கணவன் (Kanavan)


1968ல் வந்தது. வள்ளி ஃபில்ம்ஸும், MGRரும் சேர்ந்து சத்யா ஸ்டுடியோவில் விட்ட 18 ரீல்கள தான் ”கணவன்”

MGR, ஜெயலலிதா, ”உணர்ச்சிப் பிழம்பு” அசோகன் (யாரும் அசோகனுக்கு பட்டம் கொடுக்க முன்வராததால் நான் கொடுத்துவிட்டேன்), மனோகர், சோ, விஜயகுமாரி, மனோரமா, சுந்தரிபாய், ராமாராவ், என்னத்தே கண்ணையா, கண்ணன், உசிலை மணி, கரிகோல்ராஜ், ஜஸ்டின் ஆகியோர் நடித்தது.

கதை – MGR; வசனம் – சொர்ணம்;
பாடல்கள் – வாலி, ஆலங்குடி சோமு
பின்னணி – TMS, P.சுசீலா, L.R. ஈஸ்வரி
இசை – கோவர்த்தனம் உதவியுடன் மெல்லிசை மன்னர் MSV
சண்டை – சோமு
உதவி டைரக்‌ஷன் – ஜகந்நாதன், துரை
ஒளிப்பதிவு – A.V.ராமகிருஷ்ணன் உதவியில் V.ராமமூர்த்தி
தயாரிப்பு – சடையப்பன்
டைரக்‌ஷன் – P.நீலகண்டன்

சொத்துக்களை தக்க வைக்க, திருமணத்தை வெறுக்கும் ஃபெமினிஸ்ட் ஜெ (ராணி) தந்தையின் ராஜதந்திரத்தால் (மேனேஜர் அசோகன் அட்வைஸ் படி) – அதாவது திருமணம் செய்தால் தான் சொத்து – கொலைகுற்றம் சாட்டபட்ட MGRரை (வேலையா) திருமணம் செய்ய ஒத்துக்கொள்கிறார் தனது ராஜதந்திரமாக நினைத்து – அதாவது ”இவன் முடிவு வெகு சீக்கிரத்தில், அப்புறம் சொத்து நமக்குத்தான்” என்ற நம்பிக்கையில்.

அவருடைய போதாதகாலம் விதியின் ராஜதந்திரத்தால் –  அதாவது MGR நிரபராதி என தீர்ப்பானதால் – திருமணம் நீடித்து விடுகிறது. MGRருடன் சேர்ந்து வாழமாட்டேன் என அடம் பிடிக்க, சொத்தை அடைய துடிக்கும் மானேஜரிடமிருந்து பாதுகாக்க ஜெயுடம் சேர்ந்தே வாழ்வேன் என MGR அடம் பிடிக்க, ஒரே அடம் தான். ஒரு வழியாக MGR தன்னை பாதுகாக்கத் தான் இப்படி தன்னுடன் வாழ்ந்து கஷ்டப்படுகிறார் என்பதை புரிந்துக்கொண்ட ஜெ தானும் முழுமனதாக MGRருடன் வாழ்ந்து கஷ்டப்பட ரெடியாகும் தருணத்தில், அதாவது, அட சுபம் போடமாட்டார்களா என நாம் ஆவலுடன் எதிர்பார்க்கும் தருணத்தில், தற்கொலை முயற்ச்சியில் தோல்வியடைந்து பிழைத்துக் கொள்கிறார். நம்மை கொல்கிறார். ராணி கண்ணம்மாவாகிறார். ஒரு முக்கால் மணி நேர அறுவைக்கும், டிஷ்யூம், டிஷ்யூமிற்க்கு பிறகு போனால் போகட்டும் என சுபம்.
பாடல்களில் மயங்கும் வயது பரவாயில்லை – TMS மற்றும் PS. என்னப்பொருத்தமடி மாமா சகிக்கவில்லை L.R.ஈஸ்வரி, குழுவினர். (ஆமாம், எந்த கோர்ட்டில் 7 பேர் டென்னிஸ் விளையாடுகிறார்கள்?) ”உண்மையின் சிரிப்பை” லிரிக்ஸ் ஒகே, டுயூன் கொடுமை. “நான்  உயிர்பிழைத்தேன்”, “அடி ஆத்தி ஆத்தி” (கொள்கை விளக்கப் பாடல்), “நீஙக நினைச்சா நடக்காதா?” பாடல்களும் கொடுமையே.

ஒரு டயலாக் நன்றாக இருந்தது

”வாங்க மாப்பிள்ளை, வாங்க” – ஜெயின் அப்பா லண்டன் ரிடர்ன்ட் மனோகரிடம் கூற அதற்கு ஜெயிடம் அப்பொழுது தான் அவமானப்பட்டிருந்த மனோகர்

“வாங்க வேண்டியதெல்லாம் வாங்கியாச்சு” என்று கூறுவது.

பெண்களை பெண்டாட்டி என்று கூப்பிட்டால் ஆண்களை ஆண்டாட்டி என்று ஏன் கூப்பிடக்கூடாது எனக் கேட்கிறார் மனோரமா. கூப்பிடலாமே.

சீனியர் லாயரான ராமாரவும் ஜூனியரான சோவும் காமெடி என்ற் பெயரில் பண்ணுவது அபத்தமோ, அபத்தம்.

அசோகன் கண்ணன்மீது ஆஸிட் அடிப்பது கொஞ்சம் வியப்பூட்டியது. ஆஸிட் கலாச்சாரம் 1968ல்யே உண்டு போலும்.

தாங்கமுடியலைப்பா.

எனக்கு வெறுப்பேற்றிய MGR படஙகள் என்ற லிஸ்ட் ஒன்று ஓப்பன் செய்யவேண்டும் போலும். சன் TVயின் கட் பண்ணி போடும் கொடுமை வேறு.

10க்கு 3.5 மார்க்.

பற்றி Bags
Trying out

32 Responses to கணவன் (Kanavan)

 1. puratchi rasigan says:

  If Asokan is”Unarchi Pizhambu”
  then what happens to Sivaji ?
  Is he “Unarchi erimalai” ?

 2. ullathai solven says:

  அசோகனின் எவ்வளவோ better
  கலர் படங்களில் பார்க்க வேண்டுமே நம்ம சிவாஜியின் கண்களை
  குடிகாரன்’ போல் சிவந்து போய்..அந்த வயதிலும்
  புத்தகஙளை எடுத்துக்கிட்டு காலேஜ் போவாரு
  வயிற்றை மறைக்க ஒரு belt போட்டு அதை அமுக்கித் தள்ளி
  தன் வயதுக்கும் உருவத்திற்கும்
  பொருத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில் தவறிய நடிகர்களில் முத‌ல் இட‌ம் சிவாஜிக்குத் தான்
  அதுக்கு அவார்டு கொடுத்தாங்க‌ளா ???
  பாட‌ல்க‌ளை கேட்டுவிட்டு ஆசையாக‌ அதை பார்க்கவும் ஆசைப்பட்டு உட்கார்தால்
  அப்ப‌ப்பா !கொடுமை
  ய‌ம‌னுக்கு ய‌மன் ‘ என்று ஒன்று போட்டார்க‌ள் KTV யில்
  பிங்க் க‌ல‌ரில் பாண்டு ச‌ட்டை விக் போட்டுக் கொண்டு இம்சை அர‌ச‌ன் பிச்சை வாங்க‌ணும்பா !
  என்னவோப்பா ஆஹா ஓஹோ என்று அவருடைய ரசிகள்கள் புளுகித்
  தள்ளுவதை பார்த்துவிட்டு ஏதாவது ஓண்ணைப் பார்தால்
  இது மாதிரி திரைப்படங்களை
  உருவங்களை’ எப்படித்தான் அந்தக்கால ரசிகர்கள் ‘சகித்துக்’
  கொண்டார்களோ என்று மிக வியப்பாக இருக்கிறது
  இந்த லட்சணத்தில் ருக்குரு ருக்குரு..பம் பம் வேறு..

  MGR க‌ண‌வ‌னில் மிக‌ இளைமையாக‌ தோற்ற‌ம‌ளிக்கிறார் ப‌ர‌வாயில்லை
  ஆனால் குறிப்பாக ல‌தாவுட‌ன் நடித்தவை…சுருட்டை முடியும் ..முகம் முழுதும் மேக்கப் போட்டு
  கழுத்து மட்டும் சுருங்கி போயி !நல்லவேளை நடிப்பதை நிறுத்தினார்

  என்னவோப்பா..

  • Srinivasan says:

   Ennadhu…Dei Pudungi….MGR Kanavanla Ilamai…Sivaji Yemanukku Yeman comparisonaa….Konjam Vitta Devar Magan Sivajiya Malaikallan Ramachandranoda compare pannuva polrukku?

   Naalai Namathey Padam Paathiya…Kezhadu Thattina Moonjikku..Pencila Meesaya vechuttu varraan….LAthavoda Jacket ulla kai viduraan…Potta Paya….thIdhayakani Padam Paathiya…Pallavan Bus Kannadi Sizla oru Coolers ….Koodaya Kavuthina Maadhiri Oru Wig….Indha Mogaraikku….Inbamae Undhan Paer Penmayo irukkalaam…Sivajikku irukka koodadha…Poda dei…Poda…!!

 3. RV says:

  ப்ளம், எங்கே போயிட்டீங்க?

 4. RV says:

  புரட்சி ரசிகன்,

  எங்களுடைய கணிப்பில் அசோகன் சிவாஜியை விட ஒரு படி மேல்தான்!

 5. Bags says:

  puratchi rasigan – நன்றி. இந்த ப்ளாgல் (தமிழில் g இல்லாததால் இப்படி) பல இடங்களில் இதை பற்றி சர்ச்சை எழுந்துள்ளது. படித்துப் பாருங்கள்.

  ullathai solven – உள்ளதைத் தான் சொல்லியிருக்கிறீர்கள் ஒன்றைத் தவிர. சிவாஜி பெல்ட் போட்டு மறைக்க சிரமப்பட்ட மாதிரி தெரியவில்லை. 🙂

 6. Bags says:

  >>>எங்களுடைய கணிப்பில் அசோகன் சிவாஜியை விட ஒரு படி மேல்தான்!
  ஓ ஆமாம் அதை மறந்து விட்டேன்.

 7. puratchi rasigan says:

  >>எங்களுடைய கணிப்பில் அசோகன் சிவாஜியை >>விட ஒரு படி மேல்தான்
  That is an insult to sivaji.

  Can Asokan SHOUT 40 page dialog in 4 seconds ?
  Can he shout and roll over on the ground for
  a Mosquito bite as if a missile hit him ?
  Can he bring Nava Rasam(Nava Saambar, Nava Butter milk) like sivaji?

  can he Dance Bharatha natyam like Sivaji
  in Pattum Bharathamum ?
  Can he dance like sivaji only with hand movements ?

  Sivaji does not know the difference between
  Loosu and innocent. (May movies especially
  Raman ethanai Ramanadi).
  Do you think Asokan knows the difference for
  him to be better ?

  Next time tell us when you are coming to india.
  I will organise a Bandh with Sivaji fans as
  you are insulting him.
  If this insult continues, we will write a petition to G.W. Bush to extradite you to
  India.

 8. ullathaisolven says:

  ஹா ! இது என்ன கொடுமை

  சிவாஜியின் சாதனைகள் பற்றி அறியாமல் இந்த puratchi rasigan சிறுபிள்ளை பிதற்றுகிறது
  இதோ எந்தன் தெய்வம் முன்னாலே என்று ஸ்ரீதேவியை அசோகனால் தூக்கிக் கொஞ்ச முடிந்ததா ? அதே
  சின்னஞ்சிறு கிளியே ஸ்ரீதேவி கண்ணம்மாவுடன் வண்ண மெட்டு நீதான் என் செல்லம்மா என்று டூயெட் பாடத் தெரிந்ததா அசோகனால் ???

 9. RV says:

  அசோகனை பற்றி இந்த ப்ளாகின் அறிமுகத்தில் குறிப்பிட்டிருந்தேன். https://awardakodukkaranga.wordpress.com/2008/08/03/hello-world/ புரட்சி ரசிகன், பறக்கும் பாவை படத்தையும், உயர்ந்த மனிதனையும் நீங்கள் கட்டாயமாக பார்க்க வேண்டும். அசோகனை பார்க்கும்போது எனக்கு ஒரு குஷி உண்டாகிறது. அந்த குஷி வேறு யாரை பார்த்தாலும் உண்டாவதில்லை.

  உள்ளதை சொல்வேன்,
  அசோகனுக்கு சான்ஸ் கிடைத்திருந்தால் அவர் என்ன ஸ்ரீதேவியை கொஞ்ச மாட்டேன் என்று சொல்லி இருக்கப் போகிறாரா, இல்லை டூயட் பாட மாட்டேன் என்று சொல்லி இருக்கப் போகிறாரா? அப்புறம் இதுக்கெல்லாம் சிவாஜியை குறை சொல்வது கொஞ்சம் ஓவர். இது நடிப்பு, சிவாஜி அப்பாவாக நன்றாக நடித்தாரா இல்லையா என்பதை விட்டுவிட்டு அதில் குழந்தையை கொஞ்சினார், குமாரியுடன் டூயட் பாடினார் என்பதை எல்லாம் குறை சொல்லக்கூடாது! அப்புறம் சாவித்ரி பாச மலரில் தங்கையாக நடித்துவிட்டு, படித்தால் மட்டும் போதுமாவில் அண்ணியாக நடித்தாரே, அன்னையின் ஆணையில் காதலியாக நடித்தார் என்று குறை சொல்வீர்கள் போலிருக்கிறதே! எனக்கு நினைவு சரியாக இருந்தால் விஜயகுமாரி தங்கை (பச்சை விளக்கு), அக்கா(அன்பை தேடி), மனைவி(ராஜ ராஜ சோழன்), மகள் (பார் மகளே பார்) என்று பல ரோல்களில் வந்திருக்கிறார்!

  பக்ஸ்,
  சிவாஜி கோட்டுதான் போடுவார், பெல்ட் இல்லை.

  For the record, சிவாஜி சிறந்த நடிகர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர் பல படங்களில் உணர்ச்சி வசப்பட்டு படுத்தி இருக்கிறார் என்பதிலும் எனக்கு சந்தேகம் இல்லை. சமீபத்தில் பக்ஸ் புண்ணியத்தில் அவரை மீனா கண்ட பேட்டி ஒன்று பார்த்தேன். அதில் அவரே நாடக பாணி வேறு (மைக் கிடையாது, எல்லாருக்கும் கேட்க வேண்டும்), அந்த நாடக பாணியின் தாக்கம் அவர் நடிப்பில் இருந்தது என்று சொன்னார். இது முழுக்க அவர் தவறு அல்ல, ஆனால்… – அரைத்த மாவையே அரைப்பதற்கு பதிலாக என்னுடைய இந்த போஸ்டை பாருங்கள். – https://awardakodukkaranga.wordpress.com/2008/08/25/எம்ஜியார்-குதிரை-பறக்கட்/

 10. plum says:

  rv, ungaloda vaadham panninadhukku kaaranam, I think you are sensible. Kanda kanda kazhisadaigoladu vaadham panni enna payan? Adhanala, Ulladhai Solvaen matrum puratchi rasigan pondra vadikattiya muttalgalodu vaadhida virumbavillai.

 11. RV says:

  ப்ளம், என்னங்க இவ்வளவு கோபம்!

  உள்ளதை சொல்வேன், புரட்சி ரசிகன், பயந்துடாதீங்க! பேருதான் ப்ளம்மே ஒழிய அவர் உண்மையிலே பலாபழம் மாதிரி. :-)) வெளியிலே முள்ளு இருந்தாலும், உள்ளே சுவை அதிகம்….

 12. Das says:

  RV, I also like to see more of AsOkan. I like his facial expressions, puruvaththOdu viLaiyAdum thiRamai etc. One of my friends was gloomy for sometime and later he said that he was upset and found the reason that he has not seen AsOkan movies for the past three months! Wonder why AsOkan had to spend his little earned money in “nERRu inRu nALai”?

 13. ullathaisolven says:

  துடிக்கிறது மீசை
  அடக்கு அடக்கு என்று
  நட்பு நாடி வந்த உறவு முறை தடுக்கிறது
  ப்ளம் பழம் இழிவாகப் பேசுவது நன்றாயில்லை என்றாலும் பரவாயில்லை

  தொடர்ந்து உங்கள் நல்ல வினமர்சனங்ளுக்காக காத்திருக்கிறோம்
  தொட‌ர‌ட்டும் உங்க‌ள் ந‌ல்ல‌ எண்ண‌ம் RV

 14. சாரதா says:

  ** ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் குழந்தை மீனாவைக் கொஞ்சிவிட்டு, சிலநாட்களிலேயே, அதே மீனாவுடன் ‘மாடத்திலே கன்னி மாடத்திலே’ என்று கட்டிலில் கால் மீது கால் போட்டு பாடிய ரஜினிகாந்தைப்பற்றியும் குறிப்பிட்டிருந்தால் இவர்கள் தைரியத்தை ஒப்புக்கொள்ளலாம். ரஜினி ரசிகர்களின் அடி உதைகளுக்கு பயந்து, அகிம்சாவாதிகளான சிவாஜி ரசிகர்களை மட்டும் சீண்டிப்பார்ப்பது எந்த ஆண்மைத்தனத்தில் சேர்ந்தது என்று எனக்கு விளங்கவில்லை.

  ** ரிக்ஷாக்காரனில் மஞ்சுளாவுடன் ‘அழகிய தமிழ் மகள் இவள்’ பாடல் காட்சியைப்பார்த்திருக்கிறேன். சத்தியமாக அப்பா மகள் பாடிய டூயட்டாக தெரியவில்லை, தாத்தாவும் பேத்தியும் பாடிய டூயட்டாகவே தெரிந்தது.

  ** சிவாஜியின் கடைசிக்காலப்படங்கள் பற்றி வாய்கிழிய கிண்டல் செய்பவர்கள், அதே சமயம் அசோகனைப்பற்றி வாயாரப்புகழ்பவர்கள், அசோகன் தன் கடைசிக்காலப் படங்களில் பண்ணியது அனைத்தும் “உலகமகா கோமாளித்தனங்கள்” என்று அறிவார்களா?. ஒன்றிரண்டு அல்ல, கடைசிக்காலத்தில் வந்த அனைத்துப்படங்களிலும்.

  ** ‘பட்டிக்காட்டுப்பொன்னையா’ படத்தில் எம்.ஜி.ஆர். கையில் புத்தகத்துடன் கல்லூரி மாணவனாக வருவதைப்பற்றி குமுதம் வார இதழ் விமர்சனம் “உலகத்திலேயே மிகவும் வயதான கல்லூரி மாணவர் இவராகத்தான் இருப்பார்”.

  ** மோட்டார் சுந்தரம்பிள்ளை படத்தில் காஞ்சனா, ஜெயலலிதா போன்ற கதாநாயகிகளுக்கு அப்பாவாக நடித்தாரே, தனது கடைசிப்படம் வரை கழுத்தில் தொங்கு சதையுடன் டூயட் பாடியவர்களுக்கு அந்த தைரியம் இருந்ததுண்டா?. (இத்தனைக்கும் மோ.சு.பிள்ளை அவரது கடைசிக்காலப்படம் அல்ல. அதன்பிறகு அதே ஜெயலலிதாவுடன் கலாட்டா கல்யாணத்தில் ஆரம்பித்து பலபடங்களிலும், காஞ்சனாவுடன் சில படங்களிலும் (பொருத்தமான தோற்றத்துடன்) ஜோடியாக நடித்தார்)

  கணவன் பட விமர்சனத்தில் சிவாஜி சம்மந்தமேயில்லாமல் கிண்டல் செய்யப்பட்டதால் நானும் இவற்றை எழுத வேண்டியதாயிற்று.

 15. ullathaisolven says:

  “உலகத்திலேயே மிகவும் வயதான கல்லூரி மாணவர் இவராகத்தான் இருப்பார்”
  அந்த‌ விட‌ய‌த்திலும் சாதனையாளர் சிவாஜிதான் !
  அவ‌ரை வெல்ல‌ யாரும் இல்லை
  அவன் ஒரு சரித்திரம்
  அதற்குப் பிறகு ‘எங்கள் தங்க ராஜாவிலும்
  படிக்கப் போன பெரிய ஆ!..சாமி

 16. சாரதா says:

  சபாஷ், இதுபோன்ற வாதத்தைதான் நான் எதிர்பார்த்தேன்.

  சிலரை ஞானசூனியங்கள் என்று அடையாளம் காண்பிக்க இவையே சரியான சந்தர்ப்பம்.

  முதல் விஷயம், எம்.ஜி.ஆர்., சிவாஜியை விட 12 வயது பெரியவர் என்பது எல்லோருக்கும் தெரியும்.

  அடுத்த விஷயம் ‘பட்டிக்காட்டுப் பொன்னையா’ வெளியானது 1973-ல் (அந்த ஆண்டு வந்த இரண்டு எம்.ஜி.ஆர். படங்கள் உலகம் சுற்றும் வாலிபன், பட்டிக்காட்டு பொன்னையா).

  அதே ஆண்டு (1973) வெளிவந்த படம்தான் ‘எங்கள் தங்க ராஜா’ (பொன்னூஞ்சல் படத்துக்கும் கௌரவம் படத்துக்கும் நடுவில் வந்தது).

  ஆக, ஒரே ஆன்டில் (1973) வந்த எங்கள் தங்க ராஜா, பட்டிக்காட்டு பொன்னையா ஆகிய படங்களில் மருத்துவக்கல்லூரி மாணவர் சிவாஜியின் உண்மையான வயது 45. கல்லூரி மாணவரான எம்.ஜி.ஆரின் உண்மையான வயது 57. ‘உலகத்திலேயே வயதான கல்லூரி மாணவர்’ என்று எம்ஜியாரை குமுதம் சொன்னதில் தப்பென்ன?.

  அவன் ஒரு சரித்திரம் படம் 1977-ல் வந்தது. அதில் சிவாஜி கல்லூரி மாணவர் அல்ல. கலெடர்.

  அடுத்த பதிவில் மூக்குடைபடுமுன், நான் சொன்ன படங்கள் வெளியான வருட விவரங்கள் சரிதானா இல்லையா என்பதை எந்த கொம்பாதி கொம்பனிடமும் விசாரித்துக் கொண்டு வரலாம்.

 17. ullathaisolven says:

  பொன்னையாவை பார்ததில்லை என்றாலும் நிச்சயமாக
  45 வயசு தொந்தி ராசாவை விட எடுப்பாகத் தான் இருந்திருப்பாரு 57 வயசு பட்டிக்காட்டான்

  அட அய்யா க‌லெக்டருக்குத்தான் ப‌டிச்சாரா ???
  ஒரு ம‌ர‌த்துக்கு கீழே நின்னு சிவாஜி புஸ்த‌க‌த்தை வ‌ச்சிகிட்டு ரொம்ப‌ ஆர்வ‌மா ப‌டிப்பாரு
  மஞ்சுளாம்மா வ‌ந்து எப்ப‌வும் படிப்பு ப‌டிப்பு தானான்னு கெஞ்சுவாங்க..
  அப்புற‌மா ஏதோ பாட்டு வ‌ரும்..
  தொப்பையும் கோட்டும் சூட்டும் செவந்து போன‌ க‌ண்ணும் ..ஒரு வித‌மா விக்கு வேறே
  விக்கு’னேஷ்வ‌ர‌ருன்னு அப்போ அவ‌ருக்கு ப‌ட்ட‌ம் வேறே இருந்தீச்சாம்
  இந்த லட்சணம் எல்லாம் பார்ததது போதாமே
  இவ‌ரு இஸ்கூல் போனாரா காலேஜு போனாரான்னு
  காலெக்ட‌ருக்கு ப‌டிக்க‌ப் போனாரான்னு தெரிஞ்சிக்க‌வும்
  நென‌ப்புல‌ வ‌ச்சிக்க‌வும் ந‌ம‌க்கு அவ‌சிய‌மில்லை .க‌ஷ்ட‌ம் !‌

  எந்தப் படம் எந்த ஆண்டிலே வந்தது என்று தெரிய வேணுமின்னா ஒரு கொம்பனையோ மூக்கனயோ கேக்கனுங்கிற அவசியமில்லை
  ஒன்லைன்லேயே பாத்துக்கலாம் . ஆனா அதுக்கு அவசியமென்ன ?
  ரொம்ப ஆக்ரோஷமா கொந்தளிச்சு போயி
  ..சபாஷ் !..மூக்குடை !..ஞானசூனியங்கள் !கொம்பாதி கொம்பன் !
  உணர்ச்சி கொந்தளிப்பு வார்தைகள்
  அதிகமான ‘ஓவர் ஆக்டிங் பார்த்ததின் விளைவு இதானா..?
  ஹிஸ்டீரியா வந்த மாதிரி கத்திப் பேசிவதையெல்லாம் ஆஹா ஓஹோ நடிப்புன்னு ரசிக்க முடியவில்லை என்றாலும்
  உங்களைப் போன்றவர்கள் எழுத்தாலே க‌த்துவ‌தை பார்த்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை
  அதுக்காக‌ உங்க‌ளைப் போன்ற‌வ‌ர்க‌ளை உசுப்பிவிட்டு வேடிக்கை பார்க்க‌வும் விரும்ப‌வில்லை
  பிரிக்க முடியாதது ? ஓவ‌ர் ஆக்டிங் + ஓவர் ரிஆக்டிங்
  RV good luck to you sir

 18. plum says:

  saradha, ivargalodu vaadhiduvadhu, ungalai pondra oru uyar sindhanaiyalarukku azhagu alla. Vidunga, polambittu poranga chinna pasanga

 19. Bags says:

  அசோகனைத்தான் “உணர்ச்சி பிழம்பு” என்று வர்ணித்தேன். அதற்க்காக இப்படியா எல்லோரும் உணர்ச்சி பிழம்பாகி விடுவது 🙂 சாரதாவின் நுணுக்கமான பாயிண்ட்ஸ் எந்த சூழ்நிலையிலும் பவர்ஃபுல்லாகவே வந்து விழுகிறது.

 20. plum says:

  Asokan in Murattu Kaalai – height of comedy. Note: he played a righteous police officer in the movie, was not supposed to do comedy
  Asokan in Alauddinum arpudha vilakkum – killer comedy. I am serious. If you are 30 plus, avoid it. Sirichu sirichu heart attack nichayam.Actually, even if you are 30 minus, skip it for same reasons.
  Asokan in general – over-acting in dictionary definition with rare exceptions. Idhai vittuttu, Sivajiya overactingnu solravangalai endha zoo-la vekkanumnu enakku theriyalai

 21. plum says:

  idhu oru fashion:
  Statement 1: “I think Sivaji overacts, Acting-na adhu MR Radha dhaan.”.
  As if MR Radha played any other character than MR Radha in his whole career. Rajni plays rajni, MGR played MGR in all his movies – avanga ellam vandhu limited actor aanaal Vaazhkai muzhukku ore role(MR Radha role) pannina MR Radha better actor than sivajinu solradhu oru fashion
  Statement 2: “I think Sivaji overacts, Acting-na adhu SV Rangarao dhaan.”.
  Again, same as above. Except that I am not sure if the stock character that Rangarao played was his real personality.
  Now, statement 3 – this is a bit shocking – I couldnt have imagined Asokan would have elicited a response like 1 & 2 above – and I cant say Asokan played a single character all his life- he does have variety in his portfolio. But nobody can deny that he is anotehr overacting champ.

 22. RV says:

  plum,

  Ennanga, ungalukkuma puriyale? Bags & I think that Asokan is ahead of Sivaji in only one thing – overacting! I don’t believe anybody cann do it like Asokan – he reacts for every letter in a sentence!, evenn wehen thes sentence is spoken by people around him!

 23. Das says:

  M.R.Radha once mentioned that leading actors would be very wary of him lest he would steal the scenes under their noses. He may not have dialogs but by sheer reactions, he would do wonders and the audience would be glued to him.

  In another instance, MRR was irked by SVR(angarao)’s late coming into the shooting. In his imitable style MRR remarked, “nallavangaL ellAm villanA nadikkiRAnga, villangaL ellAm nallavanAka vEsham pOdurAnga”, hitting out at SVR. SVR cancelled that day’s shooting!!

 24. Bags says:

  plum, சாரதா சொன்ன மாதிரி சிவாஜியை எம்ஜிஆர் ரெவ்யூவில் சம்பந்தமே இல்லாமல் காய்ச்சி தள்ளி பட்டிருக்கிறார்.
  ஒரு வாதத்துக்கு சிவாஜி ஒவெராக்ட் என்றே வைத்துக்கொள்வோம். வேறு யாரும் அது மாதிரி செய்ய முடியாது என்பதும் எனது கருத்து. (ஏற்கனவே அசோகன் அவரது நிழல் 🙂 ) அதை விமர்சனம் வேண்டுமானால் செய்யலாம். ஓவெராக்ட் பற்றி சிவாஜியே கவலை படாத பொழுது ஏன் மற்றவர் கேலிக்கு ரசிகர்கள் வருத்தப்படவேண்டும்? நடிகர் திலகம் எனப் பெயர் பெற்ற சிவாஜிக்குத் தெரியாததா? மேலும் பப்ளிக் ஃபிகர் ஆகிவிட்டால் தூற்றுவதும், போற்றுவதும் இயல்பே. தடித்த தோலுடன் நாம் தான் உலா வரவேண்டும். Exaggerated display of emotions என்பது திரையுலக பரிணாம வளர்ச்சியில் ஒரு strip. அது அந்தக் கால்கட்டதிற்க்கு தேவைபட்டது. அதை சிவாஜி கொடுத்தார். Overacting என்பதை contextடோடு பார்த்தால் சகஜமாகவே தெரியும்.

  Stoic actionனும் ஒரு கடுப்படிப்பே ஆகும். “எந்த எமொஷனுமே கிடயாதா?” என்ற அங்கலாய்ப்புகளை எத்தனை முறை கேட்டிருப்போம்? ”ஒரு தலை ராகம்” என்ற திரைபபடத்தில் சங்கரின் வேலைகாரராக வருபவர் கடுப்படித்தது ஞாபகம் இருக்கிறதா?
  Hollywoodடில் ஸ்டாய்க்காக நடிப்பது ஒரு ஸ்டைல். ஆனால் எல்லோரும் அப்படி நடிக்கும் போது அதில் செயற்க்கை தனம் பிரதிபலிக்கிறது. சில சமயம் எனக்கு அந்த நடிப்பு cliche ஆகி விட்ட ஒன்றாகத் தெரிகிறது. மணிரத்னம் சினிமா வசனங்கள் இந்தக் கொடுமையை அழகாக சித்தரிக்கிறது.
  தமிழ் திரையுலகம் இந்த இரண்டுக்கும் இடையே இருக்கும் phase. Exaggerated emotionsஐ ஏற்றுக் கொண்டாலும் stolid ஆக்‌ஷன் இன்னும் புதிதே. ஒருவேளை தமிழகம் அதை ஏற்றுக்கொள்ளாமலே போகக்கூடும்.
  கொடுமையான் overacting சமயத்தில் கண்ணில் படுவதே கிடையாது. ஒரு உதாரணத்திற்க்கு இன்று வரும் சண்டை காட்சிகளை பார்த்தால், ஒருவரும் ஒவெராக்ட்டிங் என்று குறைப்படுவது போல் தெரியவில்லை. ஆனால் அதில் இருப்பது என்ன? ”டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்” என்று கத்துவதிலிருந்து அடி உதைகள் வசனங்கள் வரை ஸ்டெப் பை ஸ்டெப் overaction தான். (ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்களில் 4 குத்துக்களுக்கு மேல் இருக்காது). இதையெல்லாம் ஆக்‌ஷன் மூவிஸ் என்ற பெயரில் பொறுத்துக்கொள்ளும் பொழுது சிவாஜியை மட்டும் சீரியஸாக சாடுவது துரதிர்ஷ்டமே. மொத்ததில் ஒரு குழப்பமான phase.

 25. plum says:

  bags, you put it very nicely. I can see where you and rv come from. But idhe dhaan chance-nu, Sivaji over-acts adhu idhunnu polamburavangalai paartha sila samayam erichal dhaan varudhu. I have just explained about MR Radha. Vidiya vidiya kettutu, oruthat paarunga, MR Radha style, reaction-nu badhil kodukkarar. Cant they see that if Sivaji ws overacting, then MR Radha was a limited version of that. He was a ‘stylish’ actor – meaning he was like Rajni. Ena Rajni madhiri cigarette thooki pottu pidkkalai. Aanal, andha style vechu avar great actornu argue pannaranga. Enna kodumai pa idhu?

 26. puratchi rasigan says:

  >>Exaggerated display of emotions என்பது >>திரையுலக பரிணாம வளர்ச்சியில் ஒரு strip. >>அது அந்தக் கால்கட்டதிற்க்கு தேவைபட்டது
  If a person gives what is required he is ordinary.
  May be those who don’t give are not good enough.

  If a person exceeds expectation, then only
  he is extra-ordinary.

  Some one brings his Drama experience and delivers in visual media like cinema has no sense at all. How can he be considered Great?

  First define the terms “Acting”, “cinema” etc

  Sivaji’s contemporary like Savithiri’s acting
  is extra-ordinary. Just see Maya Bajar, Missiamma etc.
  There is no need for over-reaction even in those times.

  Sivaji himself said is Drama experience largely influenced his Cinema acting -see RV’s blog.
  That concludes every thing.

  One should not play Baseball like Cricket or
  vice Versa.

  • Srinivasan says:

   Yeah…very true…When some senseless actors in the name of puratchi is loiterring around and fails miseraly everytime in box office throughout his 41 years of career and acts just 136 films not even touching the 150 numbers….on the other hand Sivaji effortlessly completes 100 films in 12 years with an average of 8 films per year….Ungalukku Vayitherichal dhaan varum…Pinnae Ungalukku Nadippa Varum..Adhudhaan Suttupoatalum varaadhey ungalukkum unga puratchikkum….yedho janangaa kannadasan,tms,msv paata ketu yemaandhaanga…sandhoshama poanga…!

 27. Bags says:

  >>>If a person gives what is required he is ordinary.
  May be those who don’t give are not good enough.
  If a person exceeds expectation, then only
  he is extra-ordinary.

  Puratchi Rasigan, according to you, Sivaji “overacts” while he gives just what is required. Are you ready to take if he exceeds expectations? 🙂

 28. puratchi rasigan says:

  >>Puratchi Rasigan, according to you, >>Sivaji “overacts” while he gives just what is >>required.
  If you continue to selectively ignore great
  actress and sivaji’s contemporary , and
  refuse to look at it fair way , so be it.

  >>Are you ready to take if he exceeds >>expectations?
  Ofcourse yes. I have nothing agains him.
  He is neither my Pangali nor Pagaiyali 🙂

  For your info,
  I will tell you plus points of Sivaji

  1. He had videographic memory with wihch he could mimic anyone he comes across.
  2. His range of “walking style” is phenomenal.
  I have not seen anyone like that.

  Ask Plum or Saradha to come with single negative
  point. 🙂

  To me he is not intelligent enough to understand
  the media (drama,cinema) differences.
  To me he continued to bo like that till the very end even after it was pointed to him repeatedly.
  (No Suyabuddhi No sol buddhi)

  Lookout commitment of youngsters like Surya,vikram etc. They change their physique
  to suit their role. That level of commitment.

  Sivaji had no such sense or commitment.
  With huge pot belly he will act as Lorry driver
  Raja kannu with guess what? “suit and coat”.

  No body asked him to grow pot belly.
  No body asked him to go to college with that
  pot belly.

 29. Bags says:

  I am kinda giving up. We don’t want to go over the pot belly, etc again. Sivaji doesn’t know the difference between drama and movie? Obviously you haven’t watched his interview with Meena. Please take a look.

  https://awardakodukkaranga.wordpress.com/2008/09/24/ராஜபார்ட்-ரங்கதுரை-ii/#comment-206

 30. ஹீரோயின் டைட்ஸும், ஸ்லீவ்லெஸும் போட்டுகிட்டு கலக்கலா இருப்பாங்க. துடுக்கு கேரக்டரை மிகச்சரியா செயல்படுத்தியிருப்பாங்க.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: