நவக்ரகம் (Navagraham)


யாரும் முன் வராததால் நானே ஓட்ட வேண்டி இருக்கிறது. 🙂 Why am I not surprised?

1970இல் வந்த படம். பாலச்சந்தரின் மேடை நாடக நண்பர்கள் நாகேஷ், முத்துராமன், மேஜர், ஸ்ரீகாந்த், கோபி, மற்றும் லக்ஷ்மி, ஜி. சகுந்தலா, ராகினி, சிவகுமார், சி.கே. சரஸ்வதி, ஒய்.ஜி. மஹேந்திரன் நடிப்பு. (முத்துராமனின் இன்னொரு மனைவியை பார்த்த மாதிரி இருக்கிறது, யாரென்று தெரியவில்லை. நாகேஷின் நண்பராக வருபவரை பல பாலச்சந்தர் படங்களில் பார்த்திருக்கிறேன், யாரென்று தெரியவில்லை). எம்.ஆர்.ஆர். வாசு, சௌகார்தான் மிஸ்ஸிங். வி. குமார் இசை. நாகேஷுக்கு ஜோடி இல்லை. ஒய்.ஜிக்கு முதல் படம் இதுவா நூத்துக்கு நூறா?

நவக்ரகம் என்று பேர் இருப்பதால் வீட்டில் ஒன்பது பேர்கள். மூத்தவர் எல்லாரும் கொஞ்சம் பயப்படும் மேஜர். கொஞ்ச நாள் பைத்தியமாக இருந்து பின்பு குணமானவர். முத்துராமன் இரண்டாவது. இரண்டு மனைவிகள். ஒன்று ஜி. சகுந்தலா. முத்துராமன் ஒரு தகாத வார்த்தை சொல்லிவிட்டதால் அவர் மீது கேஸ் போட்டுவிட்டு ஆனால் வீட்டோடு இருக்கும் மாப்பிள்ளை ஸ்ரீகாந்த், அவரது மனைவி ராகினி, அவர்கள் பையன் ஒய்.ஜி. அடுத்தது கோபி. கடைசியாக லக்ஷ்மி. கூட்டுக் குடும்பம். ஆனால் சதா தகராறு. ராகினி எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்று நடப்பவர். ஸ்ரீகாந்துக்கு கேஸ்தான் முக்கியம். முத்துராமனின் மனைவிகளுக்கு யார் ஒசத்தி என்ற சண்டை. இதுவே அவருக்கு பெரிய தலைவலி. ஒய்.ஜிக்கு அப்போதே அசடு ரோல்தான். சலித்துப் போன மேஜர், கோபி, லக்ஷ்மி. இதில் சிவகுமார் லக்ஷ்மியை சைட் அடிக்கிறார். சிவகுமாரை தொட்ட காற்று வந்து தொட்டாலே போதும் என்கிற லக்ஷ்மி, அதையும் கேட்ட பின்பும் புன்சிரிக்கும் சாதுவான சிவகுமார்.

இங்கே நாகேஷ் கோபியின் நண்பன் என்று பொய் சொல்லிக்கொண்டு நுழைகிறார். மேஜருக்கும் அவருக்கும் ஒரு இனம் புரியாத பாசம். நமக்கெல்லாம் புரியவைக்க ராகினி இருக்கிறார். பொய் என்று தெரிந்தும் கோபி கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார். நாகேஷ் வீட்டை ஒழுங்கு படுத்துகிறார். லக்ஷ்மிக்கு கல்யாணம் செய்து வையுங்கள் என்று சொல்வதை யாரும் காதில் போட்டுக்கொள்ளாததால் தானே முன்னின்று செய்து வைக்கிறார். இப்போது கோபி முறைக்க, மேஜர் நாகேஷை தத்து எடுத்துக்கொள்கிறார். நாகேஷ் ஸ்ரீகாந்த்துக்கும் முத்துராமனுக்கும் சமாதானம் செய்துவைக்கிறார், சண்டை போடும் எல்லாரையும் தான் தியாக சுடராய் இருந்து ஒன்று சேர்க்கிறார். எல்லாருக்கும் உண்மை தெரியும்போது வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறார். அவர் போனாலும் எனக்கு சுபம் என்று எழுதி நாளாயிற்று, சுபம் என்றே எழுதிவிடுகிறேன்.

மேடை நாடகம்தான். நாடகத்தில் ஒரு செட் போட்டு எடுப்பது போல ஒரு ஹால் செட் போட்டு அங்கேயே முக்கால்வாசி படம் எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரே ஒரு முறை பீச்சுக்கு போய் “உன்னை தொட்ட காற்று” பாட்டை எடுத்திருக்கிறார்கள், பிறகு சாமி கண்ணை குத்திவிடப்போகிறது என்று ஹாலுக்கு திரும்பி வந்துவிடுகிறார்கள்.

ஆனால் எனக்கு படம் பிடித்திருந்தது. சுவாரசியமான பாடல்கள். “நவக்ரகம் நீங்க நவக்ரகம்” படம் பிடிக்கப்பட்டது அருமை. பாட்டு அருமை++ ஆக எழுதப் பட்டிருக்கிறது. ஒவ்வொருவரும் முறைத்துக் கொண்டு போவது மிக நன்றாக இருந்தது. முத்துராமன் “எனக்கு வாய்த்தது ரெண்டும் சனியன்” என்று சொல்ல, அவரது இரு மனைவிகளும் விஷயத்தை விட்டுவிட்டு “யார் சனியன்? நானா அவளா?” என்று பாடுவது சூப்பர். கோபி “இது கொலைகாரக் குடும்பம். நீ சொல்லியா திருந்தும்?” என்று வெறுப்பாக சொல்லிவிட்டு போவது அருமை. ஸ்ரீகாந்த் எல்லாவற்றையும் விட்டுவிட்டு “திட்றான் திட்றான் மறுபடியும் திட்றான் எல்லாரும் சாட்சி” என்பதும், ஒய்.ஜி. “எனக்கும்தான் வயசாச்சு, எனக்கு எப்போ கல்யாணம்” என்பதும் க்ளாஸ்! லிரிக் கிடைக்குமா?

ஸ்ரீகாந்த்தும் முத்துராமனும் சமாதானம் ஆகும் பாட்டும் நன்றாக படமாக்கப்பட்டிருந்தது.

பல புன்னகைக்க வைக்கும் காட்சிகள். முத்துராமன் ஸ்ரீகாந்தை பார்த்து சொன்ன தகாத வார்த்தையை வைத்துக்கொண்டு மெக்சிகோ சலவைக்காரி ஜோக் ரேஞ்சுக்கு விளையாடி இருக்கிறார். முத்துராமன் ஸ்ரீகாந்து டனும் மேஜருடனும் சமாதானம் ஆகும் இடங்கள், ராகினியின் பல காட்சிகள். ஸௌகாருக்கு போக வேண்டிய ரோல் ராகினிக்கு போயிருக்கிறது. ஸ்ரீகாந்த் பூவா தலையா, எதிர்நீச்சல் ஆகியவற்றில் செய்த ரோல்களை நினைவு படுத்தினாலும் ரசிக்கும்படி செய்திருக்கிறார். சிவகுமார் அழகாக வந்து போகிறார். அவருக்கும் லக்ஷ்மிக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கிறது.

“உன்னை தொட்ட காற்று” மிகவும் அருமையான ஒரு பாட்டு. இங்கே கேட்கலாம்.

ஏன்.எல். ராகவனின் குரல் நாகேஷுக்கு நன்றாக பொருந்துகிறது. “நவக்ரகம் நீங்க நவக்ரகம்” பாட்டில் முத்துராமன், மேஜர், ஸ்ரீகாந்த், எல்லாருமே சொந்தக் குரலில் பாடி/பேசி இருக்கிறார்களா?

எனக்கு சமாதானப் பாட்டு நினைவு வர மாட்டேன் என்கிறது.

இதை தவிர “எல்லாமே வயத்துக்குத்தாண்டா” என்ற ஒரு பாட்டும் ட்ரெய்லரில் பார்த்தேன்.

பார்க்கலாம். 10க்கு 6 மார்க். C grade.

Advertisements

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

3 Responses to நவக்ரகம் (Navagraham)

  1. ராஜா. சொல்லுகின்றார்:

    இந்தப் படத்தில் நாகேஷ் திக்குவாய்க்காரர். கடைசி காட்சியில், கலாட்டா குடும்பத்துக்கு மெசேஜ் எழுதிவைத்துவிட்டு கப்பல் ஏறிப் போய்விடுவார். அந்த மெசேஜுக்குக் கீழே, பா… பா… பாலு. என்று கையெழுத்து போட்டிருப்பார்.

    இதுதான், கே.பாலச்சந்தர் டச் என்று சொன்ன என் நண்பனை, “பேசும்போது திக்கறவன் எழுதும்போதும் திக்குவானா..? இதான் டைரக்ஷன் டச்சா..?” என்று கேட்டு கோட்டா செய்தது நினைவுக்கு வருகிறது..!!!

  2. RV சொல்லுகின்றார்:

    ராஜா,

    நவக்ரகத்தில் எனக்கு இது ஞாபகம் இல்லை. ஆனால் எனக்கும் அது பாலச்சந்தர் டச் என்றுதான் தோன்றுகிறது.

  3. ராஜா. சொல்லுகின்றார்:

    என் நண்பன்கிட்ட நீங்க இப்படி சொன்னீங்கன்னு நான் சொன்னா அவன் ரொம்ப சந்தோஷப்படுவான் தல..!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: