நாகேஷ்


தாய்ப் பக்கம்: ஆளுமைகள்

நாகேஷ் பற்றிய போஸ்ட்கள் இங்கே ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன.

நாகேஷ் மறைந்தார்
நாகேஷ் – ஆர்வியின் அஞ்சலி
நாகேஷ் – பக்சின் அஞ்சலி
சென்னையில் நாகேஷ் அஞ்சலி கூட்டம்

ராஜநாயஹம் நாகேஷையும் பிரபாகரையும் ஒரு செட்டில் பார்க்கிறார்.
ராஜநாயஹம் – நாகேஷும் மற்ற நகைச்சுவை நடிகர்களும்
நாகேஷின் மிகை நடிப்பு பற்றி ராஜநாயஹம்

நாகேஷ் பற்றி ஓ பக்கங்களின் ஞானி

நீர்க்குமிழி – விகடன் விமர்சனம்
எதிர் நீச்சல் – விகடன் விமர்சனம்

நாகேஷின் இரண்டு பாட்டுகள்

நாகேஷ் பற்றி பாலச்சந்தர், மனோரமா
இரும்பு மனசுக்காரர் நாகேஷ் – பாலச்சந்தர்
நாகேஷ் ரிடையர் ஆக விரும்பினாரா? – கமல் சொல்கிறார்
நாகேஷ் பற்றி கமல்

2 Responses to நாகேஷ்

  1. BaalHanuman சொல்லுகின்றார்:

    தமிழ்மகன் கூறுகிறார்….

    தருமி முதல் தசாவதாரம் வரை
    ==================================
    நாகேஷ் என்றால் நகைச்சுவை. புத்திசாலித்தனமான பாவனை வெளிப்பாடும் டைமிங் சென்ஸும் உடல் மொழியும் அவருடைய நகைச்சுவைக்குத் தனி ஈர்ப்பைத் தருகின்றன.

    திருவிளையாடல், பாமா விஜயம், காதலிக்க நேரமில்லை, ஆயிரத்தில் ஒருவன், சர்வர் சுந்தரம் போன்றவை அவருடைய முதல் ரவுண்டு காமெடிகள். உடல் சேட்டைகளும் ஓங்கி ஒலிக்கும் குரலும் பிரதானமாக இருந்தன அதில். அவருடைய இரண்டாவது இன்னிங்ஸ், ஆழ்ந்த அமைதியான உடல் சேட்டைகள் குறைந்த காமெடிகள்.

    நான் அவரை இரண்டாவது இன்னிங்ஸ் காலத்தில்தான் சந்தித்தேன். இரண்டொரு முறை பேட்டி கேட்டபோதும் அதை அவர் தவிர்த்துவிட்டார். பேட்டி தருவதில் பெரிய விருப்பம் எதுவுமில்லை அவருக்கு. மிகவும் விருப்பமுள்ளவர்கள் அல்லது ஏற்கெனவே பழகியவர்களிடத்தில் மட்டும்தான் அவர் பேசினார். அப்படிப் பேசும்போது அங்கே தொடர்ந்து நகைச்சுவைப் பட்டாசு வெடிக்கும்.

    கமல்ஹாசனின் மகளிர் மட்டும் படத்தில் அவர் நடிப்பதை கமல்ஹாசன் இப்படி அறிவித்தார்:

    “இந்தப் படத்தில் நாகேஷ் நடித்திருக்கிறார்…. உண்மையாகச் சொல்ல வேண்டுமானால் நடித்து ’இருக்கவில்லை’ என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இதில் நாகேஷ் பிணமாக நடித்திருக்கிறார்” என்றார்.

    ஒரு படத்தில் ஒரு நடிகர் முழுவதும் பிணமாகவே நடித்து சிரிக்க வைத்தது உலக சினிமா வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை என்று தோன்றுகிறது.

    ’அபூர்வ சகோதரர்கள்’, ‘காதலா காதலா’, ‘பஞ்சதந்திரம்,’ ‘தசாவதாரம்’ என கமல் பல படங்களில் நாகேஷைப் பயன்படுத்தியிருக்கிறார்.

    படத்தில் நடிப்பதில் அவருடைய பங்கு முக்கியத்துவமானது என்பது மட்டுமல்ல. படப்பிடிப்பு இடைவேளைகளில் அவர் தரும் பங்களிப்புக்காகவும்தான் அவருக்கு இந்தத் தொடர்ச்சியான வாய்ப்பு என்று நான் நினைக்கிறேன்.

    ‘பஞ்சதந்திரம்’ படப்பிடிப்பின்போது நடைபெற்ற சிறு சம்பவம் இது.

    கமல்ஹாசன் எப்போதும் அதிக காரம் சாப்பிட மாட்டார். அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிக்கன் துண்டில் ஒட்டியிருந்த மசாலாவைத் தவிர்க்கும் விதமாக அதன் கழுத்துப் பகுதியைப் பிடித்துக் கொண்டு தட்டில் தட்டினார். மசாலா விழுவதாக இல்லை. வேகமாகப் பலமுறை தட்டினார். அருகில் இருந்த நாகேஷ் லேசாகத் திரும்பிப் பார்த்து “என்னப்பா… கோழி சரியா சாகலையா. இந்த அடி அடிக்கிறே?” என்றார் கூலாக.

    கமல் இதையெல்லாம் ரசிப்பார் என்று நாகேஷுக்குத் தெரியும். நாகேஷ் இப்படியெல்லாம் ரசிக்க வைப்பார் என்று கமல்ஹாசனுக்குத் தெரியும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: