு பிளேட்கள் இறக்கப்படுவதை ஏன் காண்பித்தனர் என்பது தெரியவில்லை. இது போக தேங்காயும், கிருஷ்ணாராவும் பாடும் என்ன வித்தியாசம் என்ற பாடலும், சாருஹாசன் பாடும் ‘அலை பாயுதே கண்ணா’ பாடலும் உண்டு.

அதிர்ஷ்டவசமாக இப்படம் பார்க்க நேர்ந்தது ஒரு கதை. எங்கள் குடும்ப நண்பரொருவர் சிங்கப்பூரிலிருந்து வந்திருந்தபோது அவரைப் பார்க்க நானும் என் கணவர் பிரகாஷும் சென்ற இடத்தில், ‘ஏதாவது திரைப்பட வீடியோ கேஸட் இருந்தால் கொடுங்கள் (அப்போது சி.டி. வரவில்லை) பார்த்துவிட்டு தருகிறோம்’ என்று கேட்டபோது, மூன்று பட கேஸட்டுகளைக் கொடுத்தார். அவற்றில் இந்த ‘எத்தனை கோணம் எத்தனை பார்வை’ படமும் ஒன்று. கேள்விப்படாத படமாக இருக்கிறதே என்று நினைத்து வீட்டுக்கு எடுத்துச் சென்று படத்தைப்பார்த்தபோது படம் அருமையாக இருந்தது.

ஆனால் இரண்டு ஆண்டுகள் கழித்து, டிசம்பர் 31 தினத்தந்தி செய்தித்தாளில், அந்த ஆண்டு வெளியான படங்களைப்பற்றிய விவரமான கட்டுரை வெளியாகியிருந்தது. (வருடா வருடம் தினத்தந்தியில் வருடக்கடைசியில் இப்படி ஒரு கட்டுரை போடுவார்கள்). அதில் ‘சென்ஸார் ஆகியும் இன்னும் வெளி வராத திரைப்படங்கள்’ என்ற தலைப்பில் மூன்று படங்களின் பெயர்கள் இருந்தன. அவற்றில் ஒன்றாக ‘எத்தனை கோணம் எத்தனை பார்வை’ பெயரும் இருந்தது.

My GOD… இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நாம் பார்த்துவிட்ட படம் இன்னும் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகவே இல்லையா? என்ன கொடுமை? இவ்வளவு நல்ல படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் தயாராக இல்லையா? தயாரிப்பாளரே வெளியிடத் தயக்கமா? இப்படியிருந்தால் நல்ல் படங்கள் எப்படி நம் பார்வைக்கு வரும்?. இன்றுவரை அப்படம் வெளியானதா இல்லையா என்பது தெரியவில்லை. வெளியாகியிருந்தால் எப்படி ஓடியது? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள், சாரதா பக்கம்

தொடர்புடைய பதிவுகள்: ஜெயகாந்தனும் சினிமாவும்

பற்றி RV
43 year old. Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Engineer by profession. Going through a mid-life crisis (got laid of two months ago and looking for a job). Considering a change of line in computers. Live in Silicon valley (Newark)

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 45 other followers