ரேப்பு கரூன் க்யா உசுகி

இது நடந்தது எண்பதுகளில். எங்கள் காலேஜில் (Govt . College of Engg. சேலம்) டிவி வரவே இன்னும் ஒரு வருஷம் இருந்தது.

காலேஜுக்கு பக்கத்தில் ஒரு தாபா (dhaba) திறந்திருந்தார்கள். அனேகமாக அது தமிழகத்தின் முதல் தாபாவாக இருந்திருக்கலாம். ராத்திரி முழுவதும் திறந்திருக்கும், லாரி டிரைவர்களை குறி வைத்து ஆரம்பிக்கப்பட்டது அது. எங்கள் காலேஜ் மெஸ்ஸில் ஆறு மணிக்கே போய் ஆறேழு தோசையை சாப்பிட்டுவிட்டு ராத்திரி பன்னிரண்டு ஒரு மணிக்கு பசிக்கிறதே என்று யோசிக்கும் எங்களுக்கு அது ஒரு வரப்ரசாதமாக இருந்தது. மட்டர் பன்னீர், பைங்கன் பர்த்தா, ஆலு கோபி என்று இது வரை கேள்விப்பட்டிராத பல ஐட்டங்களை வெட்டிக் கொண்டிருந்தோம். ஹிந்தி மட்டுமே தெரிந்த கடைக்காரர்களும் தமிழ், ஆங்கிலம் மட்டுமே தெரிந்த நாங்களும் ஒரு மாதிரி குன்சாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்துகொண்டிருந்தோம். ராத்திரி இரண்டு மணிக்கு ஏதோ புரியாத ஹிந்திப் பாட்டு ஒலிக்க, கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து ஒரு கட்டை மீது சாப்பாட்டை வைத்து சாப்பிடுவது ஒரு புது அனுபவமாக இருந்தது.

ஒரு நாள் இரவு நானும் நண்பன் சிவகுருநாதனும் சாப்பிடப் போனோம். ஒரு அருமையான பாட்டு பின்னணியில். செம பீட்! பாட்டை ரெகார்ட் செய்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தோம். வாட் மூவி திஸ் சாங் என்று நாங்கள் கேட்டது கடைக்காரனுக்கு ஒன்றும் புரியவில்லை. சரி பாட்டை உன்னிப்பாக கேட்டுக்கொண்டு போய் எங்கள் கூடப் படிக்கும் வடநாட்டு நண்பன் ஷிவேந்தர் டோகரிடம் கேட்டால் சொல்லிவிட்டுப் போகிறான் என்று பாட்டை உன்னிப்பாக கேட்டுக்கொண்டோம். இந்த மதராசப் பட்டினத்தில் ஆர்யாவும் நண்பர்களும் மங்க்யூ மங்க்யூ என்று உருப்போட்டுக் கொண்டே வருவார்களே அந்த மாதிரி நாங்களும் பாட்டை முனகி கொண்டே வந்தோம். ராத்திரி இரண்டரை மணிக்கு ஷிவேந்தர் கதவை இடித்தோம். அவன் பல கெட்ட வார்த்தைகளில் (அவனுக்கு நாங்கள் கற்றுக் கொடுத்திருந்த தமிழ் வார்த்தைகள் அவைதான்) திட்டிக் கொண்டே கதவைத் திறந்தான். இந்த மாதிரி பாட்டு கேட்டோம், என்ன பாட்டு இது, என்ன படம் என்று விசாரித்தோம். அவனும் திட்டிக் கொண்டே சரி வார்த்தைகளை சொல்லுங்கடா என்றான். நாங்கள் இருவரும் சொன்னோம் – “ரேப்பு கரூன் க்யா உசுகி

அவன் அப்டியே ஷாக்காயிட்டான். டே அப்படின்னா “Shall I rape her” என்றுதானடா அர்த்தம், அப்படி ஒரு பாட்டே கிடையாதுடா என்றான். நாங்கள் பாடியும் காட்டினோம். இல்லை பாட எல்லாம் வேண்டாம், நீங்கள் சொன்னதே போதும் என்று ஓடப் பார்த்தான். போடா உனக்கு ஹிந்தியும் தெரியவில்லை, ஒரு மயிரும் தெரியவில்லை என்று அவனை இரண்டு மொத்து மொத்திவிட்டு தூங்கப் போனோம். மீண்டும் அந்த கடைக்காரனிடம் இந்த பாட்டை எப்படி போடச் சொல்வது என்று தெரியவில்லை. மறந்தே போய்விட்டோம்.

இரண்டு மூன்று வருஷம் கழித்து கரக்பூர் ஐ.ஐ.டி.யில் எம்.டெக் படிக்கும்போது இந்த பாட்டை சித்ரஹாரில் பார்த்தேன். நீங்களும் பாருங்கள்.

சிவகுருவுக்கு கடிதம் எழுதினேன் – அது ரேப்பு கரூன் க்யா உசுகி இல்லை தாரீஃபு கரூன் க்யா உஸ்கி என்று. பாட்டு சாந்த் ச ரோஷன் செஹரா, படம் காஷ்மீர் கி கலி, பாடியவர் முகமது ரஃபி, இசை ஓ.பி. நய்யார், நடித்தவர்கள் ஷம்மி கபூர்+ஷர்மிளா தாகூர்.

குரு பார்வை II – ஒரு அலசல்

குரு திரைப்படத்துக்கு ராஜனின் தொடரும் விமர்சனம். கிண்டலும் கேலியும் நிறைந்த முதல் பகுதி இங்கே.

கிண்டல் இருக்கட்டும். முதலில் நான் இங்கு சினிமா நெல்லைத் தமிழில் பற்றிப் பேசுவது ஒரு கேலிக்காக மட்டுமே. மணிரத்னத்தின் சினிமா உலகில் அனைவருமே தமிழில்தான் பேசுகிறார்கள் என்பது ஒரு சிறிய கேலிக்குரிய குறையே. எனது முக்கிய குற்றச்சாட்டு படத்தில் எதுவுமே தெளிவாகச் சொல்லப் படவில்லல., மூலப் படத்தை இந்தியில் பார்த்திருந்தாலும் நான் அதையேதான் சொல்லியிருந்திருப்பேன். ஒரு பெரிய பிசினஸ்மேன் எப்படி வளர்கிறான் அவன் என்ன செய்கிறான் என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்க வேண்டும். இதில் மணி கொஞ்சம் கூட அக்கறை செலுத்தவில்லை. இது போன்ற படங்களின் அச்சாணியே அதுதானே? அதை விட்டுவிட்டு அபிஷேக் பச்சன் பாட்டுப் பாடுவதும் ஆட்டம் ஆடுவதுமாகவே இருக்கிறார். ஒரு கத்துக்குட்டி டைரக்டர் கூட இப்படி ஒரு கூறு கெட்ட கதையமைப்பைத் தேர்ந்தெடுக்க மாட்டான். தயவு செய்து இந்தப் படத்தைப் பார்க்கும் பொழுது கார்ப்பரேட் என்ற இந்திப் படத்தையும் அதில் கதைக்குக் கொடுக்கப் பட்டுள்ள முக்கியத்துவத்தையும் பாருங்கள் அடிப்படை வித்தியாசம் புரியும். இது ஒரு காதல் கதைப் படம் அல்ல, இதில் எதற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும்? இதில் ஏன் இத்தனை ஆடல் பாடல்கள்? பிசினஸ் சம்பந்தப்பட்ட ஒரு காட்சி கூட தெளிவாக அமைக்கப்படவில்லை. ஏனோதானோவென்றும், குழப்பமாகவும் அவசர அடியாகவும் அமைக்கப் பட்டுள்ளன. மாறாக அவருக்கு இரட்டைக் குழந்தை பிறந்தவுடன் ஒரு பெரிய ஆட்டம் பாட்டம் இதெல்லாம் இது போன்ற படங்களுக்குத் தேவையா? நான் பாப்கார்னுக்குப் பிறகு அளவு கடந்த எரிச்சலுக்கு உள்ளானது இந்தப் படத்தைப் பார்த்த பின்புதான். என்னவிதமான படம் எடுக்கிறோம் அதில் எதை முக்கியமாகச் சொல்ல வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் ஒரு சினிமா எடுத்தால் எங்கு போய் முட்டிக் கொள்வது? ஒரு வாரென் பஃபெட்டைப் பற்றியோ ஒரு பில் கேட்ஸைப் பற்றியோ நாளைக்கு யாரேனும் சினிமா எடுத்தால் இப்படி எல்லாமா அச்சுப் பிச்சென்று எடுப்பார்கள். சிட்டிசன் கேன் படத்தை ஒரு சிறிய உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்களேன்.

நான் சொல்ல வந்தது இதுதான். மணிரத்னம் காதல் படம் எடுக்கிறாரா, பிஸினஸ்மேன் பற்றி எடுக்கிறாரா என்ற தெளிவு கூட இல்லாமல் ஒரு படம் எடுக்க அதை இத்தனை பேர் பாராட்டும் படி வேறு செய்து ஒரு பொதுப் புத்தியை உருவாக்கியதுதான் அவரது மோடி மஸ்தான் வேலையின் ரகசியம். நான் கேட்ப்பது மிக சிம்பிளானதொரு கேள்வி. இங்கு தனி நபர்களைப் பற்றிய படங்கள் நிறைய வருகின்றன, கம்பெனிகளின் வளர்ச்சி, வீழ்ச்சி பற்றிய படங்கள் வருகின்றன இவற்றில் எடுப்பவர்களுக்கு எவ்விதக் குழப்பமும் கிடையாது மிகத் தெளிவாக சொல்ல வந்த விஷயத்தை மட்டும் சொல்லிப் படம் எடுக்கிறார்கள். இந்த குரு படத்தில் மணி செய்திருப்பது என்ன? பிஸினஸ் சம்பந்தமாக ஒரு காட்சியாவது தெளிவாகக் குழப்பம் இல்லாமல் அள்ளித் தெளித்தது போல் இல்லாமல் எடுக்கப் பட்டுள்ளதா? தான் எடுப்பது மசாலாவா, ஆடல் பாடல் நிறைந்த ம்யூசிக்கலா, பையோகிராஃபியா என்ற தெளிவு இல்லாமல் ஒரு இயக்குனர் இந்தியாவில் மிகப் பிரபால்யம் அடைய முடிகிறது என்றால் யாரை நாம் குறை சொல்வது ?

படத்தின் மிகப் பெரிய குறை எடுத்து கொண்ட விஷயத்தைத் தெளிவாகச் சொல்ல முயலாதது. ஆங்கிலத்தில் நான் நூறு உதாரணம் தரலாம் அதையெல்லாம் விடுங்கள். பக்கத்தில் அதே இந்தியில் எடுக்கப்பட்டுள்ள கார்ப்பரேட் படத்தை போட்டுப் பாருங்கள். அது நிச்சயமாகச் சிறந்த படம் அல்ல. இருந்தாலும் அதைப் பாருங்கள். அப்புறம் இந்த குருவையும் பாருங்கள் அதன் பிறகு நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது புரியும். அழகான பெண்களும், அழகான இடங்களும், ஒத்திசைந்த ஆடல்களும் அகலத் திரையும் இருந்து விட்டால் உங்களுக்கு மக்களுக்கு படம் பிடித்துப் போய் விடுகிறது. அதை நன்றாக பிருமாண்டமான விஷுவலாக காண்பிக்க மணிரத்தினம் தெரிந்து வைத்திருக்கிறார். நல்ல சினிமா என்பது அதையெல்லாம் தாண்டியது

தன்னை இலக்கியவாதி என்று தானே சொல்லிக் கொள்ளும் ஒருவர் சிலாகிக்கும் இடங்களைப் பாருங்கள் ஐஸ்வர்யா அபிஷேக்கைப் பார்த்து முழுங்குகிறாராம் அடக் கண்றாவியே? அதுவா படத்தின் மையக் கரு? அப்புறம் வித்யா பாலனின் நடிப்பு குறித்து சிலாகிக்கிறார். அது சாதாரண ரோல். படத்தில் அவர் பாத்திரம் எதற்கு வைக்கப் பட்டதென்றே எனக்குப் புரியவில்லை. அது ஒரு தனி டிராக்காக ஓடுகிறது, மாதவன் ஏதோ இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிசம் பண்னுகிறாராம் அது என்ன இன்வெஸ்டிகேஷனோ என்ன ஜர்னலிசமோ, அப்புறம் தன் பத்திரிகை அதிபர் பொண்ணண ஒரு நாள் கொட்டும் மழையில் காதலித்துக் கல்யாணம் செய்து கொள்கிறார். சரி அதுக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்? சரியான எரிச்சல் அந்த சைட் டிராக். குருபாய் எப்படி வளர்ந்தார் எப்படி அரசாங்கத்தை ஏமாற்றினார் என்று காமிங்கடா என்றால் யாரோ ஒருவர் சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறாராம் அவரை யாரோ ஒருவர் காதலிக்கிறாராம் அதை விலாவாரியாகக் காண்பிக்கிறார்கள் எதற்கு அது? அது படத்தில் தனியாகத் தொங்குகிறது.

இந்த சினிமாவில் ஒரு புண்ணாக்கும் இல்லை. ஒருவர் சாதாராண நிலையில் இருந்து இந்தியாவிலேயே பெரிய தொழிலதிபர் ஆகிறார் என்றால் அதில் சொல்வதற்கு எத்தனை விஷயங்கள் இருக்கும்? அவர் எப்படி ஆரம்பத்தில் உழைத்தார்? முதலில் எப்படி என்ன பிசினஸ் செய்தார் அதில் எப்படி வெற்றி பெற்றார்? எப்படி அரசாங்கத்தை வளைத்து தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்டார்? பிரதம மந்திரியும் அரசாங்கமும் ஏன் அந்த நிறுவனத்துக்குச் சாதகமாக இருந்தார்கள்? என்ன என்ன விதி மீறல்களை எப்படி எப்படிப் பண்ணினார் என்பதையெல்லாம் தெளிவாகச் சொல்ல வேண்டும் அல்லவா? அத்தாம் பெரிய கம்பெனியின் எம்டிக்கு யுஎஸ்ஏக்கும் அமெரிக்காவுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை, இதை விட ரிலையன்ஸை கேவலப்படுத்த முடியாது. அப்புறம் ஏதோ எக்சைஸ் ஊழல், விதி முறை மீறல் என்பதும் போகிற போக்கில் பேப்பரில் ஹெட்லைனாக மட்டுமே வரும். அட அது என்ன பிசினஸ் இவர் என்ன செய்தார் அதில் என்ன விதி முறை மீறல் இதையெல்லாம் சொல்ல எவ்வளவு நேரம் ஆகும்? அதையெல்லாம் சொல்லாமல் சும்மா முணுக்கென்றால் அத்தாம் பெரிய நிறுவனத்தை நடத்துபவர் ஒரு நூறு பேருடன் சேர்ந்து கொண்டு டப்பாங்குத்து ஆடுகிறார். இத்தனை பாடல்களை எடுத்த நேரத்தில் கதையை உருப்படியாகச் சொல்லியிருந்தால் ஒரு முழுப் படம் பார்த்த உணர்வு இருந்திருக்கும்.

சும்மா எல்கேஜி பசங்க டிராமா போட்ட கணக்கா ஒரு சினிமா. படு அமெச்சூர்த்தனம். சும்மா மணிரத்னத்தின் பெயரையும் ரஹ்மான் பெயரையும் போட்டு என்ன கழிசடையை எடுத்தாலும் அதைப் பார்த்து விட்டு ஆகா ஓகோ என்று சொல்ல நாலு பேர். இதுதான் இந்த நூற்றாண்டிலேயே சிறந்த படம் என்று அமெரிக்காவில் எழுத நாலு கோமாளிகள். அமெரிக்கா பத்திரிகையில் இந்தியாவில் இருந்து உரிய மார்க்கெட்டிங் பண்ணினால் இது என்ன இதுக்கு மேலேயும் எழுதுவார்கள். லகானை இந்தியாவின் சிறந்த படம் என்று எழுதுகிறவர்கள் இதை எழுத மாட்டார்களா என்ன?

மணிரத்னம் இது போன்ற போலித்தனமான அறிவு ஜீவிப் படங்கள் எடுப்பது ஒரு தொடர் வியாதியாகவே வைத்திருக்கிறார். இந்தப் படத்தைப் பார்த்த்து விட்டு நான் மதிக்கும் ஒரு தேர்ந்த விமர்சகர் சொன்னது:

மணிரத்னம் சினிமா என்ற மீடியத்தை அறிந்தவர் என்றே நான் நம்புகிறேன். ஆனால் அவர் மீடியம் பற்றிய தன் அறிவிற்கும் பொதுவாக் தனக்கும் தான் கையாள் எடுத்துக்கொள்ளும் விஷயத்திற்கும் உண்மையாக இருப்பதில்லை. நிறைய காசு சம்பாதிக்க வேண்டும். அதுதான் குறி. ஆனால் அதே சமயம் வியாபார சிந்தனையே மேலிட்டிருப்பாதாகவும் காட்டிக் கொள்ளக் கூடாது. பெரிய சினிமா கலைஞ்னாக, நிகழ்கால சரித்திரத்தைப் பதிவு செய்பவனாக, மற்ற வணிக சினிமாக்காரர்களீடமிருந்து வேறுபட்டவனாக பல விஷயங்களில் முன்னோடியாக காட்டிக்கொள்ள வேண்டும் என்ற் ஆசை. அதில் அவர் பிரமாதமாக வெற்றியடைந்துள்ளார். தன் பாவலாக்களையெல்லாம் கலை, சரித்திரம், அறிவார்த்தம், உத்தி சோதனை என்றெல்லாம் நம்பச் செய்து ரொம்பப் பேரை முட்டாளாக்கியுள்ளார். அவர் இன்னொரு ரக ரஜனி, நம் சினிமா சந்தையில். ரஜனி ஒரு பாமர மணிரத்னம். மணிரத்னம் ஒரு எலீட்டிஸ்ட ரஜினி.

எவ்வளவு உண்மையான அவதானிப்பு!

பின்குறிப்பு: ஒரு இலக்கியவாதி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தார் என்றும் ஒரு தேர்ந்த விமர்சகர் இப்படி சொன்னார் என்றும் ராஜன் எழுதுகிறார். அவர்கள் யார் யார் என்றும் சொன்னால் நன்றாக இருக்கும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல், ராஜன் பக்கங்கள்

தொடர்புடைய பதிவுகள்: குரு பார்வை I

குரு பார்வை I – நெல்லைத் தமிழும் தையத்தக்கா ஆட்டமும்

ராஜன் இந்த தளத்துக்கு வருபவர்களுக்கு தெரிந்தவர். அவர் மணிரத்னம் இயக்கிய குரு திரைப்படத்துக்கு இந்த விமர்சனத்தை எழுதி இருக்கிறார். கொஞ்ச நாள் முன்னால் அனுப்பினார், போட லேட் ஆகிவிட்டது. இந்த விமர்சனத்தில் எனக்கு முழு இசைவு கிடையாது. ஆனால் அவர் நக்கலை ரசித்தேன். இன்னும் ஒரு பகுதி வரும். ஓவர் டு ராஜன்!

எனக்கு குரு பார்வை சரியில்லை என்று ஜோசியத்தில் இருந்தது போலும், வெள்ளிக்கிழமை இந்தியன் ஸ்டோர்ஸுக்குச் சென்ற பொழுது என்னை பார்த்து விதி சிரித்துக் கொண்டிருந்தது தெரியாமல் அங்கு ஓசிக்குக் கிடைக்கும் ஒரு தமிழ்ப் பட டிவிடியை தொட்டுவிட்டேன். வழக்கமாகத் தமிழ் பட டிவிடி ஓசியில் கொடுத்தால் கூட இடது கையால் கூட தொடுவதில்லை. அந்த விரதத்தைத் தொடர்ந்திருந்தால் ஒரு மஹா துர்ப்பாக்கிய நிலையில் இருந்து தப்பியிருப்பேன். என் கெட்ட நேரம், நான் குருவைப் பார்த்துத் தொலைக்க வேண்டியதாயிற்று. கிரக குருவை அல்ல குரு என்ற மணிரத்னத்தின் ஒரு பாடாவதியான படு திராபையான படு அபத்தமான திரைப் படத்தை. நான் சமீபத்தில் பார்க்க நேர்ந்த மிகக் கொடுமையான மோசமான திரைப்படம் குரு. இந்த இயக்குனனரையா போயும் போயும் இந்தியாவில் சிறந்த இயக்குனர் என்கிறார்கள்? பரிதாபம். இவர்தான் இந்தியாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் என்றால் நிச்சயமாக இந்திய சினிமா தன் அந்திமக் காலத்தில் இருக்கிறது என்பேன் நான்.

நான் வழக்கமாக டப்பிங் படங்களைப் பார்ப்பது இல்லை. தெலுங்கு படங்களைத் தமிழில் “கொன்று விடுவேன் உன்னை நான் நேற்று’ என்ற ரீதியில் டப் செய்து கொல்லுவார்கள். அந்தக் காலத்தில் தமிழில் தனியாகத் தமிழினத் தலைவரின் வாரிசுகள் சன் டி வி ஆரம்பிக்கும் முன் , தூரதரிசனில் மத்தியான வேளைகளில் ஜூனூன் என்று தொடர் போடுவார்கள். தமிழை ஒழிக்க இந்திக் காரர்கள் திட்டமிட்ட போட்ட டப்பிங் சதி அந்தத் தொடர்கள். கேட்க்கக் கர்ண கடூரமாய் இருக்கும். அதையும் நம் தாய்க்குலங்கள் விடாது பார்ப்பார்கள். இவ்வளவு மோசமான தொடரையே இவ்வளவு மோசமான தமிழில் சலிக்காமல் பார்க்கும் நம் தாய்க்குலங்களைக் கண்ட தைரியத்தில்தான் அதை விட மோசமான சீரியல்களை அதை விட மோசமான தமிழில் கொடுத்து இன்று வரை காண்பித்து அழ வைத்து காசு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் சன், ஜெயா எல்லோரும். குரு டிவிடியைப் பார்க்க எடுத்தது ஒரு கெட்ட நேரம் என்றால் அதிலும் தமிழில் டப் செய்யப்பட்ட வெர்ஷனைப் பார்க்க எடுத்தது என் கெட்ட நேரத்தின் உச்சம். எனக்குக் கிடைத்த double whammy.

படம் ஆரம்பத்தில் திருநெல்வேலி மாவட்டம் இலஞ்சிக் கிராமம் என்று போட்டுவிட்டு ஏதோ குஜராத்திக் கிராமத்தைக் காண்பிக்கிறார்கள். அதில் ஒருவர் குல்லா போட்டுக் கொண்டு, பஞ்சகச்ச வேஷ்டி கட்டிக் கொண்டு ஒரு ப்ளாக் போர்டைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு திறந்த வெளியில் உட்கார்ந்திருக்கிறார். பக்கத்தில் ஒரு கரும் பலகையும் அதில் ஒரு கட்டம் முக்கோணம் வரையப் பட்டிருப்பதால் அவர் கணக்கு வாத்தியார் என்றும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் கொடுமை, இப்படி ஒரு சிந்தனைப் பஞ்சம் அந்த இயக்குனருக்கு. அந்த வடநாட்டு பனியா நெல்லைத் தமிழில் பேசுவது அடுத்த தமாஷ். அவரைச் சுற்றி ஒரு பெஹன்ஜி வட நாட்டு மார்வாரி சேலையில், இரண்டு இளைஞர்கள் பைஜாமா குர்தாவில் இருந்து கொண்டு எல்லோரும் நெல்லைத் தமிழ் (அதுவும் சினிமாத்தனமான நெல்லை accent) பேசுகிறார்கள். இலஞ்சி என்பது குற்றாலத்துக்கு அருகில் இருக்கும் அழகிய கிராமம். அங்கிருக்கும் சுப்பிரமணிய சுவமி கோவில் பிரபலம்,. அங்கிருந்து பார்த்தால் குற்றால அருவி தெரியும். எங்கேயோ இருக்கும் குஜராத்/ராஜஸ்தான் கிராமத்ததக் காட்டி அதை ஏன் இலஞ்சி என்று அழைக்க வேண்டும்? அந்த ஊரின் பெயரிலேயே சொல்லி அவர்கள் பேசுவதை மட்டும் டப் பண்ணியிருக்கலாமே? இந்தியாவின் மிகச் சிறந்த இயக்குனருக்கு இந்த அளவுக்கா புத்தி வறட்சி? அந்தக் கிராமத்தில் இருக்கும் கழுதை கூட வட இந்தியக் கழுதை என்பது பார்த்தவுடன் தெரியும் பொழுது எதற்குத் தேவையில்லாமல் இந்த இலஞ்சி பெயரும் திருநெல்வேலித் தமிழும்? ஏன் இந்த ஹம்பக் காட்சி மற்றும் உச்சரிப்புப் படுகொலை? மணி ரத்தினம் கொஞ்சமாவது யோசித்திருப்பாரா இந்த அபத்தம் குறித்து? முதல் காட்சியில் தொடங்கி இறுதிக் காட்சி வரை படம் முழுக்க சுத்த அபத்தக் களஞ்சியம்.


மையா மையா பாட்டு

பையன் ஃபெயிலாகி விட்டதால் துருக்கிக்குப் போகிறான். துருக்கியிலும் பாருங்கள் எல்லோருமே நெல்லைத் தமிழில் பேசுகிறார்கள் :) இப்படி இஸ்தான்புல் தென்காசிக்குப் பக்கத்து ஊர் என்பது இந்தப் படத்தைப் பார்க்கும் வரை எனக்குத் தெரியாது அப்படி ஒரு நெல்லைத் தமிழ் கொஞ்சுகிறது. எல்லோரும் ஏலே எலே போட்டுப் பேசிக் கொள்கிறார்கள். அங்கு சென்றதும் இந்தப் பையன் என்ன செய்கிறான் என்பது எல்லாம் காட்டப்படுவதில்லை. ஒரு பெல்லி டான்சரின் ஆட்டதுக்குப் போய் விடுகிறான். அங்கு ஒரு பெண்மணி கடுமையான துணிப் பஞ்சத்தில் தன் நீண்ட இடுப்பையும் அதை விட நீண்ட கால்களையும், செழுமையான மேல்புறங்களையும் காண்பித்து காக்காய் வலிப்பு வந்தவர் போல் என்னவோ சொல்லிக் கொண்டு ஜிங் ஜிங் என்று குதித்துக் கொண்டிருக்கிறார். நடனமாம் அது. ஆனால் பாருங்கள் அவர் துருக்கியில் ஆடையில்லாமல் ஆடினாலும் கூட அவர் தன் தாய்த் தமிழை மட்டும் மறப்பதேயில்லை. அவர் பாடியதை உற்றுக் கேட்டதில் காதல், தேன், உயிர், என்று வையிற முத்துவின் வழக்கமான தமிழ் பாடல் வார்த்தை மாட்ரிக்ஸில் காணப்படும் வார்த்தைகள் கேட்க்க முடிந்தது. ஆக அவர் தமிழில்தான் பாடினார் அதுவும் துருக்கியில். அப்புறம் துருக்கிக்கு வேலைக்கு வந்த இந்த இலஞ்சிக்காரப் பையன் பெரிய பையனாகி ஏதோ பிசினஸ் பண்ணுகிறேன் என்கிறான் அது என்ன பிசினஸ் என்பதை இயக்குனரும் சொல்வதில்லை, நாமும் கேட்பதில்லை. அப்புறம் திடீரென்று ஒரு பெட்ரோல் ரிஃபைனரியைக் காட்டி அதன் ஆங்கில மேனேஜர் இந்தப் பையனைப் பாராட்டி ப்ரோமோஷன் கொடுத்து விடுகிறார். அவர் சொல்லுவதை ஒரு அதிகாரி பையனிடம் சொல்லுகிறார். வேறு எதிலே? திருநெல்வேலித் தமிழிலில்தான் :) ஆக துருக்கியில் பாதி பேர் திருநெல்வேலித் தமிழ்தான் பேசுகிறார்கள் என்பது மட்டும் எனக்கு குன்ஸாகப் புரிந்தது. இவர்கள் எல்லோரும் கோட்டு சூட்டுப் போட்டுக் கொண்டு திரியும் பொழுது அந்தப் பெண்மணி மட்டும் பாவம் மேலே ஒரு சின்னத் துண்டு கீழே ஒரு சின்னக் கைக்குட்டையைக் கட்டிக் கொண்டு ஆடுகிறார். எதற்காக ஆடுகிறார் அவருக்கும் இந்தப் பையனுக்கும் என்ன சம்பந்தம், இவன் என்ன வேலை பார்க்கிறான் எப்படிச் சம்பாதிக்கிறான் என்றெல்லாம் யாரும் கேட்டு விடக் கூடாது மூச். அப்புறம் இந்தப் பையனும் மீண்டும் குஜராத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்து இலஞ்சிக் கிராமத்துக்கே திரும்ப வந்து விடுகிறான்.

அப்புறம் ஊரில் அதுதான் குஜராத் இலஞ்சியில் எல்லோரு நெல்லைத் தமிழ் பேசி வரவேற்கிறார்கள். அந்த ஊரில் ஒரு பெண் அருவி, குளம், ஆறு என்று ஓடிப் போய் ஓடிப் போய் ஒரு பாடலைப் பாடிக் கொண்டே பல்வேறு தினுசாக ஆடுகிறார். அவர் முதுகுப் பக்கத்தை மட்டும் அந்தப் பாழாய்ப் போன இலஞ்சிக் கிராமத்தில் மறைக்க துணியில்லாத கொடுமை பாருங்கள். முதுகு முழுக்க எப்பொழுதும் திறந்தே கிடக்கிறது :) குளிராதோ பாவம்? கிராமங்களில் ஆண்கள் திறந்த மார்புடன் திரிவது போல் அந்த இலஞ்சிக் கிராமத்தில் அந்தப் பெண் மட்டும் திறந்த முதுகுடன் குளம் குட்டை மரம் காடு என்று துள்ளிக் குதித்து ஆடிப் பாடுகிறார். ஏன் அப்படி ஆட வேண்டும்? மணிரத்தினத்துக்கே வெளிச்சம். அப்புறம் ஒரு ரயிலில் ஓடிப் போய் அழுது கொண்டு எங்கோ போகிறார். ஆனால் அதே டிரெயினில் துருக்கிப் பையனும் திரும்பி வர அதே டிரெயின் மீண்டும் அதே ஊருக்கே வருகிறது அந்தப் பெண் அதே ஊரில் ஏறி அதே ஊரில் இறங்குகிறார் :) இதெல்லாம் படத்தில் காமெடிக் காட்சிகளில் சேர்க்க வேண்டும். அப்புறம் அந்தப் பெண்ணையே கலியாணம் செய்து கொண்டு அவரையும் அவரது தம்பியையும் கூட்டிக் கொண்டு பாம்பேக்குக் குடியேறிவிடுகிறார் குரு. அப்படிக் கல்யாணம் பண்ணிக் கொண்டவுடன் ஒருமுறை இரண்டு பேரும் சேர்ந்து அப்புறம் இன்னும் ஒரு நூறு தடியன்களும் சேர்ந்து கொண்டு தும் தும் என்று குதிக்கிறார்கள் நடனமாம். எதற்கு அப்படி காக்கா வலிப்பு வந்தது போல் எல்லோரும் ஆட வேண்டும் என்பது எனக்குப் புரிவதில்லை. படத்தில் பத்து நிமிடத்துக்கொரு முறை இது போல காரண காரியம் இல்லாமல் ஒரு 100 பேர் சேர்ந்து கொண்டு இந்த குருவுடனும் அவன் மனைவியுடனும் என்று குதியோ குதி என்று குதித்துக் கொண்டே ஆடுகிறார்கள். இப்படி யாரேனும் நிஜ வாழ்வில் செய்தால் இடுப்பு சுளுக்கி கொண்டு விடும் அல்லது பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுவார்கள். இப்படியாக கால்வாசிக் கதை நெல்லைத் தமிழும், துருக்கியும், அரைகுறை காக்கா வலிப்பு நடனமுமாகச் செல்கிறது. எனக்கு இதற்கு மேல் தாங்கவில்லை. மகா போர். கொட்டாவி கொட்டாவியாக வந்தது. இந்தக் கண்றாவியைத் தொடர்ந்து பார்ப்பதற்குப் பதிலாக ஏதாவது படிக்கலாம் என்று புத்தக அலமாரியில் கைக்குக் கிடைத்த இரும்பு குதிரைகள் எடுத்து படிக்க ஆரம்பித்து விட்டேன்.

அப்புறம் இன்று காலை எழுந்து மிகுந்த தயக்கத்துடன் மணிரத்தினம் படம் என்றால் ஏதாவது ஒரு சில காட்சிகளாவது நன்றாக இருக்கும் மனம் தளர வேண்டாம் என்று மனதைத் தேற்றிக் கொண்டு மீண்டும் டிவிடி ப்ளேயரை முடுக்கினேன். பம்பாய்க்குச் சென்ற ஹீரோ ஏதோ சந்தையில் எல்லோரும் கூச்சலாய் கத்திக் கொண்டிருக்கும் இடத்தில் போய் தான் பிசினஸ் பண்ண வந்திருக்கிறேன் என்கிறார். அதென்ன பிசினஸோ? அங்கும் பாருங்கள் ஏலம் கொடுக்கும் ஒருவர் இவரிடம் தமிழில் பேசுகிறார். ஆக உலகம் முழுக்க எல்லோரும் தமிழில்தான் பேசுகிறார்கள். அவரோ இங்கு பிசினஸ் பண்ண லைசென்ஸ் வேண்டும் நீ போய் காண்டிராக்டரிடம் லைசென்ஸ் லெட்டர் வாங்கினால்தான் இங்கு பிசினஸ் பண்ண முடியும் என்கிறார். இவரும் அந்தக் காண்டிராக்டரைப் பார்த்து ரெக்கமண்டேஷன் லெட்டர் கேட்கிறார், தமிழில்தான். வீட்டுக்கு வந்து பொண்டாட்டியைக் கொஞ்சுகிறார்.லெட்டர் கிடைக்க வில்லை. அப்புறம் ஒரு பத்திரிகை அதிபரை சந்திக்கிறார். அவரும் தமிழிலேயே பேசுகிறார் என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ? அவர் மூலம் அந்தக் காண்டிராக்டரை எதிர்த்து ஏதோ நீயூஸ் போடுகிறார். ஒரு மண்ணும் புரியவில்லை. அப்புறம் அந்த காண்டிராக்டர் விலகி விட இவர் பிசினஸ் தொடங்குகிறார். ஏதோ சீமா சில்க் என்று ஏதோ சில்க் வாங்கி விற்கிறாராம் அதையெல்லாம் விபரமாகக் காட்டவில்லை. 100 பேரோடு சேர்ந்து குத்துப்பாட்டு டான்ஸ் ஆடுவதைக் காண்பிக்கவே டைரக்டருக்கு நேரம் பற்றவில்லை அதற்கு மேலே என்ன பிசினஸ் என்ற விபரம் எல்லாமா காட்டப் போகிறார்?

அப்புறம் அவர் ஒரு பாக்டரி கட்டப் போவதாகச் சொல்லுகிறார். பொண்டாட்டியும் மச்சானும் கோபித்துக் கொண்டு ஊருக்குப் போய் அங்கு அந்தப் பெண்டாட்டி மீண்டும் பரதம், கதக், கதகளி, வலிப்பு, ராப், ஒடிசி போன்று எல்லாவகை நடனங்களையும் திறந்த முதுகுடன் காடு ஏரி குளம் குட்டை எல்லாவற்றிலும் போய் போய் ஆடிக் கொண்டிருக்கும் பொழுது பம்பாயில் இவர் பெரிய பணக்காரராகி பென்ஸ் கார் வாங்கி விடுகிறார். மீண்டும் ரெண்டு பேரும் சேர்ந்துவிட அதற்கு ஒரு டான்ஸ் ஆடுகிறார்கள். இவரை ஆரம்பத்தில் ஆதரித்த பத்திரிகை அதிபர் இவரது பிஸினஸ்ஸில் நேர்மையில்லை என்று சொல்லி பத்திரிகையில் இவரது நிறுவனத்தைக் கிழி கிழியெனக் கிழிக்கிறார். குருபாய் ஏதோ பெட்ரோல் கம்பெனி ஆரம்பித்து நடத்துகிறார் என்பது மட்டும் குன்ஸாகப் புரிகிறது அதையும் போகிற போக்கில் சொல்லுகிறார்கள். கம்பெனியின் போர்ட் மீட்டிங் திறந்த வெளியில் நடக்கிறது. அவரும் அரசியல்வாதி மாதிரி பேசுகிறார். மக்கள் கை தட்டுகிறார்கள் எனக்குத் தலை சுற்றியது. அப்புறம் இவருக்கும் அந்தப் பத்திரிகைக்கும் பெரிய லடாய். அந்தப் பத்திரிகைக்காரருக்கு ஒரு பெண் இருக்கிறாள் அவருக்கு ஏதோ நோய் அவளை ஒரு நிருபர் காதலிக்கிறார். மழையில் நின்று கொண்டு இருவரும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். கஷ்டம்., அந்தப் பத்திரிகக நிருபர் ஏதோ துப்பறிந்து குருபாய் கம்பெனியைப் பற்றி எழுதி விட கம்பெனி மூடி விடுகிறார்கள் ஜெனரல் பாடி மீட்டிங் கொட்டும் மழையில் திறந்த வெளியில் நடக்கிறது. ஸ்டாக் ஹோல்டர்ஸ் எல்லோரும் குடையைப் பிடித்துக் கொண்டு குருபாயைத் திட்டுகிறார்கள். குருபாய்க்கு ஸ்டிரோக் வந்து பக்க வாதம் வருகிறது. அரசாங்கம் கமிட்டி போட்டு விசாரிக்கிறது. அப்புறம் அவர் வீராவேசமாக ஒரு நீண்ட வசனம் பேசியவுடன் விட்டு விடுகிறது. சுபம்.

கடைசி வரை அது என்ன பிசினஸ் அதில் என்ன ஊழல் செய்கிறார் எப்படி அரசாங்கத்தை விலைக்கு வாங்குகிறார் போன்ற எவ்வித விபரங்களும் தரப்படுவதில்லை. நாயகிகளுக்கு ஏற்பட்ட துணி பஞ்சம் போலவே இயக்குனருக்கு லாஜிக் பஞ்சம், கதைப் பஞ்சம் எல்லாம் வந்துவிட டான்ஸ் பாட்டு என்று கர்ண கடூரமான கொடுமையான பாடல்களுக்கு வலிப்பு நடனம் ஆடுவதுதான் படம் முழுக்க நடக்கிறது. இந்தப் படம் ஏதோ திருபாய் அம்பானியைப் பற்றியது என்று யாரோ சொன்னார்கள் என்று இதை எடுத்துப் பார்த்த என்னைப் பிஞ்ச செருப்பால் அடிக்க வேண்டும். எந்த கம்பெனி CEO வேலை வெட்டி இல்லாமல் எப்ப பார்த்தாலும் குலுக்கி குலுக்கி ஆடிக் கொண்டிருக்கிறான்? கம்பெனியின் டைரக்டர்களைக் கோமாளி ரேஞ்சுக்குக் காண்பிக்கிறார்கள். திருபாய் அம்பானி மீது மணிரத்தினத்துக்கு என்ன கோபமோ? படத்தில் நாயகிக்கு முதுகுப் பக்க ஆடை மிஸ்ஸிங் போலவே கதையும் லாஜிக்கும் நேர்த்தியும் கோர்வையும், ரசனையும் மிஸ்ஸீங். இதற்கு மேலே கேவலமாக ஒரு சினிமாவை டி.ராஜேந்திரன் கூட எடுத்து விட முடியாது. இதே இந்தியில் கார்ப்பரேட் என்று ஒரு படம் வந்தது,. அதில் கதையும் லாஜிக்கும் திருப்பங்களும் சுவாரஸ்யமாக வைக்கப் பட்டிருக்கும். அந்தப் படம் நிஜமாலுமே ஒரு கார்ப்பரேட் பனிப்போர் அதில் நிலவும் சண்டைகளைப் பற்றிய ஏறக்குறைய நிஜப் படம். மதுர் பண்டார்கரின் படம். மணிரத்தினம் போன்ற பிரபல இயக்குனர்கள் இப்படி எத்தனை நாளுக்குத்தான் போலியான செயற்கையான சினிமாக்களைக் எடுத்துக் கொண்டிருக்கப் போகிறார்கள். கார்பரேட் படம் என்றால் கார்ப்பரேட் படம் எடுங்க சாமிகளா? ஒரு மட்டமான பாப் ஆல்பத்தை எடுத்து விட்டு திருபாய் அம்பானியைப் பற்றி எடுத்திருக்கிறேன் என்று சொல்வது மகா அயோக்கியத்தனம். ஏ ஆர் ரஹ்மான் இசை, ஐஸ்வர்யா மற்றும் ஷரவாத்தின் சதை, குலுக்கல் டான்ஸ்களை மட்டுமே நம்பி ஒரு திராபை படத்தை எடுத்துள்ளார்கள். மணிரத்தினமும் ரஹ்மானும் பேசாமல் ரிட்டையர் ஆகி விடுவது நமக்கு நல்லது. கொஞ்சமும் ரசனையற்ற மூளளயற்ற ஒரு சினிமா. பிலிமுக்குப் பிடித்த கேடு.

உங்களுக்கு கடும் எதிரிகள் யாராவது இருந்தால் இந்தப் படத்தைப் பார்க்கச் சொல்லி சிபாரிசு செய்யுங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல், ராஜன் பக்கங்கள்

ஷா ருக் கான் – அன்றும் இன்றும்

இந்த முறை ஷா ருக் கான் . கானின் சிறு வயது ஃபோட்டோக்கள் அருமையாக இருக்கின்றன. விமல் எங்கிருந்துதான் இதை எல்லாம் பிடித்தாரோ?

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்–>அன்றும் இன்றும்

லேட்டஸ்ட் ஐந்து அன்றும் இன்றும் பதிவுகள்:
சீர்காழி சிவசிதம்பரம் – அன்றும் இன்றும்
பிரபு தேவா – அன்றும் இன்றும்
லதா மங்கேஷ்கர் – அன்றும் இன்றும்
ஹாரிஸ் ஜெயராஜ் – அன்றும் இன்றும்
கோபிகா – அன்றும் இன்றும்

லதா மங்கேஷ்கர் – அன்றும் இன்றும்

இந்த முறை லதா மங்கேஷ்கர்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்–>அன்றும் இன்றும்

லேட்டஸ்ட் ஐந்து அன்றும் இன்றும் பதிவுகள்:
ஹாரிஸ் ஜெயராஜ் – அன்றும் இன்றும்
கோபிகா – அன்றும் இன்றும்
ராதா – அன்றும் இன்றும்
விஷால் – அன்றும் இன்றும்
சிம்பு – அன்றும் இன்றும்

Peepli Live – சினிமா விமர்சனம்

http://l.yimg.com/k/im_siggHdgKjsjfvgD5BLSwvfNgyg---y660-x616-q75-n0/omg/us/img/a2/0d/5153_3584859227.jpg
நேற்று நான் பார்த்த ஒரு அருமையான படம் – Peepli Live.
http://thm-a01.yimg.com/nimage/cdf396a5c7d16fc4http://thm-a03.yimg.com/nimage/21ffe9422e54424c
அறிமுக இயக்குனர் அனுஷா ரிஸ்வி யின் இயக்கத்தில், ஆமீர் கான் தயாரிப்பில் வெளிவந்துள்ள இந்த அரசியல் நையாண்டி படம் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்ளும் ஏழை விவசாயிகளை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் ஊடகங்களையும் அரசியல் கட்சிகளையும் சாடுகிறது.
http://l.yimg.com/k/im_siggKHUd4_lyB91TacgdOap8dA---y660-x616-q75-n0/omg/us/img/e4/9d/9349_7893825624.jpg

பீப்லி என்ற ஒரு சிறிய கிராமத்தில் கதை துவங்குகிறது.  இரு ஏழை விவசாயிகளான நத்தா (Omkar Das Manikpuri ), புதியா ( Raghuvir Yadav) இருவரும் தங்கள் நிலத்தைத் தக்க வைத்துக்கொள்ள போராடுகின்றனர்.  மிகுந்த வறுமையில் வாடும் அவர்களுக்கு ஒரு  திட்டம் தோன்றுகிறது.  வறுமையால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளுக்கு அரசாங்கம் ஒரு லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கிறது.  இதைப் பயன் படுத்திக் கொள்ள நத்தா தற்கொலை செய்து கொள்ள திட்டமிடுகிறான்.  ஆனால் இந்தத் திட்டத்தை அவன் செயல்படுத்துவதற்கு முன் இந்தச் செய்தி காட்டுத் தீ போல் பரவி விடுகிறது.
http://www.filmicafe.com/admin/movie-photo/images/still8-1591634943.jpg
டி.ஆர்.பி ரேட்டிங் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட பல்வேறு செய்தி நிறுவனங்களும்,  வோட்டு வங்கியைக் குறி வைக்கும் பல்வேறு ஜாதிக் கட்சி தலைவர்களும் அந்தச் சிறிய கிராமத்துக்கு படை எடுக்கின்றனர்.  நத்தாவின் தற்கொலை முயற்சியைத் தடுக்க அரசாங்கம் ‘லால் பகதூர்’  பரிசை அறிவிக்கிறது.  அந்தப் பரிசு ஒரு பிரம்மாண்டமான கைக் குழாய் (hand pump ).  ஒன்றுக்கும் உபயோகமில்லாத அந்தக் கைக்குழாய் அக்கம்பக்கத்து ஏழைச் சிறுவர்கள் விளையாடவே உபயோகப்படுகிறது.  உள்ளூர் அரசியல்வாதி வேறு தன் பங்குக்கு அந்தக் குடும்பத்துக்கு ஒரு பெரிய கலர் டி.வியை பரிசளிக்கிறார்.
http://l.yimg.com/k/im_siggTdVUXYM2kZrbN1xWOt_ZWQ---y660-x616-q75-n0/omg/us/img/a9/9f/2272_8842542037.jpg
படத்துடன் ஒன்றிய அதன் இசை பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
http://l.yimg.com/k/im_siggvyFGTfTzczR30jXMGdJnyQ---y660-x616-q75-n0/omg/us/img/47/e5/6398_6412914589.jpg

சதா புலம்பிக்கொண்டும், குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கும் நத்தாவின் மனைவி,  மனைவியைத் திட்டிக்கொண்டே இருக்கும் அவனது தாய்,  யார் எந்தக் கேள்வி கேட்டாலும், உயர்நீதி மன்றத் தீர்ப்புக்காகக் காத்திருக்கச் சொல்லும் விவசாயத் துறை உயர் மந்திரி என்று பல சுவையான கதா பாத்திரங்கள்.  இதற்கு நடுவே நடக்கும் ஒரு வாக்கெடுப்பில்,  நத்தாவின் இன்றைய நிலைமைக்கு முஸ்லிம் தீவிரவாதிகள் தான் காரணம் என்ற நையாண்டி.  படத்தின் முடிவில்,  இந்தப் பிரச்னைக்கு தீர்வு என்று எதையும் இயக்குனர் ரிஸ்வி கூறாமல்,  முடிவை open ending ஆக விட்டு விடுகிறார்.

1997 முதல் 2007 வரை மொத்தம் 182 ,000 ஏழை விவசாயிகள் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டனர் என்ற குறிப்புடன் இந்தப் படம் முடிவடைகிறது.

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcTNQcRba5hjMuae4U6OW2wsiT0A274qGGWUlLR9zxuzflK8Grc&t=1&usg=__ZnBSlHItlp5PyBLZiaSiITzMqG8=
Dark humor என்ற வகையில் வரும் இந்தப் படத்தை promote செய்ய இந்த படத்தின் தயாரிப்பாளரான ஆமீர் கான் தன் மனைவி கிரண் ராவுடன் சமீபத்தில் இங்கு Los Angeles -இல் உள்ள U . S . C  (University  of Southern California) வந்திருந்தார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

ஆமிர் கான் – அன்றும் இன்றும்

ஃபோட்டோக்கள் அனுப்பிய விமலுக்கு நன்றி!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்–>அன்றும் இன்றும்

தொடர்புடைய பதிவுகள்:
அர்விந்த் சாமி – அன்றும் இன்றும்
தேவ் ஆனந்த் – அன்றும் இன்றும்
ஜெயசித்ரா – அன்றும் இன்றும்
காஞ்சனா – அன்றும் இன்றும்
ரவிச்சந்திரன் – அன்றும் இன்றும்
எஸ்.எஸ். ராஜேந்திரன் – அன்றும் இன்றும்
சரோஜா தேவி – அன்றும் இன்றும்
சரிதா – அன்றும் இன்றும்
ஸ்ரீப்ரியா – அன்றும் இன்றும்
சூர்யா + கார்த்தி – அன்றும் இன்றும்
த்ரிஷா – அன்றும் இன்றும்
வாணி ஜெயராம் – அன்றும் இன்றும்
விஜய் – அன்றும் இன்றும்

லக்ஷ்மிகாந்த் ப்யாரேலால்

லக்ஷ்மிகாந்த்-ப்யாரேலால் ஹிந்தி சினிமாவின் புகழ் பெற்ற இசையமைப்பாளர்கள். ஏக துஜே கே லியே படத்துக்கு இசை அமைத்தவர்கள் இவர்கள்தான். தோஸ்தி, பாபி, அமர் அக்பர் அந்தோணி, Karz, Tezaab, கல்நாயக் படங்களுக்கு இசை அமைத்தவர்கள் இவர்கள்தான். பாபியின் ஹம் தும், கர்சின் ஓம் சாந்தி ஓம், ஏக் துஜே கே லியேயின் மேரே ஜீவன் சாத்தி, தேஜாபின் ஏக் தோ தீன், கல்நாயக்கின் சோலி கே பீச்சே க்யா ஹை போன்ற பாட்டுகள் வருஷக்கணக்கில் டாப் ஹிட்டாக இருந்தன. என் கண்ணில் இவர்கள் எஸ்.டி. பர்மன், ஆர்.டி. பர்மன், ஷங்கர்-ஜெய்கிஷன், சி. ராமச்சந்திரா, நௌஷத், ஓ.பி. நய்யார் போன்றவர்களை விட ஒரு மாற்று குறைவுதான். ஆனால் நல்ல இசையமைப்பாளர்கள். தமிழில் எனக்குத் தெரிந்து உயிரே உனக்காக படத்துக்கு இசை அமைத்திருக்கிறார்கள். அதில் “தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்” என்பது மிகச் சிறந்த பாட்டு. அவர்களைப் பற்றி விரிவான ஒரு கட்டுரை இங்கே பார்த்தேன். நீங்களும் படிக்க…

பாபியின் ஹம் தும்

ஏக் துஜே கே லியேயின் மேரே ஜீவன் சாத்தி

தேஜாபின் ஏக் தோ தீன்

கல்நாயக்கின் சோலி கே பீச்சே க்யா ஹை

25 Must See Bollywood Movies

இங்கே ஒரு ஸ்லைட்ஷோ பார்த்தேன். படங்களைப் பற்றிய என் ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள்.

  1. ப்ளாக்: பார்க்கலாம், ஆனால் must-see என்றெல்லாம் சொல்லமாட்டேன்.
  2. லகான்: இரண்டாவது பகுதி என்ன நடக்கும் என்று யூகிக்க முடிந்தாலும் நன்றாக இருக்கும். அந்த காப்டன் நல்ல ரோல். முதல் பகுதி வேஸ்ட்!
  3. சத்யா: மும்பையின் மாஃபியா உலகை நன்றாக காட்டி இருப்பார்கள். நல்ல படம்.
  4. தில்வாலே துல்ஹனியா லேஜாயேங்கே: டைம் பாஸ் மட்டுமே.
  5. கயாமத் சே கயாமத் தக்: ஓகே படம். அப்படி ஒன்றும் பிரமாதம் இல்லை.
  6. மிஸ்டர் இந்தியா: “பிரம்மச்சாரி” படத்தின் உல்டா. படத்தில் ஸ்ரீதேவி மழையில் நனைந்து கொண்டே பாடும் ஒரு பாட்டு பிரமாதம்!
  7. ஜானே பி தோ யாரோ: சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிடும். கடைசி க்ளைமாக்ஸ் சீனில் உருண்டு புரண்டு சிரித்திருக்கிறேன்.
  8. அர்த்: தமிழில் கூட “மறுபடியும்” என்று வந்தது. ஷபனா ஆஸ்மி, ஸ்மிதா பாட்டிலின் சிறந்த நடிப்புக்காகவே பார்க்கலாம்.
  9. தீவார்: ஒரு விதத்தில் இதை மதர் இந்தியாவின் உல்டா என்று சொல்லலாம். நல்ல படம்.
  10. ஷோலே: சிறந்த இந்தியப் படங்களில் ஒன்று.
  11. பாபி: அம்மா நடிகைகள் கூட “அஞ்சரைக்குள்ள வண்டி” ரேஞ்சில் நன்றாக காட்டுவார்கள். டிம்பிள் கபாடியாவை பார்த்து ஜொள்ளு விடலாம்!
  12. கரம் ஹவா: சிறந்த இந்தியப் படங்களில் ஒன்று.
  13. பகீசா: பாட்டு மட்டும் கேளுங்கள், படம் தண்டம்.
  14. ஆனந்த்: சிறந்த இந்தியப் படங்களில் ஒன்று.
  15. பதோசன்: மெஹ்மூத் சதுர நார் என்று பாடும் ஒரு காட்சியே போதும், பைசா வசூல்! நல்ல பாட்டுகள், மெஹமூதின் மாஸ்டர்பீஸ்!
  16. தீஸ்ரி மன்சில்: ஷம்மி கபூர் என் ஃபேவரிட் நடிகர்களில் ஒருவர். அவர் நடித்து கிடித்து எல்லாம் நேரத்தை வீணடிப்பதில்லை. அவருக்காகவே இந்தப் படத்தை பார்க்கலாம். ஆர்.டி. பர்மனின் இசை கலக்கல்!
  17. கைட்: ஆர்.கே. நாராயணின் கதையை கொலை செய்திருக்கிறார்கள். ஆனால் அற்புதமான பாட்டுகள்.
  18. சாஹிப் பீபி அவுர் குலாம்: பிரமாதமான படம். மீனா குமாரியின் மாஸ்டர்பீஸ்.
  19. மொகலே ஆஜம்: கிளாசிக், ஆனால் இன்றைக்கும் எல்லாருக்கும் பிடிக்கும் என்று சொல்வதற்கில்லை. என் விரிவான விமர்சனம் இங்கே.
  20. ப்யாசா: சிறந்த படம். குரு தத்தின் மாஸ்டர்பீஸ்?
  21. மதர் இந்தியா: இந்த படத்தின் பாத்திரங்கள் – நல்ல அண்ணன், கோபக்கார தம்பி, தவறு செய்யும் மகனை சுடும் அம்மா – எல்லாம் ஸ்டீரியோடைப்களாக மாறிவிட்டன. ஆனாலும் இந்தப் படம் இன்னும் நன்றாக இருக்கிறது. இதுதான் இந்தக் கதையின், படத்தில் வெற்றி.
  22. தோ ஆங்கேன் பாரா ஹாத்: சாந்தாராம் நடித்து இயக்கிய படம். தமிழில் “பல்லாண்டு வாழ்க” என்று வந்தது. சமீபத்தில் பார்த்தேன். ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதாம். இல்லை என்றால் நம்ப முடியாத கதை என்று சொல்லி இருப்பேன். :-) சிம்பிளான கதையை எந்த வித ஹீரோயிசமும் இல்லாமல் எடுத்திருக்கிறார்கள். நன்றாக இருக்கிறது.
  23. தேவதாஸ்: எனக்கு எந்த தேவதாஸ் படமும் பிடித்ததில்லை. திலீப் குமார் நடித்த இந்த ஹிந்தி படம் எனக்கு சரியாக நினைவுமில்லை.
  24. தோ பிகா ஜமீன்: பால்ராஜ் சாஹ்னி மிக அற்புதமாக நடித்திருப்பார். ஆனால் இந்தப் படம் இப்போது ஒரு cliche ஆகிவிட்டது.
  25. ஆவாரா: சமீபத்தில் மீண்டும் பார்த்தேன். அருமையான பாட்டுகள். பாட்டுகள் மிக அழகாக படமாக்கப்பட்டிருக்கின்றன. கொஞ்சம் கூட நம்பகத் தன்மை இல்லாத கதை. ஆனால் நர்கிஸ் sizzles!

தொகுக்கப்பட்ட பக்கம்: லிஸ்ட்கள்

தொடர்புடைய பதிவுகள்:
என் டாப் டென் உலக சினிமா லிஸ்ட், இந்திய சினிமா லிஸ்ட், தமிழ் சினிமா லிஸ்ட்
உலக படங்கள் – கமல் சிபாரிசுகள் I, பகுதி II
கமலுக்கு பிடித்த தமிழ் திரைக்கதைகள்
நடிகர் சூர்யாவுக்கு பிடித்த படங்கள்
அஞ்சும் ராஜாபலியின் பிடித்த படங்கள் லிஸ்ட்
பிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்களைப் பற்றி நான், அவற்றைப் பற்றி கிருஷ்ணமூர்த்தி
பாரதிராஜாவுக்கு பிடித்த பத்து படங்கள்
இந்திய சினிமா T20 – 20 சிறந்த இந்தியப் படங்கள்
பிரிட்டிஷ் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட் தேர்வுகள் – சிறந்த இந்திய சினிமா
NCERT பாடப் புத்தகத்தில் இடம் பெறும் படங்கள்

ராவண் படத்தின் ட்ரெய்லர் வீடியோ

Raavanமணிரத்னத்தின் அடுத்த படமான ராவண் (ஹிந்தி) படத்தின் ட்ரெய்லர் கீழே. சூப்பர் டைவுங்க!

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 45 other followers