இமயம் (Imayam)


1979இல் வெளி வந்த படம். சிவாஜி, ஸ்ரீவித்யா, ஜெய்கணேஷ், தேங்காய் ஸ்ரீனிவாசன், மீரா,  மனோரமா, ஒய்.ஜி. மகேந்திரன் நடித்திருக்கிறார்கள். முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கம். எம்எஸ்வி இசை. சிவாஜியின் மைத்துனியாக வருபவர் மீரா((நன்றி, மது!). ஜெய்கணேஷின் முதல் காதலியாக வருபவர் ரீனா. யாரென்று தெரியவில்லை(சாரதாவுக்கு நன்றி!).

சிவாஜி படங்களைப் பற்றி விவரங்கள் அறிய நடிகர்திலகம்.காம் என்ற தளத்தைப் பார்க்கலாம். பல விவரங்கள் இங்கே கிடைக்கின்றன. ரிலீஸ் ஆன தேதி, உடன் நடித்த நடிகர்கள், இயக்குனர், தொழில் நுட்ப கலைஞர்கள், இசை அமைப்பாளர் விவரங்கள் அவர் நடித்த எல்லா படங்களுக்கும் கிடைக்கின்றன. சில படங்களுக்கு முழுமையான விமர்சனமும் இருக்கிறது. இந்த படத்துக்கு இல்லை, நாந்தான் கதி.

இமயம் திரிசூலத்துக்கு அப்புறம் வந்த படம். சிவாஜி charisma அப்போதுதான் exponetialஆக குறைய ஆரம்பித்தது. இந்த படத்தை பார்க்கவேண்டும் என்று அப்போது தோன்றவில்லை. இது பெரிய அளவில் வெற்றி பெறவும் இல்லை. நேற்றுதான் முதல் முறையாக பார்த்தேன்.

எதிர்பார்த்த அளவு மோசம் இல்லை. முக்தா ஸ்ரீனிவாசன் படங்களில் கதை என்று ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அது கடி கதையாக, cliched ஆக இருக்கலாம், ஆனால் கதையே இல்லாமல் heroக்களை மட்டும் நம்பி அவர் படம் எடுப்பதில்லை.

படத்தின் பெரிய பலம் அது நேபாளத்தில் எடுக்கப்பட்டதுதான். மிகவும் அழகான வெளிப்புறக் காட்சிகள். பனியால் முழுமையாக மூடப்பட்ட மலைகளும், கோவில் படிகளின் இரண்டு புறமும் இருக்கும் பிரம்மாண்டமான சிலைகளும், பரந்த ஆறுகளும் இங்கே போயே ஆகவேண்டும் என்று ஆவலை ஏற்படுத்தின. எல்லா படங்களுக்கும் வெளிப்புறக் காட்சிகள் எங்கே எடுக்கப்பட்டன என்று பதிவு செய்யப்பட்டால் நமக்கு எவ்வளவோ உதவியாக இருக்கும்.

பாட்டுக்களும் அருமையாக இருந்தன. அந்தக் காலத்தில் கேட்கப்பட்டன என்றாலும், உரிய வெற்றியை அடையவில்லை என்றுதான் நினைக்கிறேன். “கங்கை யமுனை” பாட்டின் இனிமைக்கு இன்னும் பெரிய வெற்றி அடைந்திருக்கவேண்டும். இளையராஜா அலையில் இதெல்லாம் கொஞ்சம் முழுகிவிட்டதோ என்னவோ! (60களில் எம்எஸ்வி இசையில் சில வி. குமார் பாட்டுக்கள் முழுகியதைப் போல)

“கங்கை யமுனை”தான் படத்தின் மாஸ்டர்பீஸ். ஜேசுதாசும் வாணி ஜெயராமும் கலக்கிவிட்டார்கள். அழகான ஸ்ரீவித்யா. ஒரு மங்களமான இசையை கேட்பதுபோல் இருக்கிறது. ஒரு இடத்தில் பின்னால் ஒரு கணவாயில் ரிப்பன் போல இரண்டு ஆறுகள் ஓடுவது பார்க்க பார்க்க திகட்டவில்லை. (வீடியோவில் 3 நிமிஷத்துக்கு பிறகு வருகிறது.) ரீவைண்ட் பட்டன் எங்கே என்று தேடினேன், அப்புறம்தான் இது வீடியோ இல்லை என்று நினைவு வந்தது.

“இமயம் கண்டேன்” நல்ல பாட்டு. நேபாளக் காட்சிகள் மிகவும் நன்றாக இருந்தன. ஒரே ஒரு குறைதான் – ஜெய்கணேஷும், மீராவும் இல்லாமல் இருந்தால் இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும். அவர்களது சில அசைவுகள் கவர்ச்சியாகவோ ஆபாசமாகவோ இல்லை, கோரமாக இருந்தன.

“கண்ணிலே குடியிருந்து” இன்னொரு நல்ல பாட்டு. டிஎம்எஸ்ஸின் குரல் நல்ல கம்பீரமாக வந்து விழுகிறது. அதுவும் அவர் “தனனன தனக்கதன்னன்” என்று பாடுவது நம்மையும் தாளம் போடவைக்கிறது. பின்னால் வரும் கோவிலும் (படிகளும், பிரமாண்ட சிலைகளும்) அருமை.

“சக்தி என்னடா உன் புத்தி என்னடா” சுமாரான ஒரு பாட்டு. டிஎம்எஸ்ஸும் எஸ்பிபியும் பாடியிருக்கிறார்கள்.

கதை சிக்கல் ஒன்றும் பெரியதில்லை. சிவாஜியும் தேங்காயும் பார்ட்னர்கள். தேங்காயின் தம்பி ஜெய்கணேஷுக்கு கல்யாணம் ஆகாமலேயே சில தொடுப்புகளும் ஒரு தொடுப்பு மூலம் ஒரு பையனும் இருக்கிறார்கள். சிவாஜியின் மைத்துனி மீரா ஜெய்கணேஷை விரும்புகிறார். நிச்சயதார்த்ததின்போது ஜெய்கணேஷின் முதல் காதலி ரீனா தற்கொலை செய்துகொள்கிறார். சின்னப் பையன் சொல்வதை வைத்து சிவாஜி நிச்சயதார்த்தத்தை நிறுத்திவிடுகிறார். எல்லாரும் சின்னப் பையன் ஏதோ உளறுகிறான், நம்பாதீர்கள் என்று சொல்லிப் பார்க்கிறார்கள். சிவாஜி கேட்காததால் எல்லாரும் சிவாஜிக்கு எதிராக திரும்பிவிடுகிறார்கள். உண்மையை வெளிப்படுத்த சிவாஜி எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும் ஜெய்கணேஷ் சூழ்ச்சி செய்து முறியடிக்கிறார். படம் முடியப் போகிறது என்று இயக்குனர் சொல்லிவிட்டதால் ஜெய்கணேஷ் மனம் திருந்தி உண்மையை ஒத்துக்கொள்ளும்போது சிவாஜி அபௌட் டர்ன் அடித்து ஜெய்கணேஷ் நல்லவர் என்றும் தான் அவர் கெட்டவர் என்று சொன்னது தவறு என்றும் சொல்கிறார். பிறகு ஜெய்கணேஷை கொல்ல வரும் துப்பாக்கி குண்டை தான் வாங்கிக்கொண்டு, சக்கர நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு மணமக்களை ஆசிர்வதித்து சுபம்!

படத்தில் எல்லாருக்கும் நதிகளின் பெயர்கள்தான். சிவாஜியின் பேர் கங்காதரன். தேங்காயின் பேர் வைகை அம்பலம். ஜெய்கணேஷின் பேர் கிருஷ்ணா. மீராவின் பேர் சிந்து. சின்னப் பையனின் பேர் ஜம்னா. ரீனா பேர் நர்மதா. மனோரமாவின் பேர் கோதாவரி. ஸ்ரீவித்யாவின் பேர் மறந்துவிட்டது, காவேரியோ? ரீனாவின் அண்ணன் பேர் ஹூக்ளி! நகைச்சுவை பாத்திரம் ஒய்.ஜி. மகேந்திரனின் பேர் கூவம்!

ஜெய்கணேஷ் சின்னப் பையனை சாக்லேட் மரம் இருக்கிறது என்று நம்ப வைக்கும் காட்சியில் இயக்குனர் கொஞ்சம் புத்திசாலித்தனத்தை காட்டி இருக்கிறார்.

இயக்குனர் தன் புத்திசாலித்தனத்தை காட்டும் இன்னொரு இடம். கதைக்கு தேவை இல்லாவிட்டாலும் நீச்சல் உடையில் சிஐடி சகுந்தலாவை ஜெய்கணேஷின் ஒரு தொடுப்பு என்று 10 நிமிஷம் காட்டுவது.

எல்லாருக்கும் எல்லாரும் எல்லா நேரத்திலும் எங்கே இருப்பார்கள் என்று தெரிகிறது. மனம் திருந்துவதற்காக ஜெய்கணேஷ் ஒரு பாம்புப் புற்றுக்கு அருகில் போய் யோசனை செய்துகொண்டிருப்பார். கரெக்டாக அங்கே அந்த சின்னப் பையன் வருவான். பிறகு சிவாஜியும் வந்துவிடுவார்.

சிவாஜி குண்டை தன் நெஞ்சில் வாங்கிக்கொள்வார். அடுத்த காட்சியில் சக்கர நாற்காலி! நெஞ்சில் குண்டு பாய்ந்தால் சக்கர நாற்காலி எதற்கு? ஒரு வேளை தயாரிப்பாளருக்கு இலவசமாக கிடைத்திருக்குமோ?

ஜெய்கணேஷ் சிவாஜியைப் பார்த்து பேசும் ஒரு வசனம் எனக்கு புரியவே இல்லை. “உயரத்துக்கு உதாரணமா இமயத்தை சொல்வாங்க. அந்த இமயத்துக்கே உதாரணம் நீங்க”. இமயத்துக்கு என்னய்யா உதாரணம்?

தேங்காய் சிவாஜியையே மிஞ்சும்படி நடித்திருக்கிறார். அங்கங்கே சிவாஜி “நடித்தாலும்” ரொம்ப மோசம் இல்லை.

எதிர்பார்த்ததை விட பெட்டர்.

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

30 Responses to இமயம் (Imayam)

 1. மது says:

  சிவாஜியின் மைத்துனியாக வருபவர் நடிகை மீரா. இவர் பட்டணப்பிரவேசம், சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, சிட்டுக்குருவி போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

 2. RV says:

  மது,

  விவரம் சொன்னதற்கு நன்றி!

 3. plum says:

  After Trident, Sivaji had a big hit in Rishimoolam. Just FYI.
  Again, I see a careless disregard for facts from you. Whether RM was a good movie or not is another question – fact is it was a big hit. But I see that usual “I think Sivaji movies werent hit after thrisoolam so it must be true” attitude from you.
  Though you tried to poosimezhugufy your review of MGR Films wherein you said “I think they must have been money-spinners” which is different from “I know they were money spinners”. But when I point that out, you poosi mezhugufy as “I know those specific movies were money spinners”. Then why did you say “I think they must have been…” in the first place. There is an inconsistency in your approach and there is a clear bias anyone with an unbiased mind can see. Unfortunately, you are not able to see it yourself.

 4. RV says:

  Oh this is tiresome.

  Please do read the blog before making statements of this kind. In the thirisulam review, I do state that rishimulam is one of sivaji’s post-thirisulam hits. Not just rishimulam, I cite Kal thoon, keezhvanam sivakkum, mudhal mariyadhai etc. In the Imayam review, I state the Sivaji’s popularity went down drastically after thirisulam. I have stated this several other time as well. You argument seems to be:
  1. You know of one hit after thirisulam. (I cited 3 or 4)
  2. Hence Sivaji’s popularity was the same before and after thirisulam. (Incorrect. I don’t think he had more than 5-6 hits after thirisulam. Other than the ones I cited, I think Partichaikku neramacchu, theerppu, were hits. I can’t think of any other.5-6 hits out of 50 odd movies as hero…)
  3. Hence I have a careless disregard for facts. (Huh?)

  It is you who seem to be skimming thro this and making incorrect statements. I can understand a difference of opinion. Difference of facts?

  Please, I don’t have access to MGR film’s revenues. But I don’t need that to state Enga Veettup pillai is a money spinner. I beleive almost all his films did bring in money for the producers, though.

  • Srinivasan says:

   That is your beleif……If all MGR films bring money to producers, he should have done 250 plus films….Unfortunately, he even touch 150 films in 41 years of his career..which means a pathetic average of around 3.5 per year. This also means, he is not the most wanted hero by the producers because most of the productions houses know very well their own fate. AVM did Just ONE. GEMINI did JUST ONE. VIJAYA VAUHINI did JUST ONE….PRASAD FILMS DIDNT DO ANY…..So….Do not just for the heck of it, blabber something imaginary. Between 1980 and 1987 Sivaji had done 70 films with a whopping average of 10 films per year. This also means, if his films were not hits and profitable, producers wouldnt have done more films with Mr.Sivaji Ganesan.

 5. plum says:

  you are over-simplifying my argument. So, now you change the goalposts? I am just saying Thrisoolam was not his last big hit. Big hit, mind. Rishimoolam was almost as big a success. Theerpu, Paritchaikku et al were just decent hits. If you had said, Rishimoolam was Sivaji’s last big blockbuster, it makes some sense. All this ofcourse, if you dont consider Mudhal Mariyadhai, which is more of a bharathiraja film.

  Again, you admitted that “YOU THINK” that almost all of MGR’s movies were money spinners. Thats where the problem is. Enga Veettu Pillai was a blockbuster no doubt. But En annan wasnt. Idhaya Veenai was utter flop. I am sure if you reviewed it you would say “I am sure it was a MG at that time. Thats where my problem is with your views.

  besides 5-6/50 is bad ratio. What do you say of a movie like Mannukketha Ponnu? That Sivaji was the hero? The ground rules had changed by then and Sivaji had become more like Amitabh now.

 6. RV says:

  plum,

  So when did I say that Thirisoolam was the last hit? Please show me the statement in the blog before you go any further.

  Did I not say that Rishimoolam was one of the post-Thirisoolam hits? Please answer this question.

 7. nadigarthilagam says:

  What about santhipu, vellai Roja, Neethipathi,
  bandham,vazhkai, mirudanga sakravarthy,
  sathya sundaram, naan vazzha vaipen,
  vaa kannan vaa – all these are 100+ days.

  They are equiv. to 30+crore revenue movies of today. Movies like Thiyagi, L.D.Rajkannau, sangili were not losers = 20 crores today.
  Thunai -above average hit- Tharasu did have decent run. Sadhanai and marumagal were hits
  after Mudhal Maruyadhai.
  Neediyin nizhal ran for 10 weeks – 50 days in
  pallavaram lakshmi-1 show.

 8. nadigarthilagam says:

  Add these 100 day movies 1.Thirupam.
  2. Viswaroopam.
  Not sure about p.k.bairavan.

  Vaazkai had cont.HouseFul shows for more than
  6 weeks at chennai Alankar.
  Sandhipu at Shnathi for 6 weeks.
  Needipathi was even bigger at Shanthi H.F. SHows
  more than 50 days.

 9. RV says:

  nadigarthilagam,

  It is actually very pleasing to get mails like this. I don’t have to argue about statements that I didn’t make!

  I am sure I missed a few hits. I am not sure about all the movies you mentioned, but I do remember vazhkkai, vellai roja. One among needhipathi/theerppu is a hit, I get confused between the two.

  But the point is this. Even if we add up all the movies you had mentioned, we probably get a dozen hits (instead of half a dozen) out of 50+. Let us say 25-30% of the movies were hits, (at least not failures). Before Thirisoolam, it was the other way around.70-75% of the movies were non-failures. Clearly, Sivaji couldn’t have stayed at the top otherwise. Commercially, he was on the wane post-Thirisoolam. Even when the movie was a hit, Sivaji tended to portray a middle aged man or an old man, not a “typical” hero. Qualitywise, very few movies generated a buzz post-Thirisoolam.

  That is the point I am trying to make to plum.

 10. nadigarthilagam says:

  Needhipathi was mega hit. Theerpu was super hit.

  Kumudam Arasu kelvi badhil:
  Theerpu patri ungal theerpu enna?

  Arasu: 4months

  Yes that was the greatness of Sivajai.
  Even whice doing the roles of 50+ man he was able to attract youngsters like me. Imagine
  watching tamil movies without duets, songs.
  Same appa,annan ,thatha roles with some senti.
  Even if there are 4 crisp screens with average script and director Sivajin can make it a hit or
  at least enjoyable for the fans.

  Kamal said recently Navarathiriw was taken within 30 days. If Sivaji acted in dasavatharam
  just 10 roles is enough an dhe does not need
  Tsunami effect or any special effects. We pay for
  Him.(Not insulting Kamal-another good actor).
  All Sivaji films came without any build ups
  o buzzz… He release all movies at 8 weeks interval. He nevr wooried about BO result.
  There was no need.
  Similar to playing test cricket and bringing in crowds whilce competing with ondeday/T20 games.

  Sivaji is GREAT. Don’t try to a degrade a genuine
  actor,person.

 11. RV says:

  Do you disagree with the point? That Sivaji was on commercially on the wane after Thirisulam? That Sivaji was not the force he used to be post-Thirisulam in the box-office sense? Where does denigration come here?

 12. plum says:

  The point is RV, choice of Thrisoolam in your argument is arbitrary. It could well be Andaman Kaadhali or Annan oru Kovil. He started having only sporadic hits after 1978-79. 🙂
  He was a normal hero until atleast Sandhippu. After that, it became more of old man characters. Even there, Bandham, Vaazhkai et al were big hits. Even Anbulla Appa ws a decent grosser. Now, that is a reflection of extra-ordinary box-office pull. You cant argue that he was on the wane. On the contrary, it is liek Rahul Dravid top-scoring with 47 on a dodgy NZ pitch. 47 is ‘low’ but Dhoni wont even get 4.7 on those pitches against good seam bowling.So, wecant say Rahul’s top score is only 47 , Dhoni scored 321 in one innings in a patta pitch in hyderabad so Dhoni is greater value for money.Getting 47 in NZ pitches is far more difficult than getting your 321 in Hyderabad.

  Again, do you think or know that Idhaya Veenai was MG? CAn you answer tht one?

 13. சாரதா says:

  மது சொன்னது தவிர இன்னபிற உங்களது சந்தேகங்களுக்கு….

  ஜெய்கணேஷின் முன்னாள் காதலியாக வருபவர் நடிகை ‘ரீனா’ (இங்கே பரபரப்பாகப்பேசப்பட்டு வரும் திரிசூலத்தில், உங்களால் டம்மி கேரக்டர் என்று அழைக்கப்பட்ட சங்கரின் ஜோடி இவர். ‘திருமாலின் திருமார்பில்’ பாடல் இவருக்குத்தான்).

  ஜெய்கணேஷின் 10 நிமிடத்தொடுப்பாக வருபவர்…. (உண்மையிலேயே உங்களுக்கு சி.ஐ.டி.சகுந்தலாவைத் தெரியாதா..?)

  நெகடிவ் கேரக்டராக ‘Hoogly’ என்ற பெயரில் வருபவர் ‘கவர்ச்சி வில்லன்’ கே,கண்ணன். எம்.ஜி.ஆர்.படங்களுக்கு, (மற்ற படங்களைவிட) சப்போர்ட் செய்யும் உங்களுக்கு இவரைத்தெரியாதது ஆச்சரியம்.

 14. RV says:

  சாரதா,

  ஆஹா! நீங்கள் இருக்கும்போது என்ன கவலை? ஜெய்கணேஷின் காதலியை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்று யோசித்துக்கொண்டே இருந்தேன். இரண்டு நாள் முன்னால்தான் பார்த்தது தெரியாமல் போய்விட்டது.

  சி ஐ டி சகுந்தலாவா? எனக்குத்தான் ஒரு மெண்டல் ப்ளாக். 70களின் ஆரம்பத்துக்குப் பிறகு அவர் நடிக்கவில்லை என்று நினைத்துகொண்டிருந்தேன்.

  கண்ணனும் அவர்தானோ என்று தோன்றியது, நிச்சயமாக தெரியவில்லை.

  நன்றி!

 15. RV says:

  plum,

  I thnk thirisulam was the turning point. I have written more about this in m thirisulam review, so I won’t go over it again. I don’t know what is the dodgy pitch for Sivaji in the 80s.

  I am not sure about Idhaya veenai. I don’t think it failed, my guess would be that it finished much better than minimum guarantee. I remember a Manjula duet being an evergreen favorite in my college auditorium. I don’t know for certain.

 16. Bags says:

  Pon Andhi maalai Pozhuthu… 🙂

  Yes indeed. I mentioned the same thing somewhere else.

 17. RV says:

  Ah. ponnandhi maalai pozhudhuthaan. We must have replayed that half a dozen times…

 18. plum says:

  “my guess would be that it finished much better than minimum guarantee. I remember ”
  Your guess is wrong, hence proved 🙂
  Idhu dhaan naan tirumba tirumba solvadhu. Neenga MGR padamna MG nu assume pannidareenga.

 19. RV says:

  Is this your impression, or do you have any hard data to back it up?

 20. RV says:

  plum

  My question didn’t come out right. Sorry about that. What I meant was:

  You say that Idhaya veenai was a failure.
  1. Is this what you heard from others?
  2. Is this based on what you yourself saw when the movie was released?
  3. Is this based on hard data? Published collection figures, or a book?

  My impression is primarily based on the reception this movie had during the early eighties…

 21. சிவாஜி படம் பார்க்கும்போதே நான் தூங்கிப் போனது இரண்டு முறைதான்.. ஒண்ணு இந்தருக்கு..

  இன்னொண்ணு..?

  அமரகாவியம்..!

  சிவாஜியும் வில்லன் டைகர் பிரபாகரும் பரஸ்பரம் கடப்பாரைகளை வயிற்றில் செருகிக்கொண்டு அரை மணிநேரம் டயலாக் பேசியதாக நண்பன் எழுப்பிச் சொன்னான்..

  • SreeKumar says:

   Cant help it …Remake of Muqqadar ka Sikandhar ….I have the same experience of sleeping when i went to watch Vetaikaran….The movie will Drag..Drag..Drag..more than its capacity once MN Nambiar was suspected killed by Tiger….To finish the movie, at the end, they would bring back MN Nambiar…Kodumayaana oru padam..! Same with the Case of Madurai Meeta Sundarapandian…Between the King and the Puratchikaarar the only difference is a thin beard and a Machcham….The Climax dialogue….Kazhavi…Kazhavi….instead of KayalVizhi uttered by hero will bring down roof due to laughter than getting sentimental….

 22. RV says:

  எனக்கு அப்படி தூங்கிய அனுபவம் “natural born killers”

 23. //ஜெய்கணேஷ் சிவாஜியைப் பார்த்து பேசும் ஒரு வசனம் எனக்கு புரியவே இல்லை. “உயரத்துக்கு உதாரணமா இமயத்தை சொல்வாங்க. அந்த இமயத்துக்கே உதாரணம் நீங்க”. இமயத்துக்கு என்னய்யா உதாரணம்?//

  புரியவில்லைய்ய்ய்ய்ய்? (திருவிளையாடல் சிம்மக் குரலில்); இமயம் எவ்ளோ ஒயரம்னு சொல்லணும்னா, சிவாஜியோட (புகழ்) அளவுக்கு உயரம்னு சொல்லணும்!

  • Srinivasan says:

   Ada….Padathukku Padam Padathukku Padam….Framela illaena kooda Maththavanga Pugazhanumnu solli dialogue ezhudhinavan Ramachandran…Udharanam Ella Padathulayum Ivar framela illaena kooda varra dialogue samples…” Namma Muthu Thambi pola varuma..? ” ” Ada Namba Maanickyam dhaanpa ivangalukku sariyaana aalu..andha thambi coreekitta(correcta) thatti kaekum” etc.,

 24. RV says:

  சத்தியமூர்த்தி,

  இமயம் பற்றிய மறுமொழிக்கு நன்றி! உங்கள் // ுரியவில்லைய்ய்ய்ய்ய்? (திருவிளையாடல் சிம்மக் குரலில்); // புன்னகையை வரவழைத்தது.

 25. bagyalakshmi says:

  சிவாஜியை விட தேங்காய் நல்லா நடித்தார் என்று சொல்வதில் இருந்தே நடிப்பை ரசிப்பதில் நீங்கள் எப்பேர்பட்ட ரசிகர் என்று தெரிகிறது .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: