திருடாதே மினி விமர்சனம் (Thirudadhe)


வழக்கம் போல புராணம் எழுத முடியாத நிலைமை. முடிந்தால் பிறகு எழுதுகிறேன்.

எம்ஜிஆரின் முதல் சமூகப் படம் இதுவல்ல, ஆனால் அவர் ரிஸ்க் எடுத்து நடித்த முதல் சமூகப் படம். அது வரை அவர் ராஜா ராணிப் படங்களின் ராஜா. அவரது ஃபார்முலா இன்னும் அவருக்கு சரிவர பிடிபடவில்லை. இதில் திருடர்கள், சண்டைகள் எல்லாம் இருந்தாலும், அவற்றுக்கு இணையான நேரம் உணர்ச்சி வசப்படுவதிலும் போய்விடுகிறது. இதற்குப் பிறகுதான் சரோஜா தேவி எம்ஜிஆர் படங்களின் முடிசூடா ராணி ஆனார். (இரண்டாவது ராணி ஜெ) அந்தக் காலத்துக்கு நெருக்கமான காதல் காட்சிகள். ரசிகர்களை குஷிப் படுத்தியிருக்கும். பட்டுக்கோட்டையின் வரிகள் மணி மணியாக வந்து விழுந்திருக்கின்றன. “திட்டம் போட்டு திருடற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” எல்லாரும் சுலபமாக புரிந்து கொள்ளும் வார்த்தைகளில் பெரிய விஷயங்களை சொல்லிவிட்டார். பி.பி. ஸ்ரீநிவாஸ் எம்ஜிஆருக்கு அபூர்வமாக பாடிய அருமையான பாட்டு “என்னருகே நீ இருந்தால்”

படம் தீவிர எம்ஜிஆர் ரசிகர்தான் இன்னும் பார்க்கலாம். 10க்கு 5 மார்க். C- grade.