கூட்டாஞ்சோறு


சில சமயம் திரைப்படங்கள் தவிர்த்த வேறு பதிவுகளும் எழுதத் தோன்றுகிறது. சம்பந்தம் இல்லாத இந்த பதிவுகளை எழுத இன்னொரு ப்ளாகை ஆரம்பித்திருக்கிறேன். முடிந்தால் அதையும் பாருங்கள்.

பணம் படைத்தவன் ரெவ்யூ ப்ரிவ்யூ (Panam Padaitthavan Review Preview)


கொஞ்சம் நேரக்குறைவு, அதனால் இந்த மினி விமர்சனம். முழுமையான விமர்சனம் சில மணி நேரங்களில் எழுதுகிறேன்.

எப்போதோ சின்ன வயதில் பார்த்தது. அவ்வளவு சுகம் இல்லை என்று நினைவு. ஏன் என்றோ கதையோ எதுவுமே நினைவில்லை. நேற்று ஏறக்குறைய முதல் முறையாக படம் பார்ப்பது போலத்தான் இருந்தது.

படத்தை பார்த்த பிறகு சின்ன வயதில் ஏன் அவ்வளவாக பிடிக்கவில்லை என்று தெரிந்தது. எம்ஜியார் படம் பார்ப்பது போலவே இல்லை. ஜெமினிக்காகவோ சிவாஜிக்காகவோ எழுதப்பட்ட கதையில் எம்ஜியார் நடித்தது போல இருந்தது. முக்கோணக் காதல், குழந்தைப் பாசம், நாகரீகத்தினால் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் இவற்றை முன் வைத்து எடுக்கப்பட்ட குடும்பப் படம். 3 சண்டைகள்தான். மூன்றுமே ஒண்டிக்கு ஒண்டி சண்டைகள்தான். எம்ஜிஆர் 10 பேரை அடிக்கும் சண்டைகள் ஒன்று கூட இல்லை. அசோகனோடு போடும் முதல் சண்டை தம்மாத்தூண்டுதான். அந்த வயதில் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை.

நல்ல பாட்டுக்கள் நிறைய. “பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்”, “கண் போன போக்கிலே கால் போகலாமா”, “அந்த மாப்பிள்ளே காதலிச்சான்” புகழ் பெற்றவை. மற்ற பட்டுகளும் மோசமில்லை. 

தசாவதாரம்++


ஒரு tangential போஸ்ட்.விஷ்ணுவுக்கு அஃபிஷியலான தசாவதாரஙகள் – மச்சாவதாரம், கூர்மாவதாரம், வராக அவதாரம், நரசிம்மர், வாமனர், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி.

அனஃபிஷியல் அவதாரங்கள்:

1. புத்தர். சில கணக்குகளில் பலராமருக்கு பதிலாக புத்தரை எடுத்துக்கொள்ளுகிறார்கள்.
2. மோகினி அவதாரம்: பெண், ஐயப்பனின் தாய், பஸ்மாசுரனை அழித்தவர்.
3. Hayagrivar: குதிரை முகமும் மனித உடலும் கொண்டவர்
4. ரிஷப தேவர். ஜைன மதத்தை நிறுவிய முதல் தீர்த்தங்கரர். (மகாவீரர் கடைசி, அதாவது 24ஆவது தீர்த்தங்கரர்)
5. 1/3 தத்தாத்ரேயர் (தத்தாத்ரேயர் ப்ரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரின் அம்சம்)

வேறு ஏதாவது உண்டா?