சுப்ரமணியபுரம் (Subramaniapuram)


ஏதாவது ஒரு படத்துக்கு விமரிசனம் எழுதலாம் என்று தோன்றியதால் எழுதுகிறேன். ஒரு மாறுதலுக்காக புதுப் படம். சமீபத்தில் பார்த்தது. எவ்வளவு நாட்கள்தான் பழைய படங்களுக்கே விமரிசனம் எழுதுவது? இதற்கும் எழுதிப் பார்ப்போமே!

2008-இல் வந்த படம். பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. வர்த்தக ரீதியாக மட்டும் இல்லாமல், கலை ரீதியாகவும் எல்லாரும் நல்ல படம் என்று சொல்கிறார்கள்.

சரி என்றும் நானும் எடுத்துப் பார்த்தேன். tangentially ஒரு சந்தேகம். இங்கே கிடைப்பதெல்லாம் திருட்டு டிவிடிதானா? எப்படி கண்டுபிடிப்பது? தரத்தைப் பார்த்தால் ரகசியமாக தியேட்டரில் வீடியோ எடுத்தது போல் இல்லை. For the record, நான் வசிப்பது நூவார்க், கலிஃபோர்னியாவில். டிவிடி எடுத்துப் பார்த்தது இங்கே பிரபலாமக உள்ள coconut hill என்ற மளிகை கடையில்.

“கண்கள் இரண்டால்” என்ற பாட்டு அருமையாக இருக்கிறது. ஜேம்ஸ் வசந்தனுக்கு இதுதான் முதல் படமாம். யார் பாடியது என்று தெரியவில்லை. எனக்கு புதிய பாடகர்களின் குரல்களை அடையாளம் கண்டு பிடிக்க முடிவதில்லை.

வெங்கட்ரமணன் உதவி – பாடலைப் பாடியது, பெள்ளிராஜ், தீபா மரியம்! றேடியோஸ்பதி கானாபிரபா பதிவில் ஜேம்ஸின் நேர்முகம் (ஒலிப்பேட்டியாக) வெளியாகியிருந்தது.

எனக்கு அடையாளம் தெரிந்த நடிகர்கள் சென்னை 28 ஜெய்யும் கஞ்சா கருப்பும்தான். படத்தின் இயக்குனரான சசிகுமார் இன்னொரு கதாநாயகராம். துணை இயக்குனர் சமுத்திரக்கனி வில்லனாம். புதுமுகம் ஸ்வாதி கதாநாயகியாம்.

ஆகா ஓகோ என்றார்கள். அந்த அளவுக்கு படம் இல்லை. மோசம் என்றும் சொல்லமாட்டேன். சுமாரான படம், அவ்வளவுதான். தமிழின் தரம் ரொம்பவே மோசமாக இருக்கிறது, அதனால்தான் கொஞ்சம் பரவாயில்லாமல் ஒரு படம் வந்தால் கூட அதை ஆகாயத்துக்கு உயர்த்தி வைத்து பேசுகிறோம்.

படத்தின் பலம் நம்பக்கூடிய பாத்திரங்களும், 70களின் முடிவை தத்ரூபமாக கொண்டு வந்திருப்பதும்தான். பெல்பாட்டங்களும், கூடையை கவிழ்த்தது போல் தலைமுடியும் (அரை வழுக்கையனான எனக்கு பொறாமையாக இருந்தது.), தாவணி போட்ட பெண்களும், 70களில் பார்த்த வீடுகளும், எங்கேயாவது முடங்கிகொண்டு பீடி பிடிக்கும் இலைஞர்களும் என்னைப் போன்ற அரைக் கிழவர்கள் நிச்சயமாக பார்த்திருக்கிறோம். வன்முறை என்ற சுழலில் மெதுமெதுவாக சிக்கிக்கொள்ளும் அந்த இளைஞர்கள் நன்றாக வடிவமைக்கப் பட்டிருந்தார்கள். குடும்பத்துக்கும் காதலுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு காதலனுக்கு துரோகம் செய்யும் அந்த இளைஞியும், காசுக்காக நண்பனுக்கு துரோகம் செய்யும் கஞ்சா கறுப்பும் உயிரும் சதையும் உள்ள மனிதர்கள். ஜெய் “ஒரு பொட்டச்சியிடம் உயிர் பிச்சை கேக்கரபடி ஆயிடுச்சே” என்று புலம்புவது ரியலிஸ்டிக்காக 70களின் மதிப்பீடுகளை பிரதிபலித்தது.

மிக மெதுவாக நகரும் திரைக்கதை எனது பொறுமையை சோதித்தது. நகைச்சுவை என்ற பெயரில் முதல் பாதியில் கஞ்சா கறுப்பு கொலை செய்கிறார். இரண்டாவது பகுதி வரும் வரைக்கும் கதை ஆமை வேகத்தில் நகருவது பெரிய பலவீனம். கதையில் சுவாரசியம் போதவில்லை.

என்னைப் போன்ற மேல் நாட்டு மனிதர்களுக்கு வீடியோவில் பார்ப்பது உத்தமம். இந்தியாவில் நிறைய நேரம் இருப்பவர்கள் தியேட்டருக்கு சென்று பார்க்கலாம்.

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

10 Responses to சுப்ரமணியபுரம் (Subramaniapuram)

 1. RV!
  பாடலைப் பாடியது – பெள்ளிராஜ், தீபா மரியம்! றேடியோஸ்பதி கானாபிரபா பதிவில் ஜேம்ஸின் நேர்முகம் (ஒலிப்பேட்டியாக) வெளியாகியிருந்தது – http://radiospathy.blogspot.com/2008/08/blog-post_5833.html. கேட்டுப் பாருங்கள். இருபத்தெட்டு நிமிடங்கள் சுவாரசியமாக இருக்கும்!

  உங்க பதிவு சுவாரசியமா இருக்கு! நீங்க, முந்தைய தலைமுறைனு சொல்ல முடியாது! எங்களுக்கு(26) ஒரு அரை தலைமுறை முந்தையவர் என்பதால் பழைய படங்களை குறித்தான உங்கள் நேரடியான nostalgia மற்றும் உங்கள் இயல்பான நகைச்சுவை (//அப்பாவை வெறுக்கும் ஏ.வி.எம். ராஜனும் தன் அம்மா ஒரு நிமிஷம் பூ – பொட்டு டயலாக் ஒன்று விட்டதும் “நீ புலம்பாமல் இருந்தால் போதும்” என்று நினைத்து சமத்தாக மனம் மாறி எல்லாரையும் ஒன்று சேர்த்துவிடுகிறார். சுபம்!//) இடுகைகளை தொடர்ந்து படிக்க வைக்கிறது! விட்டுவிடாமல் எழுதுங்கள்!

  அன்புடன்
  வெங்கட்ரமணன்!

 2. RV says:

  வெங்கட்ரமணன்,

  நன்றி! உண்மையில் இந்த ப்ளாகை என்னைத் தவிர வேறு யாரும் படிப்பார்கள் என்று நினைக்கவில்லை. பழைய போர் படங்களை பற்றி 4 கிழங்களும் (மிஞ்சி மிஞ்சிப் போனால் 4 அரைக் கிழங்கள் + 2 முழுக் கிழங்கள் = 4 கிழங்கள்) இரண்டு கிறுக்குகளும் படிப்பார்கள் என்றுதான் நினைத்தேன். 26 வயது இளைஞர் படிப்பது சந்தோஷமாக இருக்கிறது. நீங்கள் எந்த வகையை சேர்ந்தவர் என்று உங்களுக்கே தெரிந்திருக்கும். :-))

  உங்கள் தளத்தைப் பார்த்தபோது இன்னும் ஒரு இருபது வருஷங்கள் கழித்துப் பிறந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது. :-)) எவ்வளவு விஷயங்களை அனாயாசமாக கையாள்கிறீர்கள்! எனக்கோ 3 ஃபோட்டோக்களை சேர்ப்பதற்குள் தாவு தீர்ந்துவிட்டது…

  ஜேம்ஸ் வசந்தன் பேட்டி லிங்க்குக்கும் நன்றி!

 3. சேவியர் says:

  //கொஞ்சம் பரவாயில்லாமல் ஒரு படம் வந்தால் கூட அதை ஆகாயத்துக்கு உயர்த்தி வைத்து பேசுகிறோம்//

  நச்சென்று பத்தே வார்த்தையில் பிரபஞ்சத்தையே அடக்கியது போல் இருக்கிறது. 🙂

 4. கிட்டத்தட்ட ஒரே மணிநேரத்துல பதில் சொல்லியிருக்கீங்க, இதுவே எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு RV! (அதுக்காக எல்லா சமயமும் அப்படி இருக்கனும்னு அவசியமில்லை!) நான் சொன்னமாதிரி உங்களோட அனுபவங்கள் கிட்டத்தட்ட ரொம்ப நேரடியா இருக்கு. உதாரணமா எம்.ஜி.ஆர். படம் நான் இப்ப பார்த்தன்னா எங்கம்மாவோட அனுபவம், அந்த படத்தை பொதிகை(!)யில் பார்க்கும்போது, எங்கம்மா, அப்பா எங்கிட்ட சிலாகிச்சதைத்தான் என்னால நினைச்சுக்க முடியுது, அல்லது பதிய முடியும். ஆனால் நீங்க, அந்தப் படத்தை பார்த்த அனுபவம், நண்பனின் திருமணத்திற்கு போன இடத்தில் இரண்டாவது ஆட்டம் போன அனுபவம் இப்போது நிழலாடிய nostalgia, அப்படீன்னு எழுதறீங்க!

  அப்புறம், இந்த படம் காட்டறது, வலைபதியறது இதெல்லாம் ஜுஜூபி பாஸ்! ‘எல்லாம் ஜோதியோட கலந்துட்டா’ ஒன்னும் மலைப்பா தெரியாது! ஏதாவது தெரியலைன்னா http://tamilblogging.blogspot.com பார்த்துக்கங்க!

  நேரத்துக்கு நன்றி
  வெங்கட்ரமணன்

 5. RV says:

  இந்த முறை ஒரு ஒன்றரை மணி நேரத்துக்கு அப்புறம்தான் பதில் எழுதி இருக்கேன். எனக்கு வேலை வெட்டி எதுவும் இல்லன்னு நீங்க நினைக்கக்கூடாது இல்லே?

  இத்தனை நால் இந்த சைட்டைப் பத்தி தெரியாமல் போச்சே! எனக்கு சில விஷயங்கள் கொஞ்சம் advanced ஆகட்தான் இருக்கு. பிக் அப் பண்ணிட வேண்டியதுதான். லிங்குக்கு நன்றி!

  அப்புறம் நீங்க 26 வயது இளைஞர், ஜப்பான் போயிருக்கீங்க, அனேகமா ஸாஃப்ட்வேர் எஞ்சினியர், இதைத் தவிர ஒண்ணூம் உங்க ப்ளாக்கிலிருந்து தெரிஞ்சுக்க முடியலை. படிச்ச வரைக்கும் கொஞ்சம் வேவ்லெங்க்த் ஒத்துப் போகும்னு தொணிச்சு. அதணால ஒரு கேல்வி – இன்னிக்கு தமிழ்லே பாப்புலரான ஆசிரியர்கள் யார் யார்? அந்தக் காலத்து சுஜாதா மாதிரி இன்னிக்கும் யாராவது விரும்பி படிக்கப்படறாங்களா? பாலகுமாரன் புச்தகங்களை பத்தி ஒரு ப்ளாக் எழுதணும்னு யோசனை, நாட்டை விட்டு வந்து 20 வருஷம் ஆயிடுச்சு, டாபிகல் விஷயங்கள் நிறய தெரியலை…

 6. RV.
  சுஜாதா இன்னிக்கும் டாப்புதான்! பாலகுமாரனுக்கும் இன்னும் மௌஸு கொறஞ்சா மாதிரி தெரியலை! ஆனா மொத்தமாகவே வாசிப்பு வழக்கம் குறைஞ்சா மாதிரி தெரியுது! (NHM(http://nhm.in) பத்ரியைக்(http://thoughtsintamil.blogspot.com/) கேட்டால் இல்லைம்பார்!)

  ஆனா வலையில் அடிபடற எழுத்தாளர்களுக்கும் நேரில் வாசகர்கள் ஆர்வம் காட்டறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குதுனு நினைக்கிறேன். வலையில் (உங்க தோஸ்த்!) ஜெ.மோ, சாருநிவேதிதா இவர்களையெல்லாம் ஒன்னு கொண்டாடறாங்க இல்லை பந்தாடறாங்க! ஆனா இவங்க பேரு அடிபடற அளவுக்கு புத்தகம் விற்பனை (எண்ணிக்கை அளவில்) எந்தளவு இருக்குனு தெரியலை. மட்டுமல்லாமல் இன்றைக்கு தமிழத்தில் கிழக்கு பதிப்பகத்தின் வீச்சு மிக அதிக அளவில் இருக்குது. அந்த காலத்தில் ஜெமினி வாசனின் “மாதசம்பளம்-கொடுத்து-நடிகநடிகயரை-ஊழியர்களாக-வைத்துக்கொள்ளும்-முறை” கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கிட்டத்தட்ட அதே மாதிரி இன்று கிழக்கில் புத்தகாசிரியர்கள் உள்ளனர் (http://nhm.in/authors ஐப் பார்க்கவும்! எத்தனை பேர் கிழக்கில் கிட்டத்தட்டப் பிரத்தியேகமாக எழுதுகின்றனர்னு தெரியவரும்!)

  மேலும் அக்காலத்தில் (70,80களில்) மணிமேகலைப் பிரசுரம் கிட்டத்தட்ட அனைத்துத் தலைப்புகளிலும் புத்தகங்கள் வெளியிட்டிருப்பார்கள்!(சுஜாதாவே ஏதோவொரு க.பெ.கட்டுரையில் “இத்தலைப்பில் ஏதாவது புத்தகம் உள்ளதா என லேனாவைக் கேட்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருப்பார்!) அதேபோல் இன்று கிழக்கில் “You name it! We have it” என்று ஏகப்பட்ட தலைப்புகளில்(http://nhm.in/catalog.php) புத்தகங்கள் உள்ளன(http://nhm.in/catalog.php). பத்தும் பத்தாததற்கு, நலம், ப்ராடிஜி, வரம் பதிப்பகம், ஒலிப்புத்தகம் என ஜமாய்க்கின்றனர். எனவே வெகுஜனப் புத்தகங்களில் கிழக்குதான் முந்துகிறது என்றே நினைக்கிறேன்(விகடன் இப்போதுதான் முழித்துக்கொண்டு பழைய தொடர்கள், வாரமலர்-குங்குமம் தொடர்கள் தொகுப்பு என ஏதோ கிம்மிக்ஸ் காட்டுகின்றனர்!).

  இன்று படைப்புதான் கிட்டத்தட்ட முக்கியமாகப் படுகிறது! ஆனாலும் என்.சொக்கன்(http://nhm.in/author/N.%20Chokkan), பா.ராகவன்(http://nhm.in/author/Pa.%20Raghavan) என்று சில பேரின் எழுத்துக்கள் தனியே தெரிகின்றன். அதிலும் வாழ்க்கை வரலாறுகளில், நிறுவன வரலாறுகளில் சொக்கனது எழுத்துக் அமர்ர்களமாய் இருக்கிறது!(கிட்டத்தட்ட ஐம்பது புத்தகங்கள் எழுதிவிட்டார்!). ராகவனைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். மனிதர் பத்திரிகை அனுபவத்தை வைத்துக் கொண்டு ராஜபாட்டை நடக்கிறார்! “கிழக்கு ப்ளஸ்” என்ற தலைப்பில் கிழக்கின் இதுவரையிலான வெற்றிக்கதையை ராகவன் அவர் தளத்தில் பத்து அத்தியாயங்களாக எழுதியுள்ளார். நேரமிருதால் படித்துப் பாருங்கள்(http://tinyurl.com/5jplcc).

  எஸ்.ராவிற்கு விகடனின் ‘துணையெழுத்தி’ற்குப் பிறகு வாசகர்கள் அதிகரித்த மாதிரி ‘அகம்புறம்’ எழுதிய வண்ணதாசனுக்கும், நாஞ்சில் நாடனுக்கு ‘தீதும் நன்றும்’ தொடருக்கு அப்புறமும் வாசகர்கள் அதிகரிப்பாங்கனு நினைக்கிறேன்.

  பெண்களிடம் ரமணிச்சந்திரன் இன்னிக்கும் கோலோச்சறாங்க. ஆனாலும் இவரொரு ஆணாதிக்கவாதின்னு சொல்றவங்களும் இருக்காங்க! (தொடர்பான நண்பன் நந்தாவின் -http://blog.nandhaonline.com/?p=57 – சூடான இடுகையும் மறுமொழிகளும் வாசிப்பிற்குரியது!)

  மேலும் சிறார் பருவத்தில் தமிழ் புத்தக்ங்களை விழுந்து விழுந்து படித்தவர்களின் கவனம் திரைப்படம், ஆங்கிலப் புத்தகங்கள்னு மெல்ல திசைமாறுதுனு தோணுது (எப்படி நீங்களே சுட்டிக்காட்டியுள்ளபடி தமிழ் திரைப்படங்களில் சொல்லிக்கொள்கிற நிலைமை இல்லையோ அதேபோல புத்தகங்களிலும் ஆங்கிலம் தொட்ட ஆழத்தையும் வீச்சையும் தமிழ் தொடுவதற்கு நேரமாகும் என்றே படுகிறது. அதுவரைக்கும் யாருக்கு பொறுமை இருக்கும்னு நினைக்கிறீங்க?!)

  மற்றபடி…. எப்படி யோசித்தாலும் இன்று பதிப்பகங்கள்தான் எனக்கு நினைவுக்கு வருகின்றன! AnyIndian.com Viruba.com NHM.in, KamaDenu.com, Vikatan.com, Uyirmmai.com என பதிப்பக இணையதளங்கள் இன்று மிக முக்கியமான இடம்னு நினைக்கிறேன் (ஆனால் நான் அவற்றின் வழியே வாங்குவதை விட, அவற்றிலிருந்து குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு நேரில் சென்று வாங்குவதையே விரும்புகிறேன்!)

  இது முழுக்க முழுக்க இணையம் தாராளமாய் கிடைக்கும் ஒரு வாசகனின் பார்வையே என்பதை நினைவில் கொள்ளவேண்டும்!

  ஆங்… சொல்ல மறந்துட்டேன்! ‘விகடன் பொக்கிஷம்’ என வாராவாரம் வெளியிடுகிறார்கள்! 60, 70, 80களின் பேட்டிகள், திரைவிமர்சனங்கள், புகைப்படங்கள், மதன் கார்ட்டூன்கள், கோபுலு சித்திரங்கள், என எனக்கு மிகவும் பிடித்தமானதாயுள்ளது. கட்டாயம் படித்துப் பாருங்கள்! login இல்லையென்றால் சொல்லுங்கள்!

  “யப்பா! இவ்வளவு பெரிய மறுமொழியா”ன்னு போலித்தனமா வியக்க மாட்டேன்! நீங்க இந்த வாசிப்பு விஷயம் பற்றிக் கேட்டவுடனே கட்டாயம் விரிவா எழுதனும்னு நினைச்சேன்! (Either that or “மாட்டினான்டா ஒருத்தன்! செத்தான்…!”) அதனாலதான் நினைவுக்கு வந்த முக்கியமான விஷயங்கள்னு எழுதினேன்! எழுதாம விட்டது நிறைய! பொறுமையா படிச்சுப் பார்த்துட்டு மறுமொழியிடவும்! இல்லை தனிமடலிடவும். ஒன்னும் அவசரமில்லை!

  அன்புடன்
  வெங்கட்ரமணன்!

  பி.கு. கடைசியா ஒரு இணைப்பு! http://mykitchenpitch.wordpress.com/2008/05/03/varuda-varum-poongkaatraiellaam-konjam/ – சுஜாதாவின் மேல் தீவிர அபிமானமும், அதீத செல்லம் கொஞ்சலும் வைத்துள்ள ஒரு ரசிகையின் கடிதம்! கட்டாயம் படித்துப் பாருங்கள்!

 7. Bags says:

  சுப்ரமணியபுரம் பார்தேன். பட்டியல் II என்று பெயர் வைத்திருக்கலாம். எங்கே காப்பி என்று சொல்லி விடுவார்களோ என பயந்து 1980துகளின் கதை என்று முதலிலேயே கூறிவிட்டார்கள். Scene Details மிகவும் கவனமாக கையாளப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் நல்ல கதையாக இருந்தால் சசிக்குமார் வெற்றி பெறுவார் என நினைக்கிறேன்.

 8. Bags says:

  வெங்கட், உங்கள் தகவல் பொருந்திய பதிலை பார்த்தேன். நானும் ஒரு சுஜாதாவின் தீவிர விசிறி. JK (ஜோகேஷ் குமார்) நான் படித்த அவருடைய முதல் நாவல். இன்றும் தீவிரவாத இயக்கங்கள் கையாளும் உத்திகளை (நார்த்வெஸ்டேர்ன் அலையன்ஸ் தளபதி அஸாஸீனேட் செய்யப்பட்ட விதம், மற்றும் crop dusters தீவிரவாதத்துக்கு உபயோகப்படுத்தப்படுவது) அவர் எனக்கு 30 வருடங்களுக்கு முன்னரே அறிமுகப்படுத்தியிருந்தார். நடைமுறையில் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கண்ணாடி அவரது நாவல்கள். அவர் ஒரு பெரிய இழப்பு.

 9. RV says:

  நான் பட்டியல் பார்க்கவில்லை. சுப்ரமணியபுரம் பட்டியலும் ஒரே மாதிரி படங்களாக்கும்?

 10. Pingback: “அவார்டா கொடுக்கறாங்க” மற்றும் தற்போதைய தமிழ் வாசிப்பு! « …மற்றுமொரு துளையுள்ள பானை!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: