முத்துக்கள் மூன்று


மூன்று சொத்தைகள் என்ன என்று எழுதியாயிற்று. இப்போது டாப் மூன்று முத்துக்கள்:

1. கப்பலோட்டிய தமிழன்
2. சந்திரலேகா
3. மேஜர் சந்திரகாந்த்

மத்தளத்துக்கு இரண்டு புறமும்


அப்பாடா!

இது வரை சிவாஜி ரசிகர்கள்தான் திட்டினார்கள். முதல் முறையாக ஒரு எம்ஜிஆர் ரசிகரும் திட்டி நான் நடுநிலையாளன் என்பதை நிறுவிவிட்டார்.

தமிழ் எழுதியது:
Tamil சொல்வதென்னவென்றால்:
செப்டம்பர் 27, 2008 at 7:06 மு.பகல் e
திருடாதே படம் இருக்கும் போது எந்த மடையனாவது kti பார்ப்பானா
உங்களுக்கு MGR அவர்களின் படங்களை விமர்சனம் செய்ய அறிவும் கிடையாது அருகதையும் கிடையாது

kti என்றால் கப்பலோட்டிய தமிழன். அந்த வாரம் க. தமிழன், திருடாதே இரண்டு படமும் திரையிடப்பட்டது. :-))

அறிவு கிடையாது என்று திட்டினாலும், “உங்களுக்கு அறிவு கிடையாது” – “உனக்கு அறிவு கிடையாது” இல்லை – என்று மரியாதையாக திட்டி இருக்கிறார்.

பித்து பிடிக்க வைத்த “முத்தான படங்கள்”


சன் டிவியின் முத்தான படங்கள் – இல்லை, சொத்தையான 3 படங்கள்

1. தேன் கிண்ணம். இது தேன் கிண்ணம் இல்லை, விளக்கெண்ணெய் கிண்ணம். பாதிக்கு மேல் என்னாலேயே தாங்கமுடியவில்லை. ஆனால் அதை பாதி பார்த்த அனுபவம்தான் அடுத்த இரண்டு படங்களை முழுவதாக சகித்துக் கொள்ள வைத்தது.

2. நாலும் தெரிந்தவன். இயக்குனருக்கு நாலு வேண்டாம், ஒன்றாவது தெரிந்திருக்கலாம்.

3. வந்தாளே மகராசி. எனக்கு மோசமான ராசி!

காதலில் விழுந்தேன் ஆச்சரியங்கள்


கலாநிதி மாறன் படத் தயாரிப்பிலும் இறங்கிவிட்டாரா? சன் டிவிக்கு புதுப் படங்கள் கிடைக்க அவருக்கு மிஞ்சிய வழி இது ஒன்றுதானா?

ஹீரோ பாய்ஸ் படத்தில் வரும் கொஞ்சம் குண்டான இளைஞரா? எப்படி இப்படி இளைத்துவிட்டார்? எனக்கும் கொஞ்சம் நம்பிக்கை வருகிறது!

எனக்கு மட்டும்தான் தோன்றுகிறதா? “அட்ராட்ரா அட்ராட்ரா நாக்க முக்க நாக்க முக்க”, “அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ” இரண்டும் ஒரே ட்யூன்தானே?

அழகிரி இந்த படம் மதுரையில் வெளியிடப்படுவதை நிறுத்திவிட்டாராமே! கடைசியாக இப்படி நிறுத்த முயற்சி செய்தவர் மதுரை முத்து – உலகம் சுற்றும் வாலிபன் படத்தை!