அன்றும் இன்றும்


இது ஏறக்குறைய விமல் பக்கம்.

தாய்ப் பக்கம்: ஆளுமைகள்
திரை உலக பிரபலங்கள் – அன்றும் இன்றும் (ஃபோட்டோக்கள்)
ஆமிர் கான் – அன்றும் இன்றும்
ஆனந்த் பாபு – அன்றும் இன்றும்
அஞ்சலி தேவி – அன்றும் இன்றும்
அர்விந்த் சாமி – அன்றும் இன்றும்
அசின் – அன்றும் இன்றும்
சேரன் – அன்றும் இன்றும்
தேவ் ஆனந்த் – அன்றும் இன்றும்
ஜெனிலியா – அன்றும் இன்றும்
கோபிகா – அன்றும் இன்றும்
ஹாரிஸ் ஜெயராஜ் – அன்றும் இன்றும்
ஜெயசித்ரா – அன்றும் இன்றும்
கே.ஆர். விஜயா – அன்றும் இன்றும்
காஞ்சனா – அன்றும் இன்றும்
காந்திமதி – அன்றும் இன்றும்
கார்த்திக் – அன்றும் இன்றும்
லதா மங்கேஷ்கர் – அன்றும் இன்றும்
மாதவன் – அன்றும் இன்றும்
மோகன்லால் – அன்றும் இன்றும்
நிழல்கள் ரவி – அன்றும் இன்றும்pak
பிரபு தேவா – அன்றும் இன்றும்
ராதா – அன்றும் இன்றும்
ரவிச்சந்திரன் – அன்றும் இன்றும்
எஸ்.எஸ். ராஜேந்திரன் – அன்றும் இன்றும்
சரத்குமார் – அன்றும் இன்றும்
சரிதா – அன்றும் இன்றும்
சரோஜா தேவி – அன்றும் இன்றும்
சீர்காழி சிவசிதம்பரம் – அன்றும் இன்றும்
ஷா ருக் கான் – அன்றும் இன்றும்
ஷாலினி – அன்றும் இன்றும்
சிம்பு -அன்றும் இன்றும்
ஸ்னேஹா – அன்றும் இன்றும்
(இளம் நடிகர்) ஸ்ரீகாந்த் – அன்றும் இன்றும்
ஸ்ரீப்ரியா – அன்றும் இன்றும்
சூர்யா + கார்த்தி – அன்றும் இன்றும்
தருண் – அன்றும் இன்றும்
த்ரிஷா – அன்றும் இன்றும்
வாணி ஜெயராம் – அன்றும் இன்றும்
விஜய் – அன்றும் இன்றும்
விஷால் – அன்றும் இன்றும்

அந்த கால அரிய புகைப்படங்கள்
சாவித்ரி

10 Responses to அன்றும் இன்றும்

 1. விமல் says:

  பிரபல தமிழ் நடிகர் முரளி மரணம்

  நல்ல எளிமையான ஒரு நடிகர்.
  அலட்டல் இல்லாத நடிப்பு.

  முரளியுன் அன்றும் இன்றும் படங்கள் பாதி அளவு தான் தயார் செய்து வைத்து இருந்தேன். முழுமை செய்து வெளி இடுவதற்குள் இந்த மாதிரி ஒரு செய்தி …….

  தமிழ் திரை உலகிற்கு இது ஒரு பெரிய இழப்பு.
  அவர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்வோமாக.
  ————————————–
  ஏராளமான தமிழ்ப்படங்களில் முன்னணி நாயகனாக நடித்து வந்த முரளி(46 வயது), நெஞ்சுவலி காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்பே அவரின் உயிர் பிரிந்தது.

  1984 ம் ஆண்டு பூவிலங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் முரளி. தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் பகல் நிலவு படத்தில் நடித்தார்.

  இதயம்,புதுவசந்தம்,பொற்காலம், காலமெல்லாம் காதல் வாழ்க, வெற்றிக்கொடி கட்டு என்று பல சூப்பர் ஹிட் படங்களைத்தந்த முரளி என்றும் மார்க்கண்டேயன் என்பது மாதிரி இதயம் படத்தில் படத்தில் பார்த்தது போலவே இப்போதும் இளமையாக இருந்துவந்தார்.

  கடல்பூக்கள்,தேசிய கீதம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து வந்த இவரது மகன் ஆதர்வா நாயகனாக நடித்த ‘பாணா’திரைப்படம் தற்போது வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

  நாயகனாகிவிட்ட மகன் குறித்து சமீபத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய முரளி, ‘’30 வருட திரையுலக வாழ்க்கையில் நான் ஆயிரம் தவறுகள் செய்திருக்கிறேன். அதையெல்லாம் மன்னித்து தயாரிப்பாளர்கள் ஏற்றுக்கொண்டார்கள். என் மகன் அதர்வாவிடம், தயாரிப்பாளர்களை மதிக்க வேண்டும் என்று அறிவுரை சொல்லியிருக்கிறேன்.

  சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ‘பகல் நிலவு’, ‘இதயம்’ படங்களில் நடித்தேன். அதே நிறுவனம் என் மகனை ஹீரோவாக அறிமுகம் செய்கிறது.

  ‘பூவிலங்கு’ படத்தில் நான் நடித்திருந்ததை விட அதர்வா சிறப்பாக நடித்திருக்கிறான். எனக்கு டான்ஸ் ஆடவே வராது. அதர்வா நன்றாக டான்ஸ் ஆடியிருக்கிறான். ஒரு நடிகன் மகன் ஹீரோவாக ஜெயிப்பது கஷ்டம். இங்கு வந்திருந்தவர்கள், அதர்வாவை பாராட்டினார்கள். எனவே அவன் ஜெயித்து விடுவான் என நம்புகிறேன்’’என்று கூறியிருந்தார்.

  பணம் முக்கியமல்ல; நல்ல படம்தான் முக்கியம் என்று ஆதர்வாவுக்கு அறிவுரை கூறி தனது மகனின் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தியிருந்தார்.

  இந்நிலையில் திடீர் நெஞ்சுவலியால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரின் உயிர் பிரிந்தது.

 2. விமல் says:

  பிரபல பாடகி சொர்ணலதா(37) மரணம்

  இனிமையான குரலால் 23 வருடங்கள் ரசிகர்களை மயங்க வைத்த பாடகி சொர்ணலதா(37) இன்று (12/09/2010) சென்னையில் காலமானார்.

  நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வந்த அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை
  பலனின்றி இன்று அவர் காலமானார்.

  கேரளா பாலக்காட்டை பூர்வீகமாகக்கொண்ட சொர்ணலதா தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது உட்பட பல மொழிகளில் 23 ஆண்டுகளாக பின்னணி பாடியுள்ளார். கருத்தம்மா படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இவர் ‘போறாளே பொன்னுத்தாயி…’பாடலை பாடியதற்காக தேசிய விருது பெற்றார்.

  இவரின் தந்தை கே.சி.செருகுட்டி பிரபல ஹார்மோனியக்கலைஞர்.
  தாய் கல்யாணி இசைப்பிரியர்.
  கீ.போர்டு மற்றும் ஹார்மோனியத்தில் சிறந்த பயிற்சி பெற்றவர் சொர்ணலதா.

  மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் தமிழ் உச்சரிப்பில் எந்தக்குறையும் சொல்ல முடியாது. சொர்ணலதாவின் திடீர் மரணத்தால் அவரது இசை ரசிகர்கள் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

  1982ம் ஆண்டு வெளியான நீதிக்கு தண்டனை படத்தின் மூலம் சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா என்ற பாரதியாரின் பாடலைப் பாடி இசைஞானி இளையராஜாவால் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகபடுத்தப்பட்டார்.

  தளபதி படத்தில் ’ராக்கம்மா கையத்தட்டு’, சத்திரியன் படத்தில் ‘மாலையில் யாரோ மனதோடு பேச…’, கேப்டன் பிரபாகரன் படத்தில் ‘ஆட்டமா தேரோட்டமா’, சின்னத்தம்பி படத்தில் ‘போவோமா ஊர்கோலம், நீ எங்கே’, என் ராசாவின் மனசிலே படத்தில் ‘குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே’ போன்ற பாடல்கள் மிகப்பிரபலம்.

  1.எவனோ ஒருவன் வாசிக்கிறான்(அலைபாயுதே)
  2.சொல்லாயோ சோலைக்கிளி(அல்லி அர்ஜூனா)
  3.குச்சி குச்சு ராக்கம்மா(பம்பாய்)
  4.உசிலம்பட்டி பெண்குட்டி (ஜெண்டில்மேன்)
  5.அக்கடான்னு நாங்க (இந்தியன்)
  6.மாயா மச்சீந்திரா(இந்தியன்)
  7.அஞ்சாதே ஜீவா(ஜோடி)
  8.முக்காலா முக்காபலா(காதலன்)
  9.காதலெனும் தேர்வெழுதி(காதலர் தினம்)
  10.போறாளே பொன்னுத்தாயி(கருத்தம்மா)
  11.உளுந்து வெதைக்கையிலே(முதல்வன்)
  12.பூங்காற்றிலே..(உயிரே)
  13.ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு(உழவன்)
  14.காதல் யோகி (தாளம்)
  என்பன உட்பட ஏ.ஆர்.ரகுமான் இசையில் 35க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார்.

  1.மலைக்கோயில் வாசலில்(வீரா)
  2.மாடத்திலே கன்னி மாடத்திலே(வீரா)
  3.என்னுள்ளே என்னுள்ளே(வள்ளி)
  4.ராக்கம்மா கையத்தட்டு(தளபதி)
  5.உத்தம புத்திரி நானே(குரு சிஷ்யன்)
  6.நான் ஏரிக்கரை மேலிருந்து (சின்னத்தாயி)
  7.மாசி மாசம் ஆளான பொன்னு(தர்மதுரை)
  8.மணமகளே(தேவர் மகன்)
  9ஆட்டமா தேரோட்டமா(கேப்டன்பிரபாகரன்)
  10.நீ எங்கே என் அன்பே(சின்னதம்பி)
  11.போவோமா ஊர்கோலம்(சின்னதம்பி)
  12.மாலையில் யாரோ மனதோடு பேச(சத்ரியன்) என்பன உட்பட இளையராஜா இசையில் பல ஹிட் பாடல்களைத்தந்துள்ளார்.

  தனது இனியைமான குரலால் ரசிகர்களை மதிமயங்க வைத்த ஸ்வர்ணலதா திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார். சமீப காலமாக நுரையீரல் பாதிப்பால் கஷ்டப்பட்டு வந்த ஸ்வர்ணலதா இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

  இன்று (12/09/2010) காலை வீட்டில் இருந்தபோது திடீரென வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக சென்னை அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகி்ச்சை அளித்தும் பலனின்றி காலமானார்.
  அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த திரையுலக பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அவரது இறுதிச்சடங்குகள் நாளை (13/10/2010) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 3. விமல் says:

  இசை அமைப்பாளர் சந்திரபோஸ் காலமானார்
  ———————————————————————————

  காக்கி சட்டை போட்ட மச்சான்…, சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா…, பச்சபுள்ள அழுதுச்சின்னா…, டில்லிக்கு ராசான்னாலும் பாட்டி சொல்லை தட்டாதே…, காளை காளை முரட்டுக்காளை… பூஞ்சிட்டுக் குருவிகளா … உள்ளிட்ட ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்திரபோஸ் காலமானார். அவருக்கு வயது 55. நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று (28ம்தேதி) இறந்தார்.
  தமிழ் சினிமாவில் 350க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர் சந்திரபோஸ். இதில் ஏவி.எம்.மின் தயாரிப்பில் வந்த 12 படங்களும் அடங்கும். 1977ல் தொடங்கிய இவரது இசையுலக வாழ்க்கை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக நிலைத்தது. 1978ம் ஆண்டு வெளியான “மச்சானைப் பார்த்தீங்களா” படத்தில் இடம்பெற்ற “மாம்பூவே சிறு மைனாவே” பாடல் சந்திரபோஸ்க்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. கே.பாலாஜியின் “விடுதலை” படத்தில் சந்திரபோஸின் பரபரப்பாக பேசப்பட்டது. குறிப்பாக “நீலக்குயில்கள் ரெண்டு” பாடல் பெ‌ரி‌ய ஹி‌ட்‌. இசை‌ உலகில் சாதித்ததைப் போலவே திரையுலகில் நடிப்பிலும் கால்பதித்த சந்திரபோஸ் லிங்கம் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வைர ‌நெஞ்சம், மெகா சேனலில் ஒளிபரப்பான ஜனனம் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

  • விமல் says:

   மேலும் விவரங்கள் …
   ____________________________________________
   கல்லீரல் பாதிப்பு காரணமாக அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மிகவும் மோசமடைந்த நிலையில் அவர் அனுமதிக்கப்பட்டதால், மருத்துவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

   சந்திரபோசுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கல்லீரல் மற்றும் சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. அதற்காக, அவர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 24-ந் தேதி அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. உடனடியாக சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

   டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. நேற்று முன்தினம் அவர் நினைவிழந்து, ‘கோமா’வில் மூழ்கினார். அவரை வீட்டுக்கு எடுத்துச் செல்லும்படி டாக்டர்கள் கூறிவிட்டார்கள்.

   சந்திரபோசின் வீடு, சென்னை மைலாப்பூரில் உள்ளது. அங்கு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.சி.குகநாதன் ஆகிய இருவரும் நேரில் சென்று பார்த்தார்கள்.

   சந்திரபோசை சிகிச்சைக்காக சென்னை பொதுமருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்தார்கள். அதன்படி, சந்திரபோஸ் பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் காப்பாற்ற முடியவில்லை. கிட்டத்தட்ட எதுவுமே செய்ய முடியாத நிலையில்தான் பொது மருத்துவமனைக்குக் கொண்டதாக மருத்துவர்கள் கூறினர்.

   மச்சானைப் பார்த்தீங்களா…
   ____________________________________________

   வி.சி.குகநாதன் டைரக்டு செய்த ‘மதுரகீதம்’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர், சந்திரபோஸ். எம்எஸ்விஸ்வநாதன் இசையில் ஆறு புஷ்பங்கள் படத்தில் சந்திரபோஸ் பாடிய ஏண்டி முத்தம்மா அவரை மிகப் பிரபலமாக்கியது.

   பின்னர் இவர் இசையமைத்த மச்சானைப் பார்த்தீங்களா படத்தில் இடம்பெற்ற ‘மாம்பூவே சிறு மைனாவே’ என்ற பாடல் மிகப் பிரபலமடைந்தது.

   தொடர்ந்து மாங்குடி மைனர், முதல் குரல், மைக்கேல்ராஜ், சங்கர் குரு, தாய் மேல் ஆணை, ராஜா சின்ன ரோஜா, விடுதலை உள்பட 120 படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.

   ரஜினியின் மனிதன், ராஜா சின்ன ரோஜா, விடுதலை போன்ற படங்களுக்கு தொடர்ந்து இசையமத்து முன்னணியில் இருந்தார் சந்திரபோஸ். ஏவி எம் தயாரித்த 12 படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்தவர் சந்திரபோஸ்.

   தமிழ் சினிமாவில் மொத்தம் 300-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் சந்திரபோஸ்.

   மனிதன் படத்தில் வரும் வானத்தைப் பார்த்தேன், மனிதன் மனிதன், அண்ணா நகர் முதல் தெரு படத்தில் இடம்பெற்ற ‘மெதுவா மெதுவா’, சங்கர் குருவில் இடம் பெற்ற ‘காக்கிச் சட்ட போட்ட மச்சான்’, மக்கள் என் பக்கம் படத்தில் வரும் ‘ஆண்டவனைப் பாக்கணும்’ போன்ற பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை.

   கடந்த சில ஆண்டுகளாக டிவி தொடர்களிலும் அவர் நடித்து வந்தார். மலர்கள், வைரநெஞ்சம், ஜனனம் போன்ற தொடர்களில் முக்கிய வேடம் ஏற்று நடித்தார்.

   சமீபத்தில் தன் மகனுக்கு திருமணத்தையும் நடத்தி வைத்த சந்திரபோஸ், மனைவியுடன் மயிலாப்பூரில் வசித்து வந்தார்.

   அவரது மறைவுக்கு திரையுலகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.

   சந்திரபோசின் இசையுல் எனக்கு பிடித்த பாடல்கள்.
   _____________________________________________________________

   1. மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
   (அண்ணா நகர் முதல் தெரு)
   2. நீலக்குயில்கள் ரெண்டு (விடுதலை)
   3. மாம்பூவே சிறு மைனாவே (மச்சானைப் பார்த்தீங்களா)
   4. மனிதன் மனிதன் (மனிதன்)
   5. சின்ன சின்ன பூவே (சங்கர் குரு)

  • RV says:

   விமல், சந்திரபோசைப் பற்றி அஞ்சலியகா இல்லாமல் இவற்றை ஒரு பதிவாக போடலாமா என்று பார்க்கிறேன்.

 4. விமல் says:

  RV…, முடிந்தால் இதற்கு முன் நான் தந்த தகவல்களை (சந்திரபோஸ் பற்றியது) நீக்கி விடுங்கள்.

  பிழைக்கு வருந்துகிறேன்.

  சற்று முன் கிடைத்த தகவல்.
  ______________________________________________________

  ஆபத்தான கட்டத்தை தாண்டினார் சந்திரபோஸ்

  உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டட, திரைப்பட இசையமைப்பாளர் சந்திரபோஸ் தற்போது நலமாக உள்ளதாக அவரது மகன் வினோத் தெரிவித்துள்ளார்.

  சந்திரபோசுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கல்லீரல் மற்றும் சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. அதற்காக, அவர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 24ந் தேதி அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. உடனடியாக சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

  டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து நினைவிழந்து, கோமாவில் மூழ்கினார்.

  சந்திரபோஸ் தற்போது மேல் சிகிச்சைக்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

  தற்போது சந்திரபோஸ் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சையின் பலனால் நலமாக உள்ளார் எனவும், அவரது மகன் வினோத் தெரிவித்துள்ளார்.

 5. விமல் says:

  *** RV…, இதை ஒரு தனிபதிவாக போட்டால் மிகவும் நன்றாக இருக்கும். ***

  *** நாகேஷ் – 25 (நன்றி : ஆனந்த விகடன) ***
  _________________________________________________

  நாகேஷ்… மாறும் உடல் மொழி… ஏறி இறங்கும் குரல் ஜாலம்.. தமிழர்களில் 40 ஆண்டு கால சாயங்காலச் சந்தோஷம், ஈர்க்குச்சி உடம்பால், சிரிப்புத் தீக்குச்சி கிழிந்தவர்!….

  1. பூர்வீகம் மைசூர். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான தந்தை ஊர் ஊராக பணியாற்ற், குடும்பம் மட்டும் தமிழ்நாட்டில் தாராபுரத்தில் இருந்தது. தாராபுரம் பீமராய அக்ஹாரம்தான் நாகேஷ் வீட்டுச் வளர்ந்த தொட்டில் !

  2. பெற்றோர் கிருஷ்ணராவ் – ருக்மணி வைத்த பெயர் நாகேஸ்வரன் பின்னாளில் நாகேஷ் ஆனது. வீட்டுச் செல்ல பெயர் – குண்டப்பா !

  3. பள்ளி நாடகத்தில் நாகேஷீக்கு எமன் வேஷம். வசனம் பேசிக்கொண்டே பாசக் கயிற்றினை வீச வேண்டும். இவர் வீசிய பாசக் கயிறு எசகுபிசகாக ஒருவர் கழுத்தில் போய் விழுந்தது. பள்ளித் தலைமை ஆசிரியரின் கழுத்து அது !

  4. இளம் வயதில் வீட்டில் கோபித்துக் கொண்டு ஹைதராபாத்துக்கு வந்தவர் ரேடியோ கடை ஊறுகாய் கம்பெனி எடுபிடி, மில்லில் கூலி வேலை என்று பல வேலைகள்
  பார்த்திருக்கிறார் !

  5. முதன் முதலில் நாடகத்தில் வயிற்று வலி நோயாளியாக நடித்தார் அன்று அவரது நடிப்பைப் பாராட்டி, முதல் பரிசை வழங்கியவர் எம்.ஜி.ஆர் !

  6. கோயம்புத்தூரில் பி.எஸ்.ஜி ஆர்ட்ஸ் காலேஜில் படித்தபோது, அடுத்தடுத்த மூன்று தடவை அம்மை போட்டது. முகம் முழுக்க அம்மைத் தழும்புகளை வைத்துக்கொண்டு பலரது முகத்தை மலரவைத்து அவரது நடிப்பில் வெளிச்சம் !

  7. ஹோட்டலில் தங்கியிருந்த நாகேஷை அவரது நாடக நடிப்பின் மீது கொண்ட காதலால்…. தன் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்தவர் நடிகர் பாலாஜி !

  8. இவர் மனைவி பெயர் ரெஜினா. ஆனந்த் பாபு, ரமேஷ்பாபு, ராஜேஷ்பாபு என்று மூன்று மகன்கள். மூன்று மகன்களும் வெவ்வேறு மதங்களில் திருமணம் செய்துகொண்டபோது மனமார ஆசி வழங்கியவர் !

  9. முதல் படம் `தாமரைக்குளம்’ ஷீட்டிங்கின் போது சரியாக நடிக்கவில்லை என்று உதவி இயக்குநர்கள் நாகேஷைக் கடிந்தனர். உடன் நடிக்க வந்த எம்.ஆர்.ராதாவிடம் மனம் வெதும்பி நடந்தைச் சொன்னார் இவர். `மத்தவன் எல்லாம் நடிகன், நீ கலைஞன்… கவலைப்படாம நடி’ என்றாராம் ராதா !

  10. `அபூர்வ ராகங்கள்’ படத்தில் இவருக்கு வைத்தியம் பார்க்க டாக்டராக வருவார் கண்ணதாசன், அவரிடம் ஒரு கவிதை சொல்லச் சொல்வார் நாகேஷ் கவிதை கேட்ட இவர், `அதான்யா கண்ணதாசன்’ என்று சொல்லிவிட்டு, `பீஸ் எவ்வளவு?’ என்பார். `இதுதான்யா ஃபீஸ்’ என்பார் கண்ணதாசன் !

  11. முறைப்படி யாரிடமும் நடனம் கற்றுக்கொண்டது இல்லை, யாரையும் காப்பி அடித்ததும் இல்லை. ஆனால், நடனத்தில் `நாகேஷ் பாணி’ என்கிற தனி முத்திரையைக் கொண்டுவந்தார் !

  12. எம்.ஜி.ஆருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தான் அதில், 19 படங்களில் இவருக்கு ஜோடி மனோரமா !

  13. `திருவிளையாடல்’ படத்தின் காட்சிகளை ரஷ் பார்த்த சிவாஜி, `நாகேஷின் நடிப்பு பிரமாதம். தயவுசெய்து எதையும் கட் பண்ணிடாதீங்க’ என்று டைரக்டர் ஏ.பி.நாகராஜனிடம் கேட்டுக் கொண்டாராம் !

  14. நகைச்சுவையில் மட்டுமல்ல: `நீர்க் குமிழி’ குணச்சித்திரம், `சர்வர் சுந்தரம்’ ஹீரோ, `அபூர்வ சகோதரர்கள்’-ல் வில்லன், மகளிர் மட்டும்’ பிணம் என்று வெளுத்துக்கட்டியவர் !

  15. `அபூர்வ ராகங்கள்’ ஷீட்டிங், பாலசந்தர் ஆக்‌ஷன் சொல்லிவிட்டார். நாகேஷ். கோப்பையைக் கையில் எடுத்து சுவரில் தெரிந்த தன் நிழலைப் பார்த்து, `சியர்ஸ்’ என்று சொல்ல… படம் பார்த்தவர்கள் பாரட்டினார்கள். நாகேஷின் டைமிங் சென்ஸீக்கு இது ஒரு சாம்பிள் !

  16. இவரை எப்போதும் `டேய் ராவுஜி’ என்று செல்லமாக அழைப்பார் பாலசந்தர் !

  17. டைரக்‌ஷன் துறையையும் இவர் விட்டுவைக்கவில்லை. `பார்த்த ஞாபகம் இல்லையோ’ இவரது டைரக்‌ஷனில் வெளிவந்த திரைப்படம் !

  18. பணம் விஷயத்தில் நாகேஷ் கறார் பேர்வழி என்று சினிமா உலகில் ஒரு பேச்சு உண்டு. ஆனால், `எவ்வளவு பணம் இருந்தாலும் சாப்பிட ஒரு வயிறு தானே என்று சொன்ன எளிமையான கலைஞன் என்பதுதான் நிஜம் !

  19. `சீட்டாட்டம், டேபிள் டென்னிஸ், தத்துவம், நடனம், நடிப்பு என்று எதைச் செய்தாலும் உச்சம் தொட்ட மகா கலைஞன்’ என்று இவரைப் புகழ்ந்தவர் கவிஞர் வாலி !

  20. `நாகேஷ் என் வாழ்வில் நட்சத்திரமாக, மூத்த அண்ண்ணாக அறிவுரை சொல்லும் நண்பனாக, அறிவுரை கேட்கும் அப்பாவியாக, சொல்லிக் கொடுத்த ஆசானாக, சொல் பேச்சுக் கேட்கும் மாணவனாகப் பல பொறுப்புகளை ஏற்றிருக்கிறார்’ என்று சொன்னவர் கமல்ஹாசன் !

  21. ‘பஞ்சதந்திரம்’ ஷீட்டிங், உணவு இடைவேளையில் கமல் சிக்கனை முள் கரண்டியால் குத்திக்கொண்டு இருந்தார். அருகில் இருந்த நாகேஷ் கேட்டார், `கோழி இன்னும் சாகலையாப்பா ?’

  22. `தசாவதாரம்’ கடைசி நாள் ஷீட்டிங்க்கு வந்து நடித்துக் கொடுத்தவர் கடைசியாகச் சொன்ன வாக்கியம் `என் கடைசிப் படம் நல்ல படம். I am honoured–டா கமல் !’

  23. தாம் வாங்கிய பரிசுகள், ஷீல்டுகள் எதையும் வீட்டு ஷோகேஸில் வைக்கும் பழக்கம் இல்லாதவர் !

  24. இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என்று அழைக்கப்பட்ட நாகேஷ் பிறந்தது- செப்டம்பர் 27, 1933 –ல். மறைந்தது ஜனவரி 31, 2009 –ல் !

  25, 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர்களைச் சிரிக்கவைத்த இந்தக் கலைஞனை இந்திய அரசின் எந்த விருதுகளும் கெளரவிக்கவில்லை !

  *** RV…, இதை ஒரு தனிபதிவாக போட்டால் மிகவும் நன்றாக இருக்கும். ***

 6. விமல் says:

  உறுதி செய்யப்பட்ட செய்தி.
  ____________________________

  இசையமைப்பாளர் சந்திரபோஸ் உடல்நலக் குறைவால் இன்று காலை (30/09/2010) காலமானார்.

  சந்திரபோசுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கல்லீரல் மற்றும் சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. அதற்காக, அவர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 24ம் தேதி அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. உடனடியாக சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அவர் ‘கோமா’ நிலைக்குச் சென்றார்.

  இதையடுத்து சென்னை ராயப்பேட்டை பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரது உடல்நிலை மிகவும் அபாய கட்டத்தில் இருந்த நிலையில் அவர் இறந்துவிட்டதாக செய்தி பரவியது.

  ஆனால், அவர் கொஞ்சம் உடல் நிலை தேறினார். அவர் அபாயகட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

  இந்நிலையில் இன்று காலை (30/09/2010) சந்திரபோஸ் காலமானார்.

  மச்சானைப் பார்த்தீங்களா…
  ____________________________
  வி.சி.குகநாதன் டைரக்டு செய்த ‘மதுரகீதம்’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர், சந்திரபோஸ். எம்எஸ்விஸ்வநாதன் இசையில் ஆறு புஷ்பங்கள் படத்தில் சந்திரபோஸ் பாடிய ஏண்டி முத்தம்மா அவரை மிகப் பிரபலமாக்கியது.

  பின்னர் இவர் இசையமைத்த மச்சானைப் பார்த்தீங்களா படத்தில் இடம்பெற்ற ‘மாம்பூவே சிறு மைனாவே’ என்ற பாடல் மிகப் பிரபலமடைந்தது.

  தொடர்ந்து மாங்குடி மைனர், முதல் குரல், மைக்கேல்ராஜ், சங்கர் குரு, தாய் மேல் ஆணை, ராஜா சின்ன ரோஜா, விடுதலை உள்பட 120 படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.

  ரஜினியின் மனிதன், ராஜா சின்ன ரோஜா, விடுதலை போன்ற படங்களுக்கு தொடர்ந்து இசையமத்து முன்னணியில் இருந்தார் சந்திரபோஸ். ஏவி எம் தயாரித்த 12 படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்தவர் சந்திரபோஸ்.

  தமிழ் சினிமாவில் மொத்தம் 300-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் சந்திரபோஸ்.

  மனிதன் படத்தில் வரும் வானத்தைப் பார்த்தேன், மனிதன் மனிதன், அண்ணா நகர் முதல் தெரு படத்தில் இடம்பெற்ற ‘மெதுவா மெதுவா’, சங்கர் குருவில் இடம் பெற்ற ‘காக்கிச் சட்ட போட்ட மச்சான்’, மக்கள் என் பக்கம் படத்தில் வரும் ‘ஆண்டவனைப் பாக்கணும்’ போன்ற பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை.

  கடந்த சில ஆண்டுகளாக டிவி தொடர்களிலும் அவர் நடித்து வந்தார். மலர்கள், வைரநெஞ்சம், ஜனனம் போன்ற தொடர்களில் முக்கிய வேடம் ஏற்று நடித்தார்.

  சமீபத்தில் தன் மகனுக்கு திருமணத்தையும் நடத்தி வைத்த சந்திரபோஸ், மனைவியுடன் மயிலாப்பூரில் வசித்து வந்தார்.

  அவரது மறைவுக்கு திரையுலகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.

  சந்திரபோசின் இசையுல் எனக்கு பிடித்த பாடல்கள்.
  __________________________________________________

  1. மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
  (அண்ணா நகர் முதல் தெரு)
  2. நீலக்குயில்கள் ரெண்டு (விடுதலை)
  3. மாம்பூவே சிறு மைனாவே (மச்சானைப் பார்த்தீங்களா)
  4. இளங்குயில் பாடுதோ..யார் வரக்கூடுமோ… (கலியுகம்)
  5. ரவிவர்மன் எழுதாத கலையோ (வசந்தி)
  6. சின்ன சின்ன பூவே… நீ கண்ணால் பாரு (சங்கர் குரு)
  7. தோடி ராகம் பாடவா …மெல்லப்பாடு (மாநகரக் காவல்)
  8. ஏதேதோ கற்பனை வந்து என்னை அழைக்கிறதே (வாய்க்கொழுப்பு)
  9. சொன்னால் இனிக்குது சுகமாய் இருக்குது..பொன்னாய் மணியாய் (சுவாமி ஐயப்பன்)
  10. பச்சப்புள்ள அழுதிச்சின்னா (புதிய பாதை)
  11. ஏதோ நடக்கிறது (மனிதன்)
  12. மனிதன் மனிதன் (மனிதன்)

 7. விமல் says:

  *** RV…, இதை ஒரு தனிபதிவாக போட்டால் மிகவும் நன்றாக இருக்கும். ***

  *** சந்திரபாபு – 25 (நன்றி : ஆனந்த விகடன) ***
  _________________________________________________

  சந்திரபாபு… தமிழன் சந்தோஷ பாபு. ஆளைப் பார்த்தாலே சிரிப்பு வரும். அவர் பாட்டை ரசித்தால், ஆட்டம் வரும், சொந்தக் கதையைக் கேட்டால் கண்ணீர் வரும். அவரைப் போல இன்னொரு கலைஞன் எப்போது வருவான் ?

  1. கடலோர நகரமான தூத்துக்குடியில் பிறந்த கலைமுத்து. பனிமயதாசன் என்று பெயர். கடும் காய்ச்சலில் இருந்து மீண்டது கர்த்தரின் கருணை என ஜோசப் பிச்சை என்ற பெயரை இணைத்தார்கள். பாபு என்பது செல்லப் பெயர். சந்திர குலத்தில் பிறந்தவன் என்ற பெருமிதத்தால் சந்திரபாபு என்று இவரே பேர் சூடிக்கொண்டார் !

  2. பெற்றோர் ரோட்ரிக்ஸ் – ரோஸலின் இருவரும் சுதந்திரப் போராட்ட வீரர்கள். சுதந்திர வீரன் என்ற பத்திரிகையும் நடத்தியவர்கள். உப்புச்சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டதால் இவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட…. கூடவே சென்ற சந்திரபாபுவும் கொழும்பில் தனது பள்ளிக் கல்வியை முடித்தார் !

  3. கொழும்புவில் வாழ்க்கை நடத்த வழியில்லாமல் பாபுவின் பெற்றோர் சில ஆண்டுகளிலேயே சென்னைக்கு வந்தார்கள். திருவல்லிக்கேணியில் வீடு. சாந்தோம் கடற்கரையில் இசையமைப்பாளர் வேதா. தபேலா தாழு ஆகியோர் அறிமுகம் கிடைத்தது. இசை ஞானத்தை விதைத்தது இந்த இருவரும்தான் !

  4. காமராஜருக்கு அறிமுகமான குடும்பம் பாபுவின் அப்பா சிறையில் இருந்த காலத்தில் அழைத்துச் சென்று குளிப்பாட்டி அரவணைத்தவர் காமராஜ். சந்திரபாபு மறைந்தபோது மலர் மாலையுடன் வந்த முதல் ஆளும் காமராஜரே !

  5. சந்திரபாபுக்கு ஆங்கில அதிகாரிகள். பிரிட்டிஷ் பெண்கள், அவர்களது உடைகள் பாவனைகள் மீது சிறுவயதில் அலாதியான ஈடுபாடு இருந்தது. ஷர்ட் பேண்ட் இன் செய்து, சுத்தமான உடுப்பை அணியும் ஆசை அப்படித்தான் ஆரம்பித்தது!

  6· மேற்கத்திய இசை கேட்பது, ராக் அண்ட் ரோல் நடனம் ஆடுவது, நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசுவது. ஹாலிவுட் படங்களை மட்டுமே பார்ப்பது- பாபுவின் இளமைக் காலப் பொழுதுபோக்குகள். சந்திரபாபுவை கலைவாணி பிலிம்ஸீக்கு அழைத்துச் சென்று அறிமுக ப்படுத்தியவர் சிறுகதை மன்னர் புதுமைப்பித்தன். அவருக்கு முதல் வாய்ப்பைக் கொடுத்தவர் மணிக்கொடி எழுத்தாளர் பி.எஸ். ராமையா !

  7. முதல் படம், `தன அமராவதி’ (1947), கடைசிப் படம் `பிள்ளைச் செல்வம்’ (1974), 50-களில் சுமார் 15 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்தார் !

  8· புனித ஃபாத்திமா ஓவியத்தை தன்னுடன் எப்போதும் வைத்திருந்தார். இறந்தபோது அவருடன் வைத்து அதுவும் புதைக்கப்பட்டது !

  9. ரப்பரைப்போன்ற உடல்வாகு. எவ்வளவு உயரத்தில் இருந்தும் குதிப்பார் எத்தனை தடவை சொன்னாலும் திரும்பத் திரும்பக் குதிப்பார். அவர் படங்களில் டூப் போட்டது இல்லை !

  10. எம்.ஜி.ஆரை `மிஸ்டர் எம்.ஜி.ஆர்.’ என்று அழைத்த ஒரே ஆள் இவர்தான் சிவாஜியை வாடா, போடா போட்டுக் கூப்பிட்டதும் இவரே. அவர்களுக்கு இது பிடிக்கவில்லை. அதுபற்றி இவர் கவலைப்படவும் இல்லை !

  11· `புகழ் பெறுவதற்காக விளம்பரம் அடையும் வரை தொழிலில் அக்கறை காட்டுவது இயற்கை. ஆனால், புகழ்பெற்ற பிறகும் நல்ல விளம்பரம் கிடைத்த பிறகும் சந்திரபாபுவைப் போல அக்கறை காண்பிப்பவர்கள் குறைவு’ என்று சொன்னவர் எம்.ஜி.ஆர் !

  12· ஏழு நாள் கால்ஷீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கிய முதல் காமெடி நடிகர் !

  13· `குங்குமப் பூவே கொஞ்சம் புறாவே’, `உனக்காக எல்லாம் உனக்காக’, `பம்பரக் கண்ணாலே’, `நானொரு முட்டாளுங்க’, `பிறக்கும் போது. அழுகின்றான்’, `சிரிப்பு வருது சிரிப்பு வருது’, `ஒண்ணுமே புரியல உலகத்துல’, பொறந்தாலும் ஆம்பளையாப் பொறக்கக் கூடாது’, `புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை’, `என்னைத் தெரியலையா இன்னும் புரியலையா’ ஆகிய 10 பாடல்களும் 50 ஆண்டுகளாக இன்னமும் தமிழகத்தின் இரவு நேரச் சங்கீதம் !

  14. எஸ்.எஸ்வாசனைச் சந்திக்க முடியாத வருத்தத்தில் ஜெமினி ஸ்டுடியோ வாசலில் மயில் துத்தநாகத்தைக் கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இவர், தீக்குச்சியை உரசி தன் கையைச் சுட்டுக்கொண்டார். `நான் தீக் குச்சியைக் கொளுத்தியதை உணரலாம். ஆனால், அந்த சூட்டை உங்களால் உணர முடியாது’ என்று நீதிபதிக்குத் தன் துயரத்தை உணர்த்தினார் !

  15· சென்னை பாஷையை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர். `சகோதரி’ படத்து பால்காரனைப் பார்த்துத்தான் இப்படியும் ஒரு தமிழ் இருக்கிறது என்பதை தமிழகம் உணர்ந்தது!

  16· எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு மிக முக்கியமான ரசிகர். இருவரும் மணிக்கணக்கில் பேசுவார்கள். சந்திரபாபு கேட்டு அவருக்காக எழுதிய நாடகம்தான் `எனக்காக அழு’, ஆனால், அதில் சந்திரபாபு கடைசி வரை நடிக்கவில்லை !

  17· ஷீலா என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். முதலிரவின் போதே தனக்கு உள்ள இன்னொரு தொடர்பை அந்தப் பெண் சொன்னார். மறுநால் காலையில் மனப்பூர்வமாக ஷீலாவை அனுப்பிவைத்துவிட்டார் !

  18· நடிப்பின் உச்சத்தில் இருந்தபோது தன்னுடைய பலவீனம் என்ன என்பதைப் பகிரங்கமாக அறிவித்தார். `சில சமயங்களில் என் திறமையை நினைத்து நானே அடைந்துகொள்ளும் பெருமை எனது பலவீனம். அடுத்தது, என்னுடைய குடிப்பழக்கம். நான் பெண்களைத் தேடி அலையும் லோலன் அல்ல’, அவர்கள் என்னைத் தேடி வரும்போது கதைவைத் தாழிட்டுக் கொள்பவனும் அல்ல’ என்று சொன்னார் !

  19· மூன்று பேரைத் தனது வழிகாட்டிகளாகச் சொன்னார்.

  `மனிதனாக வாழ்வது எப்படி என்று போதித்தவன் ஆபிரகாம்லிங்கன்.

  ஒரு மனிதனைச் சாகடிக்காமல் சித்ரவதை செய்வது எப்படி என்பதை எனக்குக் கற்றுத்தந்த என்னுடைய மாமனார்,

  ராஜதந்திரம் என்றால் என்ன என்பதையும் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதையும் கற்றுத்தந்தவர் ஜெமினிகணேசன்’’ என்றவர் !

  20· ‘பாபு இஸ் பாபு, ஐ யம் பாபு’ என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார். படப்பிடிப்புத் தளத்தில் நுழையும் போத், `ஓ ஜீசஸ்! என்று சொல்லியபடிதான் நுழைவார் !

  21· ஜனாதிபதி மாளிகையில் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் முன்னால் `பிறக்கும் போதும் அழுகின்றான்’ பாடலைப் பாடினார். பிரமாதம் என்று அவர் பாராட்ட., உடனே ஓடிப் போய் அவரது மடியில் உட்கார்ந்துகொண்டார் சந்திரபாபு, `கண்ணா நீ ரசிகன்டா’ என்று அவரது தாடையைத் தடவ… ஜனாதிபதியும் மகிழ…. உற்சாகமான பொழுது அது !

  22· `தட்டுங்கள் திறக்கப்படும்’ அவர் இயக்கிய படம். அதில்தான் கதை, திரைக்கதை, டைரக்‌ஷனுடன் நடனம் என்றும் சேர்த்துப் போட்டார். அப்படி போட்ட முதல் இயக்குநர் இவர்தான் !

  23· நடிப்பு, பாட்டு, நடனம், இசை, ஒவியம், நாடகம், சிற்பம் ஆகிய அனைத்தின் மீதும் ஈடுபாடும், அது தொடர்பான கலைஞர்கள் அனைவரையும் `தேடித் தேடிப் பழகியவரும்கூட `ஆனால், எனக்கு நடிப்பைத் தவிர, செல்ஃப் ஷேவிங் மட்டும்தான் தெரியும்’ என்று சிரிப்பார் !

  24· `நீ ஒரு கலைஞன், கற்பனைவளம் மிக்கவன், சிந்தனை சக்தி அதிகம் உள்ளவன்’ என்ற ஒரு பாராட்டு மட்டுமே தனக்குப் போதும் என்று சந்திரபாபு சொன்னார். இப்படிப் பாராட்டியவர், அவருக்கு ஒரு நாள் மட்டுமே மனைவியாக இருந்த ஷீலா !

  25· `என் நடிப்பு மற்றவர்களுக்கு ஒரு சவால்தான். யாராவது இதைப்போல நடித்துக் காட்டட்டும். பார்க்கலாம் !’ என்று சவால்விட்டார் சந்திரபாபு. எதிர்கொள்ள இன்று வரை யாரும் இல்லை !

 8. விமல் says:

  நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் மரணம் (தகவல் : நக்கீரன்)
  —————————————————-
  மூன்று வாரமாக தொடரும் திரை உலக கலைனர்களின் மரணங்களை பற்றி நேற்று தான் நான் என் நண்பருடன் பேசி கொண்டு இருந்தேன்.

  அதாவது போன வாரம் இசை அமைப்பாளார் சந்திரபோஸ், அதற்கு முன்பு இரு வாரங்களில் நடிகர் முரளி, பாடகி சொர்ணலதா.

  இந்த வாரம் தான் யாரும் இல்லை என பேசி கொண்டு இருந்தோம். இன்று காலயுள் பார்த்தால் எஸ்.எஸ்.சந்திரன். ஏன் என்று தெரியவில்லை. வார வாரம் தொடர்கிறது.

  எஸ்.எஸ்.சந்திரன் — ஒரு நல்ல காமெடி நடிகர். இவர் நடித்த தங்கமணி ரங்கமணி, சகாதேவன் மகாதேவன், கதாநாயகன் போன்ற படங்களில் இவர் பண்ணிய அரசியல் காமெடி மறக்க முடியாதது. இவர் ஆத்மா அமைதி பெற இறைவனை வேண்டுகிறேன்.
  ——
  நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

  திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள இடும்பாவனம் என்ற கிராமத்தில், திமுக அரசின் செயல்பாடுகளை கண்டித்து, அதிமுக சார்பில் வெள்ளிக்கிழமை கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக தலைமை கழக பேச்சாளரும், நடிகருமான எஸ்.எஸ்.சந்திரன் கலந்து கொண்டார்.

  பொதுக்கூட்டத்தில் கண்டன உரையாற்றிவிட்டு, வெள்ளிக்கிழமை இரவு 12 மணிக்கு மன்னார்குடியில் உள்ள பூர்ணா தனியார் விடுதியில் தங்கினார். (மன்னார்குடியில் இன்று அதிமுகவின் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.) நள்ளிரவு 1 மணி அளவில், எஸ்.எஸ்.சந்திரனின் உதவியாளர், மாத்திரை கொடுப்பதற்காக அவரை எழுப்பியுள்ளார்.

  அப்போது அசைவற்று இருந்த எஸ்.எஸ்.சந்திரனை கண்டு அதிர்ச்சி அடைந்த உதவியாளர், கட்சி நிர்வாகிகளுக்கு தெரிவித்துள்ளார். உடனடியாக மருத்துவர்களை அழைக்க முயன்றுள்ளனர். பின்னர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.எஸ்.சந்திரனை அனுமதித்துள்ளனர்.

  அங்கு எஸ்.எஸ்.சந்திரனை பரிசோதத்த மருத்துவர்கள், ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

  இந்த தகவல் அறிந்த அதிமுகவினர் மன்னார்குடியில் கூடினர். உடனடியாக அவரது காரிலேயே, அவரது உடல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளர் காமராஜ் மற்றும் அதிமுக பிரமுகர்கள் உடன் வந்தனர்.

  சென்னைக்கு எஸ்.எஸ்.சந்திரன் உடல் கொண்டுவரப்பட்டதும், அவரது வீட்டில் அதிமுகவினர் மற்றும் திரையுலகினர் கூடினர். எஸ்.எஸ்.சந்திரன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: