பாக்தாத் திருடன்


இன்று என் நண்பன் பகவதி பெருமாள் என்ற பக்ஸ் இந்த படத்தை பார்க்கவும் பார்த்து இதை பற்றி எழுதவும் செய்வதாக சொல்லி இருக்கிறான். நாம் எழுதுவதை படிக்கவும் படித்து மறு மொழியும் எழுத வெட்டிப் பய புள்ள மாதிரி ஆட்களும் இருக்கிறார்கள். சக்கைப் போடு போடு ராஜா!

Bags –
(என் கொடூரமான எழுத்துக்குப் பொறுப்பு நான் மட்டுமே அல்ல். RVயும் தான். அவன் தான் permission கொடுத்தது. நான் எழுதுவதைத் தாங்க முடியாதவர்கள் தற்காலிகமாக இங்கே வராமல் தப்பித்தாலும் ம்றக்காமல் திஙகள்கிழமை மீண்டும் த்வறாமல் வந்து மாட்டிக்கொள்ளுஙகள். RV காப்பாற்றுவான். சுபம்.

விஷயத்துக்கு வருவோம்.

எனக்குத் நேற்றுத் தலைவலி – அதனால் முதல் 15-30 நிமிஷம் மட்டுமே பார்த்தேன். மேலும் எந்த் இடத்தில் மெய் எழுத்து”ப்” போடவேண்டும் என்ற அடிபடையை பள்ளியில் சொல்லிக்கொடுக்கும் போது நிச்சயம் நான் MGR சினிமா பார்த்துகொண்டிருந்திருப்பேன். இன்னும் தெரியவில்லை. இதையெல்லாம் தாண்டி பிட் அடித்து எழுதுகிறேன்.)

1960ல் வந்த படம். சதர்ன் மூவிஸ், (insignia issue கொஞம் இருந்திருக்கும் போல். ஜெமினி ஃபில்ம்ஸ் மாதிரி யோசித்து இவர்களும் “பப்பர பப்பர பம்பம்பம்” இசைக்கும் பொம்மைக்குப் பதில் நிஜமான ஒரு பெண்ணை வைத்துவிட்டர்கள்) தயாரிப்பு.

புரட்சித்தலைவர் MGR, ஆடல் அழகி வைஜயந்திமாலா, M.N. நம்பியார், T.S. பாலையா, T.R.R. ராமச்சந்திரன், M.N. ராஜம், ச்ந்தியா (புரட்சிதலைவியின் அம்மா), M.S.S. பாக்கியம், S.N. லக்‌ஷ்மி, K.S.அஙகமுத்து, S.A. அசோகன், S.V. சஹஸ்ரநாமம், K. கண்ணன் – எனக்கு தெரிந்த முகஙகள். ம்ற்றும் எனக்கு தெரியாத நூற்றுக்கணக்கானவர்கள் ந்டித்துள்ளார்கள். (டைடிலில் முதலில் நடிகைகள், பின்னர் தான் நடிகர்கள் – feministகள் சந்தோஷப் பட்டுக்கொள்ளலாம்)

கதை, உரையாடல் – A.S. முத்து.
பாடல்கள் – மருதகாசி;
இசை-G. கோவிந்தராஜுலு நாயுடு P.S.திவாகர் உதவியுடன்.
பின்னணி பாடியவர்கள் – T.M.S. செளந்தர்ராஜன், P.சுசீலா, ஜிக்கி, நாகேஷ்வர்ராவ், ஜமுனாராணி; ஒளிப்பதிவு – M. கிருஷ்ணசாமி;
தயாரிப்பு – T.P.சுந்தரம் ம்ற்றும் ஹரிலால்பட்டேவியா.
டைரக்‌ஷன் – T.P.சுந்தரம்.

“சொக்குதே மனம்” பாடல் இனிமையக இருக்கிறது. ”சிரிச்சாப் போதும் சின்னஞ்சிறு பொண்ணு” ம்ற்றும் ”கண்ணீர்ன் வெள்ள்ம் இங்கே ஓடுதையா” பரவாயில்லை.

கதை நாடோடி மன்னன் பாணியில் இருக்கிறது. மீண்டும் மீண்டும் மக்களாட்ச்சி. இதில் கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது என்று வேண்டாத சபதம் வேறு. கதை ஓட்டத்தில் பின்னர் உறுதியாக இதனால் ஒரு சிக்கல் உருவாகியிருக்க வேண்டும் என்று ஊகிக்க முடிகிறது. நான் பார்க்கவில்லை. திருமணம் செய்யாமல் ஓட்டுவது மனித வாழ்க்கையில் சாத்தியம், ஆனால் கஷ்டமான ஒன்று

ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. பிரபாகரன் இதே மாதிரி விடுதலை புலிகளுக்கு ஒரு கொள்கை வைத்திருந்தார். விதியை மீறுபவர்கள் கடினமாக தண்டிக்கப்பட்டர்கள். புலிகளுக்கெல்லாம் ஒரே குழப்பம். கஷ்டமும் கூட. போதாக்குறைக்கு பெண்புலிகள் வேறு அறிமுகப்படுத்தப்பட்டார்கள். திருட்டுதனமாக உறவுகள். (இந்த themeஐ வைத்துதான் “கன்னத்தில் முத்தமிட்டால்” திரைபப்டம் எடுக்கப்பட்டது என நினைக்கிறேன்) ஏன் பிரபகரனே குழம்பினார். அவருடைய மனைவி (திருச்சியில் என நினைக்கிறேன்) அறிமுகமானதிலிருந்து இயக்கத்தில் focus குறைந்து அவதிப்பட்டார். ஆன்டன் பாலசிஙகம் பேசி கொள்கையை காம்ப்ரமைஸ் செய்ய வைத்தார். சட்டம் தள்ர்த்தப்பட்டது. எல்லோருக்கும் நிம்மதி. முத்லில் பிரபாகரனுக்கு. ஆண் புலிகள் ஆவேசமாக பெண் புலிகளை தேடினார்கள். பலருடைய வாழ்க்கையில் ஒளி பிறந்தது.

வைஜ்யந்திமாலா அடிமை. அவளுடைய ஒனர் அவரை கொடுமைப்படுத்துகிறான். MGRக்கு (அபு என்ற திருடன்) ந்ம்பியார் என்றால் ஒரு தனி கோபம் தான். ந்ம்பியார் வைஜயந்திமாலாவிடம் வம்பு செய்யும் பொழுது கொதித்து எழும் MGR, வை.மாலாவின் ஓனரை ஒன்றுமே செய்யாமல் போகிறார். கடைசியில் ”இருபதினாயிரத்து ஒன்னு” தினார் கொடுத்து MGR வை.மாலாவை வாங்கி விட சுபம்…ஓ..sorry… அதற்கு மேல் பார்க்கவில்லை.. feel free to fill in 🙂

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

5 Responses to பாக்தாத் திருடன்

 1. Bags says:

  அய்யோ! எனனையா இது அநியாய பொய்யா இருக்குது?

  சரி. இது தான் விதி போலும்…

 2. சாரதா says:

  அதென்ன…, சந்தியாவுக்கு மட்டும், அவர் யாருடைய அம்மா என்ற அடைமொழி..?. அப்படீன்னா, மற்ற நடிகர், நடிகைகளையும் அவர்கள் யார் யாருடைய அப்பா, யார் யாருடைய அம்மா என்று விளக்கியிருக்கலாமே.

 3. Bags says:

  Bags பதில்
  தவறு தான். மன்னிக்க வேண்டுகிறேன். ஏதோ இருக்கும் கொஞசம் ஞானத்தை தெரியாத்தனமாக வெளிப்படுத்தப்போய் வம்பில் மாட்டிக்கொண்டேன் பாருங்கள்!

 4. RV says:

  பக்ஸ்,

  போஸ்டுக்கு நன்றி! இன்னும் ஒரு இரண்டு முறை படித்தால் படம் பற்றி புரிந்துவிடும் என்று நினைக்கிறேன். :-))

  நான் சோப்பு விளம்பரத்திலிருந்து சுபம் வரை பார்த்தால்தான் திருப்தி படம் பார்த்ததாக நினைக்கும் டைப். ட்ரெய்லர் மிஸ் ஆகிவிட்டால் கொடுத்த பைசா வசூல் ஆகவில்லை என்று நினைப்பவன். நீயோ பத்து நிமிஷம் பார்த்தாலும் படத்தின் பெருமைகளை பற்றி அருமையாக எழுதிவிடுகிறாய். நமக்கு complementary strengths இருக்கிறது!

  கல்யாணத்தின் பெருமையை பற்றி எழுதியதை கட்டாயம் சித்ராவிடம் காட்டு, கொஞ்சம் பாயிண்ட்ஸ் கிடைக்கலாம்… :-))

  என்னங்க சாரதா, நானும் நிறைய முறை சந்த்யா (ஜெயின் அம்மா) என்று குறிப்பிட்டிருக்கிறேன், நீங்கள் என்னை விட்டுவிட்டு பக்ஸை மட்டும் பிடிக்கிறீர்களே! எல்லாம் தெரியாத குறைதான் – வேறு ஏதாவது எங்களுக்கு தெரிந்தால்தானே எழுத? :-))

 5. Bags says:

  B.L. Theraja Summaryஐ மட்டும் படித்துவிட்டு exam எழுதி pass செய்த experience கை கொடுக்காமலா போய் விடும்?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: