கீழ்வானம் சிவக்கும் (Keezhvaanam Sivakkum)


இந்த படம் வந்த போது எனக்கு பிடித்திருந்தது. ஆனால் சரியாக எதுவும் நினைவில்லை. நன்றாக ஓடியது. சிவாஜிக்கு “மாமா” லுக் பொருந்தியது என்று ஞாபகம். படத்தின் “ட்ரெய்லரில்” சிவாஜி “நான் யார் தெரியுமோ? நெருப்புக்கோழி. அப்படியே லபக்குனு முழுங்கிடுவேன்” என்று சொல்வதை வைத்தே இதை மீண்டும் பார்க்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் பார்க்க முடியாமல் போய்விட்டது. வேறு யாராவது விமர்சனம் எழுதினால் பெரிய உதவியாக இருக்கும்…

தயங்காதீர்கள் மயங்காதீர்கள். அம்மா வாங்க அய்யா வாங்க. எத்தனை நாள்தான் என் ஒருத்தன் மொக்கையையே படிப்பது? இதை ஒரு சிவாஜி ரசிகர்கள் கூட்டமே படிக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன், அதனால் யாராவது முன்னால் வாங்க. இல்லையென்றால் ஹலோ பார்ட்னருக்கு பல அறுவை போஸ்ட்கள் மாதிரி இதற்கும் வரலாம்…

ஒரு படத்தை விட்டுவிட எனக்கு கொஞ்சமும் இஷ்டமில்லை. ப்ளீஸ்…

எழுத விரும்புவர்கள் எனக்கு ஒரு ஈமெயிலோ (rv_subbu at yahoo dot com), இல்லை இந்த போஸ்டுக்கு ஒரு மறுமொழியோ அனுப்புங்கள்.