வயலின் நாதத்துக்கு ஒரு வைத்யநாதன் (Kunnakkudi vaidyanathan)


குன்னக்குடி வைத்யநாதன் மறைந்துவிட்டார். சில purists அவர் gimmicks மூலம் வயலின் வாசிப்பை கொச்சைப்படுத்துகிறார் என்று சொன்னதை எல்லாம் பொருட்படுத்தாமல் அவர் வயலினை என்னை மாதிரி கர்நாடக சங்கீதம் பற்றி தெரியாதவர்களுக்கும் கொண்டு போய் சேர்த்தார். அவரது குடும்பத்துக்கு எனது அனுதாபங்கள். tfmpage அஞ்சலி இங்கே. சுதாங்கன் என்பவரின் நல்ல போஸ்ட் இங்கே.

இந்த ப்ளாகில் அவரது சினிமா பங்களிப்பை பற்றி மட்டும்தான் எழுதலாம். அதுதான் பொருத்தம் என்பது மட்டும் அல்ல, எனக்கு அதுதான் தெரியும்.

ஏ.பி. நாகராஜனுடன் அவர் அமைத்த கூட்டணி அருமை. சில தேவர் முருகன் படங்களுக்கு நல்ல பாட்டு போட்டிருக்கிறார். சாமி பாட்டு போடுவதில் கே.வி. மகாதேவனுக்கு பிறகு அவர்தான். ஒன்றிரண்டு எம்ஜிஆர் சிவாஜி படங்களுக்கும் இசை அமைத்திருக்கிறார். முதலில் எஸ்.எம். சுப்பையா நாயுடுவின் குழுவிலே வயலின் வாசித்திருக்கிறார்.

சினிமா உலகில் அவரது பங்கு குறைவுதான். பத்து பனிரண்டு படங்களுக்கு இசை அமைத்திருந்தால் அதிகம். ஆனால் நல்ல இசை அமைப்பாளர். வயலினுக்கோ நாதர். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் ஏதாவது ஒரு படத்தை போட்டால் நன்றாக இருக்கும் 

இனி வருவது ஒரு listing exercise. இசை அமைத்த படங்கள், பாடல்களின் லிஸ்ட், அவ்வளவுதான். விவரங்கள் முழுமையாக இல்லை, நீங்கள் யாராவது சொன்னாலோ, இல்லை பின்னால் ஞாபகம் வந்தாலோ, நெட்டிலிருந்து பிட் அடிக்க முடிந்தாலோ முழுமைப் படுத்துகிறேன்.

அவர் இசை அமைத்த படங்கள்:

ஏ.பி. நாகராஜனுடன்:
வா ராஜா வா: இசை அமைத்த முதல் படம். 1968. மஹாபலிபுரத்தில் கைடாக இருக்கும் ஒரு சின்னப் பையன் சந்திக்கும் மனிதர்களை பற்றி என்று நினைக்கிறேன், சரியாக நினைவில்லை.

 1. கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா
 2. இறைவன் படைத்த உலகை எல்லாம் மனிதன் ஆளுகிறான்
 3. உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியலே 
 4. ஆடிப்பாடி சிரிக்க வைப்பது எங்க ஊருங்க
 5. சிறு குழந்தை வடிவினிலே தெய்வம் வந்து பேசுதம்மா

அகத்தியர்: சீர்காழி அகத்தியராக நடித்தது.

 1. தலைவா தவப் புதல்வா
 2. நமச்சிவாய என சொல்வோமே
 3. இசையாய் தமிழாய் இருப்பவனே
 4. வென்றிடுவேன் எந்த நாட்டையும் ராகத்தால் வென்றிடுவேன்
 5. தாயிற் சிறந்த கோவிலுமில்லை
 6. நடந்தாய் வாழி காவேரி
 7. உலகம் சம நிலை பெற வேண்டும்
 8. ஆண்டவன் தரிசனமே
 9. மலை நின்ற திருக்குமரா

கண்காட்சி: சென்னையில் நடைபெறும் எக்சிபிஷனில் நடக்கும் கதை.

 1. அனங்கன் அங்கதன் என்றும்
 2. காடை பிடிப்போம் கௌதாரி பிடிப்போம்  

ராஜ ராஜ சோழன்: இசை அமைத்த முதல் சிவாஜி படம்.

 1. தென்றலோடு உடன் பிறந்தாள்
 2. தஞ்சை பெரிய கோவில் பல்லாண்டு வாழ்கவே
 3. நாதனை கண்டேனடி
 4. ஏடு தந்தானடி தில்லையிலே 

மேல் நாட்டு மருமகள்: வெள்ளைக்கார மருமகள் பிழிந்தால் ஒரு லிட்டர் கிடைக்கும் அளவுக்கு தமிழ் பண்பாட்டில் ஊறிவிடுவாள்.

 1. முத்தமிழில் பாடி வந்தேன்
 2. Come along sing with me

நவரத்தினம்: இசை அமைத்த ஒரே எம்ஜிஆர் படம்

 1. குருவிக்கார மச்சானே

தேவருடன்:
தெய்வம்: பட்டிதொட்டி எல்லாம் ஒலித்த “மருத மலை மாமணியே” இந்த படத்தில் மதுரை சோமு பாடியதுதான்.

 1. மருத மலை மாமணியே
 2. குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
 3. வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
 4. திருச்செந்தூரில் போர் புரிந்து
 5. திருச்செந்தூரில் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்
 6. றைவன் படைத்த உலகை எல்லாம் மனிதன் ஆளுகிறான் நாடறியும் நூறு மலை நானறிவேன் சுவாமிமலை (பித்துக்குளி முருகதாஸ்)
திருவருள்:
 1. கந்தன் காலடியை வணங்கினால்
 2. மருத மலைக்கு நீங்க வந்து பாருங்க
 3. கண்டு கொண்டேன் வந்தது யாரென்று கண்டு கொண்டேன்
 4. மாலை… வண்ண மாலை, இந்த உலகத்தில் ஆயிரம் மாலை 

மற்றவை:
மனிதனும் தெய்வமாகலாம்: இசை அமைத்த இன்னொரு சிவாஜி படம்

 1. என்னடா தமிழ்க்குமரா..
 2. பால் பொங்கும் பருவம் அதில் நான் தங்கும் இதயம்.

திருமலை தென்குமரி: ஒரு road trip படம். திருப்பதி, குருவாயூர் மாதிரி இடங்களுக்கு பெரிய கும்பலாக பாட்டு பாடிக் கொண்டே டூர் போவார்கள்.

 1. பாடணுண்ணு மனசுக்குள்ளே ஆச நிறைய கீது
 2. குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா
 3. அழகே தமிழே நீ வாழ்க
 4. திருப்பதி மலை வாழும் வெங்கடேசா
 5. மதுரை அரசாளும் மீனாட்சி
 6. நீலக்கடல் ஓரத்திலே நிலம் கொண்டு செல்லாமல்
 7. சிந்தனையில் மேடை கட்டி கந்தனையே ஆட வைத்தேன்

காரைக்கால் அம்மையார்:

 1. தகதகதக தகதகவென ஆடவா

தோடி ராகம்: குடும்பப் படம். படத்தின் எல்லா பொறுப்புகளையும் குன்னக்குடியின் குடும்பத்தினரே ஏற்றனராம். பார்த்ததும் அந்த ஒரே குடும்பம்தான் என்று கேள்வி.

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

10 Responses to வயலின் நாதத்துக்கு ஒரு வைத்யநாதன் (Kunnakkudi vaidyanathan)

 1. plum says:

  raja raja chozhanla edu thandhanadi thilaiuyile romba popular illiayo?

 2. சாரதா says:

  வா ராஜா வா படத்தின் பாடல்கள்…
  1. கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவராஜா (அதை நீங்க சொல்லிட்டீங்க)
  2. ஆடிப்பாடி சிரிக்க வைப்பது எங்க ஊருங்க
  3. உண்மையெது பொய்யெதுன்னு ஒண்ணும் புரியலே
  4. இறைவன் படைத்த உலகை எல்லாம் (நீங்க சொன்னதுபோல் ‘திருமலை தென்குமரியில் அல்ல)
  5. சிறு குழந்தை வடிவினிலே தெய்வம் வந்து பேசுதம்மா

  திருமலை தென்குமரி…
  7. நீலக்கடல் ஓரத்திலே நிலம் கொண்டு செல்லாமல்..
  8. சிந்தனையில் மேடை கட்டி க்ந்தனையே ஆட வைத்தேன்

  திருவருள்…
  3. வந்தது யாரென்று கண்டு கொண்டேன்
  4. மாலை… வண்ண மாலை, இந்த உலகத்தில் ஆயிரம் மாலை

  தெய்வம்…..
  7. நாடறியும் நூறு மலை நானறிவேன் சுவாமிமலை (பித்துக்குளி முருகதாஸ்)

  மனிதனும் தெய்வமாகலாம்…
  1. என்னடா தமிழ்க்குமரா..
  2. பால் பொங்கும் பருவம் அதில் நான் தங்கும் இதயம்.

 3. RV says:

  plum,

  I kept thinking that there is a song sung by S.Varalakshmi that I really like. And the answer again and again came up as “Nathanai kandenadi”!. I knew that wasn’t the right answer…

  Saradha,
  Thanks for filling up the gaps. Especially, the song “kandukonden, vanthathu yaarendru kandukonden”!. I don’t remember the other song you mentioned from Thiruvarul.

  Did Kunnakkudi set the music for the thevar Murugan movie starring AVM Rajan & Sowcar as well? I can’t quite remember the name of the movie? I keep thinking Kanavan, but that is an MGR movie (I think)

 4. Bags says:

  பலருக்கும் தெரிந்த விஷயமே. இருந்தாலும் worth mentioning…
  TVயில் ஒரு முறை குன்னக்குடி வைத்தியனாதன் violinஇல் “மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ?” எனத் தொடங்கும் SPB “கேளடி கண்மணி” திரைபடத்திற்க்காக மூச்சு விடாமல் பாடியப் பாடலை simulate பண்ணி காண்பித்தார். Bowஐ violaவின் stringsஐ விட்டு எடுக்காமல் பாடுவதே மூச்சு விடாமல் பாடுவதற்க்கு ஈடாகும் என்ற premiseல் வாசித்துக்க் கான்ண்பித்தார். அபாரமாக இருந்தது.

 5. Bags says:

  Forgot to include the whole team
  Kunnakudi Vaidyanathan – Violin
  Tarasuram Ganapathy – Mridangam
  T. K. Dakshinamurthy – Kanjira
  R. Kalyanaraman – Ghatam
  T. S. Rajaram – Morsing
  S. M. Rajamani – Tambura

 6. சாரதா says:

  நீங்கள் குறிப்பிடும் அந்தப்படம் “துணைவன்”

  ஏ.வி.எம்.ராஜன், சௌகார் ஜானகி நடித்தது. அந்தப்படத்துக்கு இசையமைத்தவர் ‘திரையிசைத்திலகம்’ கே.வி.மகாதேவன் (மாமா)

 7. RV says:

  Thanks, Bags & Saradha! I got confused between kanavan & thunaivan. :-))

  Bags, nice video. But “moocchu vidamal paduvathu” and “not taking the bow away from the strings” are equivalent? Too muchpa!

 8. Krishna says:

  Who can forget “Kottampatt Rotile” from Thodi Raagam. I remember people chose not to see the moview even when it was telecast in DD. Nalini was the heroine with Madurai T N Seshgopalan as hero. Nalinikanth was the Villian (The climax is one top comedy…Villian shivering out of fear because of heroine ). He was also working on another movie when he lost his life..All said and done, he gets the credit definetely for his work on taking carnatic music through violin to masses…

  Krishna

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: