திரிசூலம் (Thirisoolam)


1979-இல் வந்த படம். அன்றைய சிவாஜி ரசிகர்களுக்கு நல்ல தெம்பூட்டிய படம். உலகம் சுற்றும் வாலிபன், உரிமைக் குரலுக்கு பின்னால் எம்ஜியார் படங்கள் பெரிய வெற்றி அடையவில்லை. சிவாஜியின் பல படங்கள் (தீபம், அண்ணன் ஒரு கோவில், அந்தமான் காதலி, தியாகம், என்னைப் போல் ஒருவன், பைலட் ப்ரேம்னாத்) வர்த்தக ரீதியாக பெரும் வெற்றி அடைந்திருந்தன. அவரது நடிப்பும் அண்ணன் ஒரு கோவில், தியாகம் போன்ற பல படங்களில் ரசிக்கப்பட்டது. அவரது நீண்ட நாள் போட்டியாளரான எம்ஜியார் முதல் அமைச்சராகி படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இந்த நிலையில் திரிசூலம் அடைந்த மகத்தான வெற்றியும், ஒரு ரோலில் அன்றைய இளம் கதாநாயகர்களான கமல், ரஜினி ஆகியோரொடு போட்டி போடும் அவரது “இளமைத் துள்ளலும்” ஒரு ரோலில் அவரது ட்ரேட் மார்க் நடிப்பும், சிவாஜி ரசிகர்களை பெரிய அளவில் உற்சாகப்படுத்தின. அவர்தான் ராஜா, கமல் ரஜினி போன்றவர்கள் வெகு தூரத்தில் இருக்கிறர்கள் என்று தோன்றியது.

இன்று யோசித்துப் பார்த்தால் அதிசயமாக இருக்கிறது. இந்தப் படத்துடன் சிவாஜியின் சகாப்தம் முடிந்துவிட்டது. அதற்குப் பிறகு அவர் தனது ட்ரேட் மார்க் ஸ்டைலில் நடித்த படங்கள் ஒன்று கூட வெற்றி பெறவில்லை. அப்படி அபூர்வமாக வெற்றி பெற்ற படங்களில் அவர் வயதானவராகத்தான் நடிதிருந்தார். (கீழ்வானம் சிவக்கும், ரிஷிமூலம், கல் தூண்). அவரது படங்களுக்கு ஒரு எதிர்பார்ப்பே இல்லை. அதற்கு பிறகு அவரது நடிப்பு பரவலாக ரசிக்கப்பட்டது அபூர்வமே. முதல் மரியாதையில் அவர் மிகவும் அடக்கி வாசித்தது நினைவிருக்கலாம். அதையே மிகை நடிப்பு என்று என் நண்பன் பாலமுரளி சொல்லுவான். (இன்னும் ஆஸ்திரேலியாவில்தான் இருக்கிறாயா, பால்ஸ்?) எப்படி மக்களின் ரசனை இவ்வளவு விரைவில் மாறியது என்பது ஒரு பெரிய புதிர்தான்.

77, 78 வாக்கில்தான் நான் மெதுவாக ரஜினி/கமல் ரசிகனாக மாறிக்கொண்டிருந்தேன். குறிப்பாக பைரவி படத்தின் போஸ்டர்களில் ரஜினி ஒரு உள்ளெ சட்டை ஏதும் போடாமல் ஒரு கறுப்பு கோட்டு அனிந்திருந்த கோலத்தை பார்த்தபோது “ஸ்டைலு ஸ்டைலுதான்” என்று தோன்றியது. அதே போல் “என்னடி மீனாட்சி” டான்ஸைப் பார்த்து கமல் ரசிகர்கள் ஆனவர்கள் அனேகம். இதில் சிவாஜியும் அதே ஸ்டைலில் தன்னை சாட்டையால் அடித்துகொள்ளும் காட்சியில் சட்டை ஏதும் இல்லாமல் நீண்ட, திறந்த ஓவர்கோட்டுடன் வருகிறார். கொடுமையடா சாமி!

கன்னடத்தில் ராஜ்குமார் நடித்து பெரிய hit ஆன “சங்கர் குரு” படத்தின் ரீமேக். 3 சிவாஜிக்கள். ஒருவர் பாரம்பரிய சிவாஜி ரசிகர்களுக்காக “சுமதீஈஈ” டயலாக்குடனுடனும், இன்னொருவர் புது ஜெனரேஷனுக்காக நக்கல் வசனங்களுடனும், ஒருவர் சும்மா டம்மியாகவும் வருவார்கள். அன்றைய கவர்ச்சிக் கன்னியான ஸ்ரீப்ரியா முதன்முதலாக சிவாஜிக்கு ஜோடியாக நடித்த படம். வழக்கம் போல கையை பிசையும் நம்பியார், ஆ என்று கத்தும் வி.கே. ராமசாமி, காண்பவர்கள் கண்களை குளமாக்கும் கே.ஆர். விஜயா, புஷ்பலதா, மேஜர், ஜெய்கணேஷ் முதலானோரும் நடித்திருக்கிறர்கள்.எம்.எஸ்.வி.யின் இசையில், கண்ணதாசன் பாடல்களுடன், கே. விஜயன் இயக்கத்தில் வந்த படம்.

பாட்டுக்கள் எல்லாம் சுமார்தான். “மலர் கொடுத்தேன்” பாட்டு சிவாஜியை பல வருஷங்கள் கிண்டல் செய்ய பயன்பட்டது. “காதல் ராணி”, “திருமாலின் திருமார்பில்”, “இரண்டு கைகள்” போன்ற பாட்டுக்களும் உண்டு.

கதை இன்று cliched ஆக தெரிகிறது. 79இல் அப்படி தோன்றவில்லை. தன் மனைவி கே.ஆர். விஜயாவை விட்டு ஓடிவிடும் சிவாஜி காஷ்மீரில் பெரிய எஸ்டேட் அதிபர் ஆகிவிடுவார். தன் மனைவியை தவிக்கவிட்ட குற்றத்துக்காக வருஷத்துக்கு ஒரு முறை திதி கொடுப்பது போல் சாட்டையடி வாங்குவார். கே.ஆர். விஜயாவின் இரட்டைக் குழந்தைகளில் ஒன்றை டாக்டர் புஷ்பலதா மேஜரிடம் கொடுத்துவிடுவார். அந்தக் குழந்தை குறும்புக்கார குருவாக வளரும். இன்னொரு குழந்தை கே.ஆர். விஜயாவிடம் – போலிஸ் அதிகாரி சங்கர். அவர் போலிஸ் அதிகாரி என்பது யாருக்கும் தெரியாது. 25 வருஷம் கழித்து எல்லாரும் காஷ்மீருக்குப் போவார்கள். குரு ஸ்ரீப்ரியாவைக் காதலிக்க போவார். சங்கர் துப்பு துலக்கப் போவார். ஓடிப் போன சிவாஜி கூப்பிட்டதால் கே.ஆர். விஜயாவும் வருவார். வில்லன்களும் அங்கே இருந்தால்தான் அடி வாங்க முடியும் என்று அங்கே போவார்கள். டாக்டர் புஷ்பலதாவும் குருவுக்கு ஸ்ரீப்ரியாவுக்கும் காதல் உண்டாக்கவும், எல்லா உண்மைகளையும் சொல்லி சங்கரையும் குருவையும் அம்மாவையும் இணைக்க அங்கே போவார். எனக்கும் ஒரு டிக்கெட் வாங்கி கொடுத்திருந்தால் நான் என்ன வேண்டாமென்ற சொல்லப் போகிறென்?

எங்கோ கொள்ளை அடித்த நெக்லஸ் சங்கர் கையில் சிக்கி, அதை வில்லன்கள் தேடி அலைந்து இரண்டு சிவாஜிகளும் இணைந்து “இரண்டு கைகள் நான்கானால்” என்று பாட்டெல்லாம் பாடி, வில்லன்களை அடித்து உதைத்து எல்லாரும் ஒன்று சேர்ந்து சுபம்! (எனக்கென்னவோ சுபம் என்று எழுதினால்தான் நிறைவு!)

எல்லாரும் அடிக்கடி காஷ்மீருக்கு போகிறேன் என்பார்கள். ட்ரங்க் கால் கூட ஸ்ரீநகருக்கோ குல்மார்க்குக்கோ புக் செய்ய மாட்டார்கள் – காஷ்மீருக்குத்தான் செய்வார்கள். அந்தக் கால டெலிஃபோன் ஆபரேட்டர்கள் பாடு படுகஷ்டம்!

சிவாஜியும் கே.ஆர். விஜயாவும் நடத்தும் டெலிஃபோன் உரையாடல் புகழ் பெற்றது. இன்னும் கூட அவ்வப்போது அசத்தப் போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் “சுமதீஈஈஈ” என்ற அலறலை கேட்கலாம். எஸ்.வி. சேகரின் “காட்டுல மழை” நாடகத்தில் இது மிகவும் கிண்டல் செய்யப்பட்டது.

ஆனால் படம் வந்தபோது எல்லாருக்கும் – பள்ளி கல்லூரி மணவர்களுக்கும் – குரு காரக்டர் பிடித்துத்தான் இருந்தது. சும்மா கலக்கிவிட்டார் என்றுதான் நானும் 13 வயதில் நினைத்தேன். The story just hasn’t aged well.

தீவிர சிவாஜி ரசிகர்கள் பார்க்கலாம்.

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

9 Responses to திரிசூலம் (Thirisoolam)

 1. சாரதா says:

  உலகத்தில் மிகச்சுலபமான விஷயம், மற்றவர்கள் செய்தவற்றை, கேலியும் கிண்டலும் நக்கலும் நையான்டியும் செய்வதுதான். அந்த வகையில்தான் ‘கலக்கப்போவது யாரு’, ‘லொள்ளு சபா’, ‘சூப்பர் 10’ போன்ற நிகழ்ச்சிகளில் இதுபோன்ற படங்களும் அவற்றின் வசனங்களும் கிண்டலடிக்கப்பட்டன. ஏன், ரஜினியின் ‘ஒரு தடவை சொன்னா’, ‘நான் எப்போ வருவேன்’, போன்ற வசனங்களும், கமலின் ‘அபிராமி… அபிராமி…’ (குணா) மற்றும் நாயகனில் தன் மகன் சூர்யா (நி.ரவி) பிரேதத்தைப் பார்த்து கமல் அலறும்… ‘ஆ… ஆ… ஆ…’ ஆகியவை இன்றளவும் கிண்டலடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதை விவேக் போன்ற திரைக்கலைஞர்களும் செய்வது வேதனை. (விவேக்கைக் கண்டால் சொல்லுங்கள்… அவரது ‘ஜிப்பை போடுய்யா’ டயலாக் ஓவர் டோஸாகி நகைச்சுவை எல்லையைத்தாண்டி அருவருப்பு எல்லைக்குப் போய் விட்டது’ என்று).

  திரிசூலத்தைப்பொறுத்தவரை யார் என்ன சொன்னாலும் ஒரு விஷயத்தை மட்டும் மறக்கவோ மறைக்கவோ முடியாது. படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கும், திரையிட்ட அரங்க உரிமையாளர்களுக்கும் ‘கல்லாப்பெட்டிகள்’ நிறைந்து வழிந்தன என்ற உண்மைதான். மக்களின் ஒட்டுமொத்த ஆதரவின்றி இது சாத்தியமேயில்லை என்பது சிறு குழந்தைக்கும் கூட தெரியுமே.

 2. plum says:

  sarada, vidunga. Ivar has a default template- MGR padama irundha, adhu minimum guarantee irundhirukkum apapdinnu solvaaru. Adhavadhu, ivarukku theriyaadhu but default assumption adhu dhaan. Adhe maadhiri, sivaji padamna, default assumption mokkai.
  What can you expect from such a pre-determined person?

 3. nagarajan says:

  I saw the movie and enjoyed it.
  Later, in 1983, Sivaji had a super hit in ‘Sandhippu’

 4. RV says:

  Nagarajan,

  Thanks for the info. I thought Sandhippu didn’t do well, but my memory could be wrong…

 5. saravanan says:

  திரிசூலம் சந்திப்பு போன்ற திரைப்படங்கள் நன்றாக ஓடி வசூல் செய்த படங்களா ?
  அடக் கடவுளே !
  அவ்வளவு ‘மட்டமான ரசனை’கொண்ட ரசிகப் பெருமக்கள் இருந்திருக்கிற‌ போது
  ந‌ம்ம‌ சிவாஜியை குத்த‌ம் சொல்லி என்ன‌ ப‌ய‌ன்

  இப்போ இருக்கிற‌ சின்ன‌ப் ப‌ச‌ங்க‌ளே ந‌டிக்கிற‌ சான்ஸுக்காக‌ ஒட‌ம்ப‌ கொறைக்கிறது பழக்க வழக்கங்கல ஒதுக்கி படம் முடியற வரைக்குமாச்சும்
  கதாபாத்திரத்துக்கு பொருத்த‌மா ஆக்கிக்கிற‌து இன்னும் என்னமோ ..எல்லாம் எதுக்கு
  தொழில் மேலே காட்டுற‌ ஆர்வ‌ம்
  ந‌ம்ம‌ சிவாஜி ‘நாம‌ என்ன‌ ப‌ண்ணா என்ன? பார்கிற‌துக்கு ப‌ட‌த்த‌ ஓட‌ வெக்க‌ற‌துக்கு இளிச்ச‌ வாய்ப்ப‌ச‌ங்க‌ இருக்காங்க என்னத்தையாச்சும் பண்ணித் தொலைப்போம்’ன்னு நெறைய‌வே ப‌ண்ணியிருக்காரு போல‌ தெரியுது
  ஆர‌ம்ப‌ கால‌த்து ப‌ட‌ங்க‌ள‌ பாத்து நடிக‌ர் தில‌க‌ம்ன்னு ப‌ட்ட‌ம் கொடுத்தாங்க‌
  ஏன்டா கொடுத்தோமின்னு‌ வ‌ருத்த‌ப் ப‌ட‌ற‌ மாதிரி ஊதிக் கெடுத்திருக்கார் ஆண்டி

  • Karthikeyan says:

   Oh…What an aversion you have got against Mr.Sivaji Ganesan. What did your Ramachandran do in Naalai Namadhey….oorukku uzhaipavan…Meenava Nanban….Idhayakani etc., my dear friend…Romba Superaa irukaradha Nenappa…? Heroine definitaa Ammanama Sivaji Kaatala…Unga Ramachandran Naalai Namadhey padathula Lathaava Thugil uriyara kaatchi…Nee un familyoda ukkandhu Paapiya? But Thirisoolam…Sandhippu Padangala Familyoda ukkandhu paakalam..Puriyidha..Adhudhaan Sivaji ! Inimayum Thaazhpunarchiyaal Muttal thanamaaga Pesaadhey….films like Kapal Oatiya Thamizhan…Thiruvarutchelvar..Enga oor Raja…etc., Avarum Udal varuthi nadichirukkar…ennamo indha generationukku Vakkalathu Vaangi pesara maadhiri nadikaadhada…!! Sivaji ennakumae Makkala Yemaathala…Aana..unga Ramachandran Nalla janangala aemaathiirukkan da….

 6. RV says:

  Saravanan,

  Ennanga, Thirisoolam is a blockbuster! I don’t know about Sandhippu myself, but I am told that it is a hit…

 7. Arumugam says:

  Intha padam rajapalayam theatreil andre oru matham odiyathu..!(full house -Mahalaksmi talkies)
  innoru padam Thiyagam..Dhana lakshsmi talkies il oru matham odiyathu.. eranduma en favourite
  sivaji padangal..!

 8. Kannan says:

  Your review is all balls. You are a fan of MGR, Rajini and Kamal. Obviously you will feel jealous that all 3 favourite heroes could touch even shadows of Sivajis success.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: