அன்பே ஆருயிரே (Anbe Aaruyire)1975இல் வந்த படம். சிவாஜியைத் தவிர மஞ்சுளா, மேஜர், நாகேஷ், வி.கே. ராமசாமி, சுகுமாரி, காந்திமதி, மனோரமா, மௌலி, தங்கவேலு, வெண்ணிற ஆடை மூர்த்தி, ஒய்.ஜி. மஹேந்திரன், எஸ். ராமாராவ், சுருளிராஜன் நடித்திருக்கிறார்கள். எம்எஸ்வி இசை, வாலி எல்லா பாட்டுகளையும் எழுதி இருக்கிறார். ஏ.சி. திருலோகச்சந்தர் இயக்கம். படம் தோல்வி.

நெட்டில் “அன்பே ஆருயிரே” என்று தேடினால் எங்கே பார்த்தாலும் எஸ்.ஜே. சூர்யா, நிலா நடித்த புத்தம் புதிய திரைப்படம்தான் தெரிகிறது. பழைய டைட்டில்களை திருப்பி யூஸ் பண்ணாதீங்கப்பா! என்னை மாதிரி பழைய படத்தை பற்றி விவரம் தேடறவங்க பாடு திண்டாட்டம் ஆயிடுது!

பாட்டுக்கள் சுமார்தான். “பட்டணத்து மாப்பிள்ளைக்கு பெங்களூரு பொண்ணு”, “மல்லிகை முல்லை பூப்பந்தல்”, “காமதேனுவும் சோம பானமும்” என்ற பாட்டுகளை கேட்டிருக்கிறேன். முதல் பாட்டு டிஎம்எஸ்ஸும் எல்.ஆர். ஈஸ்வரியும் பாடியது.

இரண்டாவதுதான் படத்தின் சிறந்த பாடல். வாணி ஜெயராம் பாடியது. திருமண சடங்குகளை அழகாக விவரிக்கிறது. இந்த பாட்டு காதலிக்க நேரமில்லை படத்தில் வரும் “நாளாம் நாளாம் திருநாளாம்” பாட்டு போல இல்லை? ஒரு வேளை ஒரே ராகத்தின் சாயலை இரண்டிலும் பயன்படுத்தி இருக்கிறார்களோ? சங்கீதம் தெரிந்தவர்கள் என்னைப் போன்ற ஞான சூன்யங்களுக்கு சொல்லுங்களேன்! இவை இரண்டுமே திலங் ராகத்தில் அமைக்கப் பட்டதாம். என்னை போன்ற ஞான சூன்யங்களுக்கு யாராவது சொனால்தான் தெரியும். சரி, இப்போது திலங் ராகம் எப்படி இருக்கும் என்று ஒரு குத்துமதிப்பான ஐடியா இருக்கிறது.

“ராஜ வீதி பவனி”, “ஓசை கொள்ளாமல் நாம் உறவு கொள்வோமே” இரண்டும் நான் கேட்டதில்லை. மிச்ச எல்லா பாட்டுகளையும் டிஎம்எஸ்ஸும் சுசீலாவும் பாடி இருக்கிறார்கள்.

திரைக்கதை இழுவைதான். மஞ்சுளாவின் அப்பா வி.கே. ராமசாமியும் சிவாஜியின் அப்பா மேஜரும் ஜென்ம விரோதிகள். அப்பாக்கள் ஜென்ம விரோதிகளாக இருந்தால் பிள்ளைகள் காதலிக்கவேண்டும் என்ற விதிப்படி சிவாஜியும் மஞ்சுளாவும் காதலிக்கிறார்கள், கல்யாணமும் செய்துகொள்கிறார்கள். மேஜர் இடைவேளைக்கு பிறகும் படத்தை ஓட்டுவதற்காக சிவாஜி கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியாக இருக்கவேண்டும் என்று கண்டிஷன் போடுகிறார். சிவாஜியும் மஞ்சுளாவும் ஒத்துக்கொண்டாலும் பிறகு பெங்களூரு போவதாக டிராமா போட்டு ஒரு லாட்ஜில் போய் தங்குகிறார்கள். இந்த லாட்ஜில் தமிழ் சினிமாக்களில் மட்டுமே பார்க்ககூடிய ஒரு கோமாளிக் கூட்டமே தங்கி இருக்கிறது. தங்கவேலு, வெ.ஆ. மூர்த்தி, ஒய்.ஜி., மனோரமா, மௌலி மற்றும் பலர் ஒரு அரைவேக்காட்டுத்தனமான கூத்தடிகிறார்கள். க்ளைமாக்சில் சிவாஜியும் மஞ்சுளாவும் கிருஷ்ணன் ராதா மேக்கப்பில் வேறு. க்ளைமாக்சில் சிவாஜி, மேஜர், நாகேஷ், எல்லாரும் 15 நிமிஷம் வரைக்கும் நீள நீள வசனங்கள் பேசி சுபம்!

இரண்டாம் பகுதி அமெச்சூர் நாடகம் பார்ப்பது போலத்தான் இருக்கிறது. சென்னை நாடக சபாக்களில் யாராவது இந்த நாடகங்கள் பார்த்ததில்லை என்றால் இதில் இரண்டாம் பகுதியை பார்த்தால் போதும். எழுபதுகளில் இந்த மாதிரி அமெச்சூர் நாடகங்கள் ரசிக்கப்பட்டன, அதனால் இந்த படம் அப்போது வெற்றி அடைய வாய்ப்புகள் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த படத்திலும் சிவாஜிக்கு தொப்பை தெரிகிறது, ஆனால் தொப்பை மட்டும் தெரியவில்லை. ஒரு பணக்கார வீட்டுப் பையனுக்கு இருக்கக்கூடிய லேசான குருவித் தொப்பை. கொஞ்சம் அசடாக சிவாஜி திறமையாகத்தான் நடித்திருக்கிறார், ஆனால் இந்த கதைக்கு எப்படி நடித்தாலும் ஒரு பயனும் இல்லை. மஞ்சுளா க்யூட்டாக இருக்கிறார். அவரது கவுன் “காமதேனுவும் சோம பானமும்” பாட்டில் கொஞ்சம் அபாயமான லெவலுக்கு இறங்கி இருக்கிறது.

படம் அன்றைய ரசனைக்கு – குறிப்பாக சென்னை சபா நாடகங்கள் ரசிகர்களுக்கு – சரி வந்திருக்கலாம். இன்றைய ரசனைக்கு சரிப்படாது. பாட்டுகளும் ஏ க்ளாஸ் இல்லை, பி க்ளாஸ்தான். அதனால் 10க்கு 4.5 மார்க்தான். D grade.

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

13 Responses to அன்பே ஆருயிரே (Anbe Aaruyire)

 1. Shakthiprabha says:

  சிவாஜியின் நடிப்பு எனக்கு எரிச்சலாய் இருந்ததால், இருப்பதால், இந்த படத்தை நான் ரசிக்கவில்லை, ரசித்ததில்லை. அப்பாவி என்ற பெயரில், அசடு வழிதல் என்ற பேரில் அவர் செய்யும் கோணஷ்டைகள் மிகக் கொடுமை!

  // க்ளைமாக்சில் சிவாஜியும் மஞ்சுளாவும் கிருஷ்ணன் ராதா மேக்கப்பில் வேறு. //

  :)))))))))))))))) I can understand the frustration! :))))))))

  எனக்கு படு எரிச்சலூட்டிய சிவாஜி படங்களில் இதுவும் ஒன்று.

  இப்படிக்கு,
  தீவிர சிவாஜிப் ப்ரியை,
  ஷக்திப்ரபா!

 2. RV says:

  என்ன அதிசயம்! சாதாரணமாக சிவாஜி கொஞ்சம் முகத்தை சுழித்தாலும் ஓவர்ஆக்டிங் ஓவர்ஆக்டிங் என்று கத்தும் எனக்கு இந்த முறை அவரது அசடு வழியும் நடிப்பு திறமையான நடிப்பாக தோன்றுகிறது. தீவிர சிவாஜி ரசிகையான உங்களுக்கு பிடிக்கவில்லை!

 3. RV says:

  அவரது நடிப்பு முதல் பகுதியில் மட்டும் அதுவும் குறிப்பாக மஞ்சுளா அவரது வீட்டுக்கு முதல் முறை வரும்போது அவரை யாரென்று தெரிந்து கொண்ட பிறகு அவர் பேசுவது, பிறகு மஞ்சுளாவின் ஹாஸ்டலுக்கு போய் பேசுவதும் பிடித்திருந்தது. மற்ற இடங்களில் சொல்லும்படி ஒன்றும் இல்லை.

 4. Bags says:

  எனக்கு வெறுப்புயேற்றிய 4 சிவாஜி திரைபடங்கள்: Dr.சிவா, அன்பே ஆருயிரே, சரிதா சிவாஜியின் மருமகளாக நடிக்கும் திரைப்படம்(பெயர் தெரியவில்லை), சிவாஜி சத்யராஜ் இனைந்து நடித்த திரைபடம்(பெயர் மறந்துவிட்டது- போட்டில்லெல்லாம் போவார்கள்). அன்பே ஆருயிரே திரைபடத்தை விமர்சனம் எழுதக்கூடப் பார்க்க முடியாது. RV ப்ளாக்கை ஆரம்பித்து இது மாதிரி திரைபடத்திற்க்கெல்லாம் விமர்சனம் எழுதவேண்டிய tortureல் அவதிப்படுகிறாய் என நினைக்கிறேன். 🙂

 5. RV says:

  And keezhvanam sivakkum is being broadcast next Friday…

 6. RC says:

  Sivaji – Sathyaraj movie(s): Jallikattu & pudhiya vaanam!

 7. RV says:

  Bags,

  Kirumi kanda sozhan is the king who removed the vishnu statues from the Chidambaram temple (believed to be Kulothunga II) – according to the vaishnavaite guru parampara stories. Basis for the Rangaraja nambi segment in the new Kamal movie, Dasavatharam.

 8. ஏ.சி.டி. கூட இந்த மாதிரி படம் எடுப்பாரான்னு யோசிக்கவைத்த படம்.

 9. I am sivaji fan!(veriyan)
  but I am not like this movie
  very very worst film.

 10. gkrishna says:

  i am also a sivaji fan. this movie was released after Perunthalaivar kamaraj’s demise. big flop. after this movie Dr.Siva/Vaira nenjam were released. Vaira nenjam ok but because of late release not picked up. but Dr.Siva diwali release another dull movie from ACT

  • RV says:

   ஜிகிருஷ்ணா,

   இந்த படம் தீவிர சிவாஜி ரசிகர்களையே திருப்திப்படுத்தவில்லை என்று மருமொழிகளிளிருந்து தெரிகிறது. என் கருத்தில் சிவாஜி நன்றாக நடித்திருந்தார், ஆனால் கதை டப்பா. அதனால் விழலுக்கு இறைத்த நீர்தான்!

gkrishna க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: