டாக்டர் சிவா இல்லை, சுமதி என் சுந்தரி! (Dr. Siva illai, Sumathi En Sundari!)


 டாக்டர் சிவா எனக்கு பிடிக்காத சிவாஜி படங்களில் ஒன்று. இதைப் பார்க்க வேண்டாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அரை மணி நேரம் கழித்து டிவியை ஆன் செய்தால், சுமதி என் சுந்தரி ஓடிக் கொண்டிருக்கிறது! திடீரென்று மாற்றிவிட்டார்கள். இதையும் முன்னால் பார்த்திருக்கிறேன். ரொம்ப மோசம் கிடையாது, சுமாரான படம் என்று நினைவு. மிச்ச படத்தைப் பார்த்த பிறகும் அதே எண்ணம்தான். நல்ல பாட்டுக்கள் – பொட்டு வைத்த முகமோ, ஒரு தரம் ஒரே தரம், ஓராயிரம் நாடகம் ஆடினாள், ஆலயமானது மங்கை மனது போன்றவை நல்ல பாடல்கள். எஸ்.பி.பி. 1975க்கு முன்பு பாடிய பாடல்களில் ஒரு இளமைத் துள்ளல் இருக்கிறது. பவுர்ணமி நிலவில், இயற்கை என்னும் இளைய கன்னி, பொட்டு வைத்த முகமோ போன்ற பாடல்களில் இது நன்றாக தெரிகிறது.

கதை ஒன்றும் பிரமாதம் இல்லை. நடிகை ஜெயலலிதா சினிமா என்றால் என்ன என்றே தெரியாத சிவாஜி வீட்டில் புகுந்து விடுவார். சில பல குழப்பங்களால் ஜெ சிவாஜியின் மனைவி என்று எல்லாரும் நினைப்பார்கள். உண்மை தெரிவதற்குள் சிவாஜிக்கும் ஜெக்கும் லவ். ஜெ ஒரு நடிகை என்ற உண்மை தெரிந்த பிறகு சிவாஜி ஜெவை போக சொல்லிவிடுவார். கடைசியில் அவரது மனம் மாறி எல்லாம் சுபம்!

உலகத்தின் துயரங்கள் அத்தனையும் தனது தோள்களில் சுமக்காத சிவாஜியைப் பார்ப்பதே ஒரு பெரிய விஷயம்.  இரண்டாவது  பெரிய விஷயம் சிவாஜி இதில் ரொம்ப குண்டாக இருக்க மாட்டார். தொப்பை இல்லாத மாதிரி இருக்கிறது. ரொம்ப ஓவர் ஆக்டிங்கும் கிடையாது. (அந்தக் குறையை ஜெ போக்கி விடுகிறார்.)

பார்க்கலாம்.

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

23 Responses to டாக்டர் சிவா இல்லை, சுமதி என் சுந்தரி! (Dr. Siva illai, Sumathi En Sundari!)

 1. சாரதா says:

  ‘சுமதி என் சுந்தரி’ மிகவும் ரம்மியமான படம் என்று ரசிகர்களாலும் மக்களாலும் போற்றப்பட்ட படம்.

  சிறுவர்கள் முதல், முதியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த படம். குறிப்பாக ஏராளமான பள்ளி, மற்றும் கல்லூரி மாணவர்களை நடிகர்திலகத்தின் ரசிகர்களாக மாற்றியபடம். அந்த ஆண்டு வெளியான தமிழ்ப்படங்களிலேயே கல்லூரி மாணவ, மாணவியரின் ‘முதல் சாய்ஸாக’ தெரிவு செய்யப்பட்ட படம். காதலை மையமாகக்கொண்ட படமானாலும், அனைவரும் ஒன்றாக சேர்ந்து பார்க்கும் அளவுக்கு, விரசமின்றி எடுக்கப்பட்ட படம்.

  ‘நடிகர்திலகத்தின் படங்களைக் காணச்செல்வதென்றால் கைக்குட்டையை தவறாமல் எடுத்துச்செல்ல வேண்டும்’ என்று கேலி பேசியவர்களின் முகத்தில் கரியைப்பூசிய படம்.

  கதாநாயகி கிராமத்துப் பெண்ணோ அல்லது குடும்பத்துப் பெண்ணோவாக இருந்தாலும் கூட, ஒரு காட்சியிலாவது அவளைக் கவர்ச்சியாக காட்டிவிடத்துடிக்கும் திரையுலகில், கதாநாயகியை ஒரு திரைப்பட நடிகையாக காண்பித்தபோதிலும் கூட, ஆரம்பம் முதல் இறுதி வரை அவளை சேலையிலேயே காண்பித்த படம். ஒளிப்பதிவு, வண்ணம், வெளிப்புறக் காட்சிகளில் நம் கண்களையும், தேனான இசை மற்றும் பாடல்களில் நம் காதுகளையும் கொள்ளையடித்த படம்.

 2. RV says:

  சாரதா,

  சுமதி என் சுந்தரி அன்றைய “யூத்” படம் என்பது எனக்கு தெரியாதது. விவரங்களுக்கு நன்றி!

 3. ullathaisolven says:

  சுமதி என் சுந்தரி ஒரு சுந்தரமான ப‌டைப்பு
  காட்சியமைப்பு பாடல்கள் பிண்ணனி இசை (MSV தானே ?)
  இயற்கை சூழல் எல்லாவற்றையுமே என்றைக்கும் லயித்துப் பார்க்கலாம் கேட்கலாம்
  இரண்டாம் முறை ஆலயமாகும் மங்கை மனது பாடல் வரும் போது ..
  எஸ்டேட்டிலிருந்து வீட்டுக்கு வந்து ஆற அமர உட்காரும் சிவாஜிக்கு ஏதோ பாடிக் கொண்டே சாப்பிடக் கொடுப்பார்..தட்டில்
  இருப்பதை கிள்ளும் முன் ஒருமுறை சிவாஜி நிமிர்ந்து பார்ப்பார் ..அடடா..பார்வை !
  இன்னும் நான் ரசித்து பார்த்த எத்தனையோ காட்சிகளுண்டு..
  சமையலறையில் செத்துப் போன கெழவியின் ஆவி இருக்குதென்பார்..அந்தக் குரலும் நையாண்டியும் A1

  சிவாஜியின் ஆடைகள் அதுவும் ஒரு க‌ருப்பு நிற‌ ஜாக்கெட்டில் ரொம்ப‌வே அசத்தல்…
  எத்த‌னை முறை பார்த்தாலும் ஒருவித‌ ‘அழ‌கு ‘ அது சுமதி என் சுந்தரியில் குறை‌வ‌தே இல்லை

 4. rinkster says:

  இந்த படத்தை ஒரு தடவ கூட சிரியஸா என்னால் உட்கார்ந்து பார்க்க முடியல. சிவாஜி நடித்து 70களில் திரையான சகிக்க முடியாத பல படங்களில் இது ஒன்று என்பது என் கருத்து. ‘Repeat value’ அதிகம் உள்ள திரைப்படம் என்று பலர் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது.

  The movie is supposed to be a great entertainer, but it truly bored me to death. என்னை கேட்டாள் காமெடி கூட சுமார் என்றுதான் சொல்வேன். ஏனா ஒரு காட்சியை கூட பார்த்து சிரித்ததாக எனக்கு நினைவில்லை. It did not even bring a smile in the face. Well, I suppose difference of taste. =)

 5. ரொம்ப ஜாலியான படம்ங்க..!

  சிவாஜிக்கும் தங்கவேலுவுக்கும் இருக்கும் கண்டிப்பு கலந்த உறவு, நாகேஷுக்கும் த.வே.வுக்கும் இருக்கும் நையாண்டி கலந்த உறவு, பாதி படம்வரை ஹீரோ ஹீரோயினுக்கு இடையில் இருக்கும் தாமரை இலை தண்ணீர் உறவு என்று வேறுபாடான கதையம்சம்..

  ஹீரோ, ஹீரோயின் சந்திப்புக் காட்சியில் (தூங்கத்தயாராகும் காட்சி) ஊடாடும் இயல்பான நகைச்சுவையை இரசிக்கத்தெரியாதவர்கள்.. போகட்டும் விடுங்கள்.. பாவம்.

  படத்தின் டைட்டில் பார்த்திருக்கீங்களா..? கொஞ்சம் ரசா(ஆ)பாசமா இருக்கும்.. ஸ்ரீதரின் தம்பி ஏன் இப்படி ஒரு டைட்டில் கான்செப்டைத் தேர்வு செய்தாரோ..!

 6. rinkster says:

  erm dude…I don’t owe an explanation to anyone, especially someone who doesn’t know to respect others taste. But I think I have every right to voice my opinion and criticize a movie I did not like.

  எனக்கு எவ்வளவு பிடித்த நடிகர் நடித்திருந்தாலும் சரி. ஒரு டப்பா படம்னா அதை டப்பானு தான் நான் எழுதுவேன். அது தான் என் இயல்பு.

  If the movie evoked a lot of laughter for you, then good for you. It didn’t for me. Got a problem with it?!

  இதுல நீங்க என்ன பார்த்து பாவ படரத்துக்கு எதுவும் இல்லை.

  எனக்கு ரசிக்க தெரியலனு சொன்னதுக்கு ரொம்ப நன்றி. அதையே கொஞ்சம் மாற்றீ உங்களுக்கு ரசனையே இல்லன்னு நான் சொல்லலாமா?
  ஆனால் அப்படி நான் சொல்ல மாட்டேன்.

  I’m a fan of Sivaji myself. But I don’t have to like every freaking movie of his. I personally did not find S-E-S to be even a decent entertainer. Movies like Sabash Meena and Arivali are indeed his evergreen comedies. Heck, I even found Galatta Kalyanam to be a lot better than S-E-S.

 7. ullathaisolven says:

  இங்கே ராஜா என்று ஐடி பார்த்ததும் நம்ம சிவாஜியின் ‘ராஜா’ படம் ஞாபகம் வந்து ..
  இந்த ராஜா படமெல்லாம் டிவில போட மாட்டாங்களாப்பா ?
  எப்போவோ பார்த்தது சிலோனில் நூறு நாட்களுக்கு மேலே ஜமாய்த்த வெற்றிப்படங்களில் ராஜாவும் ரொம்ப ஸ்பெஷல்..பாட்டு எல்லாமே சூப்பர் !
  டிய எம் எஸ் , பி சுசீலாம்மா , நம்ம எஸ் பி பி எல்லாரும் எம் எஸ் வி மியூசிக்க்ல செம வெரைட்டியா டியூனும் சீனும்
  ஜம்முன்னு சிவாஜி ஒரு பக்கம் பாலாஜி படம் தானே ? யாராச்சும் சொல்லுங்கப்பா
  பாலாஜி சுஜாதா சினி ஆர்ட்ஸா ? அவ‌ரோட பட கதாநாயகர்கள் எல்லாரோட பேரும் பொதுவாவே ராஜான்னு வருமில்ல ?

  இந்த படத்துக்கப்புறம் சிலோன் றேடியோ கே எஸ் ராஜா ஸ்பெஷாலிட்டியும் ரொம்ப பாப்புலரா ஆகிப் போச்சாம்..எப்டீன்னா ? சாதாரணமா புரோக்ககிராம் ஏதாச்சும் முடிஞ்சு வணக்கம் சொலும் போது ‘வணக்கம் கூறி விடை பெறுவது கே எஸ் ராஜா ‘ம்பாராம்..இந்த படத்துகப்புறம் இந்த படத்துல சிவாஜி வரப்போ எல்லாம் பிண்ணனியில் ‘ராஜாராஜா ராஜாராஜா..ன்னு எம் எஸ் வி புது விதமா போட்ட டியூனை அவரும் அப்படியே கட் பண்ணி அவர் கொரலுக்கு பின்னாலே அப்பிடியே பேஸ்ட் பண்ணி கூறி விடை பெறுவது ‘ராஜாராஜா ராஜாராஜா ! அது மட்டுமில்லே
  அவர் வந்த ஒடனே வணக்கம் சொல்ல ஓஓஓஓ..ராஜா ! பி சுசீலா ஹம்மிங்க் ஒடனே சிவாஜி கொரலா டி எம் எஸ் கொரலா ? ராஜா ! அப்டின்னும் வரும் அதையும் சேர்த்து அந்தக் காலத்துலேயே அந்த அறிவிப்பாளர் செம தூள் கெளப்பினாராம்

  எம் எஸ் வி செய்த புதுமை அந்த ராஜாராஜா ராஜா..அதில ஒரு நயம் எதுக்கு சொல்றேன்னா
  இப்போ எல்லாம் குனிஞ்சா ,விழுந்தா ரெண்டு பேரு ஒருத்தரை ஒருத்தர் பாத்துகிட்டா , அழுதா ..மொறச்சா என்ன பண்ணா என்ன சொல்லி வச்சா மாதிரி
  பிண்ணனியில அப்பிடியே நாலஞ்சு சுடுகாட்டுப் பேய்கள் ஆஆ.ஆஆ ஆஆஆ.ஆஆஆ..அது படமா இருந்தா என்ன டிவி சீரியலா இருந்தா என்ன ? அதே ஆவிகள் தான் ஆ ஆ ஹான்னு ஒரே கோரஸ்பா..தாங்க முடியல‌
  ராஜா படத்துல‌ எம் எஸ் வி எப்பிடி அப்போவே ரொம்ப வித்தாயசமா திங்க் பண்ணி காட்சியமைப்பை இன்னும் ஒருபடி மேலே ஒசத்துற மாதிரி பண்ணியதை
  இப்பிடி பிண்ணனியில் எரிச்சல் படுத்துகிற டியூன் போடுகிற ஆசாமிகள் எல்லாரும் பாக்கணும் . அம்புடுத்தே ண் !

 8. RV says:

  ரிங்க்ஸ்டர், உங்களுக்கு இந்த படம் பிடிக்காதது கொஞ்சம் ஆச்சரியம்தான். நான் ராஜா மாதிரி, எனக்கு இந்த படம் பிடித்திருந்தது.

  உள்ளதை சொல்வேன், ராஜா படம் பார்க்க எனக்கு ஆசைதான். வந்த புதிதில் விருதுநகரில் பார்த்தது. (என் பெரியப்பா அகத்தியர் படம் பார்க்க கூட்டிக்கொண்டு போனார், டிக்கெட் கிடைக்காததால் இந்த படம்). பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் படம்தான். எங்கே இருக்கீங்க? இங்கே San Francisco Bay Areaஇல் இருந்தால் சொல்லுங்க, ஒரு நாள் ஒண்ணா பாப்போம்!

 9. rinkster says:

  >>ரிங்க்ஸ்டர், உங்களுக்கு இந்த படம் பிடிக்காதது கொஞ்சம் ஆச்சரியம்தான்.>>
  RV,

  எப்படி சொல்வது, நான் கொஞ்சம் வேறு பட்ட சிவாஜி fan என்று சொல்லலாம். எனக்கு பிடிச்ச சிவாஜி படத்தோட பிடிக்காத சிவாஜி படங்கள் தான் அதிகம்.

  I don’t tend to like the sivaji movies which is usually appreciated by masses. Yes, that includes Navarathri, Vietnam Veedu, Gauravam, Vasantha Maligai, Deiva Magan, Amaradeepam, Rajapart Rangathurai, S-E-S et al.

  Also I can’t stand majority of his 70s flicks. I don’t know how many of you would have watched the Tamil remake of Gulzar’s Mausam. I can’t seem to recall the name of movie. The original was a true masterpiece. ஸ்ரீபிரியாவும் அவரும் சேர்ந்து படு கொலை செஞ்சுருப்பாங்க அந்த படத்தை. குல்ஸாரை பிடித்து உதைக்கணும் ரீமேக் ரைட் கொடுத்ததற்கு. :))

  நவராத்திரி – இந்த படத்தில் உண்மையிலேயே எனக்கு பிடிச்ச ஒரே விஷயம் சாவித்திரியோட ஏதார்த்தமான நடிப்பு மட்டும் தான். Sivaji tried way too hard in my opinion. Savitri effortlessly stole the show. I won’t really rate it as one of his best. As I personally believe he has churned out far better performances than Navarathri.

  வியட்நாம் வீடு – தாங்க முடியாத கொடுமையான overacting. I really end up with a headache whenever I attempt to watch this movie. No kidding.

  கௌரவம் – Ditto! வியட்நாம் வீடு அளவுக்கு கொடுமையில்லை இருந்தாலும் கொடுமை தான். Heard Gemini was the first choice for the role. But since he was already getting ridiculed as Sambhar he chose to stay away from Brahmin subjects and suggested Sivaji for the role. I don’t know how far its true. He might have probably done a better job. The story was not anything extraordinary though.

  பாவ மன்னிப்பு – பிடித்த படம். ஆனால் ஏனோ எம்.ஜி.ஆர் படம் பார்ப்பது போலவே இருக்கும். =P

  பதி பக்தி – விதவை கோலத்தில் இருக்கும் சாவித்திரிதான் தன்னுடைய அக்கா மகள் என்று உணரும் காட்சி. புரண்டு அழுவாரே ! அப்பா height of overacting! கிளைமாக்ஸ் காட்சியை பற்றி சொல்லவே வேண்டாம் unintentional காமெடிதான். இந்த படம் நிச்சயமா ஓடியிருக்க வாய்பே இல்லைனு நினைச்சேன். Bhimsingh launched his own production company Buddha pictures with Pathi Bhakthi and MSV was one of the partners. I read in the book Mellisai mannar M.S.V that it was an average hit. எப்படி இந்த மாதிரி படமெல்லாம் அந்த காலத்தில் ஓடிச்சுனு எனக்கு உண்மையாகவே ஆச்சரியமாக இருந்தது.

  But I still reckon Sivaji as the greatest actor to ever grace Tamil cinema. அக்டார்ஸ்கலை பொருத்த வரைக்கும் அவரையும் சஞ்சீவ் குமாரையும் தான் என்னுடய favorite என்று சொல்வேன்!

 10. RV says:

  ரிங்க்ஸ்டர்,

  உங்களுக்கு பிடித்த சிவாஜி படங்கள் என்ன?

 11. Rinkster அண்ணே… ஏன் இவ்வளவு பீலிங்கு..?

  ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு இரசனை.. எல்லோர் விருப்பமும் ஒண்ணா இருந்தா சரவணாவிலே ஏன் இத்தனை டிசைன் வச்சிருக்கப்போறாங்க..?

  மனசு புண்பட்டிருந்தா மன்னிச்சுருங்க..

 12. /////// Rinkster :

  Tamil remake of Gulzar’s Mausam. I can’t seem to recall the name of movie.//////

  குல்சார் படத்தோட ரீ மேக் “வசந்தத்தில் ஓர் நாள்”..?

  வேண்டும் வேண்டும் உந்தன் உறவு..
  வெண்பனித் தென்றல் உள்ளவரையில்..

 13. Das says:

  RV, neengaLum Virudunagaril padam pArththeerkaLA? nAnum Virudunagaril niRaiya padangaL pArththavan! We were living about 10 KMs(?) from Virudunagar at that time! I may agree with rinkster on some of his observations (I guess Gemini would have made better fit for VietnAm veedu, I couldn’t stand Padmini in that movie)

 14. RV says:

  ராஜா,

  வசந்தத்தில் ஓர் நாள் பற்றி நினைவுபடுத்தியதற்கு நன்றி!

  தாஸ், நான் விருதுநகர்க்காரன் இல்லை. ஒரு மூன்று மாதம் விருதுநகரில் பெரியப்பா வீட்டில் தங்கி படித்தேன்.

 15. surya says:

  RV…

  1971 ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று இந்தப் படம் வெளியானது. அதே நாளில் சிவாஜியின் மற்றொரு படமான ‘பிராப்தம்’ வெளியானது.

  தற்போதெல்லாம் இரண்டு / மூன்று வருடத்திற்கு ஒரு படம் நடிக்கிற அதுவும் போணியாகுமா என்று நினைத்திருக்கும் வேளையில் ஒரெ நாளில் இரண்டு பட ரிலீஸ் பண்ண எவ்வளவு தைரியம் வேண்டும்..

  ஆனால் அப்போது டி.வி கிடையாது.. அதனால இருக்குமோ…??

  இதே ஆண்டு வெளிவந்தது சிவாஜியின் குலமா குணாமா

  சுமதி என் சுந்தரியை விட உங்க விமர்சனத்தை விட நிறைய புது முகங்களின் பின்னூட்டங்களை மிகவும் ரசித்தேன்.

  வாழ்க மக்கள்..

 16. surya says:

  நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பாலு பாடிய முதல் பாடல் ‘பொட்டு வைத்த முகமோ?’ என்ற பாடல்தான் என்று நினைவு…

  • RV says:

   இது சிவாஜி படத்துக்கு ஃபீலிங் குறைவுதான். சாரதா இது ஒரு யூத் படம் என்று குறுப்பிடுகிறார். யூத் படங்களில் ஃபீலிங் குறைவாகத்தானே இருக்கும்!

 17. gkrishna says:

  really ses is a youth movie. one shirt is famous in that movie (with striped ) the shirt name itself called as Sumathi en sundari shirt. U can see lot of films released during 1970 hero/villan have this shirt only. that culture started by sivaji only

  • RV says:

   ஜிகிருஷ்ணா, சாரதா அருமையான ரசனை உடையவர். அவருடைய விமர்சனங்கள் எப்போதும் constructive ஆக இருக்கும். தீவிர சிவாஜி பக்தை. forumhub-இல் நிறைய எழுதி இருக்கிறார். சில சமயம் அங்கிருந்து அவர் அனுமதியுடன் இங்கே மீள்பதிவும் செய்திருக்கிறோம். உங்களுக்கு அநேகமாகப் பிடிக்கும், படித்துப் பாருங்கள்!

 18. சாரதா says:

  ‘சுமதி என் சுந்தரி’ பற்றிய என்னுடைய விரிவான விமர்சனம் இங்கே:

  http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1283743&sid=5a42487c4d6edaf27e3a2fa857c40c03#1283743

  (நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ‘சட்டை’ பற்றியும் அதில் சொல்லியிருக்கிறேன்)

 19. rajagopalan says:

  RV

  I remember sivaji wearing lots and lots of “checked”shirts-half sleeves.he had shed weight considerably then-starting with galatta kalyanam

  saw this movie sumathi yen sundari during summer vacation in “new tower”-theatre in tanjore .

  raju-dubai

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: