தேன் கிண்ணம் (Then Kinnam)


பல்லைக் கடித்துக்கொண்டு பாதி வரைக்கும் பார்த்தேன். அதற்கு மேல் தாங்க முடியவில்லை. நாகேஷ், சுருளி ராஜன், வி.கே. ராமசாமி, எம்.ஆர்.ஆர்.வாசு, தேங்காய் ஸ்ரீனிவாசன், ராமாராவ் என்று ஒரு பெரிய நகைச்சுவை நடிகர் பட்டாளமே இருக்கிறது. நகைச்சுவைதான் இல்லை. தாங்க முடியாத படம். சன் டிவிக்கு ஒரே இந்த நிகழ்ச்சியில் ஒரு criterionதான் இருக்கிறது – படம் ஒரு 25 வருஷங்களுக்கு முன்னால் வந்திருக்க வேண்டும். ஒரு தீம் இருந்தால் நன்றாக இருக்கும். இதே படத்தைக் கூட லோ பட்ஜெட் 70களின் நகைச்சுவை படங்கள் என்ற தீமில் காசேதான் கடவுளடா, காசி யாத்திரை போன்ற படங்களுடன் திரையிட்டால் 70களில் எதை நகைச்சுவை என்று நினைத்தார்கள் என்று தெரிந்து கொள்ளவாவது பார்க்கத் தோன்றலாம். இப்போதோ விளம்பரம் எப்போது வரும் என்று காத்திருக்க வேண்டிய நிலைமை. தேன் கிண்ணம் தேன் கிண்ணம் என்ற பாட்டுதான் கொஞ்சமாவது கேட்கும்படி இருக்கிறது. அதுவும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய பாட்டு அல்ல.