கணவன் (Kanavan)


1968ல் வந்தது. வள்ளி ஃபில்ம்ஸும், MGRரும் சேர்ந்து சத்யா ஸ்டுடியோவில் விட்ட 18 ரீல்கள தான் ”கணவன்”

MGR, ஜெயலலிதா, ”உணர்ச்சிப் பிழம்பு” அசோகன் (யாரும் அசோகனுக்கு பட்டம் கொடுக்க முன்வராததால் நான் கொடுத்துவிட்டேன்), மனோகர், சோ, விஜயகுமாரி, மனோரமா, சுந்தரிபாய், ராமாராவ், என்னத்தே கண்ணையா, கண்ணன், உசிலை மணி, கரிகோல்ராஜ், ஜஸ்டின் ஆகியோர் நடித்தது.

கதை – MGR; வசனம் – சொர்ணம்;
பாடல்கள் – வாலி, ஆலங்குடி சோமு
பின்னணி – TMS, P.சுசீலா, L.R. ஈஸ்வரி
இசை – கோவர்த்தனம் உதவியுடன் மெல்லிசை மன்னர் MSV
சண்டை – சோமு
உதவி டைரக்‌ஷன் – ஜகந்நாதன், துரை
ஒளிப்பதிவு – A.V.ராமகிருஷ்ணன் உதவியில் V.ராமமூர்த்தி
தயாரிப்பு – சடையப்பன்
டைரக்‌ஷன் – P.நீலகண்டன்

சொத்துக்களை தக்க வைக்க, திருமணத்தை வெறுக்கும் ஃபெமினிஸ்ட் ஜெ (ராணி) தந்தையின் ராஜதந்திரத்தால் (மேனேஜர் அசோகன் அட்வைஸ் படி) – அதாவது திருமணம் செய்தால் தான் சொத்து – கொலைகுற்றம் சாட்டபட்ட MGRரை (வேலையா) திருமணம் செய்ய ஒத்துக்கொள்கிறார் தனது ராஜதந்திரமாக நினைத்து – அதாவது ”இவன் முடிவு வெகு சீக்கிரத்தில், அப்புறம் சொத்து நமக்குத்தான்” என்ற நம்பிக்கையில்.

அவருடைய போதாதகாலம் விதியின் ராஜதந்திரத்தால் –  அதாவது MGR நிரபராதி என தீர்ப்பானதால் – திருமணம் நீடித்து விடுகிறது. MGRருடன் சேர்ந்து வாழமாட்டேன் என அடம் பிடிக்க, சொத்தை அடைய துடிக்கும் மானேஜரிடமிருந்து பாதுகாக்க ஜெயுடம் சேர்ந்தே வாழ்வேன் என MGR அடம் பிடிக்க, ஒரே அடம் தான். ஒரு வழியாக MGR தன்னை பாதுகாக்கத் தான் இப்படி தன்னுடன் வாழ்ந்து கஷ்டப்படுகிறார் என்பதை புரிந்துக்கொண்ட ஜெ தானும் முழுமனதாக MGRருடன் வாழ்ந்து கஷ்டப்பட ரெடியாகும் தருணத்தில், அதாவது, அட சுபம் போடமாட்டார்களா என நாம் ஆவலுடன் எதிர்பார்க்கும் தருணத்தில், தற்கொலை முயற்ச்சியில் தோல்வியடைந்து பிழைத்துக் கொள்கிறார். நம்மை கொல்கிறார். ராணி கண்ணம்மாவாகிறார். ஒரு முக்கால் மணி நேர அறுவைக்கும், டிஷ்யூம், டிஷ்யூமிற்க்கு பிறகு போனால் போகட்டும் என சுபம்.
பாடல்களில் மயங்கும் வயது பரவாயில்லை – TMS மற்றும் PS. என்னப்பொருத்தமடி மாமா சகிக்கவில்லை L.R.ஈஸ்வரி, குழுவினர். (ஆமாம், எந்த கோர்ட்டில் 7 பேர் டென்னிஸ் விளையாடுகிறார்கள்?) ”உண்மையின் சிரிப்பை” லிரிக்ஸ் ஒகே, டுயூன் கொடுமை. “நான்  உயிர்பிழைத்தேன்”, “அடி ஆத்தி ஆத்தி” (கொள்கை விளக்கப் பாடல்), “நீஙக நினைச்சா நடக்காதா?” பாடல்களும் கொடுமையே.

ஒரு டயலாக் நன்றாக இருந்தது

”வாங்க மாப்பிள்ளை, வாங்க” – ஜெயின் அப்பா லண்டன் ரிடர்ன்ட் மனோகரிடம் கூற அதற்கு ஜெயிடம் அப்பொழுது தான் அவமானப்பட்டிருந்த மனோகர்

“வாங்க வேண்டியதெல்லாம் வாங்கியாச்சு” என்று கூறுவது.

பெண்களை பெண்டாட்டி என்று கூப்பிட்டால் ஆண்களை ஆண்டாட்டி என்று ஏன் கூப்பிடக்கூடாது எனக் கேட்கிறார் மனோரமா. கூப்பிடலாமே.

சீனியர் லாயரான ராமாரவும் ஜூனியரான சோவும் காமெடி என்ற் பெயரில் பண்ணுவது அபத்தமோ, அபத்தம்.

அசோகன் கண்ணன்மீது ஆஸிட் அடிப்பது கொஞ்சம் வியப்பூட்டியது. ஆஸிட் கலாச்சாரம் 1968ல்யே உண்டு போலும்.

தாங்கமுடியலைப்பா.

எனக்கு வெறுப்பேற்றிய MGR படஙகள் என்ற லிஸ்ட் ஒன்று ஓப்பன் செய்யவேண்டும் போலும். சன் TVயின் கட் பண்ணி போடும் கொடுமை வேறு.

10க்கு 3.5 மார்க்.