திருடாதே மினி விமர்சனம் (Thirudadhe)


வழக்கம் போல புராணம் எழுத முடியாத நிலைமை. முடிந்தால் பிறகு எழுதுகிறேன்.

எம்ஜிஆரின் முதல் சமூகப் படம் இதுவல்ல, ஆனால் அவர் ரிஸ்க் எடுத்து நடித்த முதல் சமூகப் படம். அது வரை அவர் ராஜா ராணிப் படங்களின் ராஜா. அவரது ஃபார்முலா இன்னும் அவருக்கு சரிவர பிடிபடவில்லை. இதில் திருடர்கள், சண்டைகள் எல்லாம் இருந்தாலும், அவற்றுக்கு இணையான நேரம் உணர்ச்சி வசப்படுவதிலும் போய்விடுகிறது. இதற்குப் பிறகுதான் சரோஜா தேவி எம்ஜிஆர் படங்களின் முடிசூடா ராணி ஆனார். (இரண்டாவது ராணி ஜெ) அந்தக் காலத்துக்கு நெருக்கமான காதல் காட்சிகள். ரசிகர்களை குஷிப் படுத்தியிருக்கும். பட்டுக்கோட்டையின் வரிகள் மணி மணியாக வந்து விழுந்திருக்கின்றன. “திட்டம் போட்டு திருடற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” எல்லாரும் சுலபமாக புரிந்து கொள்ளும் வார்த்தைகளில் பெரிய விஷயங்களை சொல்லிவிட்டார். பி.பி. ஸ்ரீநிவாஸ் எம்ஜிஆருக்கு அபூர்வமாக பாடிய அருமையான பாட்டு “என்னருகே நீ இருந்தால்”

படம் தீவிர எம்ஜிஆர் ரசிகர்தான் இன்னும் பார்க்கலாம். 10க்கு 5 மார்க். C- grade.

Advertisements

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

4 Responses to திருடாதே மினி விமர்சனம் (Thirudadhe)

  1. சாரதா says:

    ‘திருடாதே’ எம்.ஜி.ஆரின் முதல் சமூகப்படமல்ல. ஆனால் இரண்டாவது சமூகப்படம் என்று சொல்லலாம். 1936-ல் திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கிய அவர், 1960 வரை ராஜா ராணி படங்களிலேயே நடித்துக்கொண்டிருந்தார் என்பது அவர் நடித்த படங்களின் பட்டியலைப்பார்க்கும்போது தெரிகிறது (இடையில் 1956-ல் அவரது முதல் சமூகப்படமாக வந்தது தேவரின் ‘தாய்க்குப்பின் தாரம்’ அதற்கடுத்த இரண்டாவது படமாக வந்தது திருடாதே (1961)படம்தான்) அவர் தொடர்ந்து சமூகப்படங்களில் நடிக்கத்துவங்கியது 1961ல் இருந்தே. திருடாதேயைத்தொடர்ந்து சபாஷ் மாப்பிளே, நல்லவன் வாழ்வான், தாய் சொல்லைத்தட்டாதே என்று தொடர்ந்து சமூகப்படங்களைத் தொடர்ந்தார். இருப்பினும் பழைய வாசனை விட்டுவிடக்கூடாது என்றோ என்னவோ அரசிளங்குமரி (1961), ராணி சம்யுக்தா மற்றும் விக்ரமாதித்தன் (1962), கலை அரசி மற்றும் காஞ்சித்தலைவன் (1963) என்று ராஜாராணிப் படங்களையும் சை ட்ராக்கில் பண்ணிக்கொண்டிருந்தார். இதைவிட்டால் 1967-ல் அரசகட்டளையே அடுத்த ரா.ரா. படம். (1965-ல் வந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ ராஜா ராணி கதையல்ல, கடற்கொள்ளையர்கள் பற்றிய படம்).

    இவரோடு ஒப்பிடுகையில் சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர். ஆகியோர் ஐம்பதுகளிலேயே ஏராளமான சமூகப்படங்களில் நடித்துள்ளனர். 1952-ல் வந்த சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் நடித்த பராசக்தியே ஒரு சமூகப்படம்தான். ஐம்பதுகளில் சந்திரபாபு கூட கதாநாயகனாக சமூகப்படங்களில் நடித்திருக்கிறார் கூடுதல் சுவாரஸ்யம்.

    ராஜா ராணிப்படங்களுக்கும் எம்.ஜி.ஆருக்கும் ரொம்ப நெருக்கம் என்பதைக்காட்டத்தானோ என்னவோ அவர் கடைசியாக நடித்த ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனும்’ ஒரு ராஜா ராணிப்படமாகவே அமைந்தது.

  2. RV says:

    சாரதா,

    உங்கள் மறுமொழி வழக்கம் போல மகிழ்ச்சி ஊட்டுகிறது.

    நீங்கள் சொல்வது ரொம்ப சரி. தாய்க்கு பின் தாரம் 1956இல் வந்திருக்கிறது. அதற்கு பின்னும் சமூக படங்களில் நடிக்க எம்ஜிஆர் ஏன் தயங்கினார் என்று புரியவில்லை. ஒரு வேளை இந்த படம் தோல்வியோ? தேவர், எம்ஜிஆர் காம்பினேஷனில் கடி படங்களான தேர் திருவிழா, முகராசி எல்லாம் ஓடியபோது, இந்த படம் மட்டும் ஓடாமலா இருந்திருக்கும்?

    எம்ஜிஆர் இதற்கு முன்னாலும் அந்தமான் கைதி, நாம் போன்ற தோல்வியுற்ற சமூகப் படங்களில் நடித்திருக்கிறார். கூண்டுக்கிளியும் சமூகப் படம்தானே!

    நான் ரா.ரா. படங்கள் என்று குறிப்பிடுவது “non-contemporary” படங்களைத்தான். அதனால் ஆயிரத்தில் ஒருவன், நீரும் நெருப்பும் போன்றவற்றை நான் ரா.ரா. படங்கள் என்றே கருதுகிறேன். மேலும் ஆ. ஒருவனிலும், மனோகர், ராமதாஸ் போன்றவர்கள் ஏறக்குறைய ராஜாக்கள்தானே?

  3. சாரதா says:

    தேவரின் முதல் படமான “தாய்க்குப்பின் தாரம்” நல்ல வெற்றியடைந்த படம். அதன் பின் தேவர் எம்.ஜி.ஆர்..அல்லாத நீலமலைத்திருடன், வாழவைத்த தெய்வம், யானைப்பாகன் ஆகிய படங்களில் கையைச்சுட்டுக்கொண்ட பின், மீண்டும் எம்ஜியாரை வைத்து தயாரித்த “தாய் சொல்லைத்தட்டாதே” படம் பயங்கர வெற்றி. தொடர்ந்து வந்த தாயைக்காத்த தனயன், குடும்பத்தலைவன், தர்மம தலைகாக்கும், நீதிக்குப்பின் பாசம், வேட்டைக்காரன் ஆகியவையும் வெற்றி. கன்னித்தாய், தனிப்பிறவி, தாய்க்குத்தலைமகன், விவசாயி, ஆகியவை சுமார் வெற்றி. தேர்த்திருவிழா, முகராசி, காதல்வாகனம் ஆகியவை தோல்வியடைந்தவை. மீண்டும் ‘நல்ல நேரம்’ பெரிய வெற்றி.

    ஆயிரத்தில் ஒருவன் படத்தில் மனோகர், ராமதாஸ் ஆகியோர் சர்வாதிகாரி என்று குறிப்பிடப்படுவார்கள். அதனால் சரித்திரத்துக்கும், சமூகத்துக்கும் இடைப்பட்ட படம் என்று சொல்லலாம்.

  4. RV says:

    தாய்க்கு பின் தாரம் வெற்றிக்கு பின் எம்ஜிஆர் ஏன் சமூக படங்களில் தைரியமாக இறங்கவில்லை என்று இன்னும் புரியவில்லை.

    முகராசி, தேர் திருவிழா தோல்வி என்று படித்ததும் மகிழ்ச்சி! இரண்டும் உலக மகா கடி படங்கள். முகராசியில் ஜெமினி நடித்ததால்தான் அதை இன்னும் நினைவு வைத்திருக்கிறார்கள். ஆனால் 73-74 வாக்கில் இந்த படங்களுக்கும் டென்ட் கோட்டையில் ஜனம் அலை மோதியது நினைவிருக்கிறது…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: