எம்ஜியார் குதிரை பறக்கட்டுமே சிவாஜி தொப்பை வெடிக்கட்டுமே என்பதில்லை


இந்த ப்ளாகை படிக்கவும் படித்து அதைப் பற்றி கருத்தும் தெரிவித்த சிலர் (சாரதா, ப்ளம், ராஜ்) எனது pro MGR anti sivaji bias பற்றி குறிப்பிட்டுள்ளார்கள்.

முதலில் கருத்து தெரிவித்தவர்களுக்கு நன்றி. மனைவியின் “உங்களுக்கு வேற வேலை கீலை எதுவும் இல்லையா” போன்ற ஊக்கம் தரும் கேள்விகளை மீறி எழுதும்போது தனது கருத்துக்களை மற்றவர்கள் படிக்கிறார்கள், அதற்கு பதிலும் எழுதுகிறார்கள் என்பது ஒரு உற்சாகத்தைத் தருகிறது. அதிலும் ஒவ்வொரு ப்ளாகுக்கும் சாரதா ஏதாவது பதில் எழுதமாட்டாரா என்று நான் ஆவலோடு எதிர்பார்ப்பேன். பொதுவாக அவரது கருத்துக்கள் மிகவும் lucid ஆக இருக்கும், தெரியாத விஷயங்கள் ஏதாவது வெளிப்படும். உதாரணமாக சுமதி என் சுந்தரி என்பது அந்தக் காலத்து இளைஞர்களுக்கு பிடித்திருந்த ஒரு “யூத்” படம் என்பதை அவர் சொல்லித்தான் நான் தெரிந்துகொண்டேன்.

சாரதா iconகள் கிண்டல் செய்யபடுவதைப் பற்றி கொஞ்சம் வருத்தப்படுகிறார். எனக்கு அதில் ஒன்றும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. பொதுவாக தமிழர்களுக்கு அவ்வளவு தடித்த தோல் இல்லை. சமீபத்தில் கூட ஜெயமோகன் மீது பாய்ந்தார்கள். நிறைய பேர் சொல்வது (சாரதா இப்படி சொல்லவில்லை) – அப்பேர்ப்பட்ட மகானை எப்படி குறை சொல்லலாம், எப்படி கிண்டல் செய்யலாம்? நெற்றிக்கண் திறந்தபோதும் குற்றம் குற்றமே என்ற பரம்பரை இதுதானா? கிண்டல் செய்யப்படுவதால் ஒரு iconக்கு ஒரு மாற்று குறைந்துவிடும் என்றால் அவர் ஒரு icon ஆகவே இருக்கமுடியாது!

எனக்கு எந்த விதமான biasஉம் இல்லை என்றுதான் நினைக்கிறேன். நான் பழைய படங்களை விரும்பிப் பார்ப்பது பாட்டுக்களுக்காக. பொதுவாகவே மிகச் சில பழைய படங்கள்தான் இன்றைக்கும் கதைக்காகவும் நடிப்புக்காகவும் பார்க்க கூடியவை என்றுதான் எனக்கு தோன்றுகிறது. ஒவ்வொரு காலத்திலும் சில எழுதப்படாத விதிகள் இருந்திருக்கின்றன, அந்த விதிகள் இன்று விசித்திரமாக இருக்கின்றன. இன்று பெல்பாட்டங்களையும் ஸ்டெப் கட்டையும் பார்த்து நமட்டு சிரிப்பு சிரிப்பதில்லையா?

கூத்து கலாசாரத்தில் இருந்து பாய்ஸ் நாடகங்கள் வழியாக உருவானது நமது தமிழ் சினிமா. அவற்றில் வசனங்கள் வழியாக மட்டுமே கதையை முன்னால் நகர்த்தி செல்ல வேண்டி இருந்த காலகட்டங்களின் தாக்கம் மிகவும் ஆழமாக பதிந்துவிட்டது. இன்று கூட அந்த தாக்கம் இருக்கத்தான் செய்கிறது. கூத்து மேடையில் யாரும் underplay செய்ய முடியாது. சினிமாவில் முடியும் என்பது நமது இயக்குனர்கள் உணர நீண்ட காலம் பிடித்தது. இதனால் பாதிக்கப்பட்ட நல்ல நடிகர்கள் அனேகம். சிவாஜியின் துரதிருஷ்டம், அவர் அந்த சகாப்தத்தின் பிரதிநிதியாக உருவாக்கப்பட்டதுதான். அவர் தனது நடிப்பு திறனுக்கு தீனி போடக்கூடிய கதைகளை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுத்தார். அன்றைய நடிப்பின் இலக்கணப்படி நன்றாக நடித்தார். நடிப்பின் இலக்கணம் மாறிவிட்டது அவர் தவறல்ல. (இலக்கணம் மாறிவிட்டது என்று நீங்கள் ஒத்துக்கொள்ள வேண்டியதில்லை, வேண்டுமென்றால் என் ரசனை வேறு என்று வைத்துக்கொள்ளலாம்.)

ப்ளம் எனது நடு நிலைமையை சந்தேகிக்கிறார். அவருக்கு ஒரு விஷயம் – சாரதா திரிசூலம் படத்தைப் பற்றி சொன்ன அத்தனை விஷயங்களையும் நானும் குறிப்பிட்டு எழுதி இருந்தேன். இருவரும் இந்த படம் வந்த போது மகத்தான வெற்றி அடைந்ததையும், அது இளைஞர்களை கவர்ந்ததையும் பற்றி எழுதி இருக்கிறோம். நான் சாரதாவை விட ஒரு படி மேலேயே போய் சிவாஜியின் குரு ரோலில் அவர் அன்றைய யூத் கதாநாயகர்களான கமல் ரஜினிக்கு சவால் விட்டதை பற்றி எழுதி இருந்தேன். நான் சில அதிகமான விஷயங்களையும் எழுதி இருந்தேன். ஒன்று இந்த படத்தில் யூத் மார்க்கெட்டையும் கவர்ந்தும், சங்கிலித் தொடராக பல படங்கள் வெற்றி அடைந்தும், அவரது நடிப்புக்கு அது வரை ஒரு பெரிய நிலையான மார்க்கெட் இருந்தும், அவரது நீண்ட நாள் போட்டியாளர் எம்ஜியார் திரை படங்களை விட்டு விலகிய பின்னும், இந்த பெரும் வெற்றியோடு திடீரென்று சிவாஜியின் சகாப்தம் முடிந்து போனது. இரண்டு, அவர்து “சுமதீஈஈஈ” டயலாக் இன்றும் கிண்டல் செய்யபடுவது. மூன்று, இந்த படம் இன்று ஒரு cliche ஆக தோற்றம் அளிப்பது. இதில் முதல் இரண்டும் facts. யாரும் மறுக்க முடியாது. மூன்றாவது என் கருத்து. இதை நீங்கள் ஒத்துக்கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் இது அப்படி ஒன்றும் improbable கருத்து அல்ல என்று ஏற்றுக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

நான் பெற்ற செல்வம் 1956-இல் அனேகமாக வெற்றி அடைந்திருக்கும். அதன் ஆத்மா 1930களின் பாய்ஸ் நாடகங்களிருந்து வந்ததுதான். 1956-இலேயே அது ஒரு clicheதான். திரிசூலம் 1960களில் மிக சிறந்த கதையாக இருந்திருக்கும். 1979இல் அது ஒரு clicheதான். இந்த clicheக்கள் வெற்றி அடைய சிவாஜியின் நடிப்பு திறன் ஒரு பெரிய காரணம்தான்.

எம்ஜியார் நடிக்க முயற்சி செய்யாதது அவருக்கு இன்று கொஞ்சம் அனுகூலமாகத்தான் இருக்கிறது. மாறிய இலக்கணமும் ரசனைகளும் அவரை அவ்வளவாக பாதிக்கவில்லை. அவர் சிவாஜி போல நடிக்க முயற்சி செய்யாததற்கு காரணம் முடியாத குறைதான் என்பது தெரிந்ததுதான். அவரது படங்கள் கீழ் தட்டு ரசிகர்களை அதிகமாக கவர்ந்தன. (சிவாஜிக்கோ மேல் தட்டு ரசிகர்கள் அதிகம்). எந்த ரக ரசிகர்கள் எண்ணிக்கை அதிகம்? அதனால்தான் அவரது படங்களுக்கு மினிமம் காரண்டி சாதாரணமாக இருந்தது. இப்படி பார்க்கலாம் – சிவாஜி படங்கள் சில சமயம் டக் அடித்தன, சில சமயம் செஞ்சுரி அடித்தன. எம்ஜியார் படங்கள் செஞ்சுரி அடிக்காவிட்டாலும் 30 40 ரன்களாவது அடித்தன. (சிவாஜி ஆடிய இன்னிங்ஸ்களும் அதிகம் – எம்ஜியாரும் அவரும் போட்டி போட்ட காலங்களில் அவர் எம்ஜியாரைப் போல இரண்டு பங்கு படங்களில் நடித்தார். புள்ளியியல்படி அவருக்கு தோல்வி அடைய வாய்ப்புகள் அதிகம்) நான் வளர்ந்த கிராமங்களில் பார்த்திருக்கிறேன் – எம்ஜியார் படங்கள் திரையிடப்படும்போது சோடாக்கடைக்காரர் சோடா கொஞ்சம் அதிகமாக தயார் செய்வார். சிவாஜி (வெற்றி) படங்களின்போது சேர் டிக்கெட்டுக்கள் அதிகமாக நிறையும். எம்ஜியாரின் எந்தப் படமாக இருந்தாலும் தரை டிக்கெட்டுக்கள் அதிகமாக நிறையும்.

இந்த ப்ளாகில் நான் சில சிவாஜி படங்களை பாற்றி நல்ல படியாக எழுதி இருக்கிறேன் (இரும்புத் திரை, சுமதி என் சுந்தரி). சில எம்ஜியார் படங்கள் நன்றாக இல்லை என்று எழுதி இருக்கிறேன் (நீரும் நெருப்பும்). சிவாஜியின் தொப்பையும், எம்ஜியாரின் சுருள் முடி விக்குகளும் என் கிண்டலுக்கு இலக்காகி இருக்கின்றன. சிவாஜி எனக்கு அதிக வாய்ப்புகளை தந்திருக்கிறார், அவ்வளவுதான்.

கௌரவம், மணமகன் தேவை, உத்தம புத்திரன், கப்பலோட்டிய தமிழன் போன்ற படங்களை பற்றி எழுதினால் நல்ல படங்கள் என்றுதான் எழுதுவேன். ரகசிய போலிஸ் 115 (எனது ஃபேவரிட் எம்ஜியார் காமெடி), உரிமைக் குரல் பற்றி எழுதினால் கிண்டல்தான் செய்வேன். வாய்ப்பை எதிர்பார்க்கிறேன். ஆனால் சிவாஜி படங்களின் சப்ளை அதிகம் (200+ படங்கள்). அவரது சென்டிமெண்ட் படங்களும் அதிகம்.

சிவாஜியின் மீது எனக்கு ஒரு வருத்தம் உண்டு. அவர் இன்னும் கொஞ்சம் யோசித்திருந்தால் காலத்தை வென்று நிற்கும் பல பாத்திரங்களில் நடித்திருக்கலாம். அவருக்கு அந்த திறமை இருந்தது. அவர் காலத்திலேயே ஜெமினி, முத்துராமன் போன்ற சிலர் ஓரளவு இயற்கையாக நடித்தார்கள். சிவாஜி நினைத்திருந்தால் மக்களின் ரசனையை மாற்றி இருக்கலாம். இன்னும் 50 வருஷங்கள் கழித்து சிவாஜியின் படங்களை யார் பார்ப்பார்கள்? இன்று தியாகராஜ பாகவதர் படங்களை யார் விரும்பிப் பார்க்கிறார்கள்?

நீங்களும் உங்கள் வியூபாயின்டை முன் வைத்து என்னுடன் சேர்ந்து யாராவது இந்த ப்ளாகை எழுதுகிறீர்களா? அதுவும் சாரதா எழுதினால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன். இன்று காஞ்சித் தலைவன், வியாழன் அன்னமிட்ட கை, வெள்ளி இமயம். ப்ளம், ராஜ், வேறு யாராவது சேர்ந்து எழுத வருகிறீர்களா?

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

17 Responses to எம்ஜியார் குதிரை பறக்கட்டுமே சிவாஜி தொப்பை வெடிக்கட்டுமே என்பதில்லை

 1. Bags says:

  Ezhutha muyarchikkiren…Eppadi type cheiyavendru theriyavillai. munnaatkalil Murasu Anjalkku pareetshayam aahierunthen. Ippozhuthu install pannakkooda mudiayavillai..Azhaki software try pannikoduirukkiren…veeru idea irunthal kooravum.
  Bags

 2. RV says:

  http://suratha.com/reader.htm

  I use this site to type it, convert to “Romanised” and then cut and paste it. Perhaps there are better ways…

 3. Bags says:

  பராசக்தி திரிசூலம் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் எனக்கு என்னவோ முதலில் அழகான கணேசன் என்று ஒருவர் நடித்த மாதிரியும் பின்னர் ஒரு பானையை வயிற்றில் சுமந்தவாரு சிவாஜி என்ற ஒருவர் நடித்த மாதிரியும் இருக்கிறது. இங்கே TVயில் சில சமயம் ஒரு கமெர்சியல் தோன்றும். ஆதில் ஒரு வயதான மனிதர் கார்ட் அட்டக் வந்து 911க்கு தொலை பேசியில் கூப்பிட முயர்சிப்பார். அப்பொழுது அவர் கீழே விழுந்து விடுவார். அப்பொழுதும் கூட அவர் கையை மட்டும் தொலை பேசியை நோக்கி நீட்டுவார். ஆனால் சிவாஜிக்கு மனைவியிடம் பேசவென்டுமென்றல் “சுமதீஈஇ…” வசனம் பேசவேண்டுமென்று யார் சொல்லி கொடுதார்களோ!

 4. சாரதா says:

  1952-ல் இருந்த தோற்றத்திலேயே ஒருவர் 1978-லும் இருக்க வேண்டும் என்று நினைப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. அதுமட்டுமல்லாது, அதென்னவோ சிவாஜி என்றதுமே தொப்பை என்றொரு எண்னமே மேலோங்கியிருப்பதும் அதை வைத்தே அவரைக் கேலி செய்வதும் வழக்கமாகிவிட்டது. அவர் அப்படியிருந்த காலம் என்றால் 1960 முதல் 1965 வரை. பின்னர் 1978 முதல் 90 வரை என்று சொல்லலாம். (1966-ல் வந்த சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர் படங்களில் வெற்றுமார்போடு வருவார். அவற்றில் தொப்பை எங்கேயிருந்தது என்று யாராவது சொன்னால் தேவலை). தொடர்ந்து வந்த தங்கச்சுரங்கம், தெய்வமகன், நிறைகுடம், திருடன், எங்கமாமா, சொர்க்கம் போன்ற ஏராளமான படங்களின் அவருக்கு தொப்பையெல்லாம் எங்கேயிருந்தது?. நேச்சுரலாக இருக்க வேண்டுமென்பதற்காக குலமா குணமா, சவாலே சமாளி போன்ற படங்களில், படம் முழுக்க வேஷ்டி சட்டையுடன் வந்தாரே, மற்ற ‘சிலருக்கு’ இம்மாதிரி தைரியமெல்லாம் இல்லையே. கூலிங்கிளாஸ் போட்டுக்கொண்டு டிராக்டர் ஓட்டிய விவசாயிகளைத்தானே பார்த்தோம்?. ஒரு வாதத்துக்காக, அவர் தொப்பை நடிகர் என்று வைத்துக்கொண்டாலும் கூட, அவர் தொப்பையில்லாத பல நடிகர்களுக்கு கடும் சவலாக இருந்தார் என்பதும், பலமுறை அவர்களை புறமுதுகிடச்செய்தார் என்பதும் உண்மையல்லவா?. ‘பராசக்தி’யைப்போல ‘திரிசூலத்தில்’ இல்லாமல் இருக்கலாம். ஆனால் பராசக்தி பெற்ற வெற்றியை திரிசூலமும் பெற்றதே அது எப்படி?.

 5. RV says:

  முதலில் bagsஉம் நானும் நெருங்கிய நண்பர்கள் எனபதை சொல்லிவிடுகிறேன். :-))

  இந்த முறை நான் சாரதாவின் கருத்துக்களோடு வேறுபடுகிறேன். அவர் சொன்னபடி சிவாஜிக்கு தொப்பை இருந்தது 196065, 78க்கு பிறகு என்பது உண்மைதான். தொப்பையோடும் அவருக்கு பல வெற்றிகள் கிடைத்தன என்பதும் உண்மைதான். அவருக்கு தொப்பை நடிகர் என்ற ஒரு இமேஜ் இருப்பதும் உண்மைதான். அவருக்கு தொப்பை நடிகர் என்ற இமேஜுக்கு காரணமே அதுதான் – தொப்பையோடு கதானாயகனாக நீண்ட காலம் நடித்த ஒரே நடிகர் அவர்தான். பிரச்சினை என்னவென்றால் அவர் தனது தொப்பையோடு இளைஞராக பல படங்களில் நடித்ததுதான். எஸ்.வி. ரங்காராவின் தொப்பையைப் பற்றியோ, டி.எஸ். பாலையாவின் தொப்பையைப் பற்றியோ யாரும் எதுவும் சொல்வதில்லை. கல் தூணில் இவருக்கு தொப்பை இருந்தால் அது நம் கண்களுக்கு தென்படாது. சந்திப்பு படத்தில் அவருக்கு இருக்கும் தொப்பை உறுத்தத்தான் செய்கிறது. (புதிய பறவையில் கூட எனக்கு உறுத்தவில்லை. அதில் அவர் பணக்காரர், அவரது உடலில் முதுமையும் தெரியவில்லை). அதிலும் ஏழை இளைஞராக வரும்போது மிகவும் உறுத்துகிறது. திரிசூலம் வெற்றி பெற்றது, விஸ்வரூபம் தோல்வி அடைந்தது. அவரது எந்த படத்தின் வெற்றி தோல்விக்கும் அவரது தொப்பை ஒரு காரணம் அல்ல!

  எம்ஜிஆர் 1970 வரைக்கும் தன் உடலை நன்றாகவே வைத்திருந்தார். 70களில் அவரது சுருள் முடி விக்குகளும், பிங்க் மேக்கப்பும், வயதான உடலும் உறுத்த்த்தான் செய்கின்றன.

  தொப்பையை பற்றி நான் பேசலாமா? Good question. :-))

 6. Bags says:

  சாரதா, நானும் சிவாஜியின் அங்க லாவண்யங்களை விமர்சிப்பது சற்று நாகரீகம் குரைந்த செயலாகத் தான் கருதுகிறேன். எனது தாழ்மையான மனிப்புகள். RVயும் ஏன் நானும் குழந்தைகளை செவ்வணே வளர்க்கிறோமோ இல்லையோ தொப்பையை நன்றாகவே வளர்த்து வருகிறோம். தொப்பையை குறைக்க முடியாமல் போனாலும் தொப்பையை பற்றிய விமரிசனத்தை குறைக்க முடியும் என நினைக்கிறேன்.
  ஆனால் உங்களது கூலிங் க்ளாஸ் போட்டுக் கொண்டு ட்ராக்ட்டர் ஓட்டும் விவசாயி யதார்த்தமற்றது என்ற வாதம் ஏற்ப்புடையதாக இல்லை. Probably by wearing shades MGR taught peasants how to work in the farms with protective gears 🙂 என்னை கேட்டால் அரசியல் கட்சிகள் TVயும் fancy itemகளையும் கொடுப்பதற்க்கு பதிலாக கூலிங் க்ளாஸ் மட்டுமல்ல சன்ஸ்க்ரீனும் சேர்த்து கொடுக்கவேண்டும் என்று சொல்வேன். (முடிந்தால் ட்ராக்ட்டரும் தான் கொட்டுகட்டுமே!)

 7. Bags says:

  கல்லூரி நாட்களில் பிற்கால “பொறியாளர்கள்” (நான் நல்லவன் என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்?) ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சாயும்காலம் மெய்ன் கேட் கடைகளுக்கு பின்னால் இருக்கும் அன்றைய டாஸ்மாக்கில் மய்ஸூர் மாண்டி எனப்படும் சோம பானம் அருந்திவிட்டு அப்படியே மெஸ்ஸில் சிக்கன் மற்றும் biriyani இரண்டையும் கபள்ீஹரம் செய்துவிட்டு அதே வேகத்தில் Auditorium சென்று ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சேர்களை அலங்கோலமாக்கி தொண்டை கிழிய “MGR பிட்டு போடுடா” என ஆரம்பம் முதல் கத்தி, MGR “பொன்னந்தி மலை பொழுது” என்று மரத்தை சுத்தி சுத்தி வந்து பாடியவுடன் பரவசம் அடைந்து மிச்சம் மீதி இருந்த சேர்களையும் பரக்கடித்த கலாச்சாரத்தில் இருந்து வந்ததாலோ என்னவோ MGR திரைபட பாடல்களில் எனக்கு ஒரு ஈர்ப்பு. (RVக்கும் இருக்கும் என நினைக்கிறேன்). அதைத் தவிற MGR திரைப்பட வசனங்களிலும், கண்ணதாசனின், பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் MGRக்காக பாடிய பாடல்கள் மீதும் ஈர்ப்பு! மற்றப்படி நிச்சயம் நான் “விஸிலடிச்சான் குஞ்சு” வகையை சேர்ந்த்தவனல்ல. சிவாஜி (பழைய திரைபடங்கள்), முத்துராமன், TS பாலையா, நாகேஷ், தேவிகா போன்றோர் நடிப்பதையும் விரும்பி பார்ப்பவன் நான். அதனால் MGRக்கு சாதகமாக எழுதுவதாக நினைக்கவேண்டாம்.

 8. plum says:

  Hi, ellorukkum bias irukkum.
  I am a critic of Thrisoolam myself
  But, being a critic is different from being biased.
  Bias is reflected in “by-default” statements
  I just quoted that *EVERY* MGR movie reviewed by you says that “It MUST HAVE BEEN min guarantee”. That is just a guess. MGR had some embarassing failures.
  This is what I was quoting.
  There is nothing wrong in being biased but one must recognise and accept one’s bias, thats all I am saying.

  Sivaji under-play pannave illaingaradhu pachai poi. Propoganda. Through the 60’s and even 70’s examples abound of his subtle performances. I never tire of quoting Motor Sundaram Pillai. Saradha would be able to list atleast 50
  That is, movies where Sivaji’s acting in 60’s and 70’s would CONFORM TO and SURPASS today’s grammar. Imagine that. That is a measure of the man. He didnt limit himself to the then-standards. He achieved future standards years ahead. You talk about MGR’s entertainers. IMO, none of them is a patch on Uthamaputhiran.
  None of Rajni’s style surpasses Sivaji’s in Uthamaputhiran. Sivaji did style stuff with Cigarette as early as Santhi well before Rajni.
  His sheer versatility would trump all his contemporaries put together – Muthuraman, Gemini did natural acting : you must be joking. There was only one man who could spontaneously touch all types of acting and that was what Sivaji was.
  It is a lie that a majority of his films were sentimental trash. Shorn of the melodrama points, even many of his otherwise melodramatic films of his have some wonderful subtle moments.

  If you dont understand this and go by your soda-seller in your village, then
  a) you are ignorant
  b) you do not know much about acting
  c) you have a poor grasp of evaluation methods for acting and entertaining.
  If I am harsh, I am sorry but these are facts that need mentioning.
  Now, as to whether I can share the load of writing this blog, thats where I am limited. I am not just capable of putting together a decent article on anything. Only thing I can do well is to rant, which is what I am doing now:-)

 9. RV says:

  plum,

  Your rants are very welcome. :-)) It is such honest reactions that keep this exercise of writing interesting.

  Every MGR movie I have reviewed so far happen to have at least minimum guarantee. Periya idatthup penn was a major hit. Arasa Kattalai was a hit. The rest, Kanchi thalaivan, Nan Yen Piranthen, Neerum neruppum are not very interesting movies. But Nan Yen Piranthen was a hit. The rest were at least minimum guarantee movies. What else should I write? :-))

  I don’t beleive that I said that Sivaji has never underplayed. Please see the intro page (you can go there from the about page). He underplayed in Motor Sundaram Pillai, but his emotional scenes were really stupidly conceived. (With 9-10 children from Sowcar, 4-5 from Manimala, he says that he went through hell for 25 years. Some hell. :-)) You could argue that is the writer’s fault.

  It is not that Sivaji never played a non-melodramatic role. He tended to play mostly melodramatic roles. Gemini/Muthuraman never reached the “heights” he reached. :-)) I agree that he could do all kinds of roles, he did do several kinds of roles, but his movies were predominantly melodramatic. He got typecast in those roles. Sometimes that melodrama is what is needed e.g. Gowravam. That was near perfect.

  Utthama putthiran is a great entertainer. Manamagan thevai is another. How many such entertainers did he star in? Do note that Ayiratthil oruvan, Nadodi mannan, enga veettup pillai, anbe va, ulagam sutrum valiban are all great entertainers. In other words, MGRs focus was on entertainers. Sivaji’s focus was on melodramas. I don’t think melodramas age as well as entertainers based on what I have seen. I understand that you may prefer such melodramas. :-))

 10. Bags says:

  Funny that we changed the language to exchange opinions. But this is comfortable as typing in Tamil takes a lot more time than it takes to type in English though it sounds better when I read it in Tamil about Tamil movies.
  Well. Sivaji is, indeed a melodramatist. Even if the plot had been an entertainer he would convert that to something else by his melodramatic actions. Imagine how he would perform if its a real melodrama!
  In some movies he showed real class. But for no reason suddenly he spoils that. I can give an example how he spoilt his own sober action in one of his movies. In Uyarntha Manithan which is a very decently acted one by Sivaji, he screwed up his own majestic performance by overdoing (sumatheeeeeeeee type – that was a harbinger for the later Thirisoolam) a scene. When his friend and family doctor, Asokan, passed away, he literally rolled over the ground and did all kinds of inexplicable things which were not at all necessary. Please note that Asokan’s demise was not something sudden or unanticipated according to the story. He suffered multiple attacks prior to that and Sivaji used to show utter calmness in the prior scenes when Asokan was happily filling in for Sivaji in overdoing.. You would wonder if Sivaji also had a heart attack by the way he acted in that scene. A great performance by Sivaji but why would he want to jinx it by scenes like the one I described?

 11. R.Gopi says:

  நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன்

  ஒரு மாபெரும் நடிகர். நடிப்பு சகாப்தம். நடிப்பில் உள்ள அனைத்து பரிமாணங்களையும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்திய பிறவி கலைஞன். நடிப்பின் அனைத்து சிகரங்களையும் அனாயாசமாக தொட்டவர். நடிகர் திலகம், நடிப்பு செம்மல், சிம்ம குரலோன் போன்ற பல பட்டப்பெயர்களில் அறியப்பட்டவர். தமிழை விடுத்து, வேறு எந்த மொழிகளிலும் அதிகம் நடித்திராததால், இந்தியாவின் பிற பகுதி மக்களால் அதிகம் அறியப்படாதவர்.

  வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன், அப்பர் போன்றோர் இப்படி தான் இருந்திருப்பார்கள் என்று சொல்லக்கூடிய / மறுதலித்து பேசாத அளவுக்கு அந்த கதாபாத்திரங்களை வெள்ளித்திரையில் வாழ்ந்து காட்டியவர்.

  அவர் நடத்த பாசமலர் என்கிற படம், அண்ணன் தங்கை உறவுக்கு ஒரு சான்றாக இன்றும் இருந்து வருகிறது. அவர் நடிக்கும் படங்களில், தன் நடிப்பாற்றலால், திரை அரங்கில் படம் பார்க்கும் அனைவரையும், திரையின் உள்ளே அழைத்து சென்று படத்தை நேரிலேயே பார்ப்பது போன்ற ஒரு நிலையை உண்டாக்கும் அளவு ஆற்றல் படைத்தவர்.

  அவரின் நடிப்புக்கு சாட்சி சொல்ல எத்தனை எத்தனை படங்கள் :

  தங்கபதக்கம்
  வீரபாண்டிய கட்டபொம்மன்
  கெளரவம்
  கர்ணன்
  பாசமலர்
  கப்பலோட்டிய தமிழன்
  பலே பாண்டியா
  பழனி
  உத்தம புத்திரன்
  வியட்நாம் வீடு
  தெய்வ மகன்
  உயர்ந்த மனிதன்
  எங்கிருந்தோ வந்தாள்
  பாக பிரிவினை
  அனைத்து பா வரிசை படங்கள் ………… போன்ற படங்கள் அவற்றில் சில ….. இந்த எண்ணிக்கையை சொல்லி அடங்காது …… எண்ணி குறையாது …. எழுதி மாளாது …..அதிலும் தெய்வ மகன் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்பின் உச்சத்தை தொட்டிருப்பார். அதனால் தான் நம் இந்திய அரசாங்கம் அவருக்கு சிறந்த நடிகருக்கான மத்திய அரசு விருதை தராமல், காவல்காரனுக்கு வழங்கியது …….. சிறந்த நடிகருக்கான விருது பெரும் முழு தகுதி இருந்தும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அந்த விருதை கடைசி வரை தராமல் இருந்ததற்கான காரணம் எனக்கு இன்று வரை புரியவில்லை.

  அதே சமயம், தெய்வ மகன் படத்தில் மூன்று வீதத்தில் வேடங்களில் தூள் கிளப்பியதற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான ஆசிய-ஆப்பிரிக்க விருது வழங்கப்பட்டது.

  இந்தியாவின் சிறந்த நடிகர் விருது நம்மால் தர முடியவில்லை. ஆனால் ஆசிய-ஆப்பிரிக்க சிறந்த நடிகர் விருது வாங்கி விட்டார். இதை என்னவென்று சொல்வது ??

  முன்னாளில் இது போன்ற சவாலான, நடிப்புக்கு மட்டும் முக்கியம் கொடுக்கும் வேடங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர் திலகம் அவர்கள், பின்னாளில், கதைக்கும், உருவத்திற்கும், உடைகளுக்கும் முக்கியம் எதுவும் கொடுக்கவில்லை என்பது வருந்தத்தக்கது (ஒரு இருநூறு படங்கள் கழிந்த நிலையில்). வருடத்திற்கு எட்டு, பத்து படங்களில் நடித்தது எந்த வித சாதனைகளையும் நிகழ்த்தவில்லை. இதுபோன்ற படங்கள் அவரின் பட எண்ணிக்கையும், வருமானத்தையும் பெருக்கியதே தவிர அவரின் நடிப்புக்கு எந்த தீனியும் போட வில்லை என்பதுதான் ஒரு கசப்பான உண்மை.

  உதாரணமாக, அவர் கடைசி பத்து, பன்னிரண்டு வருடங்கள் நடித்த படங்களை பார்த்தால், ஸ்ரீப்ரியாவுடன் நிறைய படங்கள் நடித்து உள்ளார். அதன் ரகசியம் தெரிந்தவர்கள் கூறலாம். நடிகர் திலகத்தின் பிற்கால படங்கள் சில :

  லாரி டிரைவர் ராஜாக்கண்ணு (இதில் ஸ்ரீப்ரியா ஜோடி என்று நினைக்கிறேன். ஒரு காட்சியில் இவரும், மேஜரும் தங்களை துரத்தி வரும் வில்லன்களிடம் இருந்து தப்பிக்க பெண் போல் வேடமணிந்து, மாவு ஆட்டும் காட்சியை காண கண் கோடி வேண்டும் ……. நம்பியாரும் தன் பங்குக்கு பெரிய இம்சை பண்ணுவார். ஒரு காட்சியில், மாடியில் அவர் இறங்கி வருவது போன்று இருக்கும். ஆனால் அவர் நடக்க மாட்டார், தவழ்ந்து வருவார். பெரிய கொடுமை சரவணன் சார் இது).

  பட்டாகத்தி பைரவன்
  மாடி வீட்டு ஏழை – (ஒரு காட்சியில் அனைவருக்கும் சவால் விடும் விதமாக மான்கொம்பு சுததுவார், தியேட்டரில் அனைவரும் கதறிய சத்தம் கேட்டது எனக்கு இன்றும் நினைவில் உள்ளது).

  சங்கிலி

  தர்மராஜா – மிக பெரும் கொடுமையாக, உலக புகழ் பெற்ற ஜப்பான் நாட்டு கராத்தே சாம்பியன் யாமகுச்சியை அடித்து வீழ்த்தி விட்டு உலக சாம்பியன் ஆவது போன்று கதை வரும் என்று நினைக்கிறேன். வழக்கம் போல கே.ஆர்.விஜயா ஜோடி (முடியல….. விட்டுடுங்க….. யப்பா …… இப்போவே கண்ண கட்டுதே).

  சந்திப்பு – இதில் ஒரு மாறுதலாக ஸ்ரீதேவியுடன் ஜோடி கட்டி இருப்பார் (சின்ன சிவாஜி). பெரிய சிவாஜி இருக்காரோ என்னவோ நினைவில்லை. அப்படி இருந்திருந்தால் அவருக்கு கண்டிப்பாக கே.ஆர்.விஜயாதான் ஜோடியாக இருந்திருக்க முடியும்.

  எமனுக்கு எமன் – ஐயோ ஐயோ, பெரிய கொடுமை சார்…. (ஸ்ரீப்ரியாவுடன் மழை பொழிந்தது காட்டிலே அய் ராமா அய் ராமா என்று ஒரு ஆபாச கூத்து பாட்டு பாடி ஆடுவார் !!!???).

  தியாகி – இதுவும் ஒரு கொடுமை படம் சார்
  வெற்றிக்கு ஒருவன் – கண்டிப்பாக ஒரு வெற்றி படமாக இருந்திருக்க வாய்ப்பில்லை.

  ஹிட்லர் உமாநாத் – ஹிட்லரை நேரில் பார்ப்பது போலவே இருக்கும் (சொம்மா டமாசு சார்). செம சொறி ….

  விஸ்வரூபம் – இதிலும் ஸ்ரீப்ரியாவுடன் தல ஜோடி கட்டி இருப்பார்னு நெனக்கறேன்.

  அமரகாவியம். இந்த படம் ஒரு டகால்டியாக தான் இருந்திருக்கணும். (முன்பு ஒரு அமரகாவியம் வந்தது, அது சூப்பர் படம், ஸ்ரீதர் டைரக்ஷன் என்று நினைக்கிறேன்).

  ஊருக்கு ஒரு பிள்ளை

  என்னை போல் ஒருவன்

  ஆனாலும் கடைசியாக அவர் பாந்தமாக நடித்த படிக்காதவன், தேவர் மகன், படையப்பா, முதல் மரியாதை போன்ற படங்கள் பழைய சிவாஜியை நமக்கு நினைவு படுத்தியதை மறுப்பதற்கில்லை / மறைப்பதற்கில்லை.

  எது எப்படியோ, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்கிற மாபெரும் நடிப்பு சரித்திரத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அவரின் சாயல் இல்லாமல், இன்றுவரை ஒருவர் கூட நடித்ததில்லை (இந்த நேரத்தில் யாரும் கரடி ராஜேந்தரையும், அவரின் நடிப்பு திறனையும் பற்றி நினைத்தால், நிர்வாகம் பொறுப்பல்ல).

 12. RV says:

  கோபி அவர்களே,

  தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி!

  சிவாஜி மிகவும் திறமை வாய்ந்த நடிகர்தான். ஆனால் நீங்கள் குறிப்பிட்டுள்ள லிஸ்டில் சில படங்களில் மட்டும்தான் அவர் சிறப்பாக நடித்திருக்கிறார் என்பது என் கருத்து. அவரது பலவீனம் அவரது நடிப்பு திறமையை காட்டுவதற்காக சீன்களை செதுக்கிவிட்டு கதையில் சொதப்பி விடுவது. உதாரணமாக தங்கப் பதக்கத்தில் சீர்திருத்தப் பள்ளிக்கு செல்லும் மகனை அவர் ஒரு முறை கூட போய் பார்க்க மாட்டார். ஏன்? அப்போதுதான் அவர் ஸ்ட்ரிக்டான அதிகாரி என்று காட்டலாம். கதாபாத்திரம் தட்டையாக போய்விடுவதை கவனிக்க வேண்டாமா? அவரது படங்களில் வெகு சிலவே காலத்தை வென்று நிற்கக்கூடியவை என்று நான் நினைக்கிறேன்.

  ஆனால் அவரது சாயல் இல்லாத தமிழ் நடிகர்களே இல்லை என்பது வாஸ்தவமான பேச்சு.

  நீங்கள் சொல்வது போல, அவரது பிற்காலப் படங்கள் பல அறுவைப் படங்கள்தான். அவர் தன் திறமையை சரியாக பயன்படுத்தவில்லை.

 13. Sivaji says:

  Hello bags,

  Bag madhiri pesaathinga. Thiramaya paarata therinjukunga

 14. Bags says:

  Sivaji,

  RVக்கும் சேர்த்தே நான் பதில் சொல்கிறேன்.

  எங்களுக்கு பொறாமைல் இல்லை. நடிகர் சிவாஜியின் திறமைகளை நாங்கள் எப்பொழுதும் மதிக்கிறோம். அவர் பெரிய மனிதர். அதற்க்காக் குறைகள் இருக்கக் கூடாதா? (நாங்கள் எதாவ்து அந்த மாதிரி ரோலில் நடிக்க நேர்ந்தால் தாங்க முடியாது என்றும் தெரியும் 🙂 ) என்றாலும் சிவாஜி, எம்ஜியார், இவ்ர்களெல்லாம் நம் குடுமப்த்தில் உள்ளவர்கள் மாதிரி. அவர்களை விமரிசிப்பதில் எந்த வித பொறாமையோ, உள்நோக்கமோ கிடையாது.

  என்னை ”பேக்கு” என்று சொல்ல வருகிறீர்கள் என நினைக்கிறேன். திறமையை பாராட்டிக் கொண்டே தான் இருக்கிறோம். உங்கள் கண்களுக்குதான் த்ட்டுப்படவில்லை போலும்.

 15. Nadigar thilagam is worderful actor!
  but he is not care about his body after75th onwards.

  but we no doubt he is our favaraite hero!

  • RV says:

   கம்மென்று இருந்த காலத்திலும் மறுமொழி இட்டவர்களுக்கு நன்றி! முடிந்த வரையில் இங்கே எல்லாருக்கும் எழுதுகிறேன். விட்டுப்போயிருந்தால் என் கவனக் குறைவுக்காக மன்னியுங்கள்.

   பிரபா படம் எடுக்க எவ்வளவு கஷ்டப்படறாங்க, கொஞ்சமாச்சும் அவங்களை பத்தி யோசிச்சீங்களா என்று கேட்டிருந்தார். பிரச்சினை என்ன என்றால் படம் பார்க்க எவ்வளவு கஷ்டப்படுகிறோம், படம் பார்ப்பவர்களை பற்றி அவர்கள் கொஞ்சமாவது யோசித்தார்களா என்பதுதான். ஹோட்டலுக்கு போனால் கஷ்டப்பட்டு சமைத்த சாம்பாரில் உப்பு மிக அதிகமாக இருந்தாலும் பிரபா குடிப்பாரா என்ன?

   சிவாஜி நடிகர் சிவாஜியின் திறமையை குறைத்து மதிப்பிடுவதாக குறைப்பட்டுக் கொன்டிருந்தார். சச்சின் டெண்டுல்கர் என்பதற்காக அவர் மோசமாக ஆடினாலும் பாராட்ட வேண்டுமா என்ன?

   சூர்யா, ஞானியின் முயற்சியை பற்றி வேறு ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள்.

   ராதாகிருஷ்ணன், சிவாஜி திறமையான நடிகர் என்பதில் எனக்கும் எந்த கேள்வியும் இல்லை. அவர் ஒரு ஃபார்முலாவுக்குள் மாட்டிக்கொண்டு வெளியே வர முடியாமல் போனதுதான் துரதிருஷ்டம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: