நான் ஏன் பிறந்தேன் (Naan Yen Piranthen)


நேற்று இந்த படத்தை பார்க்க முடியவில்லை. ஆனால் பல வருஷங்களுக்கு முன்னால் பார்த்திருக்கிறேன். எம்ஜியார் ஆரஞ்ச் பாண்ட், மஞ்சள் சட்டை, சுருள் முடி விக் போன்றவற்றுடன் உலா வந்த காலம். கலர் படம் என்றால் எல்லாரும் அழுத்தமான கண்ணைப் பறிக்கும் கலர் உடைகளை அணிய வேண்டும் என்று கதாநாயகர்களும் டைரக்டர்களும் புரொட்யூசர்களும் நினைத்திருந்த காலம்.

எம்ஜியாரைத் தவிர கே.ஆர். விஜயா, காஞ்சனா நடித்த படம். நம்பியார், மேஜர் சுந்தரராஜன், நாகேஷ், வி. கோபாலகிருஷ்ணன் போன்ற பலரும் உப்பு சப்பில்லாத ரோல்களில் வந்து போவார்கள். படத்தின் முக்கிய காரக்டர்களுக்கு உள்ள ரோல்களுக்கு மட்டும் உப்பு சப்பு உள்ளதா என்று கேட்கக்கூடாது. 70களின் ஆரம்பத்தில் கொஞ்ச நாள் எம்ஜியாருக்கும் எம்.எஸ். விஸ்வநாதனுக்கும் ஏதோ தகராறு போலிருக்கிறது. அதனால் ஷங்கர் கணேஷ் நான் ஏன் பிறந்தேன், இதய வீணை, ராமன் தேடிய சீதை போன்ற சில படங்களுக்கு இசை அமைத்தார்கள். எம்.எஸ்.வி. அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு நன்றாகவே இசை அமைத்திருந்தார்கள். அதற்கு எம்ஜியார்தான் முக்கிய காரணம் என்று சொல்லுவார்கள். எம்ஜியார் தன் படத்தின் பாடல்களில் மிகவும் கவனம் செலுத்துவார் என்றும் அவருக்கு திருப்தி வரும் வரை இசை அமைப்பாளர்களை விடமாட்டர் என்றும் சொல்லுவார்கள். இந்த படத்திலும் சில நல்ல பாடல்கள் உண்டு. “நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்” என்பதுதான் தலை சிறந்த பாட்டு. அந்தப் பாட்டை கேட்டவுடன் நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் காஞ்சனா எழுந்த நடக்க ஆரம்பித்துவிடுவார்! “நான் ஏன் பிறந்தேன்“, “தம்பிக்கு ஒரு பாட்டு”, “உனது விழியில் எனது பார்வை” போன்ற நல்ல பாட்டுக்களும் இருக்கின்றன.

எம்ஜியார் படத்தில் சாதாரணமாக எதிர்பார்க்கும் சாகசங்கள் எதுவும் இந்தப் படத்தில் கிடையாது. ஏறக்குறைய ஒரு சிவாஜி படத்தின் கதையில் எம்ஜியார் நடித்திருப்பார். படத்தின் ஒரே பலம் பாட்டுக்கள்தான். அழ்கான காஞ்சனாவை விட்டுவிட்டு ஏன் கோரமாக இருக்கும் குண்டு கே.ஆர். விஜயாவை கதாநாயகியாக போட்டார் என்று தெரியவில்லை. தன் ஆஸ்தான கதாநாயகிகளான மஞ்சுளாவையோ இல்லை லதாவையோ போட்டிருக்கலாம். படம் ஒன்றும் பிரமாதமாக ஓடவில்லை என்று நினைக்கிறேன். ஆனால் எம்ஜியாரின் படங்களுக்கு உள்ள மினிமம் காரண்டி இதற்கும் இருந்திருக்கும்.

நேற்று இந்தப் படத்தை பார்க்க முடியாத காரணம் “டார்க் நைட்” என்ற ஆங்கிலப் படத்தைப் பார்க்க சென்றதுதான். கொடுமை கொடுமை என்று கோவிலுக்குப் போனால் அங்கே ஒரு கொடுமை கூத்தாடியதாம். சில படங்களைப் பார்க்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு பேக்ரவுண்ட் தேவைப்படுகிறது. Batman காமிக்ஸ் படித்து வளர்ந்தவர்கள், அவர்கள் சிறு வயதில் படித்த one dimensional caricatures வளர்ந்து full fledged characters ஆக மாறுவதை ரசிக்கலாம். நான் படம் எப்போது முடியும் என்று அவ்வப்போது மணியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் இப்போதைக்கு இந்தப் படம்தான் பாக்ஸ் ஆபீஸ் நம்பர் 1.

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

2 Responses to நான் ஏன் பிறந்தேன் (Naan Yen Piranthen)

  1. சாரதா says:

    இப்படம் வந்த காலத்தில் எம்.ஜி.ஆருக்கும், மெல்லிசை மன்னருக்கும் பிணக்கு எதுவும் இல்லை. படத்தை த்யாரித்த ‘அசோகா பிரதர்ஸ்’ வேலாயுதம் நாயர், சங்கர் கணேஷைப் போட வேன்டும் என்று விரும்பியதால் போட்டார்கள். இப்படத்தின் பாடல்களைக்கேட்ட எம்.ஜி.ஆருக்கு பாடல்கள் பிடித்துப்போக, அவ்ரே ‘இதயவீணை’ தயாரிப்பாளர் எழுத்தாளர் மணியனிடம் சங்கர் கணேஷை சிபாரிசு செய்தார். தவிர, ‘ராமன் தேடிய சீதை’ படத்துக்கு மெல்லிசை மன்னர்தான் இசையமைத்தார். சங்கர் கணேஷ் அல்ல.

  2. RV says:

    சாரதா,

    நான் வேறு மாதிரி வதந்திகளை கேள்விப்பட்டிருக்கிறேன். எம்.எஸ்.வி. சோவின் முகமது பின் துக்ளக் படத்திற்கு இசை அமைத்தபோதே கொஞ்சம் பிணக்கு ஏற்பட்டதாகவும், பூக்காரி படத்திற்குப் பிறகு இந்தப் பிணக்கு இன்னும் தீவிரம் அடைந்ததாகவும் எனது சிறு வயதில் கேள்விப்பட்டிருக்கிறேன். அவருக்கு சங்கர் கணேஷ் இசை பூரண திருப்தி அளிக்காததால்தான் அவர் மீண்டும் எம்.எஸ்.வி. யிடம் போனார் என்று சொல்வார்கள். இது கேள்விப்பட்டதுதான். நீங்கள் சொன்னது போல் யாராவது தயாரிப்பாளருக்காக கூட அவர் இந்த மாற்றத்தை ஒத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் எனக்கு தெரிந்து தேவரின் எம்ஜியார் படங்களில் கூட தேவரின் ஆஸ்தான இசை அமைப்பாளர்கான ஷங்கர் கணேஷ் இசை அமைத்ததில்லை. தேவர் எடுத்த கடைசி எம்ஜியார் படம் நல்ல நேரம் என்று நினைக்கிறேன். ஒரு வேளை அப்போது ஷங்கர் கணேஷ் தேவரின் ஆஸ்தான இசை அமைப்பாளர்கள் ஆகவில்லையோ என்னவோ?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: