கன்னிப் பெண் (Kannip Penn)


இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற பல நாட்களாக ஆசை – ஒரே காரணம்தான். பவுர்ணமி நிலவில் என்ற பாட்டு. இதை youtube-இல் பார்த்திருக்கிறேன். துரதிர்ஷ்டவசமாக இப்போது இந்த வீடியோ youtube-இலிருந்து அழிக்கப் பட்டுவிட்டது. சிவகுமாரும் வெண்ணிற ஆடை நிர்மலாவும் நடிக்க, எம்.எஸ்.வி.யின் இசை, எஸ்.பி.பி. ஜானகி பாட்டு. சிவகுமார் உண்மையிலேயே அழகன்தான். எங்கேயோ படித்தது போல் சிவகுமார் அறுபதுகளிலும், கமல் எழுபதுகளிலும் அப்பாஸ்/அஜித் 90களிலும் அழகான நடிகர்கள் என்று தோன்றுகிறது. இந்த ப்ளாகுக்கு யாராவது வாசகர்கள் – வாசகிகளாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் – இருந்தால் உங்கள் கருத்துப்படி யார் அழகான நடிகர்கள் என்று எழுதுங்களேன்! துரதிர்ஷ்டவசமாக, படத்தில் இந்தப் பாட்டு ஒன்றுதான் பார்க்ககூடிய அம்சம். அடிப் போடி பைத்தியக்காரி அடி ஏண்டி அசட்டுப் பெண்ணே பாட்டையும் வேன்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம். (திருத்திய சாரதாவுக்கு நன்றி!)

மகா முட்டாள்தனமான கதை. உதாரணமாக வில்லன் வி.கே.ராமசாமி சூழ்ச்சி செய்து சிவகுமாரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்ஷங்கரின் தங்கைக்கு கல்யாணம் செய்து வைப்பார். எதற்காக? தான் கோவிலில் இருந்து திருடிய வைரங்களை தற்காலிகமாக ஜெய் வீட்டில் பத்திரமாக ஒளித்து வைக்க! லட்சுமிதான் டைட்டிலின் கன்னிப் பெண். அதனால் அவர் தான் விரும்பும் ஜெய்க்கு வாணிஸ்ரீயை கல்யாணம் செய்து வைத்து விடுவார்! அப்போதுதானே அவர் டைட்டில் போல கன்னிப் பெண்ணாக இருக்க முடியும்?

யாராவது மீண்டும் பாட்டுக்களை youtube-இல் போஸ்ட் செய்வது வரை காத்திருங்கள்! இல்லையென்றால் ஏதாவது தமிழ் சினிமா பாட்டு தளங்களுக்கு சென்று பாட்டுக்களை கேளுங்கள்.

    பிற்சேர்க்கை – சாரதா தரும் தகவல்கள்:

சத்யா மூவீஸ் சார்பில் அது வரை தொடர்ந்து எம்.ஜி.ஆர்.நடித்த படங்களையே தயாரித்து வந்த தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன், ‘சத்யா பிலிம்ஸ்’ என்ற வேறொரு பானரில் தயாரித்த படம் இது. எஸ்.பி.பி.யின் ஆரம்ப கால இளமையான இனிய குரலில் எஸ்.ஜானகியுடன் பாடிய ‘பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா’ என்ற அருமையான பாடல் இந்த ஜோடிக்குத்தான். இந்தப் பாடலும் பி.சுசீலாவும் ஈஸ்வரியும் இணைந்து பாடிய ‘அடி ஏண்டி அசட்டுப்பெண்ணே… உன் உள்ளத்தில் யாரடி கண்ணே’ என்ற பாடலும் அன்றைய விவித்பாரதியிலும், இலங்கை வானொலியிலும் சக்கை போடு போட்டன. கன்னிப் பெண் படத்துக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. இசையமைத்திருந்தார்.

கதாநாயகனாக இன்ஸ்பெக்டர் வேடத்தில் ஜெய்சங்கர் நடித்திருந்தார். சண்டைக்காட்சிகளில் படு சுறுசுறுப்பு. பொறி பறந்தது. சத்யா மூவீஸ் ஆர்.எம்.வீரப்பன் படமென்பதால் விநியோகஸ்தர்களில் ஒருவர் ஆர்வக்கோளாறினால் ஒரு செய்தித்தாள் விளம்பரத்தில், ‘புதிய புரட்சி நடிகர் ஜெய் நடிக்கும்’ என்று விளம்பரப்படுத்தப்போக, விஷயம் எம்.ஜி.ஆர் காதுக்குப்போனது. அவ்வளவுதான். (அது ‘நம் நாடு’ ரிலீஸ் நேரம்) ஆர்.எம்.வீ.யை அழைத்து சரமாரியாக காய்ச்சியெடுத்துவிட்டார். அதே வேகத்துடன், ஆர்.எம்.வீ, அந்த விநியோகஸ்தரின் உரிமையை ரத்து செய்து, பிரிண்ட்களை திரும்பப்பெற்றார். கன்னிப்பெண் படம் பி & சி செண்ட்டர்களில் நன்றாக வசூல் செய்தது.

Advertisements

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

2 Responses to கன்னிப் பெண் (Kannip Penn)

  1. சாரதா சொல்லுகின்றார்:

    சத்யாமூவீஸ் சார்பில் அதுவரை தொடர்ந்து எம்.ஜி.ஆர்.நடித்த படங்களையே தயாரித்து வந்த தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன், ‘சத்யா பிலிம்ஸ்’ என்ற வேறொரு பானரில் தயாரித்த படம் இது. எஸ்.பி.பி.யின் ஆரம்ப கால இளமையான இனிய குரலில் எஸ்.ஜானகியுடன் பாடிய ‘பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா’ என்ற அருமையான பாடல் இந்த ஜோடிக்குத்தான். இந்தப்பாடலும் பி.சுசீலாவும் ஈஸ்வரியும் இணைந்து பாடிய ‘அடி ஏண்டி அசட்டுப்பெண்ணே… உன் உள்ளத்தில் யாரடி கண்ணே’ என்ற பாடலும் (‘அடிபோடி பைத்தியக்காரி’ அல்ல)அன்றைய விவித்பாரதியிலும், இலங்கை வானொலியிலும் சக்கை போடு போட்டன. கன்னிப்பெண் படத்துக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. இசையமைத்திருந்தார்.

    கதாநாயகனாக இன்ஸ்பெக்டர் வேடத்தில் ஜெய்சங்கர் நடித்திருந்தார். சண்டைக்காட்சிகளில் படு சுறுசுறுப்பு. பொறி பறந்தது. சத்யா மூவீஸ் ஆர்.எம்.வீரப்பன் படமென்பதால் விநியோகஸ்தர்களில் ஒருவர் ஆர்வக்கோளாறினால் ஒரு செய்தித்தாள் விளம்பரத்தில், ‘புதிய புரட்சி நடிகர் ஜெய் நடிக்கும்’ என்று விளம்பரப்படுத்தப்போக, விஷயம் எம்.ஜி.ஆர் காதுக்குப்போனது. அவ்வளவுதான். (அது ‘நம் நாடு’ ரிலீஸ் நேரம்) ஆர்.எம்.வீ.யை அழைத்து சரமாரியாக காய்ச்சியெடுத்துவிட்டார். அதே வேகத்துடன், ஆர்.எம்.வீ, அந்த விநியோகஸ்தரின் உரிமையை ரத்துச்செய்து, பிரிண்ட்களை திரும்பப்பெற்றார். கன்னிப்பெண் படம் பி & சி செண்ட்டர்களில் நன்றாக வசூல் செய்தது.

    • RV சொல்லுகின்றார்:

      சாரதா, நீங்கள் கொடுத்த தகவல்களையும் சேர்த்து, திருத்தத்தையும் செய்துவிட்டேன். நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: