“அந்த நாள்” வந்த நாள்


இந்த வெள்ளி திரையிடப்படும் அந்த நாள் திரைப்படத்தை பற்றி படம் வந்த நாளிலேயே பார்த்த ராஜ்ராஜ் என்ற ரசிகர் எழுதுவது:

I saw the movie in 1954 when it was released. I had just finished my high school (SSLC). The first Tamil movie without any song. VeeNai Balachander directed the movie. Sivaji is a spy for a foreign power and communicates using a radio. He is shot dead. The story revolves around who shot him and how detective Javar Seetharaman finds the culprit. Javar comes from Javert, the relentless inspector in Les Miserables taken in Tamil as ‘ yezhai padum paadu’. Seethaaraman was the inspector with Nagaiah in the lead.
‘koNdu vandhaal thandhai, koNdu vandhaalum koNdu varaavittaalum thaai, purushanai kolvaaL pendaatti’ is a line in the movie. Seethaaraman uses the clue from this line to solve the mystery.
The movie did not go well with the three and half anna tharai tickets. It was good for ten anna chair tickets. Manohara, another sivaji hit, did very well. No songs in andha naaL did not help either. Remember they were making the transition from theatre and the movies had to have at least ten songs and run for at least three hours. andha naaL ran for about two hours, very short compared to other movies and people did not think they got their money’s worth !
The movie is a classic. You will like it. I put it in the same class as those by Satyajit Ray.

Advertisements

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

6 Responses to “அந்த நாள்” வந்த நாள்

  1. Bags சொல்லுகின்றார்:

    இது நான் பார்த்திருக்கிறேன். அருமையான திரைப்படம். சிவாஜி anti-hero. இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஜப்பானிய உளவாளி. கொலையாளி யாரென்று என்று சொல்லி ஸ்வாரஸ்யத்தை கொலை செய்யவில்லை. இதில் villainஆக நடித்ததுப் பற்றி சிவாஜி கூறியிருப்பது இது:
    “நடிக்க வாய்ப்புக் கிடைக்கும் பாத்திரத்தைத் தான் நான் பார்க்கிறேன். ஹீரோவாக இருந்தால் என்ன, வில்லனாக இருந்தால் என்ன?”

    அந்தப் பேட்டி href=”https://awardakodukkaranga.wordpress.com/2008/09/24/ராஜபார்ட்-ரங்கதுரை-ii/#respond” இங்கே

  2. சாரதா சொல்லுகின்றார்:

    “அந்த நாள்”

    அந்த நாளில், அதாவது அந்த நாட்களில் (1950) படம் துவங்கும்போது கர்நாடக இசையுடன் அல்லது கர்நாடக இசைப்பாடலுடன் படத்தின் டைட்டில்கள் ஓடும். முடிந்ததும் ஒரு அரசவையில் அரசவை நர்த்தகியின் நடனம் நடைபெறும். அதைத்தொடர்ந்து பாத்திரங்கள் பேசத்துவங்க படம் நகர ஆரம்பிக்கும். இதுதான் அன்றைய நடைமுறை.

    ஆனால் “அந்த நாள்” படத்தின் துவக்கத்தைப்பாருங்கள். படம் துவங்கும்போது ஜாவர் சீதாராமனின் குரலில்

    “இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்கிக்கொண்டிருந்தன. எந்த நேரம் என்ன நடைபெறுமோ வென்று எல்லோர் மனதிலும் ஒரு அச்சம் குடிகொண்டிருந்தது. அப்போது ஒருநாள் சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு வீட்டில்…”

    இதைப்பேசி முடிக்கும் முன்பாகவே, திடீரென்று துப்பாக்கி வெடிக்கும் சப்தம், அதைதொடர்ந்து சிவாஜி நெஞ்சைப் பிடித்துக்கொண்டே கேமராவிலிருந்து பின்னோக்கிச்சென்று கீழே விழுவார். கால்களை உதைத்தவாறே உயிரை விடுவார். (ஆம். முதல் காட்சியிலேயே கதாநாயகன் அவுட். அந்த நாளில் நினைத்துப்பார்க்க முடியாத புதுமை). சிவாஜி இறந்ததும், மாடியிலிருந்து கதவொன்று திறக்கும். ஒரு வழுக்கைத்தலை பெரியவர் தட தட வென மாடிப்படிகளில் ஓடி வந்து கேமரா அருகில் வந்ததும் கீழுதட்டை கைகளல் பிடித்தவாரே அங்குமிங்கும் பார்ப்பார். பின்னர் ஓடத்துவங்குவார். டைட்டில்கள் ஓடத்துவங்கும். (ஆம் ‘அந்த நாள்’.. அந்த நாளேதான்).

    கொலை எப்படி நடந்தது என்று விசாரிக்க வரும் சி.ஐ.டி.ஜாவர் சீதாராமனிடம், கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும், கொலை எப்படி நடந்திருக்கக் கூடும் என்று அவரவருக்கு தெரிந்த விஷயங்களைக்கொண்டு விவரிக்க, ஒவ்வொன்றும் ஒரு ஃப்ளாஷ்பேக்காக விரியும். ஒவ்வொருவர் சொல்லி முடிக்கும்போதும் சிவாஜி சுடப்பட்டு விழுவார். (படம் முழுவதையும் ஃப்ளாஷ் பேக்கிலேயே சொல்லும் பாணியில் பின்னாளில் வந்த பல புதுமைப்படங்களுக்கு வித்திட்டு வழிகாட்டிய படம் ‘அந்த நாள்’).

    பெரியவர் பி.டி.சம்பந்தம், சிவாஜியின் தம்பி டி.கே.பாலச்சந்திரன், பாலச்சந்திரனின் மனைவி, நாடோடிப்பாடலை சுவாரஸ்யமாகப்பாடும் சோடாக்கடைக்காரன், குதிரை வண்டிக்காரன்… ஒவ்வொருவரும் எவ்வளவு ஜீவனுள்ள பாத்திரங்கள்..!!. நாட்டுப்பற்று மிகுந்த பண்டரிபாய், கல்லூரி விழாவில் புரட்சிக்கருத்துக்களை சொல்லும் சிவாஜியைக் கண்டு காதல் வசப்படுவது ஒரு அருமையான கவிதை நயம். தன்னுடைய திறமையை தன்னுடைய சொந்த நாட்டு அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை என்று விரக்தியின் எல்லைக்குப் போய் ஜப்பான் நாட்டு அரசுடன் உறவு வைத்து தன் சொந்த நாட்டுக்கே விரோதியாக மாறும் துடிப்புள்ள எஞ்சினீயர் கதாபாத்திரத்தில் சிவாஜி தூள் கிளப்பியிருப்பார்.

    கேமரா வழியாக கதை சொல்லும் பாணி முதலில் இந்தப்படத்தில்தான் பரீட்சித்துப் பார்க்கப்பட்டிருக்கும் என்பது பலரின் எண்ணம். நான் முன்பு சொன்னது போல அறையைப்பூட்டிக்கொண்டு சிவாஜி போகும்போது அவரோடேயே கேமராவும் போகும். கையிலிருக்கும் சாவிக்கொத்தை மேலும் கீழும் தூக்கிப்போட்டுப் பிடித்தபடி அவர் செல்லும்போது, கேமராவும் சாவியோடு மேலும் கீழும் போகும்.

    அதே போல இறுதிக்காட்சியில், தான் சுடப்படுவதற்கு முன்பாக, சுழல் நாற்காலியில் அமர்ந்த படி மனைவி பணடரிபாயுடன் பேசும்போது கேமரா இவரிடத்தில் அமர்ந்து கொண்டு இவர் பார்வை போகும் திசையெல்லாம் போகும். அறை முழுக்க சுற்றி சுற்றி அலையும்.

    ( ‘இருகோடுகள்’ படத்தில் கலெக்டர் சௌகார், முதலமைச்சர் அண்ணாவை பேட்டியெடுக்கும் காட்சியில், அண்ணாவின் இருக்கையில் கேமரா அமர்ந்து, அவர் பார்வை போகும் திசைகளில் போவதைக்கண்டுவியந்தேன். அதன் பின்னரே ‘அந்தநாள்’ பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த உத்தி ஏற்கெனவே (15 ஆண்டுகளுக்கு முன்பே) அந்த நாளில் பயன்படுத்தப் பட்டிருப்பதைக் கண்டு வியப்பின் எல்லையை அடைந்தேன். (பாலச்சந்தர் என்று பெயர் வைத்தாலே புதுமைகள் செய்யதோன்றுமோ)

    எஸ். பாலச்சந்தர், தானே ஒரு நடிகராக இருந்தும் கூட, சில காட்சிகளில் தானே நடித்துப் போட்டுப் பார்த்தபின், சரிவரவில்லையென்றதும் தூக்கிப்போட்டுவிட்டு ஏ.வி.எம். செட்டியாரின் ஆலோசனையின்படி நடிகர்திலகத்தை கதாநாயகனாகப் போட்டு படத்தை எடுத்தார்.

    படத்தில் பாடல்களே இல்லாததால் இசையமைப்பாளர் என்று தனியாக ஒருவர் கிடையாது. படத்தின் டைட்டிலில் ‘பிண்ணனி இசை : ஏ.வி.எம்.இசைக்குழு’ என்று மட்டும் காண்பிக்கப்படும்.

    தமிழ்த்திரையுலக வரலாற்றில் எந்நாளும் பேசப்படும் படமாக சிறந்த தொழில் நுட்பம், மற்றும் புதிய சிந்தனை அமைந்த படம்தான் “அந்த நாள்”

  3. RV சொல்லுகின்றார்:

    சாரதா,

    இத்தனை நாள் எங்கே போயிருந்தீங்க? You were missed!

  4. RV சொல்லுகின்றார்:

    Saradhaa,

    Mails to your yahoo address bounce, hence I have to write this here – hope you would see it.

    I have already “volunteered” you for a few guest posts. I hope you are ok with this. Let me know if you have any concerns.

    I was wondering whether it would be ok to write a short note about you in the about page. Ideally, if you can write an intro and add a photo, it would be great. If you are ok with this, send me a mail at rv_subbu at yahoo dot com, we can work out the logistics… I (and bags) would be delighted to claim somebody like you as a guest blogger!

    As I mentioned once, I look at feedback everyday to see whether there is any from you (and plum)…

    Looking forward to hearing a yes from you…

  5. BaalHanuman சொல்லுகின்றார்:

    ‘அந்த நாள்’ படம் பற்றி முக்தா ஸ்ரீனிவாசன்…
    ===============================================
    அப்போதெல்லாம் இயக்குனர்களுக்கு மட்டுமில்லை. உதவி இயக்குனர்களுக்குக் கூட போதிய மரியாதை இருந்திருக்கிறது. ‘அந்த நாள்‘ படத்தில், முக்தா ஸ்ரீனிவாசன் உதவி இயக்குனர்தான். ஆனால் ஒரு டிஸ்கஷனின்போது, அவரது கருத்துக் கூட எல்லோராலும் ஏற்கப்பட்டுள்ளது.

    வீணை எஸ். பாலச்சந்தர் இயக்கத்தில் ‘அந்த நாள்‘ படம் உருவானது. தேசத் துரோகம் குறித்த அந்த த்ரில்லர் படம், பாடலே இல்லாத படமாக உருவானது.

    ஆனால், படம் முடிந்த பிறகு, விநியோகஸ்தர்கள் பாடல் இல்லாத படமா என்று தயங்கினார்கள். படத்திற்கு 10 பாட்டு, 20 பாட்டுகள் என்று இடம்பெற்று வந்த காலம் அது. எனவே, அவர்களின் தயக்கத்திற்கு காரணம் இருந்தது. தயாரிப்பாளர், ஹீரோ எல்லாம் அந்த தயக்கத்தை ஏற்றார்கள். இயக்குனரிடம், ‘ஒரு பாடலாவது வைக்கலாமா ?’ என்று விவாதித்தார்கள்.
    இதில், இயக்குனர் எஸ்.பாலச்சந்தரும் கொஞ்சம் சஞ்சலப்பட்டுப் போனார்.

    ஆனால், நான் இயக்குனரிடம் பிடிவாதமாக கருத்து தெரிவித்தேன். ‘பாடல் வைப்பது என்று முடிவெடுத்தால், ஒரு பாடல் வேண்டாம்; படம் முழுக்க வழக்கம் போல் பாடல்களை வைத்து விடலாம். இல்லையேல், ஒரே முடிவாய் பாடல் இல்லாத படமாகவே வெளியிடலாம். அதுவே, நம் படத்துக்கு பெரிய விளம்பரமாக அமையும் ‘ என்று வாதிட்டேன்.

    “என் உறுதியான கருத்தைக் கேட்ட இயக்குனர், அவரது சஞ்சலத்திலிருந்து விடுபட்டார். ‘பாடல் வேண்டவே வேண்டாம்; அதுவே புதுமையாகப் பேசப்படும்’ என்று எல்லோரிடமும் வாதிட்டு வெற்றி பெற்றார். அதனால்தான் இன்றும் கூட, ‘பாடல்கள் இல்லாத முதல் படம்’ என்று தமிழ் சினிமா வரலாற்றில் ‘அந்த நாள்‘ நிரந்தர இடத்தைப் பிடித்துள்ளது” என்றார் முக்தா ஸ்ரீனிவாசன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: