நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு! (Hello Partner)


நேற்று வீட்டில் புரட்சி வெடித்தது. படத்தைப் போட்ட ஐந்தாவது நிமிஷத்தில் என் மனைவி “நாகேஷ்தான் heroவா? இது உங்களுக்கே அடுக்குமா?” என்று சொல்லி ரிமோட்டை வெற்றிகரமாக கைப்பற்றினாள். என் பெண்களோ Hannah Montanaவில் முழுகி இருந்தனர். அதுவும் என் 4 வயதுப் பெண்ணுக்கு ஒரு boss fixation உண்டு. அவளிடம் நான் தெரியாத்தனமாக “You are my boss” என்று சாயங்காலம்தான் சொல்லி இருந்தேன். “If I am the boss, I get to watch my TV, daddy!” என் எடை பலம், அவர்கள் குரல் பலத்தையும் கண் பலத்தையும், எல்லாவற்றையும் விட முக்கியமாக என் மனைவியின் பக்க பலத்தையும் ஜெயிக்க முடியவில்லை.

ஒன்றரை மணி நேரத்துக்கு பின்னால்தான் என்னால் பார்க்க முடிந்தது. பாதிக்கு பிறகு பார்ப்பது ரொம்ப கொடுமை – அரை மணி கஷ்டப்பட்டு பார்த்தேன், அவ்வளவுதான். அதனால் இன்று விமரிசனம் எழுதமுடியவில்லை. பார்த்த வேறு யாராவது எழுதுங்களேன்! நடுவில் ஒரு படத்தை விட்டுவிடுவதற்கு என்னவோ போல் இருக்கிறது. ப்ளீஸ்!

இந்த படத்தைப் பற்றி எனக்கு தெரிந்த சில விவரங்கள். 1972இல் வந்தது. இதே கதையை 1981இல் “எல்லாம் இன்ப மயம்” என்று கமல், ஜெய்ஷங்கர் நடிக்க பஞ்சு அருணாசலம் எடுத்தாராம். ஹலோ பார்ட்னர், எ.இ. மயம் இரண்டுக்குமே பஞ்சு அருணாசலம்தான் கதை வசனம் என்று உப்பிலி ஸ்ரீனிவாஸ் தகவல் தருகிறார். 1970களின் முற்பாதியில் சித்ரமகால் குழுவினர் (சித்ரமகால் கிருஷ்ணமூர்தி, பஞ்சு அருணாசலம்) லோ பட்ஜெட் நகைச்சுவை படங்கள் சிலவற்றை எடுத்தனர். சாதாரணமாக நாகேஷ்தான் கதநாயகன். விஜயலலிதா கதாநாயகி. எம்.ஆர்.ஆர். வாசு, வி.கே. ராமசாமி, தேங்காய், சுருளிராஜன் பொன்ற நகைச்சுவை நடிகர் பட்டாளமே நடிக்கும். (இதில் சச்சுவும் இருந்தார்). இந்தப் படம் லாபம் பார்த்திருக்கும் போலிருக்கிறது. இதைப் போலவே இந்த கோஷ்டி எடுத்த இன்னொரு (சகிக்க முடியாத) நகைச்சுவை படம் “தேன் கிண்ணம்“. (அதுவும் இந்த ப்ரோகிராமில் திரையிடப்பட்டது. அதையும் நான் பாதி படம்தான் பார்த்தேன். அதில் முன் பாதிக்கு பிறகு ஓடிவிட்டேன், இதில் பின் பாதி). விஜயலலிதாவின் கவர்ச்சியையும் நம்பி இந்த படங்கள் எடுக்கப்பட்டன. (அந்தக் காலத்து கவர்ச்சி – டைட்டான பான்ட் போட்டுக்கொண்டு வருவார், அவ்வளவுதான். இதை நம்பி யாரும் இந்தப் படங்களை பார்க்காதீர்கள்). 1973இல் வந்த “கல்யாணமாம் கல்யாணம்”உம் இந்த கோஷ்டிதான் எடுத்தது என்று நினைவு.

இசை அமைத்தவர் தாராபுரம் சுந்தரராஜன். இந்தப் படத்தில் “டிங்டாங் டிங்டாங் டிங்கியாலோ” என்ற ஒரு க்ளப் டான்ஸ் பாட்டை கேட்டிருக்கிறேன்.

தாராபுரம் சுந்தரராஜனுக்கு அதிர்ஷ்டம் கட்டை. நல்ல குரல், ஆனால் வெற்றி பெற முடியவில்லை. நாகேஷும் தாராபுரத்துக்காரர்தான். நாகேஷின் சிபாரிசோடு திரைப்படங்களில் பின்னணி பாடகராக நுழைய முயன்றார். எனக்குத் தெரிந்து அவர் பாடிய ஒரே வெற்றிப் பாட்டு “செல்வம்” படத்தில் இடம் பெற்ற “உனக்காகவா நான் எனக்காகவா”தான். ஜமுனா ராணியுடன் இணைந்து பாடியது. “ஆயிரம் பொய்” விமரிசனத்தில் நானும் tfmpage.காமிலிருந்து கட்-பேஸ்ட் பண்ணி இருந்தேன் – “தமிழ் விடு தூது முன்னாலே” என்று மனோரமாவுடன் ஒரு பாட்டு பாடி இருந்தார். “திருமலை தென்குமரி” படத்தில் “அழகே தமிழே நீ வாழ்க” என்ற பாட்டை பலரோடு இணைந்து பாடி இருக்கிறாராம். அந்தப் பாட்டில் சீர்காழியின் கம்பீரமான குரல் மற்ற எல்லார் குரலையும் டாமினேட் செய்துவிடுகிறது, இவர் குரல் என் நினைவில் கேட்கவில்லை. 1979இல் நீச்சல் குளம் என்ற படத்துக்கும் இசை அமைத்தாராம், அந்தப் படத்தில் “ஆடிப் பதினெட்டு” என்று எஸ். ஜானகி பாடும் பாட்டு நினைவிருக்கிறது. முறைப்படி இசை பயின்ற அவர் சென்னை இசைக் கல்லூரியிலும் பணி புரிந்தாராம். 1999இல் இறந்துவிட்டார்.

“உனக்காகவா எனக்காகவா” பாட்டை இங்கே கேட்கலாம்.

மீண்டும் கேட்டுக்கொள்ளுகிறேன், ப்ளீஸ், யாராவது விமரிசனம் எழுதுங்களேன்!

நண்பர் ராஜா அனுப்பி இருக்கும் குறிப்பு:

முதலாளியால் ஜெயிலுக்கு அனுப்பப்படும் அப்பாவி ஹீரோ (அப்பாவியை வச்சுகிட்டு காரியத்தை சாதிக்காம ஏன் ஜெயிலுக்கு அனுப்பறானுக மட முதலாளிகள்?) திரும்பி (வெவரமா) வந்து முதலாளிக்கு குடைச்சல் கொடுக்கும் கதை. (கொஞ்சம் கதை, நிறைய கவர்ச்சி..[வேறொரு வார்த்தை எழுத எண்ணி தவிர்த்துவிட்டேன்] லீலான்னு ஒரு பொண்ணு.. {தமிழ்வாணனின் காதலிக்க வாங்க.. தேவரின் கெட்டிக்காரன் போன்ற படங்களில் நடிச்சிருக்கு.. போணியாகாத பொண்ணு .. பாவம். குரு படத்தில் சைடு வில்லி.. கடைசி காட்சியில் ஸ்ரீதேவியோடு ஃபைட் போடும்} தேங்காயின் மனைவியா வந்து பொடவையைத் தவிர மத்த எல்லா ட்ரெஸ்ஸும் போட்டுகிட்டு தரை டிக்கெட்டை வாழவைக்கும்)

ஒவ்வொரு தடவையும் வில்லனுக்கு குடைச்சல் கொடுத்துட்டு, போன் ப‌ண்ணி, “ஹலோ பார்ட்னர்..!”ன்னு ஆரம்பிச்சு நாகேஷ் டயலாக் பேசி டைட்டிலை நியாயப்படுத்துவார். வில்லனின் சன் தேங்காய்.. தத்தி.. அசடு என்பதால் மட்டுமல்ல.. தண்ணியடிச்சுட்டு தத்தி தத்திதான் தவழ்வார்.

ஹ்ம்ம்ம்ம் .. என்னவோ நெனச்சு எடுத்து எப்படியோ முடிஞ்ச படம்.. என் விமர்சனத்தைப் போல..!

போஸ்டர்களின் கைங்கர்யத்தால் படுதோல்வி.. ( நான் 4 தடவை பார்த்துட்டேன்.. இருந்தும் கதையைக் கவனிக்கல..சாரி..!)

தொகுக்கப்பட்ட பக்கம்: அவார்டா கொடுக்கறாங்க–>படங்களின் பட்டியல்

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

11 Responses to நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு! (Hello Partner)

 1. ஹி..ஹி..

  உங்க அளவுக்கு வராது.. இருந்தாலும் கொஞ்சம் முயற்சி செய்யறேன்.

  முதலாளியால் ஜெயிலுக்கு அனுப்பப்படும் அப்பாவி ஹீரோ (அப்பாவியை வச்சுகிட்டு காரியத்தை சாதிக்காம ஏன் ஜெயிலுக்கு அனுப்பறானுக மட முதலாளிகள்?) திரும்பி (வெவரமா) வந்து முதலாளிக்கு குடைச்சல் கொடுக்கும் கதை. (கொஞ்சம் கதை, நிறைய கவர்ச்சி..[வேறொரு வார்த்தை எழுத எண்ணி தவிர்த்துவிட்டேன்] லீலான்னு ஒரு பொண்ணு.. {தமிழ்வாணனின் காதலிக்க வாங்க.. தேவரின் கெட்டிக்காரன் போன்ற படங்களில் நடிச்சிருக்கு.. போணியாகாத பொண்ணு .. பாவம். குரு படத்தில் சைடு வில்லி.. கடைசி காட்சியில் ஸ்ரீதேவியோடு ஃபைட் போடும்} தேங்காயின் மனைவியா வந்து பொடவையைத் தவிர மத்த எல்லா ட்ரெஸ்ஸும் போட்டுகிட்டு தரை டிக்கெட்டை வாழவைக்கும்)

  ஒவ்வொரு தடவையும் வில்லனுக்கு குடைச்சல் கொடுத்துட்டு, போன் ப‌ண்ணி, “ஹலோ பார்ட்னர்..!”ன்னு ஆரம்பிச்சு நாகேஷ் டயலாக் பேசி டைட்டிலை நியாயப்படுத்துவார். வில்லனின் சன் தேங்காய்.. தத்தி.. அசடு என்பதால் மட்டுமல்ல.. தண்ணியடிச்சுட்டு தத்தி தத்திதான் தவழ்வார்.

  ஹ்ம்ம்ம்ம் .. என்னவோ நெனச்சு எடுத்து எப்படியோ முடிஞ்ச படம்.. என் விமர்சனத்தைப் போல..!

  போஸ்டர்களின் கைங்கர்யத்தால் படுதோல்வி.. ( நான் 4 தடவை பார்த்துட்டேன்.. இருந்தும் கதையைக் கவனிக்கல..சாரி..!)

 2. RV says:

  ராஜா,

  இதை ஒரு போஸ்டா போடலாம்னு நினைக்கறேன், சரிதானே?

 3. தாராளமா போடுங்க பாஸ்..!

 4. gkrishna says:

  but “then kinnam” was super hit.

 5. srinivas uppili says:

  ’ஹலோ பார்ட்னர்’. படத்தில் அப்பாவியாக வரும் நாகேஷை
  வில்லனாக வரும் அவரது முதலாளி எம்.ஆர்.ஆர்.வாசு பொய்க்குற்றச்சாட்டில்
  சிறைக்கு அனுப்பி விட, விடுதலையாகி வெளியே வரும் நாகேஷ் பல்வேறு
  வேஷங்களில் வந்து அவரைப் பழிவாங்கி, திருத்தி அவரது மகளையே திருமணமும்
  செய்து கொள்கிறார். ‘யோவ்! இது கமல்ஹாசன் நடித்த ’எல்லாம் இன்பமயம்’
  படக்கதை,’ என்கிறீர்களா? உண்மை! மீண்டும் இரண்டு படங்களுக்கும் கதை-
  வசனம், வேறு யார்? பஞ்சு அருணாச்சலம் தான்.

  • RV says:

   ஸ்ரீனிவாஸ், பஞ்சு தன் கதையை ரீசைக்கிள் செய்த்திருகிறார் போல! இந்த தகவலையும் இப்போது பதிவில் சேர்த்துவிட்டேன்.

 6. srinivas uppili says:

  ஆர் வி,

  இதோ மேலும் சில தழுவல்கள்……

  படத்தின் பெயர் ’உன்னைத் தான் தம்பி!’கதாநாயகன் ஜெய்சங்கர்! படத்தில்
  கோடீசுவராக வரும் எஸ்.ஏ.அசோகனின் குழந்தைகள் அவருக்குத் தெரியாமல் அவரது
  பணத்தை இறைத்து இறைத்து செலவழிக்க, வில்லன் ஸ்ரீகாந்துக்குத் துணைபோக
  வரும் கதாநாயகன், குடும்பத்தைத் திருத்தி, வீட்டுக்குள்ளேயே காய்கறி
  வியாபாரம், பலசரக்கு வியாபாரம் செய்கிற வேலைக்காரர்களைத் திருத்தி,
  இதற்கிடையில் எஸ்.ஏ.அசோகன் கண்பார்வை பறிபோய் விட்டதாக நாடகம் நடத்தி,
  கதாநாயகனைப் பற்றித் தெரிந்து கொண்டு………ஹலோ! ஸ்டாப்!…….. என்ன
  ரஜினி நடித்த ’ராஜா சின்ன ரோஜா’ படத்தின் கதையை பெயர்களையெல்லாம் மாற்றி
  மாற்றி சொல்லுகிறீர்களே என்று கேட்கிறீர்களா? அது தான் இல்லை; ’உன்னைத்
  தான் தம்பி’ படம் தான் பிற்காலத்தில் ’ராஜா சின்ன ரோஜா’வாக
  வந்திருக்கிறது. இரண்டு படத்துக்கும் கதை பஞ்சு அருணாசலம்.

  இன்னோர் படம்; பெயர் மங்கம்மா சபதம். ஒரு கோடீஸ்வரர் வீண் பழி போட்டு
  அப்பாவைத் தலைமறைவாக்கி விட்டதற்காக, அவரைப் பழிவாங்க அம்மா
  எம்.என்.ராஜம் தனது இரண்டு பெண்களான விதுபாலா-ஜெயசித்ரா இருவரையும்
  அந்தக் கோடீஸ்வரரின் மகன்களான முத்துராமன்-சிவகுமார் இருவரையும் முறையே
  காதலித்துத் திருமணம் செய்து அந்த வீட்டில் பலவேறு குழப்பங்களை
  ஏற்படுத்துகிறார்கள். அடடே! இது ’வனஜா-கிரிஜா’ படத்தின் கதையாயிற்றே!
  நெப்போலியன்-ராம்கியும் குஷ்பூ-மோஹினியும் கூடவே ஊர்வசியும் நடித்த
  படமாயிற்றே என்று கேட்கிறீர்களா? அதே! மீண்டும் இரண்டு படங்களிலும் அதே
  கதை தான்! மீண்டும் இரண்டு படங்களிலும் கதை-வசனம் பஞ்சு அருணாச்சலம்
  தான்!

  இதெல்லாம் போகட்டும்! ’சகலகலாவல்லவன்’ படம் எம்.ஜி.ஆர் நடித்து
  டி.ஆர்.ராமண்ணா இயக்கிய ’பெரிய இடத்துப் பெண்’ படத்தின் தழுவல் என்பது
  எத்தனை பேருக்குத் தெரியுமோ?

 7. srinivas uppili says:

  ஆர் வி,

  நீங்கள் பழைய படங்கள் expert ஆக இருக்கிறீர்கள். கீழ்க்கண்ட படங்களைப் பார்த்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை.

  எந்தப் படங்களிலிருந்து எந்தப் படத்தைச் சுட்டிருக்கிறார்கள் என்று இதோ ஒரு பட்டியல்:

  வெற்றி விழா – Bourne Identity

  மை டியர் மார்த்தாண்டன் – Coming to America

  மகாநதி ஜெயில் காட்சிகள் – If tomorrow comes (இந்தத் திரைக்கதையில் ரா.கி.ரங்கராஜனுக்குப் பங்குண்டு என்பதையும், அவரே இந்த நாவலைக் குமுதத்தில் மொழிபெயர்த்திருக்கிறார் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்)

  12B – Sliding doors

  ஜேஜே – Serendipity

  நியூ – Big

  பாட்ஷா – இந்தி ‘Hum’ (அதில் ரஜினி அமிதாப்புக்கு இன்ஸ்பெக்டர் தம்பியாக நடித்திருப்பார்)

srinivas uppili க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: